43.
“ஜூனைத்”….. அழைத்தாள் தேனுகா. தோட்டத்து ஊஞ்சலில் எதையோ சிந்தித்தபடி அமர்ந்திருந்த ஜூனைத் திரும்பாமலயே இருக்க,
“ஜூனைத் , உங்களைத் தான்”
“சொல்லுங்க”
“எனக்கு ஒரு உதவி வேணும்”
“என்ன உதவி?”
“ஈவ்னிங் …..என் கூட ஒரு இடத்துக்கு வர முடியுமா? ப்ளீஸ்ஸ்”
“எப்போ?”
“புரியல”
“டைமிங் கேக்குறேன்”
“ஒரு ஆறு ஆறரை போல”
“வர்றேன்”
“நீ….நீங்க அப்போ ஃப்ரீயா?”
“ஃப்ரீ பண்ணிக்கிறேன்”
“கஷ்டம்னா வேணாம்”
“சரி வரல”
“ஐயோ ! என்ன டக்குனு வரலன்னு சொல்லிட்டீங்க?”
” ப்ச் . இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை தேனுகா மேடம் ? வர்றேன்னு சொன்னாலும் குடையுறீங்க , வரலன்னு சொன்னாலும் தொணப்பறீங்க. ஆக்சுவலி வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்?”
” இல்ல”…..
“நீங்க சொன்ன டைம்கு ரெடியா இருங்க , போலாம். அவ்ளோ தான்”. சொல்லிவிட்டு , இவள் பக்கம் கூட திரும்பாமல் அப்படியே உள்ளே செல்ல ஆரம்பித்தான். அவனது செய்கைகள் தேனுகாவை காயப்படுத்த, உம்மென்ற முகத்துடன் அந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள் . மாலை நேர சூரிய வெளிச்சம் , தோட்டம் முழுதும் ஆரஞ்சு வண்ணத்தில் பரவியிருந்தது . மிகவும் ரம்யமாக இருந்த அந்த சூழல் கூட அவள் மனதை ஆக்ரமிக்கவில்லை. மனது முழுக்க பல்வேறு விதமான பயங்கள், குழப்பங்கள். என்று தான் அதிலிருந்து மீளப் போகிறாளோ? ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்………
காலேஜ் பஸ் ஸ்டாப்……
“இப்ப நம்ம எதுக்குடி இங்க நின்னுட்டு இருக்கோம்? நம்ம ட்ரெயின்ல தான போக வரன்னு இருக்கப் போறோம் ? வா”
“இல்ல ப்ரியா, மாமு எந்தெந்த ஏரியாக்கெல்லாம் பஸ் வருதுன்னு பாத்துட்டு வர சொன்னாரு. ஒருவேளை, நமக்கு பக்கமான ஏரியா வரைக்கும் காலேஜ் பஸ் வந்தா, நம்ம அங்க போய் கூட ஏறிக்கலாம் தானே?”
“ஓ…நீ அப்டி சொல்றியா?”
“நான் சொல்லல, மாமு தான்”
“அப்ப தினமும் நம்ம வீட்ல இருந்து பஸ் வந்து நிக்குற இடத்துக்கு வேற போகணுமா? கஷ்டம் ரஷி”
“இல்லடி, அதுக்கு கேப் ஏதாவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்னு மாமு சொன்னாங்க . அவங்க ஆஃபீஸ்ல வேலை செய்யுற கேர்ள்ஸ்காக ஒருத்தங்க கேப் அனுப்புறாங்களாம். அவங்க கிட்ட கேட்டுப் பாக்கலாம்னு சொல்லிருக்காரு”
“பார்ரா….சரி சரி”….
“நீ இப்பவே உங்க வீட்ல சொல்லிரு ப்ரியா. அப்புறம் கடைசி நேரத்துல எங்க அம்மா வேணாங்குறாங்க , எங்க அப்பா வேணாம்னு சொல்றாங்கன்னு கதை சொல்லாத , நான் கடுப்பாகிருவேன்”
“சரி கத்தாத , நான் இன்னிக்கு போனதுமே சொல்லிருறேன்”
“எக்ஸ்க்யூஸ்மி”….பின் பக்கம் குரல் கேட்டு இருவரும் திரும்பினர். விக்ரம் நின்று கொண்டிருந்தான்.
“குட் ஈவ்னிங் சார்”
“குட் ஈவ்னிங் ப்ரியா”
“ஏய் யார்டி இவரு?”…ப்ரியாவின் காதுகளில் கிசுகிசுத்தாள் ரஷிதா.
