கல்யாணம் முதல் காதல் வரை – 29

Shanmuha Sethuramachandran | 05 Feb 2026 | Share

                           29.

          “என்ன   ஹனி?   கதவைத்   திறக்கப்  போறேன்னு   போயிட்டு   அப்டியே  நின்னுட்டு    இருக்க?”   

          “ப்ச்….கதவு   பூட்டியிருக்கு” 

         “அச்சச்சோ!”……

         “என்ன   அச்சச்சோ?    இப்ப  எதுக்கு   இப்டி    ஓவர்   ரியாக்ட்  பண்ணிட்டு   இருக்கீங்க   ஜூனைத்?”  

        “என்ன   ஹனி   நீ ,  இவ்ளோ  மக்கா  இருக்கியே?   கதவைப்   பூட்டிட்டாங்க,  இப்ப  நம்ம   எப்டி   கீழ   போறது?” 

         “ரஷிக்கு   கால்   பண்ணுங்க”  

         “எதுல?   என்   ஃபோன்   இங்க   இல்ல,  நான்   எடுத்துட்டு   வரல”  

          “கடவுளே!”……  

          ” இதுக்கு   தான்  நான்  அச்சச்சோனு  சொன்னேன்.   என்ன  பண்றது,  வேற  வழியே   இல்ல,   இங்க   தான்  தூங்கி  ஆகணும்   போலயே” 

           “இங்கயா?….. தேனுகாவுக்கு  குளிரில்  உடம்பு   நடுங்க  ஆரம்பித்தது.  இங்க  எப்டி   தூங்குறது ?  காத்து   ஆளையே  தூக்குற  மாதிரி    இருக்கு ,  ரொம்ப  கஷ்டம்” 

          ” நீ    சொல்றது   சரி   தான்,   கஷ்டம்  தான்.   எங்க  அத்தையும்  மாமாவும்  தான்  அந்த   பக்கம்   உக்காந்து   பேசிட்டு   இருந்தாங்க.   நம்ம   இருக்குறது  தெரியாம  அவங்க   பூட்டிட்டுப்  போயிட்டாங்க  போல” 

         “என்னை   ரொம்ப   நேரமா  காணலன்னா  என்னை   தேடிக்கிட்டு   ரஷி   எப்டியும்  வந்துருவா,  எனக்கு  அந்த   நம்பிக்கை   இருக்கு ” 

          “வந்தா   நல்லா   தான்   இருக்கும்.  ஆனா   இப்டி   யோசிச்சு   பாரு,   நம்ம   பாசமான   அக்கா   இன்னிக்குத்  தான்  மாமா   கிட்ட   தனியா  பேசறாங்க.  ஸோ  லேட்   தான்   ஆகும் ,  நம்ம  எதுக்கு  நடுவுல   போய்   டிஸ்டர்ப்   பண்ணனும்னு  நினைச்சு  வராமலே  போய்ட்டா?” அவன்   சொல்லி   முடிக்கும் ,முன் அவன்  முதுகில்    ஒரு  அடி   வைத்தாள்  தேனுகா.

         ” உங்க   வாய்ல   நல்ல வார்த்தையே  வராதா ?  பேச்சைப்  பாரு ” அப்போது  தான்  உணர்ந்தாள்.  அவசரப்பட்டு   அவனைத்  தான்   அடித்து  விட்டோம்  என,

         ” ஐ  அம்  சாரி  ஜூனைத்”  

         ” பரவாயில்ல  விடு  ஹனி,  எனக்கு  வலிக்கல.   நீ   உரிமை  இருக்கப்  போய்  தான   என்னை  அடிச்ச?”  

         “இல்ல. அது  உரிமைலாம்  கிடையாது,  ஒரு   ஃப்ளோல   அடிச்சுட்டேன்.  சரி   இப்ப  அதுவா  முக்கியம்?  நம்ம   என்ன  பண்றது?”

