கல்யாணம் முதல் காதல் வரை – 25

Shanmuha Sethuramachandran | 02 Feb 2026 | Share

                              25.

          ” ரஷி” 

         “சொல்லுங்க   அக்கா”

         “என்னடி  பண்ற  பிசியா  இருக்கியா?”

        “இல்ல  இல்லக்கா,  காலேஜ்  இன்னும்  நாலு   நாள்ல  ஸ்டார்ட்   ஆகப்  போகுதில்ல? அதுக்காக  ஸ்டேஷனரி  ஐட்டம்ஸ்  வாங்க  ப்ரியா  கூட   கடைக்குப்   போயிட்டு , இப்ப  வீட்டுக்குப்   போயிட்டு  இருக்கேன்.   நீங்க  எப்பக்கா   வீட்டுக்கு   வருவீங்க ?  லாயர்  சார்  என்ன   சொன்னாரு?” 

         “ஆறரைக்கு   வந்துருவேன்டி . வந்து  எல்லா  விபரமும்   சொல்றேன்.  சரி   எனக்கு   ஒரு   ஹெல்ப்  வேணும் . அதுக்கு  தான்  இப்ப   உனக்கு   கால்   பண்ணேன்” 

         “என்ன   ஹெல்ப்கா?”

        “எனக்கு   ஜூனைத்   மொபைல்  நம்பர்  வேணும் , செண்ட்   பண்றியா?”  

        “என்ன  கேட்டீங்க? மாமு  நம்பரா?” 

         “ஆமா”

         “அக்கா   இதெல்லாம்   உங்களுக்கே  ஓவரா   இல்லயா?   உங்க   ஹஸ்பண்ட்  நம்பர்   கூட   இல்லாம  தான்”……

          “ரஷி   ப்ளீஸ்டி  , ஒரு   முக்கியமான  விஷயம்   அவர்கிட்ட   பேசணும்”

          “ஓகேக்கா ,இதோ அனுப்பி விடறேன்” 

          “சரிடி,  வீட்டுக்கு  பாத்துப்  போ.  ஈவ்னிங்   வந்து   பேசிக்கலாம்  பாய்” 

          “ஓகேக்கா,  பாய்ய்.”….  ஃபோனை கட்  செய்துவிட்டு,  நடந்து   கொண்டிருந்த  ரஷிதா , நின்றாள்.

         “என்ன  ரஷிதா?”  ப்ரியா  கேட்க,

         “ஒரு   நிமிஷம்டி , தேனு  அக்கா  மாமு  நம்பர்   கேட்டாங்க,   அனுப்பிட்டிருக்கேன்”

         “ஹஹ்ஹாஹாஆஆ”  

          “எதுக்கு  சிரிக்கிற?”

          “நான்தான்  அப்பவே  சொன்னேன்ல? உங்க   மாமாவும்   அவங்களும்  ஒரு  கட்டாயத்துனால  தான்  கல்யாணம்  பண்ணிக்கிட்டாங்கன்னு.  நீ  தான்  நம்பவே  இல்ல ,  ஆனா   இப்பப்   பாத்தியா?  இது  நாள்   வரைக்கும்  உங்க   வீட்ல   என்ன   நடந்திட்டிருக்குன்னு ? உனக்கு   இன்னும்  சில  ப்ராக்டிக்கல்   நாலெட்ஜ்லாம்  வேணும்  ரஷி? என்னைப்  பாத்து  கத்துக்க” சொன்ன  ப்ரியாவை,  செல்லமாக  அடித்தாள்.

          “ஆனா  நீ   சொல்றதும்  சரி  தான்  ப்ரி. நான்  இன்னும்  நிறைய விஷயங்கள்   கத்துக்கணும்.  அதே  மாதிரி,  இன்னும்  சின்ன   புள்ளை  மாதிரி  எதுலயும்  தலையிட்டுக்காம   இருக்கக்  கூடாது” 

         “அப்டின்னா  நீ   எதை  மீன்  பண்ற?”  

