எபிசோட் 1

PANAIYAN VELMURUGAN | 18 Nov 2025 | Share

ராமசாமி 

காலை நேர பரபரப்போடு கைப்பையை பிடித்த படி வேகமாக பஸ் ஸ்டாண்டை நெருங்கி கொண்டு இருந்தேன்.பஸ்கள் சில நேரம் பஸ்ஸ்டாண்ட் உள்ளே வந்து எங்களை எடுத்து செல்லும்.பல நேரம் ரோட்டின் ஓரமாக நின்று இறங்குபவர்களை இறக்கி விட்டு ஏற வேண்டியவர்களை அரைகுறையாக ஏற்றிக்கொண்டு 

பறந்து செல்லும்.அது ஏனென்று தெரியவில்லை அத்தனை தனியார் பேருந்துகளும் பஸ்ஸ்டாண்ட் அருகில் பறப்பது போலவும் நேரம் இல்லாதது போலவும் காலில் வென்னீர் ஊற்றி பறக்கின்றன.சரி அது ஒரு மாய வித்தை இருக்கட்டும்.பஸ்ஸ்டாண்டின் வலது பக்கம் பார்த்தால் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவில் வரும் பஸ்களின் முகப்பு தெரியும்.அதுவும் இன்றைய நிலையில் எலக்ட்ரானிக் பேனர் (ஒளிரும் பலகை) கொண்ட அரசு பேருந்துகள் அரைகிலோ மீட்டர் இல்லை அதை விட தொலைவிலேயே கண்டறிய வசதியாக உள்ளது.இங்கே நிற்க வசதியாக அறுபது வருடத்திற்கு முன்பு ஏதோ புண்ணியவான் வைத்த புளியமரம்.அதன் வேருக்கு அருகே செல் போன் சிம் விற்பவர்கள் பயன்படுத்தும் குடையை தனது கடையின் கூரையாகவும் .எப்போதோ ஒருவர் கரும்பு ஜூஸ் விற்கும் போது பயன்படுத்திய டேபிளை கடையாகவும் கொண்ட பாட்டி உதிரியாக கிடக்கும் பூக்களை

அழகாக சேர்த்து கட்டி இன்றும் 

குடும்ப பிணைப்பின் அடிநாதமாக 

திகழ்ந்து கொண்டு இருக்கிறாள்.பாட்டியின் கடையை போல பல கடைகள்.பாட்டியின் கடைக்கு வலது பக்கத்தில் இருந்து கருத்த உடல் ஆறடி உயரம் இடுப்பில் கைலி காலில் ரப்பர் செருப்பு.இடது காலில் ஏழாம் நம்பர் செருப்பு வலது காலில் பத்தாம் நம்பர் செருப்பு.

அப்போது தான் அவரது காலை கொஞ்சம் கவனித்தேன் வலது கால் இடது காலை விட மூன்று மடங்கு பருத்திருந்தது.உடலில் வேறெந்த வித்தியாசமும் வெளியில் தெரியவில்லை.யானைக்கால் வியாதி வந்தவர்களை வீடியோக்களில் படத்தில் பார்த்திருக்கிறேன்.நேரில் பார்த்தது இவரைத் தான்.ஆனால்

சிறுவயதில் இவரை நான் பார்த்த நிலைமையே வேறு.

சிறுவயதில் பாட்டி ஊரில் எங்களுக்கு பிடித்தவர்கள் சிலர்.

அவர்களில் இவரும் ஒருவர்.பாட்டி

ஊர் முப்பது வருடங்களுக்கு முன்பு சிறிய கிராமம்.அதிகாலை ஐந்து மணிக்கே மக்கள் சாயாவோடு உப்புமா சாப்பிட எங்கள் வீட்டின் அருகிலிருக்கும் டீக்கடைக்கு தான் வருவார்கள்.டீக்கடைகாரர் அதிகாலையிலேயே எழுந்து டீ பாய்லரை முதலில் அடுப்பு கரி அல்லது தேங்காய் செரட்டை கொண்டு ரெடி செய்து விட்டு.உப்புமாவை பெரிய வடச்சட்டியில் உதிரி உதிரியாக 

