I’m vishwadheeran..
“என்னடி இப்படி உட்கார்ந்துட்டு இருக்க?” என்று தன் காதில் ப்ளூடூத் அணிந்து ஏதோ ஒரு பாடலைக் கேட்டு கொண்டு, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி அமர்ந்திருந்த யுகன்யாவைப் பார்த்து கேட்டாள் சூர்யா என்கிற சூர்யாகலா..
அது எனக்கு சொல்லத் தெரியலடி இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம், என் மனசு அப்படியே பிழியுற மாதிரி ஒரு வலி வருது என்று சொன்னாள் ஆர்த்தி, ஏன்டி எதனால் அப்படி சொல்லுற, என்ன பாட்டு என்று கேட்டாள் சூர்யா.
அவள் கேட்டுக் கொண்டிருந்த பாடலை வாங்கி தன் காதில் வைத்து கேட்டாள்.
“””””கனவே உனை வந்து சேர
நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்,
மரணம் நெருங்கிடும் போதும்
உன் நினைவினில் வாழ்ந்திடுவேனே
தீராத துயரத்தில் நானும்
காற்றோடு கரைந்தாய் நீயும்
நீங்காத நிலவொளியானாய்
அன்பே அன்பே
மறு ஜென்மம் எடுத்தாக் கூட
உயிரே உன் கரம் பிடிப்பேனே
உன் கால் தடம் நான் தொடர்வேனே
அன்பே அன்பே”””””
“ஆமாடி இதெல்லாம் நார்மல் தான், எனக்கு ,எல்லாருக்கும் ஏதாவது ஒரு பாட்டு கேட்கும் போது ஒரு மாதிரி பீலிங்கா இருக்கும் இல்ல, அந்த மாதிரி உனக்கு இந்த பாட்டை கேட்கும் போது தோணுதுன்னு நினைக்கிறேன், எனக்கு கூட சம்டைம்ஸ் இந்த மாதிரி பாட்டு கேட்டா ஒரு மாதிரி ஃபீல் ஆகும்” என்று சொன்னாள் சூர்யா.
“ஹேய் உனக்கு என்னை பத்தி தெரியாதா, நான் அவ்வளவு சீக்கிரம் எமோஷன் ஆகுற ஆள் கிடையாது, இவன் மூவிக்காக மூவில ஒரு சீனுக்காக, சாங்க்காக ஃபீல் பண்ற பர்சன் நான் கிடையாது உனக்குத் தெரியும்ல, ஆனா இந்த பாட்டு அது எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ண தெரியலடி, என்னை அப்படியே சிதைச்சு போடுது சம்திங் ஐ ஃபீல்” என்று எதையோ சிந்தித்த படி,எங்கோ வெரித்துக் கொண்டு சொன்னாள் அவள்.
சரி சரி ஓவரா திங்க் பண்ணாத, நாளைக்கு அந்த ப்ராஜெக்ட் சப்மிட் பண்ண போகணும் இல்லையா, இந்த ப்ராஜெக்ட் அக்சப்ட் ஆச்சுன்னா தான் நமக்கு ஃபாரின் ட்ரிப் அலோவ் பண்ணுவான் அந்த மாங்காமடையன் டி.எல் இல்லனா கிளைன்ட்ட நம்மள காண்டாக்ட் கூட பண்ண விட மாட்டான், ப்ரோமோஷனோ கொடுக்க மாட்டான் இவனுங்களை எல்லாம் சுட்டு தள்ளனும்டி” என்றாள் அவள்.
இதையெல்லாம் பாதி கவனத்தில் கேட்டுக் கொண்டிருந்தாள் யுகன்யா அவள் மனதை இந்த பாடல் ஏதோ செய்தது,
எதற்கு இந்த வலி, ஏன் இந்த மனதை உருட்டும் வேதனை தாங்க முடியவில்லை, தன் உயிரையே இழுத்து பிழிவது போல ஏன் இந்த உயிர்வதை எதற்காகவோ பரிதவிப்பது போன்று ஏன் இந்த தவிப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாத இந்த உணர்வினை என்னவென்று சொல்வது அவளுக்கு தெரியவில்லை.
