கல்யாணம் முதல் காதல் வரை – 14

Shanmuha Sethuramachandran | 18 Dec 2025 | Share

                               14.

           இவன்   இந்நேரத்துக்கு  எதுக்கு   இங்க   வந்தான்?   மனதுக்குள்  நினைத்துக்  கொண்டே,  “உள்ள  வாங்க” என்றாள்  தேனுகா.  அவன்   ஷூக்களைக்  கழற்றிக்  கொண்டிருந்த  அதே   நேரம் ,  மொபைல்  அழைத்தது .  பூமிகா  அக்கா  தான்.  சொன்னபடியே   கால்  செய்திருந்தாள்  

         “உள்ள  வாங்க , உக்காருங்க” 

        “உங்க   போன்   எடுத்துட்டீங்களா?” 

       ” ம்ம்ம்   ஆமா . இங்க  தான்  இருந்துச்சு.  நீங்க   ஏன்   நின்னுட்டே   இருக்கீங்க? உக்காருங்க   ஜூனைத்” 

         “கால்   வந்துட்டே   இருக்கு,  அட்டண்ட்  பண்ணிப்   பேசுங்க”

         “இல்….இல்ல   அது”  

         “பெர்சனலான  காலா?  நான்   வேணும்னா   வெளிய   இருக்கட்டுமா?”

        “இல்ல    அது   ப்ரித்வியோட  அக்கா.   எங்க   கல்யாணம்   முடிஞ்சதுன்னு   நினைச்சு,   வீடியோ  கால்ல  பாக்க  கால்  பண்றாங்க.   என்ன   சொல்லன்னு  தெரியல  ,வார்த்தைகள்  தேடிட்டு   இருக்கேன்”  தலைகுனிந்தான்   ஜூனைத்.

        “ப்ரித்வி   இறந்தது   இன்னும்  யாருக்குமே  தெரியாது .  எனக்கு   தெரிஞ்ச  ஒரு    ரிப்போர்ட்டர்   மூலமா  விஷயம்  தெரிய   விடாம   வச்சிருக்கேன்.   சில  சீனியர்   லாயர்ஸ்   கிட்ட   டிஸ்கஸ்  பண்ணி  ,அந்த  மாடசாமி   மேல   இன்னும்  ஸ்ட்ராங்கான   சில   செக்ஷன்ஸ்லலாம்  கேஸ்   போட்டு  , ஸ்ட்ரைட்டா  தூக்குக்கு  அனுப்பணும்.  அதைப்   பத்தி   பேசத்  தான்  இன்னிக்கு  நான்  கோர்ட்டுக்கே  வந்தேன்”   அதற்குள்    ஃபுல்   ரிங்   வந்து   கட்டாகி ,  மீண்டும்   அடிக்க   ஆரம்பித்தது.  

         “ஏன்   இன்னும்   யார்   கிட்டயும்  சொல்லல   தேனுகா?”

        “நான்   மாடசாமி   மேல   எந்த   கேசும்  போடாம   இருக்கேன்ல ?  அதனால   உங்களைக்  கல்யாணம்   பண்ணிக்கிட்டு   செட்டில்   ஆயிடுவேன் ,  இனிமே   அவன்  விஷயத்தில  தலையிட   மாட்டேன்னு  அஸ்யூம்   பண்ணிக்கிட்டு   மிதப்பா   சுத்திக்கிட்டு   இருக்கான்  .அவனோட   இந்த   அசால்ட்டான   போக்கு   தான்  எனக்கான  சரியான   டைம் .  ஒருவேளை  ப்ரித்வியை  அவன்   வெட்டுன   அன்னிக்கே   நான்   அவன்   மேல   கம்ப்ளைண்டு   குடுத்திருந்தா  அவன்   ஆப்ஸ்கான்ட்  ஆகிருப்பான் .  அது   ஒரு   ரீசன்,   அப்புறம்   ப்ரித்வி  கொலையானது   தெரிய  வந்தா, லாயர்ஸ் அசோசியேஷன்ல   ஸ்ட்ரைக்   அது   இதுன்னு   பண்ண   நினைப்பாங்க.  அதுவும்   அந்த   கொலைகாரனுக்கு   ஒரு  வார்னிங்   போல   ஆகிரும் தன்னைக்  காப்பாத்திக்கிறதுக்கான்  முயற்சியில  அவன்   இறங்கிருப்பான்,  இது  ஒரு  ரீசன். இந்த   இரண்டு   காரணங்களுக்காகத்  தான்,   நான்    ப்ரித்வி   டெத்தை  யார்   கிட்டயும்   சொல்லாம   மறைச்சு  அவன்  பாடியை   தகனமும்  பண்ண   சொன்னேன்.  சரி   நீங்க   என்ன    இங்க?”   