           “பேசிட்டு   இருக்கலாம்”

           “விடியுற   வரைக்குமா?  அது  எப்டி  சாத்தியம்?  எனக்கு   பதினோரு   மணிக்கு  மேல   முழிக்குறது  ரொம்ப  ரொம்ப  கஷ்டமான   டாஸ்க்”  

           “நான்   தூங்க  விடாம  பேசுறேன்மா.  சின்ன   வயசுல   இருந்தே   நான்  யாரையும்    தூங்கவே   விட   மாட்டேன்”  

           “சரி  தூங்காம  பேசுறதெல்லாம்  சரி,  ரொம்ப   குளிருது  , பத்தாததுக்கு  கொசு  வேற   புடுங்குது .   இதையெல்லாம்   எப்டி  சமாளிக்கப்   போறீங்க?”   

           “அதெல்லாம்  நான்   ஈசியா  மேனேஜ்  பண்ணிருவேன்.   உனக்காக,  உனக்காக  மட்டும்   தான்   அதை   மேனேஜ்  பண்ணுவேன்  . சோ   நீயும்  எனக்காக  ஒண்ணு   செய்யணும்,  செய்வியா?”  

          ” என்ன   செய்யணும்னு   முதல்ல  சொல்லுங்க,   முடியுமா  முடியாதான்னு  நான்    யோசிச்சு   சொல்றேன்” 

           “இது   தான   வேணாங்குறது?  நான்   யோசிச்சேனா?   நீ   மட்டும்  எதுக்கு  இப்டி  யோசனை   பண்ணனும்?” 

           “இவன்கிட்ட   பேசி  நம்ம   ஜெயிக்க  முடியாது ”  மனதுக்குள்   நினைத்துக்  கொண்டவள் ,  “சரி   நீங்க  சொல்றதை  செய்யுறேன்”   என்றாள்.

             “ம்ம்ம் …   குட்  கேர்ள்! அந்த  பக்கமா  போனா   நிறைய   ரோஜா   செடிகள்    இருக்கும்,   அதுக்கு  நடுவுல   ஸ்டோன்   பெஞ்ச்   இருக்கும்  . அதுல   போய்   உக்காரு  , நான்   கூப்பிடும்   போது  வா”  

            “என்ன   செய்யப்   போறீங்க?”  

           “குளிராம  இருக்குறதுக்கும்  கொசு

கடிக்காம   இருக்குறதுக்கும்   ஏற்பாடு  பண்ணப்   போறேன்.   நீ   போ”

