22.
“என்ன தேனுகா அப்டியே பாத்துட்டே நிக்குற? வா, வெளிய போய் சாப்ட்டுட்டு வரலாம், நேரமாகுதுல்ல?”
” இல்…இல்ல பரவாயில்ல, ஃப்ரிட்ஜ்ல ஃப்ரூட்ஸ் இருக்கு அதை வச்சு எப்டியாவது மேனேஜ் பண்ணிக்கிறேன். இல்லனா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி சாப்டுக்குறேன், கேட்டதுக்கு தாங்க்ஸ்”
“அக்கா, ஹோட்டல்ல லாம் ஆர்டர் க்ளோஸ் பண்ணிருவாங்கன்னு இப்ப தான சொன்னீங்க? அப்றம் எப்டி ஆர்டர் பண்ணுவீங்க? சமர்த்து பொண்ணா மாமு கூட போயி சாப்டுட்டு வாங்க. ஒண்ணும் பயப்பட வேணாம். உங்களை யாரும் தூக்கிட்டுப் போக மாட்டாங்க. எங்க மாமு உங்களை பத்திரமா கூப்பிட்டுப் போய்ட்டு , பத்திரமா வீட்லயும் சேர்த்திடுவார்” சமயம் பார்த்து ரஷிதா கோர்த்துவிட , அவளை முறைத்த தேனுகா
” நைட் நேரத்துல கடை மட்டும் எங்க இருக்கும் ? ஒண்ணு ரெண்டு தான் இருக்கும் . அதை வேற நாயா பேயா தேடி அலையணும் , எல்லாத்துக்கும் மேலா மழை வேற விழுது” என்று சமாளித்தாள்.
“தேனுகா , கூட கூடப் பேசிட்டு இருக்காத .அவன் தான் கூப்டுறான்ல? மழை விழுந்தா என்ன , கார்ல போங்க. போ, போய் சாப்பிட்டுட்டு வா”
“இல்ல பாட்டி அது”
“சொன்னாக் கேளு. போ” வேறு வழி இன்றி கிளம்பினாள் தேனுகா. அவர்கள் இருவரும் வாசலைத் தாண்டி வெளியே கால் வைத்த போது, போன கரண்ட் மீண்டும் வந்து விட்டது .
“பாட்டீஈஈஈஈஈ கரண்டு வந்துடுத்து, நீங்க அந்த இனிப்பு செய்யுறேன்னு சொன்னேளே ?செஞ்சு குடுங்கோ” உள்ளே மீண்டும் திரும்ப முயன்றவளின் கையை இறுக்கமாகப் பிடித்தான் ஜூனைத்.
“ஒழுங்கு மரியாதையா வந்து கார்ல ஏறு , இல்லனா தூக்கிட்டுப் போய் வண்டில ஏத்திருவேன். அங்க உன்னை சாப்பிட விடாம என்னென்ன பண்றாங்க, அதெல்லாம் உனக்கு தெரியுதா? இல்ல தெரியலயா? இல்ல தெரிஞ்சும் கண்டும் காணாம இருக்கியா? உனக்கு அல்சர் இருக்கு மறந்துட்டியா?” இதெல்லாம் இவனுக்கு எப்டி தெரியும்? என யோசித்துப் பார்த்தாள். அதற்கு மேல் எதுவும் பேசவில்லை தேனுகா. அவளை இழுத்துக் கொண்டு வந்து காரின் முன் சீட்டில் ஏற்றி விட்டு, தானும் ட்ரைவிங் சீட்டில் அமர்ந்தான். காரினுள் பரவியிருந்த ஸ்ப்ரே சுகந்தமாய் மணம் வீசியது.
“போலாமா?”
…………
” உன்னைத் தான் கேக்குறேன் தேனுகா”
” போலாம்” மெல்ல காரை கிளப்பி, வீட்டு கேட்டைத் தாண்டினான். மிதமான வேகம் . அவன் கார் ஓட்டும் விதம் அலாதியாய் இருந்தது. ட்ரைவிங் ஸ்கூல்ல போய் சேர்ந்து படிச்சிருப்பானோ? சே….. அவன் எங்க சேர்ந்து கார் ஓட்ட பழகிருந்தா நமக்கு என்ன?
” ஜன்னலை ஓபன் பண்ணலாமா? இல்ல ஏசி ஆன் பண்ணட்டா?”
“உங்க இஷ்டம்”
“இல்ல , நீ சொல்லு”
“ஜன்னல் திறக்குறேன்”
“மேக் இட்” மெல்ல பட்டனின் மூலம் கார் கண்ணாடியை இறக்கி விட்டாள் . ஜில் என்ற காற்று முகத்தில் அறைந்து இருவரின் கேசத்தையும் கலைத்தது. சற்று முன் பெய்த திடீர் மழையால் காற்று ஏகத்துக்கும் குளிர்ந்து போய் இருந்தது. அந்த இரவு நேர காற்று, வறண்டு போயிருந்த அவள் மனதை கொஞ்சமாக ஈரமாக்கியது . மெல்ல வலது பக்கம் தலையைத் திருப்பி ஜூனைத்தைப் பார்த்தாள் . சீரியசான முகத்துடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
” ஜூனைத்”……
“சொல்லு”
“தாங்க்ஸ்”
” எதுக்கு?”
