“இப்ப எதுக்கு டா என்னய இப்பிடி தனியா இழுத்துட்டு வர்ற? அத்தையும் மாமாவும் என்ன நெனச்சுப்பாங்க?” என தன்னை இழுத்துச் செல்லும் ஆரண்யனிடம் வினவினாள் வெண்ணிலா.
“அவங்கலாம் ஒன்னும் நெனச்சுக்க மாட்டாங்க. பேசாம நீ வா. சீக்கிரம்…” என வெண்ணிலாவை காரில் அமர வைத்து காரை எடுத்தான் ஆரண்யன்.
“எங்க போறோம்?” வெண்ணிலா.
“அதெல்லாம் சொல்ல முடியாது..” ஆரண்யன்.
“ஏன்டா இப்பிடி பண்ற? அத்தைக்கிட்ட பேசிட்டு இருந்த என்னய எதுக்கு திடீருனு வெளில இழுத்துட்டு வந்த? இப்ப எங்கயோ கடத்திட்டு போற. எங்க னு கேட்டா அதையும் சொல்ல மாட்டேன் ங்குற… என்ன நினைச்சு இதெல்லாம் செஞ்சுட்டு இருக்க ஆரா?” என லேசாக கோவப்பட்டாள் வெண்ணிலா.
“உன்னய நெனச்சு தான் இதெல்லாம் செஞ்சுட்டு இருக்கேன்…” என நக்கலாக சிரித்தபடி கவனமாக காரை ஓட்டினான் ஆரண்யன்.
“கடவுளே… உனக்கு என்ன தான் பிரச்சனை?” வெண்ணிலா.
“என் வருங்கால மனைவிய முழுங்குற மாதிரி ஒருத்தன் பாத்துட்டு இருக்கான். எனக்கு அதுதான் பிரச்சனை…” ஆரண்யன்.
“என்ன? உன் வருங்கால மனைவியா? யாரு? யார பாத்தது?” வெண்ணிலா.
“என்ன நிலா லூசு மாதிரி கேக்குற? நீதான் என் வருங்கால மனைவி. உனக்கும் எனக்கும் தான கல்லியாணம் நடக்கப் போகுது? நம்ம கல்லியாணத்துக்காகத் தான் ஜாதகம் பாக்க போக போறாங்க…” ஆரண்யன்.
“அது நடக்கும் னு நினைக்கிறியா?” வெண்ணிலா.
“ஏன்? நடக்காது னு நீ நெனக்கிறியா?”
எனக் கேள்வி கேட்டவாறு காரை நகரத்திற்கு வெளியே அவ்வளவாக ஆள் அரவமற்ற இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினான் ஆரண்யன்.
“இது என்ன இடம்?” என்றவாறு சுற்றிலும் பார்த்தாள் வெண்ணிலா.
“சிட்டி ல எந்த இடத்துலயும் இங்க கிடைக்கிற அமைதி கிடைக்காது. இது போல அமைதியான சூழ்நிலை வேற எங்கயும் கிடைக்காது. கீழ இறங்கு. கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போகலாம்..” என்றவாறு காரை விட்டு கீழிறங்கினான் ஆரண்யன்.
“டேய் இங்க யாருமே இல்ல. இங்க உக்காந்து என்ன பண்ண போறோம்?” என்ற கேள்வியுடன் காரை விட்டு கீழிறங்கினாள் வெண்ணிலா.
“காலேஜ் படிக்கிறப்ப ரொம்ப துறு துறு னு இருப்ப ல நீ. இப்ப அப்பிடியே ஆப்போசீட். ரொம்ப அமைதியா மாறிட்ட.” எனப் பேசியவாறு இலகுவாக கை வீசி நடக்க ஆரம்பித்தான் ஆரண்யன்.
மெயின் சாலையோரத்தில் கார் நின்றிருக்க சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்திருக்க அம்மரங்களில் வாழும் சிறு சிறு குருவிகளும் பறவைகளும் அழகாக குரல் கொடுப்பதை ரசித்தபடி சுற்றிலும் பார்த்தபடி ஆரண்யனின் பின்னே நடந்தாள் வெண்ணிலா.
