அரக்கன் -19

Chellammal Bharathi | 27 Dec 2025 | Share

      “வெயிட் நிலா. ஆதி உன் கிட்ட என்ன சொன்னான்னோ அதெல்லாம் உண்மை இல்லை.” ஆரண்யன். 

     அதைக் கேட்ட ஆதிரன், “மாட்டுனியா நீ? இப்ப வாடா வழிக்கு… என்ன நாடகம் போடுறீங்க? இப்ப உண்மைய சொல்லு டா குட்டா” என உள்ளுக்குள்ள மகிழ்ந்தான். ஆனால் அடுத்து ஆரண்யன் கூறிய சொற்களை கேட்டு ஆதிரன் மட்டுமல்ல வெண்ணிலாவும் அதிர்ச்சி அடைந்தாள்.

     “என்ன சொல்ற ஆரா?” வெண்ணிலா. 

     “ஆமா நிலா. ஆதி வந்து உன் கிட்ட என்ன சொன்னான் னு எனக்குத் தெரியல.  ஆனா நா இப்ப சொல்றேன், நிலா ஐ லவ் யூ…” எனத் தெளிவாக கூறினான் ஆரண்யன். 

     “ஆரா என்ன விளையாடுறியா?” எனக் கோவமானாள் வெண்ணிலா. 

    “விளையாடல நிலா. இத நா உன் கிட்ட நேரா சொல்லனும் னு தான் நெனச்சேன். நேரமும் காலமும் கூடி வரல.” ஆரண்யன். 

     “மண்ணாங்கட்டி கூடி வரல” வெண்ணிலா. 

     “நிலா, நா சொல்றத கொஞ்சம் கோவப்படாம கேளு… காலேஜ் டேஸ் ல இருந்து உன்னய லவ் பண்றேன் நிலா. உனக்கு அப்போ வேற ஒரு க்ரஸ் இருந்துச்சு ல அதுனால தான் நா உன் கிட்ட எதுவும் சொல்ல ல. இப்ப தான் அப்பிடி எதுவும் இல்லை னு ஆகிருச்சு ல. நானே உன் கிட்ட இத பத்தி பேசலாம் னு நெனச்சப்ப தான் ஹாஸ்பிடல்ல அம்மா என் கிட்ட உன்னய பத்தி கேட்டாங்க. நானும் ஓகே னு சொல்லிட்டேன்.” ஆரண்யன். 

     “ஆரா… உனக்கு என்னய பத்தி நல்லா தெரியும். அப்பிடி தெரிஞ்சும் ஏன் டா இப்பிடிலாம் பேசுற?” வெண்ணிலா. 

     “உன்னய பத்தி எல்லாம் தெரிஞ்சதுனால தான் நிலா நா இப்பிடி பேசுறேன்.” ஆரண்யன். 

     “ஆரா… அதான் என்னய பத்தி அன்னக்கி தெளிவா சொல்லிட்டேனே ஆரா. அப்புறம் ஏன் டா நீயும் என்னய கஷ்ட்டப்படுத்துற?” வெண்ணிலா. 

     “என் காதல சொல்றது உன்னய கஷ்ட்டப்படுத்துதா நிலா? ஐ ஆம் ஸாரி நிலா. என் காதல சொல்லி உன்னய கஷ்ட்டப்படுத்த மாட்டேன். எப்பிடி இருந்தாலும் உன் அப்பா சொல்ற பையன தான நீ கல்லியாணம் பண்ணிப்ப. நா உன் அப்பாக் கிட்ட பேசிக்கிறேன்.” என அழைப்பை துண்டித்தான் ஆரண்யன். 

     “என்ன இதெல்லாம்?” எனக் கோவத்தில் கடுமையாக வினவினான் ஆதிரன். 

     “என்ன இதெல்லாம் னா? அவன் பேசுனத நீங்களும் கேட்டீங்க தான? அப்புறம் என்ன என் கிட்ட கேக்குறீங்க?” என வெண்ணிலாவும் கோவத்துடன் வினவினாள். 

