நேரம் நள்ளிரவை நெருங்கி கொண்டிருந்தது. பனி விழும் இரவில் தனியொருவனாக தோட்டத்து ஊஞ்சலில் தனித்திருந்தான் ஆதிரன். கொட்டும் பனியில் இலக்கற்று வெறித்து பார்த்திருந்தாலும் அவனது பார்வைக்கு நிலாவின் முகமே தெரிந்தது. தான் அவளது கழுத்தில் மாங்கல்யத்தை பூட்டும் பொழுது விழிகள் முழுதும் உணர்வுகள் நிறைந்த முகத்துடன் தன்னை ஏறிட்ட வெண்ணிலாவின் முகமும், தன் சட்டையைப் பிடித்து தன்னிடம் நியாயம் கேட்கும் பொழுது கண்ணீர் நிறைந்த முகமும், அலுவலகத்தில் புரியாத பாவனையுடன் தன்னை பார்த்த முகமும், மருத்துவமனையில் தன்னை ஏறிட்டும் பார்க்காத திமிர் கூடிய முகமும் அந்த இரவின் இருளில் அவன் முன்னே மாறி மாறி தோன்றிக் கொண்டிருந்தது.
இவ்வாறு இரவில் தனியாக அமர்ந்து இலக்கற்று வெறித்திருக்கும் பழக்கத்தை கடந்த இரண்டு நாட்களாக கடைபிடிக்க ஆரம்பித்திருந்தான் ஆதிரன்.
வெண்ணிலாவின் தந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பி இரண்டு நாட்கள் கடந்து இருந்தது. கடைசியாக இரவு உணவை அளித்துவிட்டு தாயுடன் சென்று வெண்ணிலாவை பார்த்தது. அதன் பிறகு அவளை சென்று பார்க்கவும் இல்லை அவளைப் பற்றி நினைக்காத நொடியும் இல்லை. ஆனால் அவளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்திருந்தான் ஆதிரன்.
அவன் நினைத்திருந்தால் வெண்ணிலாவைப் பார்ப்பதை யாராலும் தடுத்திருத்திருக்க முடியாது. ஆனால் அவனே அவளை சென்று பார்க்க நினைக்கவில்லை. ஏனென்று கேட்டால் அவனுக்கே அதற்கு பதில் தெரியாது.
இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் மருத்துவமனையில் வைத்து சிவகாமி கேட்ட கேள்விக்கு ஆரண்யன் சம்மதம் தெரிவித்ததும் சொல்லொன்னா உணர்வுக்குள்ளானான் ஆதிரன். அதிலும் அவன் சம்மதம் சொல்லுகையில் ஆரண்யன் ஆதிரனைப் பார்த்த பார்வை அவன் உள்ளத்தை ஏதோ செய்தது. அலுவலகத்தில் வைத்து வெண்ணிலாவைப் பார்த்து அண்ணியா என உற்சாகத்துடன் வினவியவன் எவ்வாறு வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தான் என்பது ஆதிரனுக்கு புரியாத புதிராக இன்று வரை இருந்து வருகிறது.
அன்றைய இரவிற்கு பிறகு ஆரண்யன் தன்னிடம் இருந்து விலகியே இருப்பது போல் தெரிந்தது. ஏனென்று கேட்க தோன்றும் போதெல்லாம் தாயின் முந்தானை பிடித்து சிவகாமியின் பின்னே ஒளிந்து கொள்ள ஆரம்பித்திருந்தான் ஆரண்யன். அதைக் காணும் பொழுதெல்லாம் ஆதிரனுக்கு தன்னை சுற்றி ஏதோ தவறாக நடப்பது உறுதியாக தெரிந்தது.
பகலெல்லாம் தான் அலுவலகத்தில் இருந்தால் அவன் வெண்ணிலாவின் வீட்டிலும் தான் வீட்டில் இருந்தால் அவன் அலுவலகத்திலுமாக தன் தம்பி தன்னுடன் ஒளிந்து விளையாடுவதை இரண்டு நாட்களாக கவனித்துக் கொண்டு தான் இருந்தான் ஆதிரன். இரவில் அவனிடம் பேசலாம் என்று அவன் அறைக்கு சென்றால், அறையை பூட்டிக் கொண்டு விடுகிறான். அவன் தன்னை முற்றிலும் தவிர்ப்பதை தெளிவாக அறிந்திருந்தான் ஆதிரன். சிறிது சிறிதாக தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தான் ஆதிரன்.