“என்ன நிலா இப்பவும் அமைதியா வர்ற?” என நடப்பதை நிறுத்திவிட்டு நின்று திரும்பிப் பார்த்தான் ஆரண்யன். அப்பொழுது தொலைவில் அவனுக்கு ஏதோ வித்தியாசமாக தெரிய, பார்வையை கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தவனின் விழிகளில் விசயம் தெளிவாக தெரிந்தது. அப்போதைக்கு அதைப் பற்றி வெண்ணிலாவிடம் எதுவும் கூறாமல் அவளிடம் சாதாரணமாக பேசினான் ஆரண்யன்.
“நிலா… என்னாச்சு?” ஆரண்யன்.
“ஒன்னுல்ல… இந்த இடம் நல்லா இருக்கு.” என சுற்றிலும் வேடிக்கைப் பார்த்தபடி நடந்தாள் வெண்ணிலா.
“நாந்தான் சொன்னேன் ல. எனக்கு மனசு கஷ்டமா இருந்தாலோ சந்தோஷமா இருந்தாலோ இங்க தான் வருவேன். என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான இடம் இது…” என அவளுடன் இணைந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான் ஆரண்யன்.
“ரொம்ப நெருக்கமான இடமா?” என ஆச்சரியமாக வினவினாள் வெண்ணிலா.
“ம்ம்… ஆமா… நீ ஏன் உன்னோட ஸ்கூட்டிய வெளில எடுக்குறது இல்ல?” ஆரண்யன்.
“எடுக்க கூடாது னு லாம் எதுவும் இல்லை. எடுக்கனும் னு தோணல. அவ்ளோ தான்…” வெண்ணிலா.
“ஓஹோ… அப்புறம் நிலா, நா உன் கிட்ட ஒன்னு கேப்பேன். அதுக்கு உண்மையா பதில் சொல்லு…” ஆரண்யன்.
“என்ன? கேளு…” வெண்ணிலா.
“மொதல்ல வா… அந்த கல்லுல உக்காந்து பேசலாம்…” என அருகிலிருந்த ஒரு சிறு பாறையை நோக்கி சென்றான் ஆரண்யன்.
“ம்ம்… உக்காந்தாச்சு. என்ன கேக்கனுமோ கேளு…” என பாறையில் அமர்ந்தபடி கேட்டாள் வெண்ணிலா.
“உனக்கு நெஜமாலுமே இந்த, நம்ம கல்லியாணத்துல விருப்பமா?” ஆரண்யன்.
“அதே தான் நானும் கேக்குறேன். நீ நிஜமாவே என்னய லவ் பண்றியா ஆரா?” வெண்ணிலா.
“உனக்கு ஏன் இப்பிடி ஒரு சந்தேகம் வருது? நாந்தான் அன்னக்கே தெளிவா சொன்னேனே. நா உன்னய லவ் பண்றேன் னு…” ஆரண்யன்.
“நீ அத சும்மா சொல்ற னு ல நெனச்சேன்.” வெண்ணிலா.
“என்னது? சும்மா சொல்றேன் னு நினச்சியா? சும்மா சொல்றவன் தான் ஜாதகம் பாக்குற அளவுக்கு விட்டுட்டு இருப்பானா? உனக்கு ஏன்டி புத்தி இப்பிடி போகுது?” ஆரண்யன்.
“என்னது டி யா?” வெண்ணிலா.
“சரி விடு நம்ம கல்லியாணத்துக்கு அப்புறம் அப்பிடி அழைச்சுக்கிறேன். நீ சொல்லு உனக்கு என்னய கல்லியாணம் பண்ண விருப்பமா?” ஆரண்யன்.
“எனக்குத் தெரியல ஆரா. அப்பா என் கிட்ட கேக்குறப்ப என்னால மறுத்து எதுவும் சொல்ல முடியல. ஆனா அதே சமயம் உண்மையையும் சொல்ல முடியல. ஒரு மாதிரி நரக வேதனையா இருக்கு.” வெண்ணிலா.