“என்னை சாப்பிட கூப்டுட்டு வரணும்னு யோசிச்சதுக்காகவும், என்னை கூப்பிட்டு வந்ததுக்காகவும், இரண்டுக்கும் சேர்த்து தான் சொன்னேன்”
“உன் தாங்க்ஸ் எனக்கு வேணாம். வேற ஒரே ஒரு விஷயம் தான் உன் கிட்ட இருந்து எனக்கு வேணும் . அது உன்னால முடியுமா?”
“அது என்ன விஷயம்னு சொல்லுங்க, என்னால செய்ய முடிஞ்சா செய்யுறேன்”
“உன்னோட ப்ரீசியசான டைம்ல இருந்து ஒரு அரை மணி நேரம் எனக்காக குடு” அவன் சொல்ல ,ஒன்றும் சொல்லாமல் மௌனமானாள் தேனுகா.
“என்ன அமைதி ஆகிட்ட?”
“எனக்கு என் பதிலை எப்படி சொல்லன்னு தெரியல. என் பதிலை சொன்னா நீங்க ஹர்ட் ஆகிருவீங்க. அதுக்கு அமைதியா இருந்துடறது பெட்டர் இல்லயா ? அதான் மௌனமா இருக்கேன்”
“ஒண்ணு தர்றேன்னு சொல்லு , இல்ல தர முடியாதுன்னு சொல்லு . இரண்டையும் தாண்டி வேற என்ன புது பதில் இருக்கு? இருந்தாலும் அது என்னை எந்த விதத்துல காயப்படுத்த முடியும்? அதுவும் இல்லாம நானே உனக்கு தாலி கட்டுன மூணாவது மனுஷன் , என் இதயம் நொந்து ஹர்ட் ஆனா உனக்கு என்ன? இல்ல வெடிச்சு சிதறினாலும் தான் உனக்கு என்ன? உன் மனசுல என்ன தோணுதோ அதையே வெளிப்படையா பேசு, கமான்” அவன் குத்தலாகப் பேசுகிறான் என புரிந்து , அவனை சில நொடிகள் முறைத்தாள் தேனுகா.
“முறைச்சே எரிச்சுடாத , உள்ளதைத் தான சொல்றேன்?”
” சரி , உங்களுக்கு டைம் குடுக்க எனக்கு இஷ்டமே இல்ல ஜூனைத் .இது தான் நான் சொல்ல நினைச்சது, சொல்லிட்டேன். அவ்ளோ தான். உங்களைப் பத்தி இனிமே யோசிக்க மாட்டேன்”
ஹஹஹஹஹஹா
“என்ன சிரிப்பு?”
“இல்ல நான் எதிர்பார்த்ததைத் தான் நீ சொன்ன , அதான் சிரிச்சேன். எனக்கு உன்னைப் பத்தி எவ்ளோ அதிகமான புரிதல் இருக்குன்னு பாத்தியா தேனுகா?”
“புரிதலா? ……அடடா இதைக் கேளுங்க மிஸ்டர் ஜூனைத் , என்னை மட்டும் நீங்க சரியா புரிஞ்சுருந்தா சூசைட்ன்ற வார்த்தையை வச்சு என்னை மிரட்டி என் கழுத்துல இந்த தாலியை கட்டிருக்க மாட்டீங்க , புரியுதா?”
“மை காட்ட் !!! இதுக்கு என்னால பதில் சொல்ல முடியாது” சோர்வாய் தலையை சாய்த்தான் ஜூனைத்.
“ஆமா , உங்களால பதில் சொல்ல முடியாது. அது எனக்கு தெரியுமே. ஏன்னா நான் கேக்குறது ஒரு நியாயமான கேள்வி”
“அது அப்டி இல்ல லாயர் மேடம், அந்த விஷயத்தை எக்ஸ்ப்ளெய்ன் பண்றதுக்கு தான் நான் நேரம் கேட்டேன் .அதை நீ குடுக்காத பட்சத்துல, நான் ஏன் அதைப் பத்தி உனக்கு க்ளாரிபிகேஷன் குடுக்கணும் ? நோ நோ, ஐ காண்ட் டூ தட்ட்”
“ஜூனைத்”…..
“ஸ்டாப் …. நம்ம இறங்க வேண்டிய இடம் வந்திருச்சு . முதல்ல சாப்பிடலாம், அப்புறம் பேசு , இல்ல இல்ல அப்புறமா என்னை திட்டு சரியா?” அவள் விருட்டென திரும்பி கதவில் கையை வைக்க, “இரு இரு என்ன அவசரம் ? நான் சொல்லும் போது இறங்கு” அந்த சிறிய ரெஸ்டாரண்ட்டின் வாசலை ஒட்டினாற் போல் காரை நிறுத்தினான்.
