31.
“அ…..அக்கா என்ன சொல்றீங்க? அவன் ப்…ப்ரித்வி அங்க அமெரிக்கால இருக்….இருக்கானா ? நான் எ….என்னால…. அக்கா என்னால இதை நம்ப முடியல”
” எ…..என்னாலயும் தான் நம்ப முடியல. எவ்ளோ ஐடியலான ஜோடி நீங்க ரெண்டு பேரும்? உங்களுக்குள்ள கூட இவ்ளோ சண்டை வருமா?”
” அ….அக்கா நான்” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஃபோனின் லைன் கட்டாகி விட்டது. நெட் கனெக்ஷன் சரியாக இல்லாததால் கட்டாகி விட்டது. பேயறைந்தாற் போல் விழித்துக் கொண்டிருந்தாள் தேனுகா.
“ஹனி”…..
…………
” ஹனி என்னாச்சு?”
…………
“ஹனி” அவன் அவள் தோள்பட்டையைப் பிடித்து பிடித்து உலுக்க , தன்னிலை அடைந்தவள்,
“என்ன, சொல்லுங்க” என்றாள்
“பூமிகா என்ன சொன்னாங்க? உன் முகம் ஏன் இப்டி இருக்கு?”
“அவங்க ப்ரித்விக்கும் உனக்கும் என்ன சண்டை? அவன் கோவிச்சுக்கிட்டு இங்க வந்து உக்காந்திருக்கான்னு கேட்டாங்க”
“ஓ”……
“என்ன ஓ? உங்க கண்ணு முன்னால செத்துப் போய், நானே எலக்ட்ரிக் சுடுகாட்டுல கொண்டு போய் எரிச்ச ப்ரித்வி, இப்ப எப்டி உயிரோட வர முடியும்? எவ்ளோ பெரிய, அதிர்ச்சியான விஷயத்தை சொல்றேன் ரொம்ப சாதாரணமா ஒரு ரியாக்ஷன் குடுக்குறீங்க? கடவுளே………..எனக்கு இப்ப என்ன செய்யுறதுன்னு புரியலேயே காட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்”………
“ஹனி , ஹனி கூல். கத்தாத. ப்ளீஸ் டென்ஷன் ஆகாத . அவங்க சொல்றது உண்மை கிடையாது, பொய். ப்ரித்வி செத்துப் போயிட்டது தான் நிஜம். எல்லாம் நான் சொல்றேன். இப்ப நீ என்ன செய்யணும்னு நான் சொல்றேன் ,அது போல செய்யுறியா?”
…………….
“உன்னைத் தான் கேக்குறேன் ஹனி, சொல்லு. நான் சொல்றபடி செய்யுறியா?”
“ஆனா என் விதியைப் பாத்தீங்களா ஜூனைத் ? உங்க அட்வைஸ் எல்லாம் கேக்க வேண்டிய நிலைமை எனக்கு வந்திருக்கே ? சொல்லித் தொலைங்க”
“இவங்க சரியான ஆள், இவங்க தப்பான ஆள்னு தரம் பிரிக்கத் தெரியாம இருந்துட்டு , திமிரான பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலே இல்ல” ஜூனைத் முணுமுணுக்க,
“என்ன சொன்னீங்க? அவன் தப்பான ஆள்னு நீங்க சொன்ன உடனே நான் நம்பணுமா? அப்டின்னா நான் அவனை லவ் பண்ணதுக்கு அர்த்தமே இல்லாம போயிரும் தான? ஆதாரத்தை காமிங்க, அப்ப நான் நம்புறேன். இப்ப ஏதோ உங்க அறிவுரையை கேட்டு நான் நடக்கணும்னு சொன்னீங்களே, அது என்னனு சொல்லுங்க . உங்க உத்தரவுப்படி அதை நான் முடிக்கணும் இல்லையா? ஏன்னா நீங்க தான எனக்கு வாழ்க்கை குடுத்து என்னை கரையேத்தி விட்டிருக்கீங்க ?” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் பூமிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவள் கையில் இருந்த ஃபோனை பிடுங்கி அட்டெண்ட் செய்த ஜூனைத், ஸ்பீக்கரில் போட்டான். பேசு….அவள் தோளைத் தட்டி சைகை செய்தான்
“அ……அக்கா”
“தேனுகா, என்ன நான் பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டு, நெட்டையும் ஆஃப் செய்துட்டு போயிட்ட?”