“நடந்த எல்லாத்தையும் மறந்துரு நிலா. இனி நடக்கப் போறது எல்லாம் நல்லதாவே நடக்கும் னு நம்புவோம்” ஆரண்யன்.
“உன்னால எப்பிடி இவ்ளோ ஈஸியா எடுத்துக்க முடியுது?” வெண்ணிலா.
“எல்லாமே நம்ம மனசுல தான் இருக்கு நிலா. நீ அத ஒரு தடையா பாக்குற. நா அத ஒரு கயிறா பாக்குறேன். அவ்ளோ தான். கட்டுறவனால தான் கட்டுற பொருளுக்கு மதிப்பு வருது. கட்டுற பொருளுக்கு எப்போதும் மதிப்பு இருக்குறது இல்ல. அது எப்போதுமே ஒரு பொருள் தான். அந்த பொருளுக்கு உயிர் கொடுக்குறதும் கொடுக்காததும் நம்ம கையில தான் இருக்கு. ” ஆரண்யன்.
“சொல்றது எல்லாம் ஈஸியா தான் இருக்கும். நீ நானா இருந்து யோசிச்சு பாரு. ” வெண்ணிலா.
“நிலா, உன் மனசு புரியுது. உன் வலி புரியுது. அதுக்காக அப்பிடியே தேங்கி நின்னுற போறியா? இல்ல அத உடைச்சுட்டு வெளில வரப் போறியா?” ஆரண்யன்.
அன்று தன் வீட்டு மாடியில் ஆதிரன் செய்த செயலும் சொல்லிய சொல்லும் நினைவில் வர, அந்நினைவின் தாக்கத்தில் நெஞ்சின் ஓரம் வலியும் நெஞ்சு முழுக்க வைராக்கியமும் தோன்ற, “வெளில வர்றேன் ஆரா…” என உறுதியுடன் கூறினாள் வெண்ணிலா.
“தட்ஸ் மை கேர்ள்… அன்ட் ஆல் ஸோ மைன் கேர்ள்…” என்றவாறு வெண்ணிலாவின் கரத்தை எடுத்து தன் கரத்தினுள் வைத்துக் கொண்டான் ஆரண்யன்.
“இந்த தொடுற வேலையெல்லாம் வச்சுக்காத ஆரா…” என சட்டென தன் கரத்தை எடுத்துக் கொண்டாள் வெண்ணிலா.
“ஓகே… தொடல. பட் இதுக்கு முன்னாடி நா உன்னய தொட்டது இல்லையா? இல்ல கட்டிப் புடிச்சது இல்லையா?” ஆரண்யன்.
“அப்ப நீ ஒரு ப்ரண்ட்டா மட்டும் தான் இருந்த. இப்ப நீ ஏதோ லவ் அண்ட் கல்லியாணம் னு லாம் சொல்லிட்டு இருக்க. இதெல்லாம் சரியா வருமா ஆரா?” வெண்ணிலா.
“கண்டிப்பா சரியா வரும் நிலா. நீ சந்தோஷமா கல்லியாணத்துக்கு ரெடி ஆகு. மிஸ் ல இருந்து மிர்ஸஸா மாற தயாரா இரு..” என செல்லமாக வெண்ணிலாவின் கன்னங்களை பிடித்துக் கொஞ்சினான் ஆரண்யன்.
“ப்ச் வலிக்குது ஆரா, விடு. நெஜமாலுமே இந்த கல்லியாணம் நடந்தா நீ சந்தோஷமா இருப்பியா ஆரா?” வெண்ணிலா.
“இந்த கேள்விய நா உன்னய பாத்து கேக்கனும் நிலா. நீ என்னய பாத்து கேக்குற.” ஆரண்யன்.
“என் சந்தோஷத்துல என்ன இருக்கு? அதெல்லாம் அன்னக்கே காணாம போயிருச்சு. எனக்காக நீ உன்னோட வாழ்க்கைய பாழாக்காத…” வெண்ணிலா.
