காதல்வெளியின் வானவில்
வெட்டவெளி வானவில் போல
வண்ணமயமானதுதான்
அந்த வண்ணங்கள் மாயங்கள்
அந்த மாயங்கள்தான்
அவனையும் அவளையும்
மயக்கத்தில் ஆழ்த்தி
கனவுக்குள் வீழ்த்தும் பாருங்கள்
கனவுக்குள் வீழ்ந்தபிறகு
அந்த உள்ளங்கள் பேசும்
அந்தரங்க உரையாடல்
ஒவ்வொன்றும் ஒரு கவிதை
அந்தக் கவிதைக்குள் படிமங்கள் போல
எப்போதும் சிறகு விரிக்கும்
சில பறக்கும் முத்தங்கள்
No comments yet.