50…..
தேனுகாவின் ஆஃபீஸ்….
ஜூனைத்தின் நண்பனிடம் கேஸ் டீட்டெய்ல்சை பற்றி ஆர்வமாய் கேட்டு கொண்டிருந்தாள் தேனு. பின்னர் சிவில் கேஸ் என்றால் என்ன என்றும், சட்டத்தில் உள்ள ஷரத்துகளைப் பற்றியும் அவனிடம் விவரித்தாள் …. சற்று தள்ளி அமர்ந்து அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஜூனைத். ஜூனைத்தை எப்போதும் யாருடைய புறத் தோற்றமும் இந்த அளவுக்கு வசீகரித்ததில்லை . படித்த இடங்களிலோ, ரோட்டிலோ , இவனது ரசிகத்தன்மைக்கு ஏற்றாற் போல் இளம் பெண்கள் கடந்து சென்றால் நல்லா இருக்காங்கள்ல என்று நினைப்பான் அவ்வளவு தான். மற்ற ஆட்களைப் போல பெண்களை தொடர்ந்து செல்வது, மொபைல் நம்பர் கேட்பது என்றெல்லாம் வைத்து கொள்ள மாட்டான். ரஷிதாவுடன் தான் நிக்காஹ் என்று முடிவான போது கூட பெரியவங்களா பாத்து பெரிய பொறுப்ப நம்ம தலையில் வைக்கிறாங்க, ரஷி நம்ம பொண்ணு அவள நல்ல படியா பாத்துக்கணும் என்று தான் நினைத்தானே அன்றி ரஷிதாவின் மேல் பாசத்தை தாண்டிய ஈர்ப்போ பிடித்தமோ அவனுக்கு அறவே இல்லை. ஆனால் இவ?? தொள தொளவென்ற நைட் ட்ரஸ், கலைந்த தலைமுடி , அழுது சிவந்த மூக்கும், வீங்கிய கண்களுமாய் கண் முன்னால வந்து , வெள்ளை மனதால் என்னை ஸ்தம்பிக்க வச்சுட்டா…. இவளோட பாதுகாப்புக்காகவும் இவளோட நிம்மதிக்காகவும் ராதா ராதியவே எதிர்த்து, என் மத கோட்பாடுகள மீறி, பின் விளைவுகள் எதைப் பத்தியும் யோசிக்காம இவளுக்கே துளி கூட இஷ்டம் இல்லாம இவள கல்யாணம் பண்ணினேனே? சே ,, யோசிச்சு பாத்தா மலைப்பா இருக்கு.. ஓ !!இதுதான் காதலோ? சரியான ராங்கிக்காரி , சட்டம் படிச்சிருக்காளாம் … பெரிய்ய்ய்ய்ய்ய்ய லாயராம் இருந்துட்டு போகட்டுமே.. படிச்சு என்ன ப்ரயோஜனம்? இன்னும் நல்ல மனுஷங்கள இனம் கண்டுக்க தெரியல , நம்மள நேசிக்கிறவங்க மனச நோகடிக்கக் கூடாதுங்குற எண்ணம் இல்ல , பாசிட்டிவா எதையுமே யோசிக்க தெரியாத முட்டாள் .. வடிகட்டின முட்டாள்.. தத்தி சிடுமூஞ்சி…. அவளை அவன் தனக்குள் திட்டி கொண்டேயிருக்க, சட் என தேனுகாவுக்கு புரையேறியது. திரும்பி இவனை முறைத்தாள்.
“இந்தாங்கமா தண்ணி , தலைய தட்டுங்க” மூர்த்தி அண்ணன் அன்போடு தண்ணீர் கொடுத்தார். வாங்கி குடித்தவள் மீண்டும் ஜூனைத்தை முறைக்க, இந்த தடவை அவன் சிரித்தான் . சரியான பைத்தியம் தனக்குள் முணு முணுத்துக்கொண்டவள் , எதிரில் அமர்ந்திருந்தவனிடம் தன் கவனத்தைத் திருப்பினாள்.