    “என்னடி குரல உசத்தி பேசுற?” ஆதிரன். 

     “நீங்க ஏன் கோவப்படுறீங்க? நியாயப்படி பாத்தா இங்க கோவப்பட எனக்குத் தான் ஃபுல் ரைட்ஸ் இருக்கு. அண்ணனுக்கும் தம்பிக்கும் என்னய பாத்தா எப்பிடி இருக்கு? ரெண்டு பேரும் சேந்துட்டு என் வாழ்க்கையில ஃபுட் பால்  விளையாடிட்டு இருக்கீங்க?” எனக் கோவத்தில் பேசிக் கொண்டிருந்த வெண்ணிலாவின் இதழ்களை வன்மையாக களவாடினான் அவளின் அரக்கன். 

     சில நொடிகளுக்கு நீண்ட அவ்விதழ் யுத்தத்தை பெரிய மனது பண்ணி அவளின் இதழ்களை மனமே இல்லாமல் விடுவித்தான் ஆதிரன். அடுத்த நொடி அவனை அடிக்க ஓங்கிய நிலாவின் கரத்தை அசால்ட்டாக பிடித்து வளைத்து தன் அருகில் இழுத்தான் ஆதிரன்.

     “நீ யார வேணுனாலும் கட்டிக்க. ஆனா உன் வாழ்க்கை என் கையில. எனக்கு மட்டும் தான் உன் மேல உரிமை இருக்கு. அத உனக்கு எப்போதும் இது நெனவு படுத்திட்டே இருக்கும்…” என்றவாறு வெண்ணிலாவின் உடையினுள் கழுத்தில் கை விட்டு உள்ளிருந்த மாங்கல்யத்தை வெளியில் எடுத்தான் ஆதிரன். 

     அவன் விரல் பட்டு கூச்சத்தில் நெளிந்தவளை அவளை நகர விடாமல் மற்றொரு கையால் தன்னிடம் மிக நெருக்கமாக இழுத்து நிறுத்தி மீண்டும் அவளது இதழ்களில் நிதானமாக இளைப்பாறினான் ஆதிரன். அவளை அசைய விடாமல் இதழ்களின் வழியே அவளின் உயிரை மொத்தமாக உறிஞ்சியவன் மூச்சு வாங்க அவளை விடுவித்தான் ஆதிரன். இதழ்களின் வழியே தன் உயிரை இழந்து உயிரற்ற ஜடம் போல் முகம் வெளிறி மூச்சு வாங்க நின்றாள் வெண்ணிலா. 

     “இன்னொரு தடவ என் கிட்ட குரல உசத்தி பேசுனா இப்பிடித்தான் நடக்கும். திரும்பவும் சொல்றேன் நீ எவன வேணுனாலும் கட்டிக்க. ஆனா உன் வாழ்க்கை என் கையில. எனக்கு மட்டும் தான் உன் மேல உரிமை இருக்கு… நீ எனக்குத் தான். எனக்கு மட்டும் தான்” என்று கூறி விட்டு கீழிறங்கினான் ஆதிரன். 

    அவன் விட்டுச் சென்ற இடத்தில் அப்படியே மடிந்து அமர்ந்தாள் வெண்ணிலா. கண்ணீர் அது நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. “இதெல்லாம் கனவா இருக்கக் கூடாதா?” என அவள் மனம் இறைஞ்ச ஆனால் அவன் விட்டுச் சென்ற உதட்டின் ஈரம் அது உண்மை எனவே அந்நிகழ்ச்சியை பகிங்கரப்படுத்தியது.

     மனதிற்குள் ஆயிரம் யோசனைகள் சுழன்று கொண்டே இருக்க அனைத்தையும் யோசித்து இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தவள் சிறிது தெளிந்தாள் வெண்ணிலா. கீழே தந்தையின் குரல் உற்சாகமாக கேட்க, அச்சத்தத்தில் கண்களை துடைத்துக் கொண்டு தன் உடையை சரி செய்தபடி கீழே இறங்கினாள் வெண்ணிலா. 

