42.
“வாங்க”… அவள் தான் ஸ்வேதா என கண்டுகொண்ட தேனுகா, வரவேற்றாள்.
“ஓ! ஐ அம் சாரி, சாப்பாட்டு நேரத்துல வந்துட்டேனா? சரி நான் வெளிய வெயிட் பண்றேன், நீங்க சாப்டுங்க”
“இல்ல பரவால்ல”
” நோ தேனு…..சாப்பாடு சாமி மாதிரி , யாருக்காகவும் அதை மூடி வைக்கக் கூடாது. நான் வெளிய இருக்கேன் , வாங்க” வெளியேறிவிட்டாள் ஸ்வேதா.
“யாரும்மா அது ? க்ளையண்டா?”
“இல்லண்ணா, ஃப்ரண்ட்” அதன் பின் , ஒரு பத்து நிமிடத்தில் மளமளவென்று சாப்பிட்டு முடித்து , கை கழுவிக் கொண்டு ஸ்வேதாவை பார்ப்பதற்கு விரைந்தாள் தேனுகா. அவள் ஒரு ஓரமாக இருந்த மரத்தில் சாய்ந்து நின்றுகொண்டு, கோர்ட்டுக்குள் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள்.
“ஸ்வேதா”…
“ஹாய்ய்ய், சாப்பிட்டீங்களா?”
“சாப்பிட்டேன் , நீங்க”
“நான் வீட்லயே சாப்பிட்டுட்டு தான் வந்தேன். நான் வெயிட் பண்றேன்னு வேகமா சாப்ட்டு வந்தீங்களா?”
“சே..சே…அதெல்லாம் இல்ல , நான் வழக்கம் போல தான் சாப்பிட்டேன்.” அதே நேரம், தேனுகாவின் ஃபோன் வைப்ரேட் ஆனது . கிர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்… அழைப்பது யார் என பார்த்தாள், ஏதோ புது நம்பர்.
” ஒரு நிமிஷம்”…..ஸ்வேதா தலை அசைக்க, ஃபோனை அட்டெண்ட் செய்தாள்.
“ஹலோ”
“தேனுகா, நான் மாமி பேசுறேன்” என்றார் கதீஜா.
“மாமி?… ஒ….அத்தை ! நீங்களா ? சாரி, உங்க நம்பர் என்கிட்ட இல்ல அத்தை”
” பரவாயில்ல , இன்னிக்கு தேங்காய் சாதம் சாப்பிட்டியா? நல்லா இருந்துச்சா? காரம் கொஞ்சம் அதிகம்னு வீட்ல எல்லாரும் சொன்னாங்க, உனக்கு வயித்துப் புண் ஆச்சே? அதான்மா” சாதம் கொட்டிப் போய் விட்டது என்று சொன்னால் வருந்துவாரே என எண்ணியவள்,
“இல்லத்த , நல்லா இருந்துச்சு. நான் நல்லா சாப்பிட்டேன் , நீங்க எல்லாரும் சாப்டீங்களா? என்ன பண்றீங்க?”.
“சாப்டோம்மா, ஒரு குட்டி தூக்கம் போடலாம்னு இருக்கோம்”
“சரிங்க அத்தை”
“ம்ம்ம் வக்கிறேன்” அவர் ஃபோனை கட் செய்ய, நிமிர்ந்து ஸ்வேதாவைப் பார்த்தாள் தேனுகா.
“சொல்லுங்க, ஜூனைத் பத்தி ஏதோ பேசணும்னு சொன்னீங்க?”
“பேசலாம், ஆனா இங்க நின்னா வெக்கைல மயக்கமே வந்திரும். வாங்க, உங்க ரூம்ல போய் பேசலாம்”
“அ…அங்கயா?…அங்க வேணாமே”… அவள் தயங்க,
” சரி நோ ப்ராப்ளம் , நான் கார்ல தான் வந்துருக்கேன். வெளில போலாமா? பக்கத்துல ஏதாவது மால் இல்லனா ஐஸ்க்ரீம் பார்லர்”
“எவ்ளோ நேரம் ஆகும்?”
“எதுக்கு?”
“நீங்க பேசி முடிக்க எவ்ளோ நேரம் ஆகும்னு கேட்டேன்”அவளுக்கு தன்னுடன் பேச விருப்பமே இல்லை என உணர்ந்து கொண்ட ஸ்வேதா, புன்னகைத்தாள்.
“மேக்ஸிமம் ஒரு மணி நேரம்”
“சரி, பக்கத்துல ஒரு காஃபி ஷாப் இருக்கு .அங்க போய் பேசலாம். ஜஸ்ட் ஒன் அவர் , அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட நான் அங்க இருக்க மாட்டேன்”
“ஓகே ஓகே லாயர் மேடம். இப்ப போலாமா? வாங்க”
“வெயிட்ட்ட்……வந்துடறேன்” ..