செய்வதை பார்க்கும் போதே சாப்பிட தோன்றும்.அந்த நேரத்தில் நானும் என் சித்தப்பாவும் எழுந்து பதனீர் இறக்குபவர்களுடன் சென்று 

பதனீர் வாங்கி வர ரெடியாகுவோம்.எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாது.அதுவுமில்லாமல்

பதனீரை சித்தப்பாவும் நொங்கு வைத்த பனங்காய்களை நானும் 

சுமக்க வேண்டும்.பனங்காய்களை

தலையில் வைத்து சுமக்க மட்டுமே எனக்கு தெரியும்.நானும் சித்தப்பாவும் பதனீர் நொங்கை கொண்டு போய் பக்கத்து ஊரில் தெருக்களில் விற்று வருவோம் விடுமுறை நாட்களில்.விற்று முடிந்ததும் சித்தப்பா சேவு முறுக்கு 

என பண்டம் வாங்கி தருவார்.

பருத்தி கொடுத்து பண்டம் வாங்குவது.மற்ற சில காய்கறி கொடுத்து பண்டம் வாங்க சிலர் சித்தப்பா கடைக்கு இல்லை இல்லை சின்ன பாட்டி கடைக்கு பெண்கள் வருவதுண்டு.பனங்கள்

இறக்க அனுமதி சட்ட ரீதியாக இல்லை.ஆனால் பதனீர் இறக்குபவர்கள் கள்ளும் இறக்கி விற்பார்கள்.சிலர் ஊர வைத்து விற்பதும் உண்டு.

சாராயம் இப்போது போல அப்போது கிடையாது கிடைக்காது.

ஆனால் கள் தாரளமாக கிடைக்கும்.கள் குடித்து விட்டு தெருக்களில் சுய நினைவின்றி 

குடும்ப அக்கறையில்லாமல்

படுத்து கிடப்பவர்கள் அதிகம்.அவர்களில் அதிகம் முப்பதை தொட்டவர்கள்.ஆனால் அவர்களோடு சேராத ஒரு தினுசான ஆள் தான் ராமசாமி

அண்ணன்.அவர் அப்போது தான் விடலை பருவத்தில் நுழைந்த காலம்.

கள்ளை இறக்குபவர்கள் ஒரு விதத்தில் ஹீரோ என்றால்.அந்த

கள்ளை ஐம்பது லிட்டர் கேன்களில் நிரப்பி மணல் பாதையில் கரடு முரடான வெறும் சரளை கற்களை கொட்டிய ஆரம்பகால தார் ரோடுகளில் ஊரின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு கொண்டு செல்வதும்.போலீஸார் கண்ணில் படாமல் கள்ளை கவனமாக கொண்டு சென்று விற்பனைக்கு கொடுக்கும் ராமசாமி போன்றவர்கள் தான் எங்களைச் போன்ற வாண்டுகளின் ஹீரோ.

ஏனென்றால் ரிஸ்க் அதிகம் வருமானம் அதிகம்.அந்த நேரத்தில் வயிற்றுப் பிழைப்பு அவ்வளவு சிரமம்.அதில் நீதி நேர்மை நியாயம் எல்லாம் தெரியாது.அதுவும் உழைப்பாகத் தான் பார்க்கப்பட்டது.இப்போது தெரியும் விவரம் அப்போது இல்லை.ராமசாமி அண்ணன் பெரிய லோடு  சைக்கிள் வண்டி பின்னால் கள் நிரம்பிய கேன் வைத்து வேகமாக போவதைப் போல

வேறுயாரும் போக முடியாது.பல ஆண்டு சர்வீஸ் இருப்பவர்கள் கூட அண்ணன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது அந்தளவு

வேகமாக  போவார்.அவரைப் போல வேகமாக சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று பனங்காய் வண்டி ஓட்டிய அனைவருக்கும் எண்ணம்.எங்களின் கதாநாயகனாக இருந்தவரை

எனக்கு ஏன் பிடிக்கும் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு.பாட்டி ஊரில் இருந்த போது ஒரு முறை சின்ன பாட்டி கடைக்கு பக்கம்  உட்கார்ந்து, கள் குடித்து விட்டு போதை ஆசாமிகள் 

