41.
“ஹலோ ”
“ஹலோ தேனுகா”
“எஸ் ஹோல்டிங், நீங்க?”
“நான் ஸ்வேதா, விப்ரோல வொர்க் பண்ணிட்டு இருக்கேன்”
“ஸ்வேதா வா?…….ஐ அம் சாரிங்க, எனக்கு நினைவுக்கு வரல . நீங்க என்னோட க்ளையண்ட்டா?”
“ஹாஹாஹா….இல்ல இல்லங்க, நான் ஜூனைத்தோட பெஸ்ட் ஃப்ரண்ட். அவன் கூட தான் ஆபீஸ்ல வொர்க் பண்றேன்”
“ஓ……சரி சொல்லுங்க, என்ன விஷயமா எனக்கு கால் பண்ணீங்க?”
“புரிய வைக்க”
“என்ன சொல்றீங்க ? புரியல”
“ஆமாங்க , உங்களுக்கு நிறைய விஷயங்கள் புரியல . அதைத் தான் புரிய வைக்க ட்ரை பண்ணப்போறேன். அதனால தான் உங்க வீட்டுக்காரன் கிட்ட கெஞ்சி கேட்டு உங்க நம்பர் வாங்குனேன் . அவன் வேணாம்னு தான் சொன்னான் நான் தான் ஃபோர்ஸ் பண்ணி வாங்குனேன். அதனால இந்த விஷயமா அவன் கிட்ட நீங்க சண்டை போடாதீங்க , சரியா?” ஸ்வேதாவின் லொட லொட பேச்சு, தேனுகாவுக்குள் எரிச்சலை மூட்டியது. பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள்.
…………
“தேனுகா, என்ன சைலண்ட் மோட்கு போய்ட்டீங்க ? எனி ப்ராப்ளம்?”
“இங்க பாருங்க ஸ்வேதா, நான் மார்னிங் டைம்ல எப்பவுமே பிசியா தான் இருப்பேன் . அதுவும் இல்லாம இப்ப அவசர அவசரமா கோர்ட்கு கிளம்பிட்டு இருக்கேன் . என்ன விஷயம்னு கொஞ்சம் சீக்கிரம் சொன்னா நல்லா இருக்கும்” யப்பாடியோவ்வ்வ்! இவ நம்ம நினைச்சத விட பெரிய்ய்ய்ய்ய் அப்பாடாக்கரா இருப்பா போலயே ? இனி மேலும் நேரா விஷயத்தை சொல்லாம கண்டதை பேசினா டென்ஷன் ஆகிருவா, என முடிவு செய்தாள் ஸ்வேதா.
“ஹலோ…..ஹலோ”….
“இருக்கேன் தேனுகா, சரிங்க உங்க டைமை நான் வேஸ்ட் பண்ண விரும்பல , நான் ஜூனைத் பத்தி உங்க கிட்ட பேசணும் , நேர்ல பேசணும். தயவு செய்து முடியாதுன்னு சொல்லிராதீங்க. உங்க ரெண்டு பேரோட நல்லதுக்காகத் தான் நான் உங்களை மீட் பண்ண விரும்புறேன் . இன்னிக்கு மதியம் இரண்டு மணி போல நான் உங்க ஆஃபீஸ்கு வரட்டுமா? அப்போ நீங்க ஃப்ரீ தான ? ஓகே தான?”
“மிஸ் ஸ்வேதா”…..
“சாரி , நான் மிஸஸ்.ஸ்வேதா”
“ஓகே . மிஸஸ் ஸ்வேதா , ஜூனைத் சம்பந்தமா இனிமே பேசுறதுக்கு எதுவுமே இல்லங்குறது என்னோட ஒபீனியன்”
“நோ மேம் , நிறைய இருக்கு . மதியம் நான் சொன்ன டைமிங்குக்கு நீங்க ஃப்ரீ தான?”
……………
“அமைதியா இருக்கீங்க , அப்போ ஃப்ரீ தான்னு நான் அர்த்தம் செஞ்சுட்டு ப்ளான் போட்டுடறேன் . மத்தது நேர்ல பேசிக்கலாம் ,பாய்ய்ய்”….அவள் ஃபோனை கட் செய்து விட சே…..இது வேற புது தலைவலி முனகிக் கொண்டே ஃபோனை கட்டில் மேல் எறிந்தாள்.
“அக்கா….இந்த ட்ரஸ் எப்டி இருக்கு?” நீல வண்ண டாப்ஸ் லெகிங்க்ஸில் வந்து நின்றாள் ரஷிதா . இன்று அவளுக்கு முதல் நாள் கல்லூரி.
“சூப்பரா இருக்கு ரஷி”
“ஓகேக்கா , தாங்க் யூ”
“ம்ம்ம்ம் … கிளம்பிட்டியா?”