“நீ ஏன் அப்பிடி நெனக்கிற? இனித்தான் உன்னோட வாழ்க்கையில சந்தோஷமே ஆரம்பம் ஆகுது. அதுக்கு நா உத்திரவாதம் தாரேன். நா என்னோட வாழ்க்கையெல்லாம் பாழாக்கல. நா லவ் பண்ற பொண்ண கல்லியாணம் பண்ணிக்கப் போறேன். இதுல எனக்கு சந்தோஷம் தான? இதுல எப்பிடி என் வாழ்க்கை பாழாகும் நிலாக்குட்டி? கல்லியாணத்துக்கு அப்புறம் நீ என்னய கொடுமைப் படுத்தாம இருந்தா சரி தான்…” என சிரித்தவாறு நிலாவின் தோள் மீது கைப் போட்டு அணைத்தவாறு கேட்டான் ஆரண்யன்.
“லூசு… நா ஏன்டா உன்னய கொடுமைப் படுத்தப் போறேன்?” வெண்ணிலா.
“இல்ல… படிக்கிறப்பவே புதுசு புதுசா ஏதோ சமைச்சுட்டு வந்து சாப்பிட சொல்லி கொடுமைப் படுத்துவியே. இப்ப என் வீட்டுக்கே உரிமையோட வரப் போற… அதான் சொன்னேன். ” என்றவாறு கண்களாலயே சிரித்தான் ஆரண்யன்.
“போடாங்க்…” எனக் கோவத்துடன் ஆரண்யனை வெண்ணிலா திட்ட வாயெடுக்கையில், அவசர அவசரமாக அவளின் வாயை தன் கரங்களால் மூடியபடி, “நோ பேட் வேர்ட்ஸ் நிலாக்குட்டி…” என சிரித்தான் ஆரண்யன்.
தன் வாயை மூடி இருந்த ஆரண்யனின் கையை நிலா கடிப்பதற்கும் அவர்கள் முன்னே ஆதிரனின் கார் சீறிப் பாய்ந்து வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. தன் கையை கடித்த நிலாவை பார்த்து பொய்யாக முறைத்தபடி, “வலிக்குது டி எரும…” எனக் கையை உதறியவாறு தங்கள் எதிரில் வந்து நிற்கும் ஆதிரனை சாதாரணமாக பார்த்து, “என்ன ஆதி இந்த பக்கம்?” என்றான் ஆரண்யன்.
ஆதிரனைக் கண்ட நிலாவோ பயத்தில் பாறையில் இருந்து கீழே இறங்கி நின்றாள். “நீங்க ரெண்டு பேரும் ஆளில்லாத இந்த இடத்துல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என புன்னகை முகத்துடனே வினவினான் ஆதிரன்.
“சும்மா தான் ஆதி. ரெண்டு பேரும் எங்க ப்யூச்சர பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம். நீ என்ன இந்த பக்கம்? எங்கள பாலோ பண்ணிட்டு வந்தியா?” என சிரிப்புடன் ஆதிரனின் கண்களை கூர்ந்துப் பார்த்தான் ஆரண்யன்.
“நா ஏன் உங்கள பாலோ பண்ணிட்டு வரப் போறேன்? வீட்ல இருக்க ஃபோர் அடிச்சுச்சு. அதான் சும்மா இந்த பக்கம் ட்ரைவ் பண்ணிட்டு வந்தேன். உன்னோட கார பாத்துட்டு தான் இங்க வந்தேன்.” என மிக அமைதியாக இலகுவான புன்னகையுடன் பதிலளித்தான் ஆதிரன்.
ஆதிரனின் அப்புன்னகையைக் கண்ட வெண்ணிலாவின் விழிகளுக்கு அச்சிரிப்புக்கு பின்னால் இருக்கும் அரக்கன் தெளிவாக தெரிந்தான். அன்று மாடியில் நடந்த சம்பவத்தின் நினைவு தன்னாலே வெண்ணிலாவின் நெஞ்சில் மோத பயத்தில் சட்டென ஆரண்யனின் கரத்தை இறுக்கப் பற்றிக் கொண்டாள் வெண்ணிலா.