          இவன்   கிட்ட   வந்து   சிக்கிட்டோமே? தனக்குள்   புலம்பிக்   கொண்டே , அந்த  இடத்தை   விட்டு   அகன்றாள்.  ரோஜா  செடிகளின்   மத்தியில்  இருந்த  அந்த   பெஞ்சை   இருட்டில்  தேடி   அதில்  அமர்ந்தாள்.  அடிக்கிற  குளிர்  காற்றில்  ஜம்மென   மூக்கை  அடைக்கிற  மாதிரி  ரோஜா  வாசம் . மற்ற   நேரமாக  இருந்தால், அங்கு  அமர்ந்திருப்பதை,  அந்த   நிமிடத்தை,  அவள்  நன்றாக  அனுபவித்து  மகிழ்ந்திருப்பாள்  . ஆனால்   ஜூனைத்  உடன்  இந்த   மொட்டை   மாடியில்   இருப்பது  அவளுக்கு   கொஞ்சம்   கூட  பிடிக்கவில்லை.  முள்   மேல்   நிற்பது   போல்   இருந்தது.  ம்ஹூம்  என்ன  ஆன  போதும்   இவனிடம்   என்   மனது  செல்லவே   செல்லாது   என  அவளுக்கு  தெளிவாக   விளங்கியது.   ரஷிதா  குட்டிப்  பிசாசு  என்ன  வேலை   பார்த்திருக்கிறாள்?  நாளைக்கு   இருக்கு   அவளுக்கு.  நல்லா   வலிக்கிற   மாதிரி   தலையில   இரண்டு  கொட்டு   வச்சா   தான்   அடங்குவா… ஆண்டவா!   அவ   எப்டியாவது  வந்து   என்னை    கூட்டிட்டுப்   போயிரணும்,  அப்போ   தான்   எனக்கு   நிம்மதி…. நாளைக்கு   காலை   விடிந்ததும்  நானும்  ஜூனைத்தும்   ஒன்றாக   கீழே   இறங்கிப்  போக   நேர்ந்தாலோ,   இல்லை   நைட்  முழுக்க   இவன்   கூட   மொட்டை  மாடியில  உக்காந்து   பேசிட்டு   இருந்தது   இந்த வீட்டு  மனுஷங்க  யாருக்காவது   தெரிந்தாலோ,  அவ்வளவு  தான் . முக்கியமா  நசீமாவுக்கு.     பிடிக்கல   பிடிக்கலனு  சொல்லிட்டு   இப்ப   எதுக்கு  அவன்  கூட  தனியா   போய்  பேசுறன்னு  விவஸ்தையே  இல்லாம, எல்லார்  முன்னாடியும்  கேப்பாளே?   இதை   நினைக்கையில்   தேனுகாவிற்கு  ரஷிதாவின்   மேல்   கண்   மண்   தெரியாமல்   கோபம்   வந்தது . ஏன்  இந்த  பெண்   இப்படி   இருக்கிறாள்?   எனக்கு  நல்லது   செய்வதாக   நினைத்து,   என்னை  ஏன்   இப்படி  ஒரு   சூழ்நிலைக்கு  கொண்டு  வந்து   தள்ளினாள்?” கண்களில்  கண்ணீர்   திரண்டது  . அண்ணாந்து  வானத்தைப்  பார்த்தாள்…….கலங்கலான   மேகங்களும், பாதியாய்  நிலாவும்,   ஒரு   சில  நட்சத்திரங்களும்   கண்ணில்   பட்டது . ப்ரித்வீஈஈஈஈ……மை   டியரஸ்ட்……நீ   என்னை   பாத்துட்டு   இருப்பனு   எனக்கு   தெரியும்.   ஏன்டா   பொறுப்பில்லாம   என்னை  இந்த  கேவலமான உலகத்தில  தனியா விட்டுட்டுப்  போன?   நீ    இல்லாம   நான்   என்ன   செய்வேன்னு   நீ   யோசிக்கவே   இல்லயா?  உன்   கூட   கல்யாணம்னு   ஊர்   முழுக்க  தம்பட்டம்  அடிச்சு,   இப்ப   என்   ஹஸ்பெண்ட்   பேர்   ஜூனைத்னு   சொல்லும்   போது  எல்லாரும்   அதிர்ச்சியா   பாக்குறாங்க,  ஆறுதல்   சொல்றாங்க.   ஆனா   பின்னால  லவ்வர்   செத்த   உடனே,   அன்னிக்கே,  இன்னொரு   கல்யாணம்   பண்ணிட்டானு  என்   காது   படவே   கேவலமா   பேசுறாங்க.   நான்   எந்த   தப்பும்   பண்ணலயேன்னு  தட்டி   விட்டுட்டு   கடந்தாலும் ,  அந்த  தேவையில்லாத   விமர்சனங்கள்  என்னை  ரொம்ப   காயப்படுத்துது .  பூமிகா  அக்கா  கூட   இந்த   விஷயம்   தெரிய  வரும்  போது    நிச்சயமா   என்னை   தப்பா  தான்   நினைப்பாங்க…… நான்  லவ்  பண்ணின  பையன்    இறந்துட்டான்,   ஜூனைத்   என்   புருஷன் ,  அவரை   ஏத்துக்கலாம்னு   யோசிக்கக்   கூட   என்னால  முடியல…….

அவள்   உள்   மனது   கதறி   அழுது   புலம்பிக்  கொண்டு   இருக்கும்  போது,  

        “ஹனி…..ஹனி”….என்று  அழைத்தான் ஜூனைத்..  “என்ன   சொல்லுங்க?”   