“ஓகே”…
காஃபி ஷாப்…….
ஆளுக்கொரு கோல்ட் காஃபி சொல்லிவிட்டு காத்திருந்தனர் ஸ்வேதாவும், தேனுகாவும்.
“மிஸஸ் ஜூனைத், உங்க வாய்ஸ் ரொம்ப ரொம்ப ஸ்வீட்டா இருக்கு”
“தாங்க்ஸ் ஃபார் யுவர் நைஸ் காம்ப்ளிமண்ட்ங்க . ஆனா ஒரு சின்ன திருத்தம் , நான் மிஸஸ். ஜூனைத் இல்ல, தேனுகா விஸ்வநாதன்”
“சில்லி, யூ ஆர் மேரீட், என்ன தான் நீங்க என் ஃப்ரண்டை ஹஸ்பண்ட்னு நினைக்காம இருந்தாலும் , உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆனதை உங்களால மறுக்க முடியாது”
” மறுக்கமுடியாது . ஆனா நான் அந்த சம்பவத்தை மறக்க நினைக்கிறேன், சும்மா சும்மா அதையே பேசாதீங்க. அந்த பந்தம் ஒரு நிரந்தரமில்லாத பந்தம், இன்னும் ஒரே”……
“ஏங்க, ஒரு நிமிஷம் இருங்க . நீங்க இப்ப என்ன பேசப் போறீங்கன்னு எனக்கு நல்லா தெரியும். ஏன்னா உங்க வீட்ல என்ன ப்ராப்ளம் போயிட்டு இருக்கு, உங்க கல்யாணம் பத்தின உங்க நிலைப்பாடு என்ன, எல்லாம் எனக்கு தெரியும் . நேத்து ஜூனைத் ரவியைப் பாக்க எங்க வீட்டுக்கு வந்தான். ஐ அம் சாரி , ரவி என்னோட ஹஸ்பெண்ட். நாங்க மூணு பேரும் ஒண்ணாத் தான் வேலை பாக்குறோம். இப்ப நான் உங்களைப் பாக்க வந்தது ஜூனைத் விஷயத்துல உங்க முடிவு என்னனு தெரிஞ்சுக்கிறதுக்காக இல்ல , அந்த முடிவே தப்புனு புரிய வைக்க”
“என்ன சொல்றீங்க? ஆர் யூ ட்ரையிங் டி இன்ஃப்ளூயன்ஸ் மீ? மை காட்!!! ஐ அம் சாரி ஸ்வேதா, தட் இஸ் இம்பாசிபிள்”
“இல்ல பாசிபிள் தான் . நான் இப்போ உங்க கிட்ட சில கேள்விகள் கேக்கப் போறேன், பதில் சொல்றீங்களா?”
“சொல்லித்தான ஆகணும் ,கேளுங்க”
“ப்ரித்வியால இனி நீங்க யாரையுமே நம்ப மாட்டீங்க , அப்டிதான?”
“ஆமா”
“யார் பாசம் காட்டினாலும் உங்க மனசு ஏற்காது அப்டி தான? ஸோ, இனி யாரையும் நேசிக்க மாட்டீங்க?”
“ஆமா , ஆமா”
“அப்புறம் எந்த நம்பிக்கையில தாத்தா, பாட்டி, ரஷிதா இவங்க எல்லாரையும் நம்புறீங்க ? அவங்க உங்க மேல காட்டுற அக்கறையை மட்டும் உண்மைன்னு எப்டி நம்புறீங்க? அப்டி அவங்க அன்பு உண்மைனு நீங்க நம்புனா, ஜூனைத் அன்பை ஏன் ஏத்துக்காம உதறி தள்ளுறீங்க?”
…………….
“சொல்லுங்க, என்ன திடீர்னு சைலண்ட் ஆகிட்டீங்க?”
“அவங்க எல்லாரும் எனக்கு தாத்தா, பாட்டி , தங்கை , அம்மானு கடவுள் கொடுத்த மற்ற உறவுகள் .அதை நான் சந்தோஷமா ஏத்துக்குறேன். ஆனா நான் தான் இனிமே உன் காதலன், உன் கணவன்ற வட்டத்துக்குள்ள ஒருத்தர் வர்றத என்னால அனுமதிக்க முடியல”
“ரொம்ப முரணா இருக்கு மேடம் நீங்க பேசுறது . ஜூனைத்தை நீங்க வேணாம்னு சொல்றீங்க, அவனே உங்க லைஃப்ல இருந்து போயிட்டா அப்புறம் அவன் குடும்பத்துல உள்ள மற்ற நபர்கள் மட்டும் எப்டி உங்க மேல அன்பா அக்கறையா இருப்பாங்க? இல்ல அதை உங்களால எதிர்பார்க்கத் தான் முடியுமா ? அவங்க உங்க மேல ரொம்ப அக்கறையா இருக்குறதுக்கு நீங்க ஜூனைத்தோட மனைவிங்குறதும் ஒரு முக்கியமான காரணம் தான். இங்க பாருங்க தேனுகா , ஜூனைத் ரொம்ப ரொம்ப நல்ல பையன். அது அவனை நெருங்கி பழகப் பழகத் தான் தெரியும். அதுக்கான முயற்சிகள் எடுக்க ஆரம்பிங்க . அவன் உங்க மேல ரொம்ப ப்ரியமா இருக்கான்றது மட்டும் உங்களுக்குப் புரிஞ்சுச்சுன்னா, அது உங்க வாழ்க்கையையே அழகா மாத்திரும் , என்ன சொல்றீங்க?”