        “உன்னைப்   பாக்கத்  தான்  வந்தேன்,   கொஞ்சம்    பேசணும்” 

        “சரி , ஒரு   ஃபைவ்   மினிட்ஸ்   வெயிட்   பண்ணுங்க , ஒரு   கால்  மட்டும்   பேசிட்டு  வந்திடறேன்,   ஓகே  வா?”  

         “ஓகே”  ஜூனைத்    தலையாட்ட,  தன்  ஃபோனை   எடுத்து    பூமிகாவுக்கு   வாட்ஸப்பில்  வாய்ஸ்  கால்   செய்தாள்.

          “ஹலோ”

          “தேனு,   நான்   உங்க   ரெண்டு  பேரையும்   பாக்க   ஆசையா  வீடியோ  கால்   பண்ணினேன்.    சொல்லிட்டு   தான  பண்ணேன்?   ஏன்   எடுக்கல ? சரி  அதைக்  கூட   விடு,   இப்பயும்  வாய்ஸ்  கால்  தான்  பண்ற,   ஒரு   மாதிரி   தயங்கி  தயங்கி  பேசுற,   என்ன   விஷயம் ?  அங்க  ஏதாவது  ப்ராப்ளமா?”   பூமிகா  மூச்சு  விடாமல்  பேச

        “அக்கா,   ஒரு   நிமிஷம்   வெயிட்   பண்ணுங்க.   ப்ரித்வி   இன்னும்  வரலக்கா. அவர்   ஒரு   முக்கியமான   கேஸ்  விஷயமா  வெளியூர்   போயிருக்காரு  . அப்டி  அங்க   இங்கன்னு   சுத்தும்   போது   உங்க  தம்பி  பெர்சனல்   நம்பர்   யூஸ்   பண்ண   மாட்டாருல்ல ?  அதான்   உங்களுக்கே   தெரியும்ல  ? எனக்குமே   ஹாஸ்டல்ல  ஒரு  சின்ன   பிரச்சனைக்கா,   ஃபோன்  வேற  கீழ  விழுந்து   டிஸ்ப்ளே   போயிருச்சு.  இப்ப  தான்  சரி   ஆகி   கைக்கு   வந்துச்சு . ப்ரித்வி  ஊருல   இருந்து   வந்ததும்   ரெண்டு   பேரும்   சேர்ந்து   வீடியோ  கால்  பண்றோம்   

ஓகே  வா?”

         “ஓகே   ஓகே .  கல்யாண   ஆல்பம்  எப்போ   வரும் ?  அதையும்   தனியா  பென்ட்ரைவ்ல   காப்பி    பண்ணி   உங்க  கையில   குடுத்துருவாங்க   தான?”

        “ஆமாக்கா”  

        “அது   எப்ப   கிடைக்கும்?”   

        “இன்னும்   ஒரு   டூ  வீக்ஸ்ல”   துக்கம்  தொண்டையை  அடைக்க ,  சமாளித்துக்  கொண்டு   பேசினாள்  தேனுகா.