“அய்யோ ! அதுலாம் இல்லக்கா. நான் மொட்டை மாடியில இருக்கேன். அதான் டவர் சரியா கிடைக்க மாட்டேங்குது”
“சரி இருக்கட்டும், நான் கேட்டதுக்கு பதில் சொல்லு , உனக்கும் என் தம்பிக்கும் என்ன சண்டை?”……
” அக்கா…..ஆ…அது”….. தேனுகாவுக்கு அடிக்கும் குளிர் காற்றிலும் வியர்த்து ஊற்றியது. என்ன பேசுவது என யோசித்து முடித்து,
“அது ஒரு கேஸ் மேட்டர்ல எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன ஆர்க்யூமென்ட்”
” ஸ்டாப் இட் தேனுகா . உனக்கு அவ்ளோ தான் மரியாதை . நானும் இப்ப உண்மையை சொல்லிருவ , அப்ப உண்மைய சொல்லிருவன்னு கவனிச்சு பாத்துக்கிட்டே இருக்கேன், பொய்க்கு மேல பொய்யா அடுக்கிட்டே போற ? என் தம்பி அரிவாளால வெட்டுப்பட்டு செத்துப் போய் இன்னியோட பதினைஞ்சு நாள் ஆகிருச்சு. அது மட்டுமில்ல, நீயும் ஒரு முஸ்லிம் பையனை கல்யாணம் பண்ணிருக்க . ஏன் இதெல்லாம் என் கிட்ட சொல்லாம மறைச்ச ? உன் வாயில இருந்து உண்மைய வரவழைக்கணும்னு , செத்துப் போனவனை அமெரிக்காக்கு வந்து உக்காந்திருக்கான்னு சொல்றேன். அப்பக் கூட நீ அமைதியா தானடி இருந்த ? அவ்ளோ அழுத்தக்காரியா நீ?”
“அக்கா என்னை மன்னிச்சிருங்க . நான் எதையும் வேணும்னு செய்யல. நீங்க இப்ப நிறைமாசமா இருக்கீங்க, இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல நான் ப்ரித்வி பத்தின உண்மையை உங்க கிட்ட சொல்லி, உங்களுக்கு ஏதாவது ஆகிட்டா, நான் என்ன செய்வேன்?” …….
“சும்மா இரு தேனுகா, சும்மா சாக்கு சொல்லாத. நீ எங்க கிட்ட உண்மையை சொல்லிருந்தா என் வீட்டுக்காரர் இங்க இருந்து ப்ரித்வி செலவுக்காக அனுப்புற கணிசமான பணம் வராது . அது உனக்கு கிடைக்காம இருக்கக் கூடாதுங்குறதுக்காகத் தான அவன் உயிரோட இருக்கான்னு நீ பொய் சொல்லிட்டு இருந்த? அவன் தான் என் உயிரு, அவன் தான் என் உலகம்னு சொல்லிக்கிட்டு திரிவ. இப்ப எதுக்குடி அவன் செத்த மறுநாளே இன்னொருத்தனை கட்டிக்கிட்ட? இல்ல எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு . இது எப்டி உன்னால முடிஞ்சது? நினைக்க நினைக்க எனக்கு மனசு ஆறவே மாட்டேங்குது. என் வீட்டுக்காரரோட அக்கா பையன் டாக்டர். ராயப்பேட்டை ஜி. எச் ல தான் வேலை பாக்குறான் . அவன் மார்ச்சுவரில இருந்த பாடிகளோட லிஸ்ட்டை எதுக்கோ வெரிஃபை பண்ணினப்ப , ப்ரித்வி பேரையும் அட்ரசையும் பாத்து பதறி, எங்க கிட்ட சொன்னதால எனக்கு தெரிஞ்சுச்சு. இல்லன்னா எங்களுக்கு தெரிஞ்சுருக்குமா ? உன்னை மாதிரி ஒரு பொண்ணை என் தம்பி உருகி உருகி லவ் பண்ணினானே ? அவனுக்கு நீ என்னடி செஞ்ச? சே! உன்னைப் போய் எங்க வீட்டுல ஒரு ஆளா நினைச்சு நான், என் வீட்டுக்காரர் , ப்ரித்வி, மூணு பேரும் அன்பை கொட்டினோமே? எங்களை நினைச்சா எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு. இன்னிக்கு சொல்றேன் , இனிமே எனக்கு நீ கால் பண்ணவே கூடாது . அப்டி ஏதாவது செஞ்சன்னு வையேன்.. என்னோட வேற முகத்தை பாக்க வேண்டி வரும்” அதுவரை அமைதியாய் இருந்த ஜூனைத், அவள் பேசி முடித்ததும்,
“ஹலோ மேடம்” என்றான்.
“ஹலோ, யாரு?”
“நான் தேனுகாவோட ஹஸ்பண்ட்”
…………….
“என்ன மேடம் இவ்ளோ நேரம் அடை மழை மாதிரி ஓயாம பேசிக்கிட்டு இருந்தீங்க , இப்ப மௌனமா ஆகிட்டீங்க?”