“என்ன சார்? உங்க டவுட்ஸ் லாம் க்ளியரா? நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு புரிஞ்சுதா?”
” புரிஞ்சது மேம்… இப்ப எந்த ஆர்ட்டிகிள் படி கேஸ் போடலாம்னு சொன்னீங்கன்னா அது போலவே செஞ்சிரலாம் மேம்”
“கேஸ் போடுறதுங்குறது கன்ஃபார்ம் தான சார்? ஏன்னா இது பங்காளி சண்ட தான் , ஈசியா ஷார்ட் அவுட் ஆகக் கூடிய பிராப்ளமும் கூட .. கோர்ட்டு கேஸ்னு போறதுக்கு முன்னால ஒரு தடவ அவங்க கூட பேசி பாக்கலாமா?”
” எனக்கு இஷ்டமில்ல மேம். ஆனா கேஸ் போடாம இந்த பிரச்சனை சுமுகமா முடிஞ்சா எனக்கும் நிம்மதி தான்.. என் சார்பா நீங்க வேணுனா பேசி பாக்குறீங்களா?”
“ஓகே , அவங்க நம்பர் குடுங்க, நான் இங்க வர சொல்லி பேசிக்கிறேன்”
“நோட் பண்ணிக்கங்க மேம்”
“மூர்த்தி அண்ணா .. காண்டாக்ட்ஸ் மெயின்டைன் பண்ற டைரியையும் பேனாவையும் கொண்டாங்க”
“இதோம்மா” அவர் கொண்டு வந்த டைரியையும் பேனாவையும் வாங்கிக் கொண்டாள் “ம்ம் சொல்லுங்க சார்”
“நைன் சிக்ஸ் எய்ட் டூ” பேனா எழுதவில்லை. ஒரு முறை உதறிவிட்டு மீண்டும் எழுத முயன்றாள் அப்போதும் எழுதவில்லை.
“அண்ணா, வேற பென் இருந்தா குடுங்க இது எழுதல”
“வேற பேனா இல்லயேமா, ஒரு பத்து நிமிஷம் இருங்க ஓடிப் போய் புதுசா ஒண்ணு வாங்கிட்டு வந்துருறேன்” அதற்குள் ஜூனைத்தின் சட்டைப் பையில் இருந்த பேனாவை பார்த்துவிட்டாள் தேனுகா. “ஜூனைத் பேனா தாங்க, நம்பர் நோட் பண்ணிட்டு தர்றேன்” வேறு ஒரு சந்தர்ப்பமாய் இருந்தால் என்ன லாயர் மேடம் என் கிட்ட எதுக்கு நீங்க பேனா கேக்குறீங்க உங்க கிட்ட இல்லயா என்று வம்பிழுத்து அவளை கத்த வைத்திருப்பான் ஆனால் ஒரு முக்கியமான விஷயத்திற்காக கேட்கிறாள் என்பதால் மறுப்பு சொல்லாமல் எடுத்து அவளிடம் நீட்டினான்.. தேனுமா என்ன பேர் சொல்லி கூப்பிட்டாங்க ? ஜூனைத்னா? அப்ப இவரு தான் அம்மாவோட வீட்டுக்காரரா? சே, போன முறை இவரு இங்க வந்தப்போ இவரு முழியே சரி இல்லனு தேனுமா கிட்ட சொன்னேனே? தன்னைத் தானே நொந்து கொண்டார் மூர்த்தி அண்ணன். என்னதான் ஒரு கஷ்டமான சூழ்நிலையில் தேனுகாவை அவன் திருமணம் செய்திருந்தாலும், அவளுக்கு என்று ஒரு குடும்பத்தை அமைத்து தந்தவன் என்ற ஒரே ஒரு காரணத்தாலேயே ஜூனைத்தின் மேல் அவருக்கு மரியாதை கூடிப்போனது. அவனிடம் தேனுகாவை நல்ல படியாக பார்த்துக்கொள்ள சொல்ல வேண்டும் என்று தோன்றியது . உடன் அந்த எண்ணத்தை செயல்படுத்த நினைத்து ஜூனைத்தின் அருகில் போய் நின்று,
” தம்பி…கொஞ்சம் வெளிய வர்றீங்களா? உங்க கூட பேசணும்” என்றார்
“சரி வாங்க”…. அவனும் அவருடன் வெளியே நடந்தான் . வாசலில் இருந்த பெரிய வேப்ப மரத்தினடியில் போய் இருவரும் நின்றனர்.