    கீழே வீட்டினுள் சிவகாமியும் சுந்தரமும் ஏற்கனவே பரிச்சயமானவர்கள் போல் மிக இயல்பாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். தன் தந்தையை இதற்கு முன் இவ்வளவு மகிழ்ச்சியாக பார்த்திராத வெண்ணிலா இமைகளை தட்டி இது தன் தந்தை தானா? என்ற சந்தேகத்துடன் பார்த்தாள். 

     “சந்தேகமே வேண்டாம். அது உன் அப்பா தான் நிலா…” என உற்சாகமாய் குரல் கொடுத்தபடி காபி கப் அடங்கிய ட்ரேயுடன் சமையலறையினுள் இருந்து வெளியே வந்தார் அருணாச்சலம். அவர் பின்னே சமையலறையினுள் தந்தைக்குத் தெரியாமல் தான் ஒளித்து வைத்து இருந்த சோனா ரொட்டிகள் அடங்கிய டப்பாவை தேடிக் கண்டுபிடித்து எடுத்து நிதானமாக அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஆதிரன். 

     ஷோபாவில் தந்தையின் அருகில் இலகுவாக அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டிருக்கும் சிவகாமியையும் தனது சமயலறையில் இருந்து காபி போட்டு எடுத்து வரும் அருணாச்சலத்தையும் அவர் பின்னே அவன் வீட்டு ஸ்நாக்ஸை சாப்பிடுவது போல் சமையல் மேடையில் சாய்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஆதிரனையும் வேற்றுக் கிரகவாசிகள் போல் வித்தியாசமாய் மாறி மாறி பார்த்தாள் வெண்ணிலா. 

      “இவங்க தான நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க. இல்ல, நாம எதுவும் இவங்க வீட்டுக்கு வந்து இருக்கோமா? எதுக்கும் செக் பண்ணிருவோம்…” என்ற சிந்தனையுடன் வெளியில் செல்ல திரும்பிய வெண்ணிலாவை, “எங்க நிலா போற?” எனக் கேட்டு நிறுத்தினார் அருணாச்சலம். 

    “இல்ல… இது என் வீடு தானா னு செக் பண்ணிட்டு வந்துர்றேன்…” வெண்ணிலா. 

     “ஹா ஹா ஹா… இது உன் வீடு இல்ல நிலா. நம்ம வீடு. வா வா வந்து டீ எடுத்துக்கோ. நா போட்ட டீ எப்பிடி இருக்கு னு குடிச்சுப் பாத்து சொல்லு…” என ட்ரேயை அவளிடம் நீட்டியபடி மகிழ்ச்சியுடன் கூறினார் அருணாச்சலம்.

     ஆச்சரியம் சிறிதும் விலகாமல் ஒரு டீ கப்பை எடுத்தபடி தந்தையையும் சிவகாமியையும் பார்த்தாள் வெண்ணிலா. 

    “அவங்க எப்பிடி க்ளோஸ் ஆனாங்க னு பாக்குறியா?” என வெண்ணிலாவிடம் கேட்டபடி ட்ரேயுடன் சிவகாமியிடமும் சென்றார் அருணாச்சலம். 

    “ம்ம் ஆமா…” என்றவாறு தந்தையின் அருகில் சென்று அமர்ந்தாள் வெண்ணிலா. 

     “இங்க, என் பக்கத்துல வந்து உக்காரு நிலா…” என தன் பக்கத்து இடத்தை காட்டினார் சிவகாமி. 

    “அத்தைக்கிட்ட போய் உக்காரு மா…” என சுந்தரமும் கூற , “அத்தையா?” என்றக் கேள்வியுடன் மறுக்காமல் சிவகாமியின் அருகில் சென்று அமர்ந்தாள் வெண்ணிலா. 

     “ஆமா… என் அண்ண பொண்ணுக்கு நா அத்தை தான வேணும்?” என்றவாறு வெண்ணிலாவை மென்மையாக அணைத்து உச்சியில் முத்தமிட்டார் சிவகாமி. 