வரைமுறை இல்லாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள்.காதிலேயே கேட்க முடியாத வார்த்தைகள் அவர்கள் வாய் வழி கொட்டி கொண்டு இருந்தது.அந்த வழியாக கடந்து செல்லும் பெண்கள் அதை கேட்காதது போல எவ்வளவு நேரம் இருக்க முடியும்.ஊரில் இருப்பது ஐம்பது குடும்பம்.எல்லாம் ஒண்ணுக்குள் ஒண்ணு.எப்படி பார்த்தாலும் ஏதாவது ஒரு வகையில் உறவாகத் தான் இருப்பார்கள்.உறவுக்குள் ஏன் சண்டை சச்சரவு என்று பொருத்து போவார்கள்.இன்னொன்று இரவில் இப்படி இழவை இழுப்பவர்கள் காலையில் வந்து மதனி அக்கா என்று உறவு கொண்டாடுவார்கள் எதுவுமே நடக்காதது போல.அதனாலேயே

பெண்களும் ஆண்களும் இதை

பெரிதாக எடுப்பதில்லை.ஆனால்

அன்று வரம்பு மீறி பேச்சு நீண்டது.

எப்போதும் இது போல பேச்சு கொஞ்சம் சூடாகும் போது பெரிசுகள் ஒன்றிரண்டு நின்று சத்தம் கொடுத்தால் உடனே இந்த 

வம்பளக்கும் கூட்டம் கலைந்து செல்லும்.அன்று அப்படி ஆட்டையை கலைக்க ஆள் இல்லை.அந்த நேரத்தில் ஏற்கனவே வியாபாரம் ஏதும் இல்லாமல் வந்து உட்கார்ந்து இருந்த என்னுடைய அப்பா இதைப் பார்த்து கொஞ்சம் ஆத்திரத்தில் பொங்கி.’என்னாட இது பொம்பளைங்க போக வர இருக்குற நேரத்துல சலம்பல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க’ என்று சொன்னதும்.குடி மகன்கள் மொத்தமாக சேர்ந்து சவுண்ட் விட.பதிலுக்கு எங்க ஐயா சவுண்ட் விட.அப்ப கூட்டத்துல ஒருத்தன் போதையில ஓடிப்போயி அவன் வீட்டில வைச்சிருந்த பெரிய வேல்கம்ப எடுத்துக்கிட்டு ஓடிவர.இங்க என் அப்பாவ சண்டைக்கு போகதன்னு சொந்தக்காரங்க சமாதானப்படுத்த.அதப்பாத்து வேல்கம்பு தூக்கி வந்தவன் இப்பவே அவனை குத்திக் கொல்லாம விட மாட்டேன்னு

குதிக்க.ஊருல இருக்குறவன் எல்லாம் எங்க அப்பாகிட்ட ‘அவன் தான் குடிச்சிட்டு சண்டை போட்டா.

நீ அவனுக்கு சமமா சண்டைக்கு குதிக்கிற. யாரை நாங்க குறை சொல்ல’ என்று என் அப்பாவை

பேசுனப்ப.என் அப்பா செஞ்சது சரிதான்னு எங்க பக்கம் பேசின ஒரே ஆள் ராமசாமி அண்ணன்.

அப்படி எங்க அப்பாவுக்கு அவரு மட்டும் சப்போர்ட் பண்ணலை.ஊர்காரங்க ஒரு வேளை தப்பு எங்க அப்பா மேல் தான்னு சொல்லி பஞ்சாயத்துல

பேசி ஊர் கால்ல விழ வைச்சிருப்பாங்க.ராமசாமி அண்ணன் எங்க பக்கம் நியாயம் இருக்குன்னு சொன்னதால நாங்க தப்பிச்சது மட்டுமில்லை.அந்த வேல்கம்பு தூக்கிட்டு வேகமா

போதையில வந்த அந்த மாமாவ

அடுத்த நாள் போதை இல்லாதப்ப

கூப்பிட்டு ஊர் கால்ல விழ வைச்சாங்க.அந்த நிகழ்ச்சி ராமசாமி அண்ணன் மேல எனக்கு இன்னும் கொஞ்சம் மரியாதையை

உண்டாக்குச்சு.அது மட்டுமா…..

    

    

    No comments yet.