கல்யாணம் முதல் காதல் வரை – 39

Shanmuha Sethuramachandran | 10 Feb 2026 | Share

                              39.

           ” அக்கா,   என்னக்கா   சொல்றீங்க?  அப்போ    உங்களுக்கே   தெரியாம,  அவர்  உங்களை   லவ்   பண்ணிட்டு   இருந்தாரா?”

            “ஆமா,   அப்டி   தான்   அன்னிக்கு  அவன்   என்கிட்ட   சொன்னான்.  ஆனா  நான்   அவனை   எங்கயுமே   பாத்த   மாதிரி  நியாபகம்   இல்ல,   அப்போ  தான்”…..

            தட்ட்ட்   தட்ட்   தட்ட்

             “யாரு?”

             “ஜூனைத்  கான்”

              “ஓ…..அக்கா,   உங்க   ஹஸ்பெண்ட்  தான்,   நீங்களே   போய்  கதவைத்திறங்க.  அனேகமா   உங்களைப்   பாத்து  தான்  ஏதோ    சொல்ல  வந்திருப்பாரு”

             “நீயே   போய்த்   திற”

             “நீங்க   போங்கக்கா   ப்ளீஸ்”

             “ஏன்   ரஷி   நீ   இப்டி   பண்ற?”   அலுத்துக்   கொண்டே   போய்  கதவைத்   திறந்தாள்  , ஜூனைத்  உள்ளே  வந்தான்.

            “ரஷி…..  நாளைக்கு  காலேஜ்  ஃபர்ஸ்ட்   டேல?  ரெடி  ஆகிட்டியா? எல்லாம்   இருக்கா   இல்ல   ஏதாவது  வாங்கணுமா?”

            “இல்ல   மாமா….. எல்லாமே  இருக்கு,  நீங்க   பேசிட்டு    இருங்க,   நான்   நன்னா நன்னி   ரூம்கு   போய்”

            “ஏய்ய் , எங்கயும்  போகாத.  இங்கயே  இரு  , சும்மா   பெரிய   மனுஷி   மாதிரி   எதையாவது   செஞ்சிகிட்டு.   அவர்   உன்  கிட்ட   தான   பேசிட்டு   இருக்காரு ?  அப்புறம்   எப்டி   நீ    வெளிய   போவ?”

           ”  வா…..தோட்டத்துக்கு,   அங்க   வெயில்    இருக்காது ,   உன்   கூட  கொஞ்சம்    பேசணும்”  

            ” தோட்டத்துக்கா?   ஏன்?   நான்   எதுக்கு   உங்க   கூட    வரணும் ?  என்னால  வரமுடியாது .  எது   சொல்றதா    இருந்தாலும்   இங்கயே  சொல்லுங்க.   அங்க  வா   இங்க  வா,  அதை  பண்ணு    இதை   பண்ணு   அதை  பண்ணுனு    நீங்க    ஆர்டர்   போடுறதுக்கு  ஐ   அம்   நாட்   யுவர்   ஸ்லேவ்,   ஐ  அம்   யுவர்” …. இவனை   ஹஸ்பெண்ட்னும்  சொல்ல  முடியாது ,  ஃப்ரண்டும்னும்  சொல்ல  முடியாது… அதற்கு   மேல்   எதுவும்  பேச   முடியாமல்   வாக்கியத்தை   அந்த   இடத்திலேயே   நிறுத்தினாள்  தேனுகா.

            “சொல்லுங்க  லாயர்   மேடம்,  ஏன்  பேச்சை    பாதியிலயே   நிறுத்திட்டீங்க?   யூ   ஆர்  மை…..யூ  ஆர்  மை…. டெல்  மீ”…. தேனுகாவின்   அந்த   மௌனம், ரஷிதாவுக்கு   சிரிப்பை   வரவழைத்தது.   ஆனால்   சிரித்தால்   தேனுகா  கொன்று  விடுவாள்   என   தெரியும்.  இவள்  மத்த   பெண்களைப்   போல்   கிடைத்த  வாழ்க்கையை   வாழ்ந்து  விட்டு  போகலாம்  என்ற   எண்ணம்   வாய்க்கப்பெற்றவள்  இல்லை. ப்ரித்வி  தந்த  வலியையும் ,அவன்  செய்த   ஏமாற்று   வேலைகளையும்  அவளால்  எளிதில்  கடந்து வரமுடியவில்லை   யா..அல்லாஹ்!!   எங்க   அக்கா   ரொம்ப  சந்தோஷமா   இருக்கணும்,   நீ   தான்  அவங்களை    சீக்கிரமே   நல்லவிதமா  மாத்தணும் .  வேண்டிக்கொண்டாள்  ரஷி.