     எதுவும் புரியாமல் டீயை கையில் வைத்துக் கொண்டு முழித்தாள் வெண்ணிலா. “அவளுக்கு எதுவும் புரியல.” என சிரித்தார் அருணாச்சலம். 

     “அது யாரு னு தெரியுமா நிலா?” என சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த வெண்ணிலா தாயின் போட்டோவைக் காட்டி கேட்டார் சிவகாமி. 

    “அது என்னோட அம்மா ஆண்டி…” வெண்ணிலா. 

     “இல்ல… அது என்னோட ப்ரண்ட்.” சிவகாமி.

     “ப்ரண்டா?” வெண்ணிலா. 

     “ஆமா… நானும் சுதாவும் சின்ன வயசுல இருந்து ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட். எல்லா ப்ரண்ட்ஸையும் போல நாங்களும் எப்போதும் ஒன்னா தான் இருப்போம். பக்கத்து பக்கத்து வீடு வேற. ரெண்டு பேரும் எந்த வீட்ல வேணுனாலும் சாப்பிடுவோம் தூங்குவோம். ஒன்னா படிச்சோம். படிக்கிறப்ப நானும் அருணாவும் லவ் பண்ணி கல்லியாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கு எங்க வீட்ல ஒத்துக்கல. ஸோ நானும் அருணாவும் வேற ஊருக்கு போய்ட்டோம். எங்க என்னய மாதிரி சுதாவும் யாரையாவது லவ் பண்ணிருவாளோ னு அவளுக்கும் அவசர அவசரமா கல்லியாணம் பண்ணி வச்சாங்க. அத்தோட நானும் சுதாவும் பிரிஞ்சுட்டோம். ஆனா எங்க ப்ரண்ட்ஷிப் பிரியல. அடிக்கடி நாங்க பாத்து பேசிக்குவோம். எங்க ரெண்டு பேரையும் போலவே என் வீட்டுக்காரரும் உன் அப்பாவும் ரொம்ப நெருக்கமானாங்க. திடீருனு ஒரு நாள் நீ அவளோட வயித்துக்குள்ள இருக்குறப்ப என்ன நினச்சாளோ அவளோட நகையெல்லாம் கொண்டு வந்து என் கிட்ட குடுத்து பத்ரமா வைக்க சொன்னா. அதுக்கு அப்புறம் பிஸினஸ் விசயமா நாங்க வெளிநாடு போற மாதிரி ஆகிருச்சு. அந்த நேரத்துல தான் உன் அம்மா இறந்துட்டாங்க. அத கேள்விப்பட்டதும் ஊருக்கு திரும்பி வந்தோம். ஆனா உன்னயவும் உன் அப்பாவையும் கண்டுபிடிக்க முடியல. இப்ப வரைக்கும் தேடிட்டு தான் இருந்தோம். ஆரன் மூலமா உன்னய பாத்து உன் மூலமா என் சுந்தர் அண்ணன பாத்துட்டேன். நீ அப்பிடியே சுதாவ உறிச்சு வச்சு பொறந்து இருக்க…” என சந்தோஷக் கண்ணீருடன் வெண்ணிலாவை இறுக்க அணைத்து முத்தமிட்டார் சிவகாமி. 

    தன் தாய் நிலாவை மாறி மாறி முத்தமிடுவதை கண்டு கோபம் கொண்ட ஆதிரன், கோபம் தாங்கமல் சோனா ரொட்டி முழுவதையும் சாப்பிட்டு முடித்து உள்ளிருந்த ஹார்லிக்ஸ் பாட்டிலயும் அப்படியே எடுத்து வந்து கோவத்துடன் அவர்களைப் பார்த்தவாறே சாப்பிடத் தொடங்கினான். 