“லூசு ,மறந்துட்டியா?நம்ம அட்மிஷன் போட வந்த அன்னிக்கு இவர் தான நம்மளை காப்பாத்தினாரு?”
“அட ஆமால? சார், ஐ அம் சாரி. டக்குனு ஞாபகத்துக்கு வரல”
“சாரா? சார்லாம் வேணாம். கால் மீ பை மை நேம்”
“பை நேமா?….அது எப்டி சார்? லெக்சரர் நீங்க , உங்களை எப்டி பேர் சொல்லி கூப்பிட முடியும்?”
“சாரிங்க நான் லெக்சரர்லாம் இல்ல , உங்களை மாதிரி நானும் இங்க ஸ்டூடண்ட் தான்”
“ஸ்டூடண்ட்டா?”…..
“ஆமாங்க , அன்னிக்கு உங்களை ஒருத்தன் ஃபாலோ பண்ணி வந்தான்ல ? அவனை ஏமாத்த தான் அந்த மாதிரி சொன்னேன் . நான் இங்க தான் பி.ஜி படிக்குறேன், செகண்ட் இயர். மை நேம் இஸ் விக்ரம். ஃபுல் நேம் விக்ரம் குப்தா” அவன் பொய் சொல்லி நம்ம முன்னாடி தன்னை ஹீரோவா காமிச்சிருக்கான். ஏனோ ரஷிதாவுக்கு அவன் மேல் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
“ஓ!….ஓகே”….
“என்ன ப்ரியா, நீங்க தான் பேசிக்கிட்டு இருக்கீங்க ? உங்க ஃப்ரண்ட் அமைதியாவே இருக்காங்க”
” எனக்கு பொய் சொல்றவங்களைப் பிடிக்காது , அவங்க கூட பேசுறதும் பிடிக்காது . ப்ரியா வாடி , நம்ம பஸ் ரூட்டை விசாரிச்சுட்டு, போகலாம். கண்டவங்க கூட நமக்கு என்ன பேச்சு வேண்டி கெடக்கு?”
“ஏங்க நான் சும்மா ஒண்ணும் பொய் சொல்லலயே? என் மேல ஏன் இவ்ளோ கோபப்படறீங்க?”
“ப்ரியா, வா போலாம்”…அவள் கையைப் பற்றிக் கொண்டு வேகமாய் அந்த இடத்தை விட்டு அகன்றாள் ரஷிதா. இந்த விக்ரமால், தனக்குள்ளும், தன் குடும்பத்துக்குள்ளும், நேரப் போகும் மாற்றங்களை அறியாமல்.
கோவிந்தன் சார் வீடு…
காலிங்பெல்லை அடித்து விட்டு காத்திருந்தாள் தேனுகா . அருகில் உம்மென்ற முகத்துடன் ஜூனைத். அவனுக்கு இங்கே வர இஷ்டம் இல்லையோ என தோன்ற, அதைக் கேட்டுவிடலாம் என வாயைத் திறக்க, அதே நேரம்.
“வாங்க வாங்க மிஸ்டர் ஜூனைத். இது தேனுவுக்கு சொந்த வீடு மாதிரி. ஸோ , உங்களுக்குத் தான் ஸ்பெஷல் வெல்கம்” கதவைத் திறந்த தாரணி, சிரித்த முகத்துடன் வரவேற்றாள்.
“தேங்க் யூ மேம்”…. புன்னகையோடு பதில் சொன்னான் ஜூனைத். மூவரும் உள்ளே நுழைந்தனர்.
“மேமா?….மை காட்ட்ட்ட்!!…..என்ன? என்னை ரொம்ப வயசான பொண்ணுனு நினைச்சிட்டீங்களா ? மேம்லாம் வேணாம் என்னை தாரணின்னு கூப்டுங்க போதும்” இருவரையும் சோபாவில் உட்கார சொல்லிக் கொண்டிருக்கும் போதே, உள்ளேயிருந்து கோவிந்தன் சாரும், அவர் மனைவியும் வெளியே வந்தனர். உபசரிப்புகள், டீ ,ஸ்நாக்ஸ் எல்லாம் முடிந்த பின்னர் , கோவிந்தன் மெல்ல பேச்சை ஆரம்பித்தார்.
“மிஸ்டர் ஜூனைத்”
“சொல்லுங்க சார்”
” கூடிய சீக்கிரமே மாடசாமி கேஸ் கோர்ட்ல ஹியரிங் வருது. நீங்க தான் ஐ விட்னஸா வரப் போறீங்க, உங்களுக்கு அது சம்மதம் தான?”