அடியே அந்தப் பாட்டு கேக்குறது விட்டுட்டு முதல்ல எழுந்து வாடி என்று அங்கிருந்து அவளை அழைத்துச் சென்றாள் சூர்யா.
ஆனால் யுகன்யாவின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் சுனாமி போல எழுந்து கொண்டு இருந்தது அதெல்லாம் என்ன என்று அவளுக்கு புரியவில்லை ஒரே குழப்பமாக இருந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்கள் ஆபீஸிலிருந்து காஷ்மீருக்கு அழைத்துச் சென்றார்கள், அங்கே சோன்மார்க், பனி மூடிய சிகரங்கள் மற்றும் பனிச்சரிவுகளுக்கு பெயர் பெற்ற இடம்.
அங்கு சென்றுவளுக்கு ஏதோ நிழல்களாக சில ஞாபகங்கள் மனதில் தோன்றியது, அந்த இடத்தை எல்லாம் அவள் இப்பொழுதுதான் பார்ப்பது போல் அவளுக்கு தோன்றவில்லை,
ஏற்கனவே அவையெல்லாம் நன்கு பரிச்சயமான இடம் போல தோன்றியது அவளுக்கு, அவளே அவர்களுக்கு இந்த இடத்தில் இது இருக்கும், அந்த இடத்தில் அது இருக்கும் என்று சரியாக சொல்லிக்கொண்டே செல்ல, உடன் இருந்த நட்புகளுக்கும்,
என்னடி ஏற்கனவே காஷ்மீர் வந்து இருக்கியா? இந்த இடம் எல்லாம் பார்த்து இருக்கியா என்று கேட்க, இல்லை இதுதான் அவள் முதல் முறை காஷ்மீர் வருகிறாள், அவளுக்கே தெரியவில்லை இந்த இடத்திற்கு, தான் வந்தோமா என்று..
இல்லை இல்லை என்று அவள் உதடுகள் அசைந்தது, அவளை யாரோ ஏதோ ஒரு பெயர் சொல்லி அழைப்பது போன்று தோன்றியது அவளுக்கு..
அப்போது அங்கிருந்த உயரமான மலைப்பகுதியை திரும்பிப் பார்த்தாள் அவள், அங்கே அழகிய சில மரங்கள் அதன் அழகை ரம்யமாக பிரதிபலித்துக்கொண்டு இருந்தது,
அவளுக்கு ஏதோ ஒரு உந்துதல், வேகமாக அந்த மரத்தின் அருகில் சென்றாள், எங்கே என்று எதையோ வெறி பிடித்தவள் போல தேடினாள்,
அங்கு அடர்ந்த காடுகள் போல சினார் மரங்கள் இருந்தது, எந்த மரம் என்று அவள் தேடித்தேடி பார்த்தாள்.
அவள் தேடுவதை பார்த்த சூர்யாவும், இன்னொரு பெண் தீபிகாவும் தான்,
” என்னடி பண்ற? என்ன தேடிட்டு இருக்க?” என்று கேட்டார்கள், “அது அது..” என்று அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது,
அவளுக்கு ஏதோ தோன்றியது, ஆனால் அது என்ன என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை, அவளுக்கு சொந்தமான அவளுக்கு நெருக்கமான ஏதோ ஒன்று அங்கு இருப்பதாக அவள் மனம் கூறியது,
அப்போது தீபிகா, “வாடி எதுக்கு இங்க வந்து தேடிகிட்டு இருக்க?” என்று தன் காதில் இருந்து ப்ளூடூத்தை டிஸ்கனெக்ட் செய்ய ,அவள் மொபைலில் பாட்டு வைத்திருந்தாள்,
அதில் தான் முதல்முறையாக அந்த இடத்தில், “கனவே உன்னை வந்து சேர, மீண்டும் வரம் ஒன்று கேட்டேன்..” என்று பாடல் ஒலித்ததுமே, கண்கள் எல்லாம் கலங்கி மனது பெரிதும் பதற ஆரம்பித்தது.