      அருணாச்சலம் சுந்தரத்தின் தோள் மீது கை போட்டு கதை பேசிக் கொண்டிருக்க சிவகாமி வெண்ணிலாவை கொஞ்சி சீராட்டிக் கொண்டிருந்தார். அதை பார்க்க பார்க்க ஆதிரனுக்கு எரிச்சல் மேலுற, “ம்மா… நா ஒருத்தன் இங்க இருக்கேன்…” என்பதை உணர்த்துவது போல ஹார்லிக்ஸ் பாட்டில் மற்றும் ஸ்பூன் சகிதம் சிவகாமியை உரசிக் கொண்டு வந்து அமர்ந்தான் ஆதிரன். 

     “இது தான் ஆதி… உனக்கு ஏற்கனவே தெரியும் ல நிலா. என்னோட மூத்த பையன். உன்னோட முறைப் பையன்.” என சிரிப்புடன் ஆதியைப் பற்றி நிலாவிடம் கூறினார் சிவகாமி. 

     “நீ சொல்லவே தேவை இல்லை. அவளுக்கு ஏற்கனவே தெரியும்…” அருணாச்சலம். 

     “சும்மா சொன்னேன் ங்க…” சிவகாமி. 

     “சரி நீங்க பேசிட்டு இருங்க ஆண்டி. நா சாப்பாடு ரெடி பண்றேன்.” என ஆதியின் அருகில் இருக்க பிடிக்காமல் எழுந்தாள் வெண்ணிலா. 

     “அதெல்லாம் ஒன்னும் வேணாம் நிலா. உக்காரு நாம பேசிட்டு இருப்போம். ஆக்சூவலா நாங்க வந்த விசயமே வேற…” என்றவாறு தான் கொண்டு வந்த பூ பழங்கள் அடங்கிய தட்டை எடுத்துக் கொண்டு எழுந்து நின்றார் சிவகாமி. 

     “என்ன? என்ன ஆண்டி?” என பயத்தில் நிலாவிற்கு நாக்கு தந்தியடித்தது. அவளுக்குத் தான் எதற்கு வந்திருக்கிறார்கள் என தெரியுமே. முன்பென்றால் தந்தை ஏதாவது கூறி மறுத்து விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. இப்பொழுது உறவிலும் உணர்விலும் நெருங்கிவிட்டார். இப்பொழுது தந்தை என்ன கூறப் போகிறாரோ என்ற பயம் உள்ளூர வெகுவாக எழுந்தது. 

     “ஏங்க… உங்கள வெத்தல பாக்கு வச்சு தனியா அழைக்கனுமா?” என அருணாச்சலத்தை அழைத்தார் சிவகாமி. 

     “இதோ வந்துட்டேன்…” என்றவாறு சிவகாமியின் அருகில் வந்து நின்றார் அருணாச்சலம். 

      “என்ன சிவகாமி இதெல்லாம்?” என மகிழ்ச்சியுடனே வினவினார் சுந்தரம். 

      “நீ சும்மா இரு ண்ணே. நா என் மருமகளுக்கு செய்யுறேன்…” என சுந்தரத்திடம் கூறி விட்டு, “நிலா… வாடா. இத வாங்கிக்கோ…” என்றார் சிவகாமி. 

     தயங்கியபடி வெண்ணிலா தன் தந்தையைப் பார்க்க, அவர் வாங்கிக் கொள்ளும்மாறு சைகை செய்ய அருணாச்சலம் மற்றும் சிவகாமியின் காலில் விழுந்து ஆசி வாங்கி அவர் அளித்த தட்டை வாங்கிக் கொண்டாள் வெண்ணிலா. 

      “ரொம்ப நல்லா இரு மா…” என இருவரும் மனதார வாழ்த்தி ஆசிர்வாதம் செய்தனர். 

    அனைத்தையும் ஒரு பார்வையாளராக பார்த்தபடி ஹார்லிக்ஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஆதிரன். 

     “நா இங்க வந்தப்போ கொஞ்சம் தயக்கமா தான் வந்தேன். ஆனா இப்ப உரிமையா கேக்குறேன். என் மருமகள என்  வீட்டுக்கு மருமகளா அனுப்பிரு ண்ணா…” சிவகாமி. 