         “தேனுகா  விஸ்வநாதன்   இஸ்  எ  ஜெம்.  அவங்க   மாதிரி  ஒரு   பொண்ணை  எங்க  ஃபேமிலி   மிஸ்   பண்ணக்  கூடாது , அட் எனி   காஸ்ட்   அவங்களையும்  ஜூனைத்  மாமுவையும்   சேர்த்து  வைக்கணும் . அதுக்கு   என்னாலான   வேலைகளை  நான்   செய்யணும்  ப்ரியா”  

          “நீ   எப்ப   இதைப்   பத்தி  பேசுனாலும் தேனுகா  அக்கா  அந்த  டாபிக்கை  வளர்க்க  விரும்பாம   பேச்ச  மாத்திடறாங்கன்னு  சொல்ற . அப்றம்   நீ   சொல்றத  அவங்க  கேப்பாங்கன்னு   எப்டி   நம்புற ?”

        ” கரைப்பார்   கரைத்தால்   கல்லும்  கரையும்.   முதல்ல  அவங்க   லவ்  ஸ்டோரியை   முழுக்க  கேக்கணும்டி , அதுதான்  என்னோட   முதல்  ஸ்டெப்”

        “இப்போதைக்கு   வேணாம்டி.  அவங்க  பாவம் , லவ்வரையும்  மறக்க   முடியாம,  உங்க   மாமாவையும்   ஏத்துக்கிற  முடியாம  தவிச்சுட்டு   இருக்காங்க . இந்த  நேரத்துல  போய்   நீ   காதல்   கதையைப்   பத்தி  கேட்டா ,  அவங்க  மனசை  அது  இன்னும்  அதிகமா காயப்படுத்தும் .அதுக்கு இன்னும்   கொஞ்ச  நாள்  ஆகட்டும் “

          “ஆமாடி   நீ   சொல்றதும்  ஒரு   விதத்துல  சரி  தான்.  நான்   வெயிட்  பண்றேன்டி,  நம்பர்  அனுப்பிட்டேன்,  வா  போலாம் ” இருவரும்  நடக்க  தொடங்கினர்.

                    ************* 

          “ஹலோ   ஜூனைத்”

         “ஹாய்   ஹனி !  என்ன  அதிசயம் ! எனக்கு   கால்   பண்ணிருக்க?”

         “ஒரு   முக்கியமான  விஷயத்தப்  பத்தி  உங்க  கிட்ட   பேசணும்   அதான்”

          “சரி   சொல்லு”  

         “போன்ல  பேசுனா  சரி வராது,  நேர்ல   தான்   பேசணும்”

         “ஓகே   நான்   வண்டில  தான்  வந்துட்டு   இருக்கேன் .  இன்னும்   கொஞ்ச  நேரத்துல   வீட்டுக்கு   வந்துருவேன்,  தோட்டத்துல  பேசலாம்,  ஓகே  வா?”

          “இல்ல   வீட்ல  லாம்   எனக்கு  கன்வீனியண்ட்டா   இருக்காது,  வெளிய”….

         “தோட்டத்துல  யாரும்  வந்து   நம்மை  டிஸ்டர்ப்   பண்ண   மாட்டாங்க  ஹனி”

          “ப்ச்   நான்   என்னைப்   பத்தின  ஒரு  விஷயத்தைப்   பத்தி   பேசணும்.  உங்க  வீட்டுல   பேசுறது   சரியா   இருக்காது,  அதான்    சொல்றேன்” 

          “ஓ…..சரி ,  இப்ப   நீ  எங்க   இருக்க?” 

          “ஆபீஸ்ல   தான்”  

          “சரி   நீ   நேரா   மெரினா  வந்துரு.  உனக்கு   அது   பக்கம்   தானே?” 

           ” ஆமா”

            “அங்க   போய்  வெயிட்   பண்ணு , நான்   வந்துடறேன்”  

           “சரி   சீக்கிரம்  வாங்க . எனக்கு  ரொம்ப   நேரம்  வெயிட்   பண்ணிட்டு  இருக்குறது   பிடிக்காது” 