“தம்பி நீங்க தான தேனுமாவோட வீட்டுக்காரரு ?” புன்னகைத்த ஜூனைத், ஆம் என தலையாட்டினான்.
“அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் உங்களுக்கு கல்யாணம் நடந்தத பத்தி சொன்னாங்க . நான் அவங்க கழுத்த பாத்ததும் ப்ரித்வி அய்யா கூடத்தான் கல்யாணம் முடிஞ்சிருக்குனு நினைச்சுக்கிட்டு இருந்தேன், தம்பி …..அப்புறம்…. அது”
” அண்ணே நீங்க சொல்ல வந்தத சொல்லுங்க ஏன் இவ்வளவு தயக்கம்?”
“இல்ல தம்பி, தேனுமா ஒருத்தர ரொம்ப விரும்பினாங்கனு தெரிஞ்ச பிறகும் நீங்க அவங்கள முழு மனசோட கல்யாணம் பண்ணிருக்கீங்க அதை நினைச்சா எனக்கு ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு”
“அண்ணே குறுக்க பேசுறதுக்கு என்னை மன்னிச்சுக்கங்க. ஒரு விஷயத்த நீங்க தெளிவா புரிஞ்சுக்கணும், நான் ஏதோ தேனுகாவுக்கு வாழ்க்கை குடுத்த ரேஞ்சுக்க்கு பேசாதீங்க. அவ ரொம்ப ரொம்ப நல்லவ அது போதும் எனக்கு. இதுக்கு முன்னால ஒருத்தர லவ் பண்ணினதெல்லாம் எனக்கு தேவை இல்லாத விஷயம்ணே. என்னை பொறுத்தவரை அந்த மொமண்ட்ல தேனுகாவுக்கு எல்லாமுமே நானா இருக்கணும்னு தோணுச்சு, அதான் தாலி கட்டிட்டேன். அவ்ளோ தான். ப்ரித்வியை லவ் பண்ணினவளை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டுக்கிட்டு போயி கஷ்டப்படுத்தப் போறோம்னு ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணினேன் , ஆனா அவனைப் பத்தின அந்த கேவலமான உண்மை தெரிய வந்த பிறகு சரி இல்லாத ஒரு ஆள் கிட்ட இருந்து இவள காப்பாத்தி அல்லாஹ் நமக்கே நமக்குனு குடுத்துட்டான்னு நினைச்சு சந்தோஷப்பட ஆரம்பிச்சுட்டேன் அவ்ளோ தான், ஆனா மேடம்கு தான் என்னை கண்டாலே பிடிக்க மாட்டேங்குது”
“தம்பி நீங்க என்ன சொல்றீங்க? ப்ரித்வி அய்யாவ பத்தி எந்த உண்மை உங்களுக்கு தெரிய வந்துச்சு? கல்யாணத்த பத்தி மட்டும் தான் தேனுமா சொன்னாங்க” மூர்த்தி அண்ணன் குழப்பமாகக் கேட்க , அவரிடம் ப்ரித்வியை பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தான் ஜூனைத் . அதிர்ந்து போன அவரின் முகத்தில் ஒரு இனம் புரியாத வருத்தம்…..” தேனுமா இனியாவது நல்லா இருக்கணும் தம்பி, பாத்துக்கங்க”
“நான் பாத்துக்கிரணும்னு தான்ணே நினைக்கிறேன், ஆனா அவ தான் என்னை இன்னும் சரியா புரிஞ்சுக்கல. நீயும் அவன மாதிரி தானோங்குற ரீதியில பேசி என்னை ரொம்ப நோகடிச்சுட்டா…..அதனால தான் நான் இப்பலாம் அவ கூட பேசுறதே இல்ல: ஜூனைத் சோகமாய் சொல்ல, உருகிப் போனார் மூர்த்தி.