         “சரி   வந்ததும்   உடனே   எனக்கு   அனுப்பு  , ப்ரித்வி   வந்ததும்  பேசுங்க  ரெண்டு    பேரும்”  

        “கண்டிப்பாக்கா   நீங்க”….

        “தேனும்மா,   இரு.   எங்க  மாமனார்  வந்திட்டாரு  , அவருக்கு  தேவையானதை  செய்யணும் .  அப்றமா   பேசட்டுமா?”

      “அக்கா  ஓகேக்கா  நீங்க  அதைப்  போய்  பாருங்க   பாய்ய்ய்”…… கட்   செய்தாள்  தேனுகா.   கலங்கியிருந்த  கண்களைத்  துடைத்துக்   கொண்டாள்.   எதிரில்  அமர்ந்து   அவளையே   பார்த்துக்   கொண்டிருந்த  ஜூனைத்தை   நிமிர்ந்து   பார்த்தாள்.

      ” ம்ம்ம்   இப்ப   சொல்லுங்க,   என்ன   விஷயம்?   எதுக்காக   என்னைப்   பார்க்க  இவ்ளோ   தூரம்   வந்தீங்க?”

       ” இப்ப    நீங்க   ஒருத்தங்க   கிட்ட    பேசினீங்கள்ல?   அது   ப்ரித்வியோட  சொந்த   அக்காவா?”   

       ” ஆமா”

        “அவங்க   கிட்ட   கூட   உண்மைய  சொல்லலயா   தேனுகா?   இதெல்லாம்  ரொம்ப   தப்புங்க.  கடைசியா  அவங்க  தம்பி   முகத்தைக்   கூட   பாக்க   முடியாத  படி  பண்ணிட்டீங்களே?  பச்சையான  க்ரைம்ங்க  நீங்க    செஞ்சது” 

         “ஓ…….நான்   பண்ணினது   க்ரைம் ? அப்டின்னு    நீங்க   சொல்றீங்களா   மிஸ்டர்  ஜூனைத் ?”   ஒரு   கணம்  கண்களில்   தீப்பொறி  பறக்க  அவனை  முறைத்துவிட்டு, சட்டென   இயல்புக்கு   மாறி   பெருமூச்சு  விட்டாள்.   “உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  அவங்க   அக்காவுக்கு   மேரேஜ்   ஆகி   ஆறு   வருஷமா   குழந்தை   இல்லாம   இப்ப   தான்   ப்ரக்னன்ட்   ஆகிருக்காங்க.  நைன்த்   மன்த்ல   இருக்காங்க  . கனடால  இருக்காங்க.   இந்த   நிலைமைல   நான்   அவங்க   கிட்ட   அக்கா   உங்களோட  தம்பி  செத்துட்டான்  , அரிவாளால   வெட்டப்பட்டு  நம்மளை   விட்டுட்டுப்   போயிட்டான்னு  சொல்ல   முடியுமா?   இல்ல   சொன்னாத்  தான்    ஒன்பதாவது   மாசத்துல  பூமிகா அக்காவால   ஃப்ளைட்   ஏறி   வரத்  தான்   முடியுமா?    இப்ப   சொல்லுங்க   நான்   செஞ்சது   தப்பா   இல்ல   க்ரைமா?”  அவள்  முகத்தை   அவனால்   நிமிர்ந்து   பார்க்கக்   கூட    முடியவில்லை . அவனது   கையறு  நிலையைப்   புரிந்து   கொண்டதாலோ  என்னவோ   அதைப்   பற்றி   மேலும்  மேலும்   பேச   வேண்டாமென   தீர்மானித்தாள்.

        “ஆல்ரைட்,  நீங்க  ஏதோ  பேச  வந்தீங்க” 

        “ஆமா  ,  நம்ம   வீட்டைப்   பத்தி   தான்  உன்    கிட்ட    கொஞ்சம்   பேசணும்”  

        ” ஜூனைத்   அது   நம்ம   வீடு   இல்ல,   உங்க   வீடு    சரியா?   ஆன்ன்ன்  இப்ப  சொல்லுங்க   உங்க  வீட்டைப்   பத்தி  என்கிட்ட    என்ன   பேசணும்?”   அவள்  அப்படி   சொன்னவுடன்,   ஒரு   கசப்பான  சிரிப்போடு, சேரை   விட்டு   எழுந்தான்.