அன்றும் எப்பொழுதும் போல இரவில் தோட்டத்தின் ஊஞ்சலில் தனித்திருந்தான் ஆதிரன். அவன் சிந்தனை முழுதும் வெண்ணிலா நிறைந்திருப்பதை அவனால் நூல் அளவு கூட தடுக்க முடியாமல் அவளைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான் ஆதிரன். அப்பொழுது தன் மீது நிழலாடுவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான் ஆதிரன். பின்னால் யாரும் இல்லாமல் போகவே மேலே நிமிர்ந்து பார்த்தான். மேலே தன் அறை பால்கனியில் நின்றபடி ஆதிரனை பார்த்திருந்தான் ஆரண்யன்.
ஆரண்யனைக் கண்டதும் அவனிடம் பேசிவிட எண்ணி ஊஞ்சலில் இருந்து எழுந்து விரைவாக வீட்டிற்குள் நுழைந்தான் ஆதிரன். தன் அண்ணனின் வரவை உணர்ந்து அறை வாசலிலேயே ஆதிரனுக்காக காத்திருந்தான் ஆரண்யன்.
வேகமாக மாடியேறி வந்து தன் தம்பியைக் கண்டவன் சிறிதும் தாமதிக்காமல் ஆரண்யனின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான் ஆதிரன்.
“ரெண்டு நாளா ஏன்டா என்னய அவாய்ட் பண்ற? அப்பிடி என்ன டா நா உனக்கு பண்ணிட்டேன்? ஏன் டா என் கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல நீ? சொல்லு டா… அப்பிடி என்ன நா தப்பு பண்ணிட்டேன்?” என கத்தியபடி ஆரண்யனை அடித்து அவனை மெத்தையின் மீது தள்ளி அவன் மீதே ஏறி அமர்ந்து ஆரண்யனின் தோள்களைப் பற்றி அழுத்திக் கேட்டான் ஆதிரன்.
“நா உன் கிட்ட பேசாததால மட்டும் தான் இந்த கோவமா?” என அமைதியாக கேட்டான் ஆரண்யன்.
“ஏன் வேற எதுக்கு நா உன் மேல கோவப்படனும்?” ஆதிரன்.
“நிலாவ கல்லியாணம் பண்ண சம்மதம் சொன்னதுக்கு உனக்கு கோவம் வரலயா?” ஆரண்யன்.
“அதப்பத்தி உன் கிட்ட பேச நினைக்கிறப்ப தான் என்னய அவாய்ட் பண்ணிட்டு இருந்தியே. சரி சொல்லு. அன்னக்கி ஆபீஸ் ல அவ்ளோ சந்தோஷமா வெண்ணிலாவ காட்டி அண்ணியா னு என் கிட்ட கேட்டவன் எதுக்கு டா அவள கல்லியாணம் பண்ணிக்க ஓகே சொன்ன?” என ஆரண்யனின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான் ஆதிரன்.
“ஏன் நீ நிலாவ லவ் பண்றியா?” ஆரண்யன்.
ஆரண்யனின் கேள்விக்கு மௌனம் சாதித்தான் ஆதிரன். அன்று அலுவலகத்தில் என்ன உணர்வில் எப்படி ஆரண்யனின் கேள்விக்கு ஆமாம் என தலையாட்டினான் என இன்று வரை அவனுக்கே புரியாத பொழுது , ஆரண்யன் கேட்கும் கேள்விக்கு அவன் எவ்வாறு பதில் கூறுவான்?
ஆதிரனின் மௌனத்தை கண்டு , “நிலா மேல உனக்கு காதல் இல்லன்னா நா அவள கல்லியாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன கஷ்ட்டம்?” என்றான் ஆரண்யன்.
“ஏன்? அவள நீ லவ் பண்றியா?” ஆதிரன்.