       “நீ என்ன கேக்குற னு புரியல சிவகாமி…” என சிறு அதிர்ச்சியுடன் கேட்டார் சுந்தரம். 

    “நேராவே கேளு சிவா…” அருணாச்சலம். 

    “உன் பொண்ணு வெண்ணிலாவ என் ரெண்டாவது மகன் ஆரண்யனுக்கு பொண்ணு கேட்டு வந்து இருக்கேன் ண்ணா…” சிவகாமி. 

    “ரெண்டாவது பையனுக்கா? அப்ப மூத்த மாப்பிள்ளைக்கு பொண்ணு ரெடியா இருக்கா? அவங்க ரெண்டு பேரும் ப்ரண்ட்ஸ் னு ல நிலா சொன்னா…” என வெண்ணிலாவைப் பார்த்தார் சுந்தரம். 

     அவளோ கலங்கிய முகத்துடன் சுந்தரத்தையே பார்த்திருந்தாள். அவளது கலங்கிய முகத்தை கண்ட சுந்தரம், “நீங்க எவ்ளோ பெரிய இடம் னு எனக்கு நல்லா தெரியும். உங்க தகுதிக்கு போய் என் பொண்ண கேக்குறியே சிவகாமி?” எனத் தயங்கினார்.

     “மூத்தவன் இப்போதைக்கு கல்லியாணம் வேண்டாம் னு சொல்லிட்டான் ண்ணா…” சிவகாமி. 

    அதைக் கேட்ட ஆதிரன், “நா கல்லியாணம் வேண்டாம் னு ஒரே ஒரு தடவ தான சொன்னேன். அதையே சொல்லி காட்டிக்கும் மூத்தவன விட்டுட்டு இளையவனுக்கு பொண்ணு பாக்குறியே சிவகாமி. இது சரியா?” என மனதினுள் வாதிட்டான். 

     “நீ ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி டா மெண்டல்…” என அவனது மனசாட்சி அவனுக்கு பதிலடி தர சத்தமில்லாமல் அதை அடக்கினான் ஆதிரன். 

     “அப்பிடி இல்ல சுந்தரம். அவனுக்கும் பொண்ணு பாத்துட்டு தான் இருக்கோம். ரெண்டு வருஷம் கழிச்சு வச்சுக்கலாம் னு சொல்றான். அன்னக்கி ஹாஸ்பிடல்ல நம்ம நிலாவ பாத்துட்டு சிவாக்கு ரொம்ப புடிச்சு போச்சு. அதுலயும் ஆரண்யனையும் வெண்ணிலாவையும் ஜோடியா பாக்கவும் சிவாக்கு ரெண்டு பேரையும் நிஜ ஜோடியா சேத்து பாக்க ஆசை வந்துருச்சு. ஆரன் கிட்ட கேட்டு அவன் ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் இன்னக்கி வீட்டுக்கு வந்து வெண்ணிலா அப்பாக்கிட்ட பொண்ணு கேக்கலாம் னு வந்தோம். வந்து பாத்தா என் தங்கச்சி பொண்ணாகிட்டா நிலா. அதான் உரிமையோட கேக்குறோம். இப்ப நிலாவ என் வீட்டுக்கு மருமகளா அனுப்ப முடியுமா? முடியாதா?” அருணாச்சலம். 

      “நீ கேக்குறது லாம் புரியுது. ஆனா நீங்க.. உங்க தகுதி வேற. என் தகுதி வேற. ரெண்டு குடும்பத்துக்கும் ஏணி வச்சா கூட எட்டாது.” என தயக்கத்துடன் கூறினார் சுந்தரம். 

    “நீ என்ன பேசிட்டு இருக்க ண்ணா? இந்த காசு பணம் எல்லாம் இன்னக்கி வரும் நாளைக்கி போகும். ஆனா உறவு தான் ண்ணா காலத்துக்கும் நிலைச்சு நிக்கும். உன் தங்கச்சி ங்கிற உரிமையில கேக்குறேன். உனக்கு குடுக்க விருப்பம் இல்ல னா விருப்பம் இல்லை னு சொல்லு. அத விட்டுட்டு அந்தஸ்து தகுதி னு பேசிட்டு இருக்காத…” சிவகாமி. 