         “அங்க   உனக்கு   இப்ப   நிறைய   இன்கன்வீனியன்ஸ்   இருக்குன்னு  எனக்கு   நல்லா   புரியுது .  கொஞ்ச   நாள்   தான்.  நான்   எல்லாத்தையும்   சரி   பண்றேன்,  நீ  தைரியமா   இரு”  

        ” ஜூனைத்,   நான்   முந்தா   நாள்   என்ன    சொன்னேன்  ? என்னால  லைஃப்  டைம்  ஃபுல்லா  அங்க   வாழ   முடியாதுன்னு சொல்லிட்டு    கிளம்பிட்டேன்ல ?  தாத்தா  சொன்ன    ஒரே   ஒரு   வார்த்தைக்காகத்  தான்    நான்   என்னோட   புறப்பாடை  ஒரு   மாசத்துக்கு   தள்ளி   வச்சிருக்கேன் . நம்ம  பண்ணிக்கிட்டது   ஒரு   காண்ட்ராக்ட்   மாதிரின்னு   எனக்கு   தோணுது.   நான்  உன்   வாழ்க்கையை   கெடுத்தேன்,   அதுக்குப்   பதிலா   உன்னைக்  கல்யாணம்   பண்ணிக்கிறேன்ற   ரீதியில  நடந்தது . அது  வேணாம் ,  அது   நம்ம   ரெண்டு  பேருக்கும்  கஷ்டம்.    அதான்   சொல்றேன்,   நான்   அங்க    இருக்குறது   நம்ம  ரெண்டு  பேருக்குமே   நல்லது   இல்ல”  

        “ம்ஹூம் …  எல்லா  விஷயத்துலயும்  தெளிவா   யோசிக்கிற   லாயர்  தேனுகா , தன்னோட  சொந்த   விஷயத்துல  தப்பு  தப்பாவே   யோசிக்கிறதை   நினைச்சா  எனக்கு  அழுகிறதா  சிரிக்கிறதான்னு  தெரியல, நான்  உன்னை  விரும்பி  தான்”….

        “அம்மா”   என   அழைத்துக்கொண்டே  உள்ளே   வந்தார்   மூர்த்தி   அண்ணன்,

        “அம்மா,   டீ   நல்லா   சூடா….  சூப்பரா  இருக்கும்மா  , உடனே   குடிச்சிருங்க” 

        ” சரிண்ணே”  அறையின்   மூலையில்  இருந்த   டேபிளில்   கவிழ்த்து  வைக்கப்பட்டிருந்த   க்ளாஸ்  டம்ளரை எடுத்து  , கழுவ   ஆரம்பித்தார்   மூர்த்தி.    அவர்  முன்   பேச  ஜூனைத்திற்கு   ஏதோ   போல்  இருந்தது. 

        ” ஓகே   தேனுகா,   உன்   கிட்ட   நான்   ஈவ்னிங்   பேசிக்கிறேன்.   கிளம்புறேன் “

         “டீ   குடிச்சிட்டு   போலாமே?”

         “நோ   தாங்க்ஸ் , கிளம்புறேன்” அவன்  வேக   வேகமாக   வெளியே   சென்றான்.

         “அம்மா , யார்   இந்த   ஆள்?   புது  கிளையண்ட்டா ?  ஆளும்,   முழியும் .  அவர்  கிட்ட   கொஞ்சம்   ஜாக்கிரதையா  இருங்க,  எனக்கென்னமோ   அவரைப்  பார்த்தாலே  ஒண்ணும்   சரியாப்   படலை”   மெல்ல  புன்னகைத்தாள்   தேனுகா.