“ம்ம்ம் இப்ப இறங்கு , பாத்து, மழை விழுந்தா வாசல் பக்கத்தில தண்ணி நிறைய சேர்ந்து வழுக்கி விடும்”
“சரி” தலையாட்டிவிட்டு அவள் இறங்கி உள்ளே செல்ல , பின்னாலயே அவனும் வந்தான் . இரவு மணி பத்தரையைத் தாண்டியும் அந்த ரெஸ்டாரண்ட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு பத்து பதினைந்து பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
“ஜூனைத்”
“என்ன?”
“இது வெஜ் ஹோட்டல் தானே?”
“இல்ல நான் வெஜ் ஹோட்டல். எங்க வீட்டு மருமகளா வந்துட்ட உனக்கு, அசைவ வகைகளை ரசித்து சாப்பிடுவது எப்படின்னு நான் தான சொல்லித் தரணும் ? அதான் இங்க கூட்டிட்டு வந்தேன் . பாக்க சின்னதா இருந்தாலும், இங்க எல்லா வகையான டிஷ்ஷும் கிடைக்கும். முக்கியமா சீனா ஸ்பெஷல் தவளை வறுவல். அதை சாப்பிட க்ரேவிங் அதிகமா இருந்ததால தான் உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன்”
உவ்வேக்க்க் கர்ச்சீப்பால் வாயை மூடிக் கொண்டு வெளியேறப் போனவள், அப்படியே நின்றாள். அவன் அவள் கையை இழுத்து நிறுத்தியிருந்தான்.
“மாமி….வெஜ் ஹோட்டல் தான் இது. இப்ப உள்ள போலாம், வாங்கோ”
………….
“அட வாங்கோ”…… மொட்டை மாடியில ரெண்டே ரெண்டு டேபிள் இருக்கும், அங்க போலாம்”
” போலாம் ,கையை விடுங்க, எனக்கு வர தெரியும்” அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது . அதைப் பார்த்தவுடன் ஜூனைத்துக்கு என்னவோ போல் ஆகி விட்டது.
“சாரி” பிடியை விட்டான். இருவரும் படிகளில் ஏறி மேலே சென்றனர். காலியாய் இருந்த டேபிளில் அமர்ந்தனர். பேரர் வர, “என்ன வேணுமோ ஆர்டர் சொல்லு தேனுகா” என்றான்.
“மசால் தோ”….
“சாரி மேம். இட்லி , தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டா எல்லாமே ஓவர் மேம்”
“அப்ப வேற என்ன இருக்கு?”
“சைனீஸ் தான் மேம்”
“அப்போ இரண்டு ப்ளேட் வெஜ் நூடூல்ஸ் , அப்புறம் ஒரு ப்ளேட் வெஜ் மோமோஸ் , இது போதும்”
“அட ஜூனைத் சார்! நீங்களா? சாரி சார். கூட ஒரு பொண்ணு இருந்ததால கவனிக்கல நான் . சாரி சாரி சார், மேடம் யாரு சார்?” பேரர் உரிமையோடு கேட்க, ஜூனைத் ஓரக்கண்ணால் தேனுகாவைப் பார்த்தான். அவள் தலைகுனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள். “இவங்க என் மனைவி அண்ணா . பேரு தேனுகா”
“சார்ர்ர்ர்ர்ர்ர் சூப்பர்ர்ர்ர் சார் !!!! மேடம் வாழ்த்துக்கள் மேடம். சார் ரொம்ப நல்லவரு , நீங்க ரொம்ப லக்கி மேடம்”
“நன்றி”……
“தேனுகா, இவர் தான் வீராசாமி அண்ணன் . அடிக்கடி இங்க வர்றதுனால எனக்கு நல்ல பழக்கம்”
ஓ…… சரி சரி” அவரைப் பார்த்து சம்பிரதாயத்துக்கு புன்னகைத்தாள்.
“சரி ,நல்ல பசியோட வந்திருப்பீங்க பேசிட்டே இருங்க . நான் சாப்பாடு எடுத்துட்டு வந்துடறேன்”அவர் வேகமாய் உள்ளே சென்றார்.
“எனக்கு ஒரு ப்ளேட் போதும் .எதுக்கு இரண்டு சொன்னீங்க ?”
“ஹலோ! அது எனக்கு, நான் கூட இன்னும் சாப்பிடல”
“ஏன் சாப்பிடல?” என ஆச்சரியமாகக் கேட்டாள் தேனுகா.
………….
“ஓ…..என்னால , நான் சாப்பிடாம இருந்ததாலன்னு சொல்லப் போறீங்களா? லுக் ஜூனைத் ,இன்னும் இருபத்தி நாலு நாள்ல நம்ம ம்யூச்சுவல் டிவோர்ஸ் அப்ளை பண்ணி”……
“வெயிட் .. நான் ம்யூச்சுவலா பிரிஞ்சு போறதுக்கு ஓகே சொல்லவே இல்லயே?”
No comments yet.