          “இங்க  வா”….மெல்ல   எழுந்து  அவன்  இருந்த   திசைப்   பக்கம்   நடந்து,  டாங்கை  நெருங்கியவள்   ஆச்சர்யமானாள்.  அங்கு  ஒரு   சிறிய   கூடாரமே   உதயமாகி  இருந்தது.   குபு   குபுவென  புகை  வந்து  கொண்டிருந்தது.   அதனால்   ஒரு  வெப்பம்   பரவிக்   கொண்டிருந்தது.  

           “எப்டி   என்   செட்டப் ? சூப்பரா   இருக்குல்ல?”அவன்  ஆர்வமாகக்  கேட்டான்.

           “சத்தியமா   ரொம்ப   நல்லா  இருக்கு.  ஆனா   எப்டி   இவ்ளோ   சீக்கிரத்துல    இதெல்லாம்   பண்ணீங்க?”   

         “சிம்பிள்,   டாங்க்  மேல   ஏறுறதுக்காக  இருக்கிற   ஏணிக்குப்  பக்கத்துல   தார்ப்பாய்கள்   இருக்கும்.   அதில   இரண்டை    நீட்டா  மடக்கிப்   போட்டு  கூரையா   மாத்தி,   மிச்சம்   இருந்ததை  தரையில  உக்காருறதுக்காக  விரிச்சுட்டேன்.      தாத்தா  எப்பவுமே  தண்ணி   காய   வச்சு   குளிக்கிறதால  மாடியில   விறகு  கட்டைகள்  இருக்கும். தார்ப்பாயை   நிக்க  வைக்க  அந்த   கட்டைகளை   எடுத்து   யூஸ்  பண்ணிட்டேன்.  இப்ப   உக்கார  இடம்  ரெடி.  அடுத்ததா   தோட்டத்து   மரங்கள்  இருக்குல்ல ?  அதுல   இருக்குற  காய்ந்த  சருகுகளை   எடுத்து   மண்   சட்டியில  போட்டு  ,  நம்ம    நல்ல   நேரம்   இரண்டே   குச்சிகளோட   ஒரு   தீப்பெட்டி  கிடைச்சது. அதை   வச்சு    கொளுத்திருக்கேன்.   வெப்பத்துக்கு  வெப்பமும்   ஆச்சு,   அந்த   புகையில  கொசுவும்   வராது” 

          ” நிஜமாவே   உங்க   ப்ரஸன்ஸ்  ஆஃப்  மைண்டை   நான்   ரொம்ப  ரொம்ப  ரொம்ப     பாராட்டுறேன்,  வெல்டன்”  

          ” தாங்க்   யூ   ஹனி.  வா  உள்ள  போய்  உக்காரு,    குளிருதுன்னு   சொன்ன  தான?”  

           “ஆமா:   சொல்லிக்  கொண்டே  அந்த   டென்ட்டினுள்   நுழைந்து,   அமர்ந்தாள்.  

          ” இப்ப   பேசலாமா  ஹனி ?”

           “பேசுங்க”

           “நான்   ஏன்   உன்னை   கல்யாணம்” 

           “ஜூனைத்   ப்ளீஸ் ,  நான்   கொஞ்ச   நேரத்துக்கு  முன்னாடி   தான  சொன்னேன்?  ப்ரித்வி   கேஸ்   முடியட்டும்,  அடுத்து   இதைப்   பத்திலாம்   பேசிக்கலாம் .  ஏன்னா   எனக்கு   இந்த    விஷயம்   முக்கியமானது  இல்ல.   அதுக்கு   காரணம்  என்னனா,  நம்ம   உறவு    நிலைக்காது .  அதனால  எனக்கு  அந்த    காரணம்   தேவையில்ல”