” தேனுமாட்ட நான் பேசுறேன் தம்பி, நான் சொன்னா கேக்கும்”….
காலேஜ்…..
சீனியர் மாணவர்கள் முன்னால் ரஷிதாவும் , ப்ரியாவும் சிறிது நடுக்கத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
“ஏய்ய்ய் , என்ன அப்படியே நிக்கிற? சொன்னத செய்ய மாட்டியா? எடு உன் பர்சை , அதுல எவ்ளோ காசு இருக்கோ அது மொத்தத்தயும் எங்க கையில குடுத்துட்டு போ. அம்மா பர்தா பொண்ணு, நீ வெயிட் பண்ணு , உனக்கு என்ன டாஸ்க் தர்றதுனு நாங்க இன்னும் யோசிக்கல”
“அண்ணா ப்ளீஸ்ணா, க்ளாஸ்கு டைம் ஆச்சு , எங்களை விடுங்க , நான் போகணும்” ப்ரியா கெஞ்சினாள்
“ஓய்ய்ய் …. சீனியர்ஸ் என்ன சொன்னாலும் எதிர் பேச்சு பேசாம செய்யணும் ,அது தான் நம்ம காலேஜ்ல எழுதப்படாத விதி .. பர்சை எடுத்து குடுத்துட்டு நீ க்ளாஸ்கு போலாம். ஏய் பர்தா, இன்னக்கி ஒரு நாள் நீ பர்தா இல்லாம சுடியோட தான் காலேஜ்ல இருக்கணும் . நீ எந்த டிபார்ட்மென்ட் பி.காம் தான ? நாங்க இன்டர்வெல்ல வந்து செக் பண்ணுவோம், அப்பயும் பர்தாவோட இருந்தன்னு வையி எங்க க்ளாஸ் கேர்ள்ஸ அனுப்பி உன்னை ரெஸ்ட் ரூம்கு இழுத்துட்டு போயி கழட்ட வப்போம், அது உனக்கு தேவையா?” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் முதுகில் ஒரு உதை விழுந்தது. குப்புறவாக்கில் அவன் கீழே விழ, அவனை சுற்றி அமர்ந்திருந்த வானரப் படை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க, விக்ரம் முன்னால் வந்தான்.
“டேய் விக்கி எந்திரிடா, ஏய் விக்ரம் இப்ப எதுக்குடா அவனை உதைச்ச?” ஒருவன் எகிறிக் கொண்டு முன்னால் வர, அவன் நெஞ்சில் கை வைத்து பின்னால் தள்ளினான் விக்ரம்.
“பொம்பள பிள்ள கிட்ட என்ன பேச்சு பேசுறான்? அது தப்பில்லயா? நீயும் பாத்துக்கிட்டு தான இருந்த? ராகிங்னா என்னா வேணாலும் பேசுவியா?”….
“ரஷி வா, நம்ம போலாம்” அழ ஆரம்பித்த ரஷிதாவை இழுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் ப்ரியா. ஒரு கணம் நின்று , விக்ரமை நன்றியுடன் பார்த்துவிட்டு ப்ரியாவின் பின்னால் நடக்க ஆரம்பித்தாள் ரஷிதா…
– தொடரும்….
No comments yet.