           “மாமு,   நீங்க   பேசுங்க .  நான்   வெளிய   இருக்கேன்”  சொல்லிவிட்டு  வேகமாக   அந்த   இடத்தை  விட்டு  அகன்று,   அறை  வாசலுக்கு   வந்தவள்   உள்ளே  அவர்கள்   சண்டை  போடுவது  வெளியே  கேட்க   வேண்டாம்   என   நினைத்து,  கதவை   லேசாக   சாத்தினாள்.

           “ஹனி”

          “கால்   மீ   பை  நேம்”

           “ஹாஹாஹா….எனக்கு   ரொம்ப  க்ளோஸ்   ஆன   ஆட்களை   நான்   பேரை   சுருக்கி    தான்   கூப்பிடுவேன்.  ஆனா  உன்னை   மட்டும்   செல்லப்  பெயர்  வச்சுக்   கூப்பிடணும்னு   தோணுது  , அதான்”

           “கடவுளே……சரி   என்ன  விஷயமா  வந்தீங்க  ? அதை   சொல்லிட்டு,   முதல்ல  கிளம்புற   வழியைப்   பாருங்க”

           “அடடே  மிஸஸ்  ஜூனைத்கு   கோபமெல்லாம்   வருதே?   சே…..இப்டி   சொல்லக்   கூடாது ,  மிஸஸ்  ஜூனைத்கு  எப்பப்   பாத்தாலும்  கோபம்  மட்டும்  தான்  வருது .  இந்த  வாக்கியம்  தான்  உனக்கு   சரியா   இருக்கும்.   சரி ,  உன்  தாலியை  கழட்டு  , கமான்  க்விக்”

            “அய்யோ!!!…என்ன  சொல்றீங்க?  தாலியை   ஏன்   கழட்ட   சொல்றீங்க?”  என்று   எதுவும்   கேட்காமல்,  

             “எதுக்கு?”   என  சாதாரணமாகத்  தான்   கேட்டாள்   தேனுகா. 

              “என்ன   தான்   நான்   முஸ்லிமா  இருந்தாலும் , எனக்கு   நிறைய  ஹிந்து   ஃப்ரண்ட்ஸ்   இருக்கிறதுனால   உங்க  கஸ்டம்ஸ்   எனக்கு   தெரியும்.  கல்யாணம் பண்ணிக்கப்   போற  பொண்ணுக்கு,   மாப்பிள்ளை   தான  தாலி   வாங்குவாங்க? ஸோ ,  இது    ப்ரித்வி   வாங்கினது  தான? எனக்கு   அது    பிடிக்கல,  அதனால  தான்    உனக்கு   வேற   மாங்கல்யம்  வாங்கிட்டு   வந்திருக்கேன்”

           “நீங்களா?   நீங்களா  வாங்குனீங்க?” அவள்  கேள்வியாய்  பார்க்க,

           “நான்னா   நானே   இல்ல,   நானும்   என்   ஃப்ரண்டோட   மனைவி  ஸ்வாதியும்  போனோம்.  அவ   தான்   செலக்ட்   பண்ணி  குடுத்தா.   அங்கயே   ஒரு   செயினும்  வாங்கி,   மாங்கல்யத்தை   அதில  கோர்த்து  தர   சொல்லி   எடுத்துட்டு   வந்துட்டேன்.  இந்தா,   இதை   போட்டுக்க”   அவன்  சொல்லி   முடிக்க   தேனுகாவுக்கு  மனதில்   எரிச்சல்  மண்டியது.