“முழு சம்மதம் சார்”
“ஓகே, தாங்க் யூ. அப்புறம் உங்க ஐ சைட் ஃபைன் தான? அதாவது கிட்டப் பார்வை, தூரப் பார்வை இப்டி எந்த பிராப்ளமாவது இருக்கா உங்களுக்கு? அப்டி இருந்தா, சம்பவம் நடந்த அன்னிக்கு நீங்க ஸ்பெக்ஸ் போட்ருந்தீங்களா?”
“எனக்கு ஐ ப்ராப்ளம் எதுவும் இல்ல சார்”
“ஓகே….. என்ன நடந்தது? கொஞ்சம் தெளிவா , மறுபடி சொல்லுங்க”
“சார் அது”……
“இல்ல ஜூனைத்,ஒருவேளை அந்த மாடசாமி ஏதாவது திறமையான வக்கீல் அமைச்சு வாதாடினா , நம்மளை சுத்தி சுத்தி கேள்வி கேப்பாங்க. நம்ம எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்”
“ஓகே சார், நான் சொல்றேன்” என நமக்கு முன்பே தெரிந்த கதையை முழுவதுமாக சொல்லி முடித்தான் ஜூனைத். பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார் கோவிந்தன். தன்னுடைய சிறிய நோட் பேடில் , சில குறிப்புகளை எடுத்து வைத்துக் கொண்டார் . சிறிது நேரம் அங்கு மௌனம் நிலவியது. தாரணி, மற்றும் அவளது தாய் இருவர் கண்களிலும் கண்ணீர் . அதிசயமாக தேனுகா அழவில்லை. கல் போல் அவள் அமர்ந்திருந்த தோரணையைப் பார்க்க, தாரணிக்கு அதிசயமாக இருந்தது.
“ஓகே ஜூனைத். இப்போதைக்கு இது ஒரு க்ளியரான ஸ்டேட்மண்டா தான் இருக்கு. ஒரு டூ டேஸ் போகட்டும்.
நான் டீப்பா யோசிச்சு , ஏதாவது கேள்விகள் கேக்கணும்னா உங்களை காண்டாக்ட் பண்றேன் .கோர்ட்ல இருந்து சம்மன் வந்ததும் , இன்னொரு தரம் நீங்க இங்க வர வேண்டி இருக்கும்.”
“வந்துடலாம் சார் , நோ ப்ராப்ளம்”
“சரி , வாங்க சாப்பிடலாம்”
“சார் , இட்ஸ் ஓகே. செவன் தர்ட்டி தானே ஆகுது ? வீட்ல போய்” ….
“நோ நோ….. கல்யாணம் ஆகி இப்போ தான் ஜோடியா எங்க வீட்டுக்கு முதல் தடவை வந்துருக்கீங்க . சாப்டாம எப்டி அனுப்புறது? அதெல்லாம் முடியாது, வாங்க வாங்க”
“இல்ல சார் , பரவாயில்ல .அதான் இன்னொரு தடவை வருவோமே, அப்போ சாப்பிடற மாதிரி வர்றோம்”
“இல்லப்பா , நாங்க உங்களுக்கும் சேர்த்து டின்னர் ரெடி பண்ணிட்டோம். ப்ளீஸ் வாங்க” அதற்கு மேல் ஜூனைத்தால் மறுக்க முடியவில்லை.
சப்பாத்தி , பன்னீர் பட்டர் மசாலா, வெஜிடபிள் பிரியாணி, கோபி மஞ்சூரியன் , ரசமலாய் என அனைத்துமே வெஜ் ஐயிட்டம்ஸ். சில பொதுவான விஷயங்களைப் பற்றி கோவிந்தன் பேச, அதைக் கேட்டுக்கொண்டே ஜூனைத்தும், தேனுகாவும் சாப்பிட ஆரம்பித்தனர் . அதே நேரம், வாசலில் ஜூனைத்தின் காரை ஒட்டி வந்து நின்றது அந்த ஹீரோ ஹோண்டா பைக் . ஜீன்ஸ் பேண்ட், தலையில் குல்லா, என தன் அடையாளங்களை முற்றிலும் மறைத்த நிலையில், மாடசாமி முதுகில் சொருகி வைக்கப்பட்டிருந்த அரிவாளுடன் பைக்கை விட்டு இறங்கினான்!!!!!!
– தொடரும்….
No comments yet.