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, “அந்த பாட்டை நான் கேட்டுட்டு தரேன், நீங்க போங்க இதோ வந்துடுறேன்” என்றாள்
“ஒன்னும் பிரச்சன இல்லையே” என்று மற்றவர்கள் கேட்க, அதெல்லாம் ஒன்றும் இல்லை என்றாள் அவள்.
அவர்கள் அப்படி சென்றதும் அந்த பாடலைக் கேட்டவள் அங்கிருந்த மரத்தில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதாள், ஏன் அழுகிறாள்? எதற்காக அழுகிறாள் என்று அவளுக்கே புரியவில்லை, இந்த பாடலுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம், அதுவும் அல்லாமல் இந்தப் பாடலில் உள்ள வரிகள், அவள் மனதை ஏதோ செய்தது,
மீண்டும் அந்த மரங்களை தேட ஆரம்பித்தாள், அதற்குள் அவளுடைய ஃபிரண்ட்ஸ் அழைக்கவும், கண்களை எல்லாம் வேகவேகமாக துடைத்துக் கொண்டு, பெரும் உயிர் வலியுடன் தான் அங்கிருந்து வந்தாள்,
ஆனால் அங்கே வந்த பிறகு ஒருநாளும் அந்த பாடலை அவள் கேட்காமல் இல்லை. கேட்கக் கேட்க மனம் பெரும் வேதனையை தத்தெடுத்தது.
அன்றிலிருந்து அந்த மரமும் அந்த பாடலும் ஏதோ செய்து கொண்டு இருக்கிறது,
அதையெல்லாம் அவள் போட்டோ எடுத்து வந்திருந்தாள், தனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ,ஆனால் ஏதோ ஒரு வெறுமை அவள் மனதை சூழ்ந்திருந்தது.
இருந்தாலும் எதையும் வெளியே காட்டிக் கொள்ளாமல், எதையும் யோசிக்காமல் வேலையை பார்ப்போம், எப்போதும் போல் என்று துரு துருவென்று இருக்க முயன்றாள்.
அங்கே ஒரு பெரிய ஆபீஸ் போர்டு மீட்டிங்கில் அனைவரும் அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள்.
என்ன சார் நாங்க எல்லாம் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கோம், என்னதான் நடக்குது,
இன்னைக்கு யாரோ புதுசா வராங்கன்னு சொன்னீங்க, யார் வரா? என்ன ஏதுன்னு எதுவுமே எங்களுக்கு தெரியல, முன்னாடியும் எங்ககிட்ட எதுவும் நீங்க இன்ஃபார்ம் பண்ணல” என்றார் மிஸ்டர் குப்தா, அந்த கம்பெனியின் ஷேர் ஹோல்டரில் ஒருவர்,
“ஹலோ மிஸ்டர் மைன்ட் யுவர் வேர்ட்ஸ், அவர் யாரோ ஒருத்தரு இல்ல , இந்த கம்பனி எம்.டியுடைய சன், இப்போ இனிமே அவர்தான் கம்பெனியினுடைய பொறுப்பு எடுக்கிறார், அவர் ஒன்னும் சாதாரணமா படிச்சிட்டு ஜஸ்ட் லைக் தட வரல,
பெரிய கம்பெனி ரன் பண்ணி சக்சஸ்ஃபுல்லா வோர்ல்டு வைடா இன்டர்நேஷனல் லெவல்ல இப்போ அவங்க மார்க்கெட் இருக்கு, அப்படி இருக்கிற கம்பெனியோட இந்த கம்பெனிய டேக் ஓவர் பண்றதுக்கு தான் வரார்,
ஃபேமிலி பிசினஸா விட்ற கூடாதுனு என்று சொன்னார் தீனதயாளனின் செக்ரட்டரி மிஸ்டர் கேசவன்.
“மிஸ்டர் தீனதயாளன் தான் ஃபர்ஸ்ட் இருந்தாரு, இப்போ அவருடைய சன் ஃபாரின்ல இருந்து வருவார் என்று சொன்னீங்க , இன்னும் வரலையா, அவரு ஃபிளைட் ஏதாவது லேட்டா?” என்று நக்கலாக கேட்டார் குப்தா.