“ஆமா… காலேஜ் டேஸ் ல இருந்து அவள சீக்ரெட்டா லவ் பண்ணிட்டு இருக்கேன். ஆனா இடையில அவளுக்கு வேற ஒருத்தன் மேல இன்ட்ரஸ்ட் இருந்தது எனக்கு தெரிஞ்சுச்சு. ஸோ நா என் லவ்வ வெளில சொல்லாம சீக்ரெட்டாவே வச்சு இருந்தேன். ஆனா இப்ப அம்மா கேட்டதும் என்னோட லவ்வ என்னால மறைக்க முடியல.” ஆரண்யன்.
ஆரண்யனின் வார்த்தைகளை கேட்டு உள்ளுக்குள்ளே நொறுங்கினாலும், “அப்பிடி லவ் பண்றவன் ஏன்டா என் கிட்ட அவள காட்டி அண்ணியா னு கேக்கனும்?” என அவன் மீதிருந்து எழுந்தான் ஆதிரன்.
“அதான் சொன்னேனே… காலேஜ் டேஸ் ல அவளுக்கு வேற ஒருத்தன் மேல இன்ட்ரஸ்ட் இருந்துச்சு னு… கரெக்ட்டா அப்ப நிலா உன்னய பாக்க வந்ததும் அன்னக்கி ரெண்டு பேரும் ஒரே மாதிரி அவளுக்கு புடிச்ச ப்ளாக் கலர் ட்ரெஸ் போட்டு இருந்ததும் நீ அவளுக்கு ப்ளையிங் கிஸ் குடுத்தத பாத்ததும் அது நீயா இருப்பியோ னு நெனச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அவளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல னு. இதுல நீ அப்பாக் கிட்ட வேற தெளிவா சொல்லிட்டியாம்லோ நிலாவ பத்தி நீ என்ன நினைச்சு இருக்க னு. இப்ப கூட அவள லவ் பண்றேன் னு சொல்லவே இல்ல. அப்புறம் நா அவள கல்லியாணம் பண்ணிக்கிறதுல உனக்கு என்ன கஷ்ட்டம்?” என நிதானமாக ஆதிரனை ஏறிட்டான் ஆரண்யன்.
“அப்ப காலேஜ் டைம் ல நிலா யார லவ் பண்ணுனா?” ஆதிரன்.
“ஹலோ ப்ரோ… அவ லவ் பண்ணுனா னு சொல்லவே இல்லயே. அவளுக்கு வேற ஒருத்தன் மேல இன்ட்ரஸ்ட் இருந்தது னு தான் சொன்னேன். நோட் பண்ணிக்கோ இன்ட்ரஸ்ட் இருந்துச்சு… நாட் எ லவ்… ஓகே?” ஆரண்யன்.
“சரி அவளுக்கு யார் மேல இன்ட்ரஸ்ட் இருந்துச்சு?” என அந்த விசயத்தை தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டினான் ஆதிரன்.
“அது எனக்குத் தெரியாது. அவளுக்கு யார் மேல இன்ட்ரஸ்ட் இருந்தா எனக்கு என்ன? இப்போ நிலாக்கு அவன் மேல இன்ட்ரஸ்ட் இல்ல னு தெளிவா சொல்லிட்டா. ஸோ என் ரூட் க்ளீயர்…” ஆரண்யன்.
“டேய் என்ன டா பஸ் ரூட் மாதிரி சொல்ற? ஒரு வேளை அவளுக்கு இன்னும் அவன் மேல இன்ட்ரஸ்ட் இருந்துச்சு னா? மொதல்ல அது யாரு னு அவக்கிட்ட கேளு…” ஆதிரன்.
“அதுக்கு கண்டிப்பா வாய்ப்பே இல்லை…” ஆரண்யன்.
“அதெப்பிடி நீ அவ்ளோ உறுதியா சொல்ற?” ஆதிரன்.
“ஏன்னா, அந்த பையன் வேற ஒரு பொண்ண கல்லியாணம் பண்ணிக்கிட்டான் னு ரெண்டு நாள் முன்னாடி தான் நிலா என் கிட்ட சொன்னா. நீயும் அவள லவ் பண்ணல. அப்ப என் ரூட் க்ளீயர் தான?” ஆரண்யன்.
“நெஜமா நீ நிலாவ லவ் பண்றியா?” ஆதிரன்.