பயத்தில் வெண்ணிலாவின் கரம் அதிர்வதை உணர்ந்த ஆரண்யன், தன் கரத்தைப் பிடித்து இருந்த வெண்ணிலாவின் கைகளை மெதுவாக தட்டிக் கொடுத்தபடி, “சும்மா தான ட்ரைவ் பண்ணிட்டு வந்த? ரோடு ப்ரீயா தான் இருக்கு. அப்பிடியே ட்ரைவ் பண்ணிட்டு போ…” எனக் கிண்டலாக கூறினான் ஆரண்யன்.
“எங்கள தொல்லை பண்ணாம கிளம்பு னு மறைமுகமா சொல்றியா குட்டா?” என சிரித்தான் ஆதிரன்.
“ச்சே ச்சே மறைமுகமாலாம் சொல்ல ல ஆதி. நேரடியாவே சொல்றேன்.” என ஆரண்யனும் சிரித்தபடியே கூறினான்.
“ஓகே… யூ கேரி ஆன். நா கிளம்புறேன். என்ஜாய் பண்ணு குட்டா.” என சிரித்தவாறே அங்கிருந்து கிளம்பினான் ஆதிரன்.
அவன் அங்கிருந்து கிளம்பியதும் தான் வெண்ணிலா சாதாரணமாக சுவாசித்தாள். அவளின் நிலையைக் கண்ட ஆரண்யன், “ரிலாக்ஸ் நிலா… அவனப் பாத்து இப்பிடி பயப்படுறத நிறுத்து. அதான் உன் கூட நா இருக்கேன் ல…” என்றான்.
“ஆதியப் பாத்தா ஏதோ பசியோட இருக்குற புலியப் பாக்குற நினைப்பு தான் வருது ஆரா. ஆனா எப்பிடி நம்ம ரெண்டு பேரையும் இவ்ளோ பக்கத்துல பாத்துட்டு இவ்ளோ கூலா சிரிச்சுட்டு போறான்?” வெண்ணிலா.
“அவன் போய்ட்டான் னு உனக்கு யாரு சொன்னது? அவன் இன்னும் இங்க தான் இருக்கான்…” ஆரண்யன்.
“இன்னும் இங்க தான் இருக்கான்னா என்ன அர்த்தம்?” வெண்ணிலா.
“ம்ம்… அவன் ரொம்ப நேரமா நம்ம பக்கத்துல தான் நம்மள வேவு பாத்துட்டு இருந்தான் னு அர்த்தம். வா நாம இங்க இருந்து கிளம்பலாம். உன் கிட்ட நிறைய பேசனும்..” என நிலாவின் கைப்பிடித்து காரை நோக்கி நடந்தான் ஆரண்யன்.
“என்ன சொல்ற ஆரா? அப்ப ஆதி நம்மள பாலோ பண்ணிட்டு வந்து இருக்கான் னு சொல்றியா? ஆனா நல்ல விதமா சிரிச்சுட்டு தான போறான்?” வெண்ணிலா.
“புலி பதுங்குறது பாயுறதுக்கு நிலா…” என்றவாறு வெண்ணிலாவை காரில் அமர வைத்து விட்டு ஆதிரன் ஒளிந்து நின்றிருந்த மரத்தை நோக்கி சரியாக கையசைத்து புன்னகையுடன் டாட்டா காட்டி விட்டு காரை எடுத்தான் ஆரண்யன்.
அவன் கையசைத்த மரத்தின் பின்னால் நின்றிருந்த ஆதிரன், “எப்பிடி நம்மள கரக்ட்டா கண்டுபுடிச்சான்…” என்றவாறு மரத்தின் மீது குத்தியவன், “அது சரி அவன் என் தம்பி தான…” என நினைத்தவாறு அவனும் அங்கிருந்து கிளம்பினான்.
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.