           “ஓஹோ….அப்ப   நிச்சயம்  லேட்டா  தான்   வருவேன்   ஹனி”  அவன்  சிரிக்க,

            “கடவுளே!  டோண்ட்   கால்  மீ  லைக்  தட் ”  தேனுகா  அலற,

           “முடியாது.  இதுவரைக்கும்  அப்பப்ப  கூப்பிடலாம்னு   முடிவு   பண்ணிருந்தேன்.  ஆனா   இனிமே   எப்பப்   பாத்தாலும்  உன்னை   ஹனி  ஹனின்னு  தான்  கூப்டப்   போறேன்.   பீச்ல   வெயிட்   பண்ணு,  நான்  வந்திடறேன்,  சீ  யூ   தேர்   ஹனி”  சிரித்துக்  கொண்டே   சொல்லிவிட்டு , ஃபோனை  கட்  செய்தான்  ஜூனைத் .  தேனுகாவுக்குள் எரிச்சல்   பீறிட்டது.   பல்லைக்  கடித்து  அடக்கிக்   கொண்டாள்.

                     **************

      மெரினா  கடற்கரை……எப்போதும்  போல  மிகவும்  கூட்டமாக   ஜே  ஜே  என  இரைச்சலோடு  இருந்தது .  அந்த  சந்தடிகள் எதிலுமே   கலந்து   கொள்ளாமல்,   ஒரு  ஓரமாக   அமர்ந்து   கடலை  வெறித்துப்  பார்த்துக்கொண்டிருந்தாள்  தேனுகா.  மனது முழுக்க   ஏதோ  விவரிக்க  முடியாத  ஒரு  படபடப்பு .  ஆண்டவா ! ஜூனைத்  இதற்கு  எப்டியாவது   ஓகே   சொல்லணும்” 

       “ஹனி”…சட்டென  திரும்பினாள்  அவள். பின்னால்  ஜூனைத்   நின்றிருந்தான்.

         “ஹாய் லாயர்   மேடம்,  என்ன   எதைப்   பத்தியோ தீவிரமா யோசிச்சுட்டு  இருக்கீங்க   போல ? பேசிக்கொண்டே  அவள்  அருகில்  சற்று  இடைவெளி   விட்டு   அமர்ந்தான்.  அணிந்திருந்த   லேப்டாப்  பேக்கை கழற்றி ,அதனுள்ளே  வைத்திருந்த   ஒரு   கவரில்  சுற்றி   வைத்திருந்த  நான்கு   குல்ஃபி  ஐஸ்  பாக்கெட்டுகளை   வெளியில்   எடுத்தான் .

          “ப்ச்,  எதுக்கு   இப்டி  சீன்  க்ரியேட்  பண்றீங்க  ? எனக்கு   குல்ஃபி  சாப்பிட  பிடிக்கவே   பிடிக்காது    வாழ்க்கைல  எப்பப்  பாத்தாலும் யாரையாவது எதுக்காகவாவது   கம்பெல்  பண்ணிட்டு  தான் இருப்பீங்களா?”

         “இதை   உனக்குத்   தான்   வாங்கிட்டு  வந்தேன்னு   யார்   சொன்னா?   நீயா  எதையாவது   யூகம்   பண்ணிக்கிட்டு  பேசறதை   நிறுத்து   ஹனி,  வெயிட்” சுற்றும்   முற்றும்   பார்த்தவன்,   பாசி விற்றுக்   கொண்டிருந்த   ஒரு   சிறுமியைக்  கண்டவுடன்   எழுந்து   சென்று ,  அவளிடம்  எதையோ   பேசிவிட்டு   அந்த   நான்கில்  மூன்று   பாக்கெட்டுகளை   தந்துவிட்டு  வந்தான்.மிச்சமிருந்த  ஒன்றைப்  பிரித்துக்   கொண்டே  “சொல்லு ,  என்ன   பேசணும்?”

         “அது”……

         “ஆகா !!! என்னா  டேஸ்ட்டு  ? என்னா  டேஸ்ட்டு?   குல்ஃபின்னா   குல்ஃபி  தான்”  அவனை   முறைத்தாள்   தேனுகா.  

         ” என்ன   முறைக்கிற?   நீ   தான்  சொல்ல  வந்ததை   சொல்லாம,   அது   எதுன்னு   இழுத்துட்டு   இருக்க,  அதுக்காக  நான்   பேசாம   இருக்க   முடியுமா?”  