“இல்லங்க , அவர் கூட சேர்ந்து வாழ என் மனசு என்னைக்குமே ஒத்துக்காது”
“நாளைக்கு உங்க மைண்ட்செட் எப்டி இருக்கும் தேனுகா? ரொம்ப ஃப்ரஷ்ஷா இருக்குமா? இல்ல கொஞ்சம் டல்லா இருக்குமா?” என்ன இப்படி சம்மந்தமே இல்லாம கேக்குறா? என யோசித்தவள்,
” நாளைக்கு என்ன நடக்குமோ அதைப் பொறுத்து தானங்க என் மைண்ட் செட் இருக்கும் , அதை எப்டி இன்னிக்கே சொல்ல முடியும்?”
“கரக்ட்….. அதே தான் நானும் சொல்ல வர்றேன் . ஜூனைத் விஷயத்திலயும் உங்க மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறலாம் இல்லயா? அதுக்கு வாய்ப்பிருக்கு தான?”
……………..
“ரைட் , அமைதியா இருக்கீங்க. யோசிக்க ஆரம்பிக்கிறீங்கனு நினைக்கிறேன். நல்லா பொறுமையா யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. ரொம்ப நேரம் ஆகும்னு நினைச்சேன் ஆனா எதிர்பார்த்ததை விட சீக்கிரம் பேசி முடிச்சாச்சு . எனக்காக உங்க டைமை ஒதுக்குனதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தேனுகா. இன்னிக்கு இது போதும். ஏன்னா, நீங்க ஒரு மாதிரி அன்ஈசியா ஃபீல் பண்றீங்க. ஆனா இனிமே அடிக்கடி வருவேன். வாங்க, உங்களைப் போய் கோர்ட்ல இறக்கி விட்டுட்டு நான் வீட்டுக்கு கிளம்புறேன்”
“பரவாயில்ல ஸ்வேதா, பக்கம் தான? நான் நடந்தே போயிக்குறேன்”
“?
“வெளிய எவ்ளோ வெயில் இருக்கு பாருங்க , எப்டி நடக்க முடியும்?” அதே நேரம், அவள் மொபைல் அழைத்தது. எடுத்து யார் என பார்த்தாள்,
கோவிந்தன் “முக்கியமான கால் வருது ஸ்வேதா, நான் இங்கயே பேசிட்டு போய்க்கிறேன், நீங்க கிளம்புங்க”
“ஆர் யூ ஷ்யூர்?”
“எஸ்ஸ்”….
” ஓகே டேக் கேர் , பாய்”
“யூ டூ , பாய்ய்”…..ஸ்வேதா , அந்த காஃபி ஷாப்பை விட்டு வெளியேற
மொபைலை அட்டெண்ட் செய்து , காதில் வைத்தாள் தேனுகா.
“குட் ஆப்டர்னூன் சார்”
“குட் ஆப்டர்னூன் தேனு , உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ். அந்த மாடசாமி மேல கேஸ் ஃபைல் பண்ணியாச்சு, அவன் பெரிய கிரிமினல், லேட் பண்ணினா அவன் ஆப்ஸ்காண்ட் ஆக வாய்ப்பு இருக்கு, அதனால கூடிய சீக்கிரமே ஹியரிங் வைங்கனு ஜட்ஜ் கிட்ட பெர்சஸனலா ஒரு ரெக்வஸ்ட் வச்சிருக்கேன் மா”…
“அப்டியா? ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார்ர். குற்றவாளி தண்டிக்கப்படணும், அது தான் எனக்கு ரொம்ப முக்கியம்”
“ஆமாம்மா…..சரி நீ என்ன பண்ற, இன்னிக்கு சாயங்காலம் உன் ஹஸ்பண்டை கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வா, கேசைப் பத்தி சில விஷயங்கள் டிஸ்கஸ் பண்ணிக்கலாம்” கோவிந்தன் சொல்ல , அவரே என் கிட்ட பாராமுகமா இருக்காரே? எப்டி கூட்டிட்டுப் போகப் போறேன்? நினைக்க நினைக்க தேனுகாவின் தலை சுற்றியது.
– தொடரும்….
No comments yet.