“ஆமாக்கா,வாங்க சாப்பிட போலாம். சாப்பிட்டுட்டு கிளம்புறது தான் பாக்கி”
“போலாம்டி, என்னோட டிஃபன் பாக்ஸ் காணோம் .அதைத் தான் தேடிட்டு இருக்கேன், எங்க வச்சேன்னு தெரியல”
“நான் எடுத்துட்டுப் போயிட்டேன்கா, லன்ச்சும் எடுத்து வச்சிட்டேன், டேபிள்ல தான் இருக்கு”
“தாங்க்ஸ் தங்கம்” அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள் தேனுகா . பின் இருவரும் தங்கள் பேக்குகளை கையில் எடுத்துக்கொண்டு, அறையை விட்டு வெளியேறினர். அவசர அவசரமாக சாப்பிடுவிட்டு, அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி வாசலை அடைந்த அதே நேரம், ப்ரியாவும் வந்து சேர்ந்தாள்.
“வாடி……வா…. அக்கா , இவ தான் என்னோட பெஸ்ட்டோ பெஸ்ட் ஃப்ரண்ட் ப்ரியா . உங்க நிக்காஹ் அன்னிக்கு பாத்தீங்களே , நியாபகம் இருக்கா?”
“எப்டி இல்லாம இருக்கும்? ரொம்ப குழந்தைத்தனமான முகம் இந்த பொண்ணுக்கு , ஹாய்ய்ய் டா” என்ற தேனுகா, அவள் கன்னத்தை லேசாக தட்டினாள் . சே…..என்ன ஒரு கனிவு? என்ன ஒரு கள்ளமில்லாத சிரிப்பு? என எண்ணியபடியே , ஹாய் அக்கா என வாய்நிறைய புன்னகைத்தாள் ப்ரியா.
“எப்டி இருக்க ? வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்கக்கா, நானும் நல்லா இருக்கேன், நீங்க எப்டிக்கா இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன்டா . சரி , ரெண்டு பேரும் பாத்து பத்திரமா போயிட்டு வாங்க . இது லைஃப்ல உங்களோட அடுத்த கட்டம் நிறைய என்ஜாய் பண்ணுங்க , கூடவே நிறைய கத்துக்கங்க, ஆல் தி வெரி பெஸ்ட் ரெண்டு பேருக்கும், சக்சஸ்ஃபுல்லா வருவீங்க”
“தாங்க் யூ கா”….
“இட்ஸ் மை ப்ளெஷர்” பின் அவர்கள் இருவரும் விடைபெற்று வேறு பக்கம் செல்ல, இவள் ஆட்டோ ஒன்றை தேட ஆரம்பித்தாள்….
**************
” உங்களுக்கெல்லாம் என்னத்துக்கு நான் சம்பளம் குடுத்துட்டு இருக்கேன்னு எனக்கு தெரியல , தடிமாடுகளா … எருமை மாடுகளா .. ஒரு பொடிப்பயல என்னால முடிக்க முடியல, நான்லாம் என்ன பெரிய ரவுடி?……தப்பு பண்ணிட்டேன்டா, உங்களை நம்பி நான் இந்த வேலையை ஒப்படைச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன்”
“அண்ணே கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணே , அவன் தனியாவே சிக்க மாட்டேங்குறான் . சிக்கிருந்தா இந்நேரம் முடிச்சிருக்க மாட்டோமா ?” என்றான், அந்த அடிமை கூட்டத்துக்கு தலைவன் போலிருந்த ஒருவன்.
“ஆமா, வாய் மட்டும் பேசு , அதுக்கு தான் நீ லாயக்கு. இந்த வேலையை உன் கிட்ட குடுத்து எத்தன நாளாச்சு?”
……………
“சொல்லுடா”…
“ஒரு வாரத்துக்கு மேல இரு”….
“இல்ல , அத விட கூடுதலா நாள் ஆகிருக்கும். சரி உங்க பேச்சுக்கே வர்றேன், ஒரு வாரம்னே வச்சுக்கலாம். சம்பவம் தான் பண்ணல, சரி எப்டி அவனை போடலாம்னு ஸ்கெட்சாவது தயார் பண்ணி வச்சுருக்கீங்களா?”
…………….
” தெரியும், எனக்கு தெரியும். போங்கடா , உங்களை நம்பி ஒண்ணும் நான் இந்த தொழிலுக்கு வரல. இன்னிலருந்து இது என்னோட அசைன்மெண்ட் , இன்னும் எண்ணி நாளே நாள்ல அந்த ஜூனைத்தை நான் போட்டு தள்ளுறேன் . இல்லாட்டி என் பேர் மாடசாமி இல்ல” மாடசாமியின் முகத்தில் அவ்வளவு வெறி……..