     “இங்க பாரு சுந்தரம். எங்களுக்கு நிலாவ புடிச்சு போய் பொண்ணு கேக்குறோம். அதே போல உனக்கு என் பையன புடிச்சு இருந்தா ஓகே. இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல. உன் முடிவு என்னவா இருந்தாலும் நிலா எங்க வீட்டு பொண்ணு தான்…” அருணாச்சலம். 

     “நீங்க விருப்பப்பட்டு என் பொண்ண கேக்குறது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். என் பொண்ணுக்கு புடிச்சு இருந்தா எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. யார் வீட்டுக்கோ மருமகளா போறதுக்கு என் தங்கச்சி வீட்டுக்கே என் பொண்ணு மருமகளா போறது எனக்கு சந்தோஷம் தான்…” சுந்தரம். 

     “அவ்ளோ தான். நீ என்ன சொல்ற நிலா? ஆரண்யனை கல்லியாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?” என வெண்ணிலாவிடம் கேட்டார் சிவகாமி. 

     ஆதிரனை தவிர மற்ற மூவரின் பார்வையும் வெண்ணிலாவை நோக்கியே இருந்தது. “அவ என்ன சொன்னா எனக்கு என்ன?” என்ற ரீதியில் ஹார்லிக்ஸ் பாட்டிலை முடிக்கும் முடிவில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தான் ஆதிரன். 

     “என்ன? எல்லாரும் என்னய பாக்குறீங்க?” என சிறு பயத்துடன் கேட்டாள் வெண்ணிலா. 

     “என்ன ப்ரோ இவ இப்பிடி நடிக்கிறா?” என ஆதிரனின் மனசாட்சி அவனிடம் கேட்க,  “அவ நடிப்பா ப்ரோ… நீ அவள கண்டுக்காத. நாம நம்ம வேலைய பாப்போம்…” என்றவாறு ஹார்லிக்ஸ் பாட்டிலை துருவி துருவி சாப்பிட்டுக் கொண்டிருந்தான் ஆதிரன். 

     “இப்ப முடிவு உன் கையில தான் நிலா. நீதான் சொல்லனும். உனக்கு ஆரண்யன புடிச்சு இருக்கா?” அருணாச்சலம். 

     “பயப்படாம உன் விருப்பத்த சொல்லு நிலா…” சிவகாமி. 

    “என் அப்பாவோட விருப்பம் தான் என் விருப்பமும். அவரு யார சொல்றாரோ அவரத் தான் கல்லியாணம் பண்ணிப்பேன்…” என சாவி குடுத்த பொம்மை போல வெண்ணிலா ஒப்புவிக்க அந்நொடி தன் வளர்ப்பை எண்ணி மிகுந்த பெருமிதம் கொண்டார் சுந்தரம். 

    “பாத்தியா ப்ரோ… இவ இந்த டையலாக் தான் சொல்லுவா னு நமக்குத் தான் ஏற்கனவே தெரியுமே… அப்ப நிலா மொத புருஷன் உயிரோட இருக்குறப்பவே ரெண்டாவது கல்லியாணத்துக்கு ரெடி ஆகிட்டா… நாமளும் அட்சதை போட ரெடி ஆகிருவோம்…” என உள்ளுக்குள் அரக்கச்சிரிப்பு சிரித்துக் கொண்டான் ஆதிரன். 

     “அப்புறம் என்ன? உனக்கு சம்மதம் தான சுந்தரம்?” அருணாச்சலம். 

     “பரிபூரண சம்மதம்…” என நிறைவாக புன்னகைத்தார் சுந்தரம். 

                                   (நிலவு மலரும்…)

                            -செல்லம்மாள்பாரதி

    No comments yet.