                   **************

          “ஆப்பா”   அந்த  மாலை   நேரத்தில்,  மொட்டை  மாடியில்,  சேலையை  விரித்து  கொடியில்   காயப்    போட்டுக்கொண்டே  அழைத்தாள்   நஸ்ரின்  ஃபாத்திமா.

         “சொல்லுடி”  

      ”  என்  வீட்டுக்காரர் ,  உன்னையும்  மாமாவையும்   மாடிக்கு   கூட்டிட்டுப்  போய்  என்ன   சொன்னாரு?” 

         “வேற   என்னத்தைடி   சொல்லிருக்கப்  போறாரு?   பொறுமையா   இரு   பாபி , அவளை   வீட்டை   விட்டு   துரத்த  உன்னோட   வழி   செட்   ஆகாது  , வேற  வழி   ஒண்ணு  தான்  பாக்கணும்னு  சொன்னாரு” 

       ”  எனக்கு   ஒரு   வழி   தோணுது”

         “உனக்குமா?  சொல்லுடி   கேப்போம்”  

       ” பேசாம   நீயும்   நானும்   ஜூனைத்தை  தனியா   சந்திச்சு   பேசினா   என்ன?” 

         “என்னனு    பேசச்   சொல்ற?”

         “அவன்   முன்னால   போய்   நின்னு  பிழிய   பிழிய   அழுவோம்.   நீ   அந்த  தேனுகாவை   நிக்காஹ்   பண்ணிக்கிட்டு வந்த   அன்னில   இருந்து   எங்க  வீட்டுக்காரங்க   எங்களை   நாய்க்கும்  கீழா   மதிக்குறாங்க,   அடி  கூட  வாங்குனோம்,   எப்பப்   பாத்தாலும்  எரிஞ்சு  விழறாங்,க  அவங்க   தங்கச்சியை   கட்டிக்கிறேன்னு  சொல்லிட்டு   இப்ப   சொன்ன  சொல்  மாறி  நீ    நடந்துக்கிட்டது   தான்   எல்லா  பிரச்சனைக்கும்   மூல   காரணம் ,  அது   இதுன்னு   சொல்லுவோம்.   என்ன  தான்   உன்  மேல ஆயிரம்   கோபம்  இருந்தாலும்,   நம்ம  ரெண்டு   பேர்   மேலயும்  அவனுக்குப்   பாசம்   அதிகம்க்கா   .கொஞ்சமாச்சும்  யோசிப்பான் ,  சும்மா  கல்   எறிஞ்சு  பாக்கலா.ம்   மாங்கா  விழுந்தா  நமக்கு  நல்லது   தான?   என்ன   சொல்ற?”   துணிகளை   காயப்போட்டு  விட்டு,  வாளியை   எடுத்துக்கொண்ட   நசீமா, 

          “சரிடி,   பேசலாம் . ஆனா   அந்த  சைத்தான்   வீட்ல   இல்லாத   நேரமா  பாத்து   தான்    பேசணும் .  அப்போ  தான்   நம்ம  எந்த   தொந்தரவும்   இல்லாம, நிம்மதியா,  பொறுமையா ,  பேச முடியும்” 

          “ஆமாக்கா” அந்த   நேரத்தில்  கார்   ஹாரன்   சத்தம்   கேட்க ,  எட்டிப்  பார்த்தாள்  நசீமா.  ஜூனைத்தின்   கார்   தான்.  மெல்ல  ஊர்ந்து   வந்து   போர்டிகோவில்   நின்றது.

          “நஸ்ரினு …  வாடி , தம்பி  வந்துட்டான்.  வீட்ல   யாரும்   இல்ல , இதான்  நல்ல  சந்தர்ப்பம் .  இப்பயே   பேசிடலாம்”  

          “சரிக்கா”

  

                                             – தொடரும்

         

                        

     

            

   

          

     

      

        

            

       

   

    

        

    No comments yet.