         “எனக்கு   உங்களால  ஒரு   பெரிய  வேலை   ஆகணும் .  வேலைன்னு   கூட  இல்ல ,  ஒரு   பெரிய   ஹெல்ப்   தேவை”  

         “என்ன   ஹெல்ப் ? சொல்லு”

         “நான்   இன்னிக்கு   என்   சீனியர்  லாயர்   சாரை   பாக்க,   காலையில  அவர்   வீட்டுக்குப்  போயிருந்தேன்” 

          “ஓகே” 

         “அப்போ  ப்ரித்வி  மர்டர்   கேஸ்ல  என்ன  செய்யலாம்னு   டிஸ்கஸ்   பண்ணினோம்”  

          “சரி”  

          “மாடசாமி  ப்ரித்வியை  வெட்டுனதை   நீங்க  பாத்தீங்கன்னு  சொன்னேன்.  அதுக்கு   அவர்  லட்டு  மாதிரியான  விஷயம்  இது . ஜூனைத்  கோர்ட்ல   வந்து   சாட்சி  சொன்னா , அவனுக்கு   தூக்கு  வாங்கி  குடுத்துடலாம்னு   சொன்னாரு”

           “சரி”  அவன்   தன்   முகத்தில்  எந்த  ஒரு    உணர்ச்சியையும்   காட்டாமல்,  ஐஸ்  சாப்பிட்டுக்   கொண்டே   இருந்தான். 

          ” ஹலோ!  என்ன   நான்   பேசிட்டே   இருக்கேன்,   நீங்க   ஒண்ணுமே   சொல்ல  மாட்டேங்குறீங்க?  நான்  என்ன  நினைக்க?”

           “நீ    மேல   சொல்லுன்னு   அர்த்தம்”

          “மேல  சொல்ல  ஒண்ணுமில்ல . நான்  கேட்டதுக்கு  என்ன   பதில்   சொல்றீங்க.  நீங்க   சாட்சி   சொல்ல  வருவீங்களா?  இல்ல  வர   மாட்டீங்களா?”

          “வர்றேன் , இதுல  என்ன   இருக்கு ? சாட்சி   தான  ? சொல்லிட்டா  போச்சு. எப்டி  சொல்லணும் ? பக்வத்கீதையைக்  கொண்டு வருவாங்க,  அது   மேல  இந்த  மாதிரி   கை  வச்சு ,  நான்   சொல்வதெல்லாம்  உண்மை,  உண்மையைத்  தவிர  வேறொன்றுமில்லை,  அப்டி  தான  சொல்லணும்?”  அவன்  கேட்க, அவனை   வெறுப்பாகப்   பார்த்துவிட்டு  வேகமாக   எழுந்து   நடக்க  ஆரம்பித்தாள்  தேனுகா .  “ஏய்  ஏய்  ஹனி   நில்லு , என்ன  நீ   பாட்டுக்கு  எந்திரிச்சு   போய்கிட்டே  இருக்க?” என   தானும்   எழுந்து,  அவள்  பின்னே  ஓட  ஆரம்பித்தான்   ஜூனைத்.

         “ஹனீஈஈஈஈஈஈ”

          “ஷ்  , ஷட்   அப் ! நான்   எவ்ளோ  முக்கியமான   ஒரு   விஷயத்தைப்   பேசிட்டு  இருக்கேன் ?  உங்களுக்கு   விளையாட்டா   இருக்கில்ல? விடுங்க , நான்  உங்க   கிட்ட   ஹெல்ப்   கேட்டது  தப்பு  தான். என்ன  வேணாலும்   ஆகட்டும்,  நானே  ஃபேஸ்   பண்ணிக்குறேன்”  

           “ஏய்ய்ய்ய் ! நான்   விளையாடல,  என்  செய்கை   வேணா  அப்டி  இருந்துருக்கலாம். இந்த  விஷயத்துக்கு  நான்   முழு  மனசோட   சம்மதிக்கிறேன்   சரியா?  எங்க  வேணாலும் வந்து   சாட்சி   சொல்றேன் , இது  ப்ராமிஸ் .  எனக்கும்  ஒரு  மனநிம்மதி வரும்”எனறான்  ஜூனைத்.  அந்த வார்த்தையால் வரப்போகும்  பெருந்துன்பத்தை அறியாமல்.

         

            

          

         

          

   

        

        

   

         

   

 

    No comments yet.