           “ப்ச் ,  இப்ப   எதுக்கு   நீங்க  தேவையில்லாத   வேலைகளை  பாத்துட்டு  இருக்கீங்க  ?  நானே   இதை   நிரந்தரமா  கழட்டுற   ப்ளான்ல   இருக்கேன்,   கண்டபடி   உளறாம   வெளிய   போங்க.  நான்   இந்த  வீட்ல    இருக்கப்போறதே   இன்னும்    கொஞ்ச    நாளைக்கு   தான் .  தாத்தா  சொன்ன    ஒரு   மாசத்தில   இருபத்து   மூணு   நாள்   கடந்திருச்சு .   இன்னும்  ஜஸ்ட்   செவன்   டேஸ்ல   நான்   இங்க   இருந்து  கிளம்பிருவேன்.   அதுக்கு   யார்   தடை  சொன்னாலும்   நான்   காதுலயே  வாங்க  மாட்டேன் .  அன்னிக்கே   போறதா  தான்  இருந்தேன் ,  ஆனா   அனீமிக்கா  இருக்க   உன்னை  நான்   நல்லா   பாத்துக்கணும்னு  நினைக்கிறேன்னு   ஆயிஷாம்மா  வருத்தப்பட்டதால   தான்   நான்  இங்க  இருக்கிறதுக்கு  சம்மதிச்சேன்’ 

             “யப்பா,    இந்த   பாட்டையெல்லாம்  நான்   பல   தடவை   கேட்டுட்டேன்.  நான்   சொல்றேன்ல?   அதுக்காகவது    நீ   இதை   செய்யலாம்ல  ? ப்ளீஸ்” 

            “ஏங்க   என்னை   இப்படி  கொடுமை  படுத்தி   சாகடிக்கிறீங்க ?  தாலின்னு   ஒண்ணை   என்   கழுத்துல  கட்டிட்டதுனால,  என்னை   நீங்க    எல்லா  விஷயத்துலயும் அதிகாரம்    பண்ண   நினைக்கிறது  ரொம்ப  தப்பு,   ரொம்ப   ரொம்ப  தப்பு”

           “ஷ்!   கத்தாத,  மெதுவா  பேசு.   நான்  உன்னைனு   இல்ல ,  யாரையுமே  எப்போதுமே   அதிகாரம்   செய்ய  நினைச்சது   இல்ல.  நமக்கு  நடந்திட்ட  நிக்காஹ்வை   ஏத்துக்க   பழகிக்கனு   தான்   சொல்றேன்.   இதுக்கு   முன்னாலயாவது  அந்த   ப்ரித்வியை   நினைச்சு  அழுதிட்டு  இருந்த ,  ஒரு   மாதிரி   கில்ட்டியா  ஃபீல்   பண்ணிட்டு    இருந்த.   ஆனா ,  இப்ப   அவன்  தான்  ரொம்ப  மோசமானவன்னு   தெரிஞ்சு  போச்சுல ?  அப்புறமும்   ஏன்?”  

          “வெயிட்…..ப்ரித்வி   எப்படிபட்ட  பையன்னு   தெரிஞ்சு   போச்சு   சரி   தான்.  ஆனா   நீங்க   எப்படிப்பட்டவர்னு   இன்னும்  நான்   முழுசா   தெரிஞ்சுக்கலயே?”    

          “வாட்  டூ   யூ   மீன்?”   ஜூனைத்தின்   குரல்   லேசாய்   உயர்ந்தது.  

          “மூணு   வருஷமாய்   என்னை  சுத்தி  சுத்தி   வந்து ,  அவ்ளோ  அன்பைப்  பொழிஞ்சவனே  என்னை  ஏமாத்திருக்கான். நீங்க   யார்   சார்?    உங்களை   நான்   எதுக்கு    நம்பணும்?”    

           “அப்போ…..நீ   என்ன   சொல்ல  வர்ற?  அந்த   கேடுகெட்டவன்  மாதிரி,  நானும்  ஏதோ   ஒரு   காரணத்துக்காக  தான்  உன்னை   கல்யாணம்  பண்ணிருக்கேன்னு   நினைக்கிறியா?”   ஜூனைத்தின்  குரலில்   இப்போது   சீற்றம். 

            “வொய்   நாட்?” 

            “தேனுகா,  திஸ்   இஸ்  டூ  மச்.  இந்த  மாதிரிலாம்   பேசாத.   உன்னை  கல்யாணம்   பண்றதுனால   எனக்கு  என்ன  லாபம்  வரும்னு   நினைக்கிற?” 

           “அது   எனக்கு   தெரியாது.   ஆனா  ஒண்ணு   மட்டும்   நிச்சயம்,   ஏதோ  காரணம்   இல்லாம   நீங்க  ஏன்  என்னை  என்   கூட   இரு   என்   கூட  இருன்னு  சொல்லிட்டே    இருக்கீங்க?”   அவள்  சொல்லி   வாயை   மூட  வில்லை,  அவள்  கழுத்தை  கப்  என   பிடித்தான்   ஜூனைத்.   கண்களை  விரித்து   அவளை  முறைத்தான்.