“சீரியஸ்லி ஆதி…” ஆரண்யன்.
“அப்ப நீ அவள தான் கல்லியாணம் பண்ணிக்க போற?” ஆதிரன்.
“கண்டிப்பா. என் லவ்வ கடவுளே அக்சப்ட் பண்ணிட்டாரு போல. அதான் நம்ம அம்மா வாயாலயே நிலாவ கல்லியாணம் பண்ண சம்மதமா னு என் கிட்ட கேட்டாங்க. அந்த கேள்விய அம்மா உன் கிட்ட கூட கேட்டு இருக்கலாம். ஆனா கடவுள் பாரு என் கிட்ட கேக்க வச்சு இருக்காரு. ஸோ இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது?” ஆரண்யன்.
“ஒன்னும் தெரியல. என்ன னு நீயே சொல்லு..” என பல்லைக் கடித்தபடி கேட்டான் ஆதிரன்.
“என் லவ்வ யாராலும் தடுக்க முடியாது னு தெரியுது. நிலா எனக்குத் தான் னு தெரியுது… ஹவ் ஸ்வீட்?” என ஆரண்யனைப் பார்த்து கண்ணடித்தான் ஆரண்யன்.
அதைக் கேட்ட ஆதிரன் தன் தம்பியிடம் எதுவும் கூறாமல் மௌனமாக அங்கிருந்து கிளம்பினான். அவன் மௌனமாக இருந்தாலும் அவனுள் இருக்கும் அரக்கன், “நிலா எனக்குத் தான். எனக்கு மட்டும் தான்…” என ஓங்கி கத்திக் கொண்டிருந்தான். அதற்கு மேலும் அங்கிருந்தால் அரக்கன் வெளியில் வந்து விடுவான் என உணர்ந்து அமைதியாக அங்கிருந்து கிளம்பினான் ஆதிரன்.
“என்ன ஆதி எதுவும் சொல்லாம போற?” ஆரண்யன்.
“ம்ம்… ஒன்னுல்ல குட் நைட்… காலையில முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. அதான் சீக்கிரம் தூங்கனும்.” என வாய்க்கு வந்ததை உலறி விட்டு அங்கிருந்து கிளம்பினான் ஆதிரன்.
“ஓகே ஓகே… ஆங் அப்புறம் ஆதி ஒரு நிமிஷம்…” என ஆதிரனை நிறுத்தினான் ஆரண்யன்.
“என்ன?” ஆதிரன்.
“சொல்றேன் னு தப்பா நெனச்சுக்காத… இனி நிலாக்கு ப்ளையிங் கிஸ் குடுக்குற வேலையெல்லாம் வச்சுக்காத. சரியா? ஏன்னா இனி அவ உன் தம்பியோட பொண்டாட்டி. இனி அவக்கிட்ட கொஞ்சம் டீசன்டா நடந்துக்க. ஓகே? குட் நைட் ஆதி. ஸ்வீட் ட்ரீம்ஸ்…” என ஆதிரனின் மனதில் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி விட்டான் ஆரண்யன்.
தன் அறைக்கு வந்த ஆதிரன், கோவத்தில் பட்டென்று அறைந்து கதவை சாத்திவிட்டு மெத்தையில் விழுந்தான்.
“இனி நிலா உன்னோட பொண்டாட்டியா? டேய் அவ என்னோட பொண்டாட்டி டா. என்னோட கைப்பாவை அவ. இனிப் பாரு அவள நா எப்பிடி ஆட்டி வைக்கிறேன் னு. என் கிட்ட இருந்து அவள யாரலயும் காப்பாத்த முடியாது. அது நீயா இருந்தாலும் சரி…” என மனதினுள் ஆரண்யனிடம் பேசியவன், வெண்ணிலாவின் அரக்கனாக அவளை சித்திரவதை செய்ய திட்டங்களை தீட்டினான் ஆதிரன்.
மறு நாள் விடியல் ஆதிரனின் நாளாக விடிந்தது. ப்ளையிங் கிஸ் குடுக்க கூடாது என ஆரண்யன் எச்சரித்ததின் விளைவாக மறு நாள் காலையில் வெண்ணிலாவின் இதழ்களை வன்மையாக களவாடினான் அவளின் அரக்கன்.
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.