இயல்பு தானே?

PANAIYAN VELMURUGAN | 03 Jan 2026 | Share

இயல்பு தானே?

குரலெழுப்பி கத்தித் தான் 

பார்க்கிறேன் 

கூப்பிட்ட குரலுக்கு 

ஓடோடி வருவேன் 

என்றவர் கூட 

யாரது என்று 

தான் கேட்கிறார்?

தனியாக நடக்க

வழியில்லை 

கோலுடன் என்புதோல் 

போர்த்திய உடல் கூட 

ஏந்திய பாத்திரம் 

இடமாற்றி

தண்டமேந்தி

சீ…போ. 

என எதிர் குரல் தான். 

ஏன் என கேட்க 

ஆளில்லை

கன்னமிட்டு 

களவாட வந்தவன்

கூட 

விருப்ப மறிந்து

விருந்து தருகிறான் 

பால்குடி மாறாமல்

தூக்கி வந்ததால் 

பால் மட்டுமே தந்தால் 

எனக்கு கன்னமிட்டவன்

கடவுளாவது

இயல்புதானே.

பனையன் 

3.1.26

    No comments yet.