“நீ யாரு? உன் கிட்ட பேசணும்னு எனக்கு என்ன அவசியம்?”
“என் வைஃபைப் பத்தி இவ்ளோ நேரம் தேவையில்லாம பேசுனீங்கள்ல, அதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல வேணாமா? அதுக்கு தான் இப்ப பேசுறேன் . இல்லன்னா உங்க கிட்ட பேச எனக்கு என்ன தேவை?”
“என்ன பதில் பேசணும்? வாயை மூடிக்கிட்டு சும்மா இருங்க. இப்ப அவங்க என்னை இவ்ளோ கேவலமா திட்டுறதுக்கு காரணமே நீங்க தான?” வெறுப்போடும் , அழுகையோடும் தேனுகா சொல்ல, அவள் தலையில் நங் என குட்டினான் ஜூனைத்.
“சும்மா இரு நாயே, நீ எல்லாம் ஒரு வக்கீலா? எல்லார்கிட்டவும் எப்பப் பாத்தாலும் தப்பே செய்யாம திட்டு வாங்கிகிட்டே இரு . ஆனா உனக்கு ஆதரவா இருக்க நினைக்கிற என்னை மட்டும் சும்மா சும்மா திட்டு . இப்ப நான் பேசி முடிக்கிற வரை அமைதியா இருக்கணும் . என்ன புரியுதா?” அவளை அதட்டியவன், ” பூமிகா மேடம், என்ன ஓவராத் தான் பேசுறீங்க? நீங்க யாரு, உங்க தம்பி யாரு, எல்லா விவரமும் எனக்கு தெரியும் . இப்ப தான் தேனுகா கிட்ட எல்லாத்தையும் சொன்னேன்”
” எ….என்ன சொல்ற ? நீ எங்களைப் பத்தி என்ன தெரிஞ்சுக்கிட்ட?” பூமிகா தடுமாறினாள்.
“ஹான்ன் சொல்லட்டுமா, உங்க முழு பேர் என்னனு தெரியும் ஐ மீன் உங்க அப்பா யார்னு தெரியும். உங்களுக்கும் என் ஹனியோட ஃபேமிலிக்கும் நடுவுல என்ன இருக்குன்னு தெரியும், சொல்லவா?”
“டேய்ய்ய் சும்மா உளறாத . நான் ஃபோனை வைக்கிறேன். உன் கிட்ட பேச எனக்கு பிடிக்கவே இல்ல”
“ஷட் அப்…….. அவளை என்ன சொன்ன? உன் ஹஸ்பண்ட் அனுப்புற காசை எதிர்பார்த்து தான் அவ இருக்காளா? அம்மா பூமிகா……. நீ ஒண்ணு மறந்துட்ட . அவ கோடீஸ்வரி. இப்பயும் கோவைப் பக்கம் வந்து விஸ்வநாதன் சார்னு அவங்க அப்பா பேரை சொன்னா , எல்லாரும் மரியாதையா தான் பாக்குறாங்க. அப்டிபட்ட குடும்ப பிண்ணனில இருந்து வந்தவ. அப்படிப்பட்டவ கிட்ட இருந்து காசைப் பிடுங்க காதலை கையில எடுத்துக்கிட்டு , வேஷம் போட்டுக்கிட்டு வந்த உன் தம்பியும் சரி, அதுக்கு துணை போன நீயும் சரி , மனுஷங்களா வாழறதுக்கே தகுதி இல்லாதவங்க. உன் தம்பி செஞ்ச தப்புக்கு கடவுளே தக்க தண்டனை குடுத்துட்டாரு. இனி இன்னொரு தரம் தேனுகாவை டிஸ்டர்ப் பண்ணின்னு வை , நான் போலீஸ் கிட்ட போக வேண்டி வரும்” எதிர்முனை மௌனம் காக்க, ஆக்ரோஷமாய் சொல்லிவிட்டு ஃபோனை கட் செய்தான் ஜூனைத். அதிர்ந்து போய் நின்றாள் தேனுகா. இவர் பேசிய எதற்குமே பூமிகா மறுப்பு தெரிவிக்கவில்லையே ?அப்படி என்றால் ஜூனைத் சொன்ன எல்லாமே உண்மை தானா? நினைக்க நினைக்கவே அழுகை பீறிட்டது.
“ஹனி……..ப்ரித்வி ஃப்ரண்ட் என்ன சொன்னான்னு இப்ப நான் சொல்றேன் நீ கேக்குறியா கேக்குற மூட்ல இருக்கியா?”
“ம்ம்ம்ம்” தலையசைத்தாள்.
– தொடரும்
No comments yet.