***************
மதியம் இரண்டு மணி. கேஸ் ஒன்றை முடித்துவிட்டு , சோர்வாக தன் அலுவலக அறைக்குள் நுழைந்தாள் தேனுகா . கோட்டை கழற்றி சேரில் மாட்டிவிட்டு, பாத்ரூமுக்குள் நுழைந்து முகம் கழுவிவிட்டு வெளியே வந்தாள்.
“அம்மா”…..அழைத்துக்கொண்டே உள்ளே வந்தார் மூர்த்தி அண்ணன். கையில் ஒரு பெரிய சாப்பாடு பார்சல்.
“அண்ணா, வாங்க”
” சாரிம்மா , ஹோட்டல்ல கூட்டம் ஜாஸ்தி . அதனால தான் சாப்பாடு பார்சல் கட்ட கொஞ்சம் நேரமாயி போச்சு, ரொம்ப பசி எடுத்துருச்சாமா?”
“இல்லண்ணா, எனக்கு அவ்ளோலாம் பசி இல்ல”
“சும்மா பொய் சொல்லாதீங்கமா, முகம் ரொம்ப சோர்வா இருக்கு , பாத்தா களைப்பா வேற இருக்கீங்க, மணி ரெண்டாச்சு , பசிக்காமலா இருக்கும்? முதல்ல சாப்பிடுங்க”
“நீங்களும் வாங்கண்ணா, நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிடலாம்”
“உங்களுக்கு பரிமாறிட்டு நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்”
“அண்ணா , நான் என்ன சின்ன பாப்பாவா ? எனக்கு என்ன வேணும்னு பாத்து நானே எடுத்து வச்சுக்குறேன். நீங்க வாங்க, எனக்கு எதிர்ல உக்காருங்க. இந்தாங்க இலை”
“இல்ல இல்லமா….எனக்கு டேபிள்ல உக்காந்து சாப்பிட்டு சுத்தமா பழக்கம் இல்ல , நான் இப்டி கீழயே உக்காந்து”
“ஓ…..அப்டியா அண்ணா? அப்ப தினம் மதியம் நீங்க டேபிள்ல தான் உக்காந்து சாப்பிடணும். அப்போ தான் பழகும் . வாங்க, உக்காருங்க” அதற்கு மேல் மறுத்தால் தேனுகா கோபித்துக் கொள்வாள் என்பதால், ஒன்றும் பேசாமல் அவள் எதிரே அமர்ந்தார் . இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
“நல்லா இருக்காமா?”
” நல்லா தான் இருக்கு, ஏன் அண்ணா கேக்குறீங்க? உங்களுக்கு டேஸ்ட் ஏதும் பிடிக்கலயா?”
“இல்லமா…..இத்தனை நாளா வீட்டு சாப்பாடு சாப்பிட்டு அந்த டேஸ்ட் நாக்குக்கு பழகிருக்கும் அது கொட்டிப் போயிட்டதால ஹோட்டல் சாப்பாடு அதான்மா கேட்டேன்”
” ஓ….சரி சரி”…
“அப்புறம் இன்னொண்ணு”
“சொல்லுங்கண்ணா”
” ப்ரித்வி ஐயா எப்பமா ஊர்ல இருந்து வருவாரு?” அவரது கேள்வி அணுகுண்டு போல் அவள் இதயத்தை அதிர செய்தது.
“அ…..அண்ணா அது…. எனக்கு சரியா தெரியல…. போன வேலை இன்னும் முடியலன்னு சொன்னாரு”
“என்ன வேலையோ போங்க, கல்யாணம் ஆச்சுனு தான் பேரு. ரெண்டு பேரையும் இன்னும் ஒண்ணா சேர்த்து பாக்கல . என் பொண்டாட்டி வேற உங்களை நேர்ல வந்து பாக்கணும் , விருந்துக்கு கூப்பிடணும்னு சொல்லிட்டு இருந்தா . அதான் கேட்டேன்”
“சீக்கிரம் வந்திருவார்ணா”
“எந்த ஊருக்கு போயிருக்காரு?”
“அ…அது…அது… எனக்கு சரியா தெரியல , அவர் சொல்லலண்ணா”
“என்னமோ, இதுக்கு முன்னாலயும் இந்த மாதிரி அடிக்கடி வெளியூர்லாம் போவாரு தான் . ஆனா அப்பப்ப எனக்கு ஃபோன் பண்ணி, உங்களைப் பத்தி விசாரிச்சுட்டே இருப்பாரு . இந்த தடவை அவர் இந்த பக்கம் வந்தே ஒரு மாசம் ஆகப் போகுது . இன்னும் ஒரு ஃபோன் கூட பண்ணல” அவர் கப்பென பாயிண்டை பிடிக்க, என்ன பதில் சொல்வது என தேனுகா யோசிக்க, “ஹலோ தேனுகா” சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் ஸ்வேதா
– தொடரும்…..
No comments yet.