             “உன்னை   நான்   கன்விண்ஸ்  பண்ண   ட்ரை   பண்றதுக்கு   காதல்   தவிர   வேற   காரணம்   இல்லன்னு  புரிஞ்சுக்காம,  எப்ப   நீ   என்னையும்   அவனை  மாதிரி   நினைச்சியோ   இனிமே   நீ   எனக்கு  வேணாம்.   இந்த   வீட்ல    இன்னும்   நீ  ஏழு   நாள்   தான்    இருக்கப்   போறேன்னு   சொன்னில?   அந்த   ஏழு   நாளுமே  நான்   உன்   முகத்தைக்   கூட   பாக்கமாட்டேன்,  ஏன்    உன்   எதிர்ல   வரவே   மாட்டேன் . போடி…..என்னை   விட்டுட்டு  போக  நீயே  முடிவு    செஞ்ச   பிறகு,   நான்   உன்னை  தடுக்க   நினைச்சது   என்   தப்பு   தான்”  

           ” ஆ!!…..வ….வலிக்குது   கையை  எடுங்க….கையை   எடுங்க  ஜூனைத்” அவள்   திணறி   திணறி   பேச,   சட்டென  பிடியை  விட்டான்.   அவளை   அப்படியே  மெத்தையில்   தள்ளிவிட்டு,   வேகமாக  அறையை   விட்டு   வெளியேறினான்.

           “மாமு……அக்கா   ஏன்   இப்ப   கத்துனாங்க?    நீங்க   என்ன  பேசுனீங்க?   அடிச்சிட்டீங்களா   மாமு?”   ரஷிதா   ஓடி   வந்து   கேட்க,   அவளை  முறைத்தவன்  பதிலேதும்   சொல்லாமல்   வாசலை  நோக்கி    நடந்தான்.  

           என்ன   இது?   இவர்   ஏன்  இவ்ளோ   கோபமா    போறாரு?   ஏதாவது   சின்ன  சண்டையா    இருக்குமோ?  சரி   அக்கா  கிட்டயே    கேப்போம்.  நினைத்தபடியே  தேனுகாவை  பார்க்க  கிளம்பினாள்.

      மாடியில்  

            மொபைல்   அழைக்க ,  அட்டெண்ட்   செய்தாள்   நஸ்ரின்.   நசீமா   தான்.

          ” நஸ்ரினு”…….

           “ஆப்பா!   என்ன   செய்யுற ?  வீட்டுக்கு   போயிட்டீங்களா?   நல்ல   வசதியா    இருக்கா ?  சாப்பிட்டீங்களா?”  அவள்  கேட்டுக்   கொண்டே    போக, 

           “இருடி ,   ஒவ்வொரு  கேள்விக்கா   பதில்    சொல்றேன் . வீடு   நல்ல  பெரிய  வீடா   தான்    இருக்கு.   ஃபுல்   ஃபர்னிஷ்ட்  வீடு   தான்.  அதனால   எல்லா   பொருளும்   இருக்கு ,  காற்றோட்டமாவும்  இருக்கு,    சாப்பிட்டேன்  , பிள்ளைங்க    இரண்டும்  விளையாடிகிட்டு    இருக்குங்க.  அங்க  என்னடி    நிலவரம்?”

           “ஒண்ணும்   பெரிசா   இல்லக்கா,  வீடு   ரொம்ப   இயல்பா  இருக்கு.  நீங்க  ரெண்டு   பேரும்   வீட்டை   விட்டு   போனதுக்கு    பெரிசா   யாரும்   கவலைப்படற   மாதிரி   தெரியல  என்னைத்    தவிர”

           ” நீயும்   கவலப்படாதடி,   இது   எல்லாமே   திட்டப்படி   தான்   நடந்துட்டு   இருக்கு .  எல்லாமே   முஸ்தஃபா  மாமாவோட   ப்ளான்   தான்.  ஷாரிக்குக்கு   கூட   இது   தெரியாது.   முதல்  படி  வெற்றிகரமா   நடந்தப்புறம்   உங்க   ரெண்டு   பேர்   கிட்டயும்   சொல்லலாம்னு   தான்   நான்   மூச்சு  விடல”

                                               – தொடரும்

     

              

    

         

         
     

      

    No comments yet.