         ” நான்    உன்   கூட   வாழணும்னு  நினைக்கிறேன்   தேனுகா.   நானும்    அன்னிக்கே   உன்   கிட்ட  சொல்லிட்டேன்  என்னால  டிவோர்ஸ்   குடுக்க  முடியாது.  அதை   விடு ,  கொஞ்ச   நேரத்துக்கு  முன்னாடி   நான்   உன்னை   கொசு  கடிக்காம    பாத்துக்கிட்டா   நீ   நான்   சொல்றதை   செய்யுறேன்னு  சொன்னில?  அது   இது   தான்.   நம்ம   கல்யாணத்துக்கு  பின்னாடி   இருக்கிற   கதையை   இப்ப   நீ   கேக்கணும் ,  கேட்டே   ஆகணும்”

         இது   என்ன   நான்சென்ஸா  இருக்கு? மனதுக்குள்   நினைத்துக்   கொண்டவள்,    “சரி   சொல்லித்   தொலைங்க”   என்றாள்.

          “அதுக்கு   முன்னாடி   ஒரு   கேள்வி”  

          “என்னது?”

         ” எத்தனை   நாளைக்கு   நீ   பழைய  விஷயங்களையே   நினைச்சுட்டு   இருக்கப்  போற  ? அதைத்   தாண்டி   வெளிய  வந்தன்னா ,  உனக்கே   உனக்குனு  ஒரு   அற்புதமான   வாழ்க்கை   காத்துட்டு   இருக்கு.   அது  உனக்கு   வேணாமா?”  

        “அற்புதமான  வாழ்க்கையா? ஹஹஹா என்ன   மிஸ்டர்?   உங்க   மனைவியா  நான்   இருந்தா   என்   வாழ்க்கை   அற்புதமா  இருக்கும்னு   சொல்லப்   போறீங்களா?  ரிடிகுலஸ்ஸ்……ப்ரித்வி  மாதிரி   ஒரு  ஆளை  லவ்  பண்ணின   நான்,  எப்டி   ஜூனைத்  மாதிரி   ஒரு   ஆளை  அக்செப்ட்   பண்ணுவேன் ?  அந்த   எண்ணமே  ஒரு   பெரிய  முரண். ப்ரித்வி  எங்க?  நீங்க  எங்க?”

          “ஸ்டாப்   இட்ட்ட்ட்…..என்ன  பெரிய  ப்ரித்வி?  அவன்   என்ன   தேவ  புருஷனா?” ஜூனைத்தின்   கோபம்   லேசாக  தலை  தூக்கியது.   அதை   சட்டை   செய்யாத  தேனுகா,  “ஆமா, அவன்   தேவ  புருஷன்   தான் .  அவனை  மாதிரி   ஒரு  கேரக்டர்   இனிமே   மறுபடி    இந்த   பூமியில  பிறக்குமாங்குறதே   சந்தேகம்  தான். அவன்  என்னை   லவ்   பண்ணின  மாதிரி   யாரும்  என்னை   லவ்  பண்ண   முடியாது.   கொஞ்ச  நேரத்துக்கு   முன்னாடி   சொன்னீங்களே?  அவனை   மறந்தா   என்   வாழ்க்கை  நல்லா   இருக்கும்னு,   போயும்   போயும்   உங்களை   மாதிரி   சீப்   மென்டாலிட்டி  உடைய   ஆள்  கூட  வாழணும்னா  அவனை   நான்  மறப்பேன்?   அது”…. அவள்   பேசி  முடிக்கும்   முன்  , அவள்   கன்னத்தில்  ஜூனைத்தின்  கை   வேகமாகப்   பதிந்தது.

         “வாயை  மூடு.  ராஸ்கல், என்ன  பேசுற?   நீ     நினைக்கிற   மாதிரி   அந்த   ப்ரித்வி ஒண்ணும்   நல்லவன்   கிடையாது.   அவன்  உன்   வாழ்க்கையையே  அழிக்க  வந்தவன்”  ஜூனைத்  கண்கள்  சிவக்க  போட்ட   சத்தத்தினாலும்,   அவன்   சொன்ன  வார்த்தைகளாலும் ,  தேனுகாவின்   இதயம்  ஒருகணம்  நின்று,  பின்   துடித்தது.

                                            –  தொடரும் 

          

               

 

    No comments yet.