“ஆமா மிஸ்டர் குப்தா ஃப்ளைட் தான் லேட் ஆயிடுச்சு, வேணாம்னா ஃபிளைட் மேல் கேஸ் போட்டு வர்றீங்களா என்று நக்கலாக கேட்டபடி அந்த இடத்திலேயே ஆறடிக்கும் அதிகமான உயரத்துடன் உள்ளே ஒருவன் வந்தான்.
வாட்ட சாட்டமான உடல்வாகு, கூறிய பார்வை ,எவரையும் எட்டி நிறுத்தும் ஆளுமை, நடை உடை எல்லாவற்றிலுமே நேர்த்தி, அவ்வளவு கம்பீரமாக உள்ளே வந்தவனை பார்த்து வாய் அடைத்துப் போனது அங்கிருந்தவர்களுக்கு.
“வாங்க சார், வெல்கம்” என்று மற்றவர்கள் அவனை வரவேற்க, எல்லோருக்கும் தலையசைப்புடன், அவன் இருக்கையில் சென்று நின்றான்.
ஐ திங்க் நான் டிலே பண்ணலைன்னு நான் நினைக்கிறேன், ஈவன் சொல்லப்போனா இன்னும் 10 மினிட்ஸ் இருக்கும், அதுக்குள்ள மிஸ்டர் குப்தா ஏன் தண்ணில போட்ட மீனு மாதிரி இப்படி துள்ளிக்கிட்டு இருக்காரு” என்று அவன் குப்தாவை கூறிய பார்வையுடன் கேட்க, இப்போதுதான் அவர்கள் அவனைப் பார்க்கிறார்கள்.
குப்த்தாவிற்கு அவன் முன் பேச்சே வரவில்லை, “அது..” என்று வாய் தந்தி அடிக்க,
“என்ன மிஸ்டர் குப்தாவுக்கு திக்குவாய்னு யாரும் சொல்லவே இல்லையே” என்று நக்கலாக வந்தது அவன் பதில், அனைவரும் லேசா சிரித்து விட, குப்த்தாவிற்கு அவமானமாக போய்விட்டது.
“நாம இணையிலிருந்து ஒரு நியூ ஜர்னி பண்ண போறோம், இந்த ப்ராஜெக்ட் பத்தி நான் உங்களுக்கு எக்ஸ்ப்ளைன் பண்றேன், முதல்ல நம்ப நிறைய ஆல்ட்ரேஷன் கரெக்ஷன்ஸ் கொண்டு வர போறோம்,
இங்க இருக்கிற விஷயங்களுக்கேத்த மாதிரி ப்ரோக்ராம் ஆகியிருப்பீங்க, ஆனா நம்ம கொஞ்சம் இன்டர்நேஷனல் லெவலுக்கு நம்ம பிசினஸ் கொண்டு போகணும்னா, நாம அதுக்கு ஏத்த மாதிரி நம்ம ஸ்டாண்டர்ட் இம்ப்ரூவ் பண்ணனும், ஓகே ஜென்டில்மேன் ப்ளீஸ் டேக் யுவர் சீட் என்று அவனும் அமர்ந்தான்.
” ஐயம்..” என்று அவன் சொல்ல வர,”தெரியும் சார்” என்று மற்றவர்கள் சொல்ல, “பட் மிஸ்டர் குப்தாக்கு தெரியாது என்று நினைக்கிறேன், என்ன மிஸ்டர் குப்தா தெரியாது தானே” என்று மீண்டும் அவர் புறம் திரும்ப, அவர் எதுவும் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
யாரோ சின்ன பையன் மிரட்டி உருட்டி கம்பெனி ஷேரை எல்லாம் எப்படியாவது மேஜர் பங்கை வாங்கிவிட்டு கம்பெனியை சொந்தமாக்கிக் கொள்ளலாம் நினைத்திருந்தவரின் எண்ணத்தில் இடியைப் போல இறங்கி இருந்தான் அவன்.
ஐயம் விஷ்வாதீரன்..
தொடரும்..
No comments yet.