அரக்கன் -14

Chellammal Bharathi | 23 Dec 2025 | Share

       “எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஆதி?” என தான் கேட்டதற்கு பதில் கூறாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த ஆதிரனைப் பார்த்து கடுமையாக வினவினார் அருணாச்சலம். 

       “நிலா மேல எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்ல ப்பா…” என பட்டென பதிலளித்தான் ஆதிரன்.

       “ஓஓ… அப்ப நாங்க உள்ள வர்றப்ப நிலாக்கு ஏதோ காத்துல குடுத்துட்டு இருந்தியே அது என்ன? ” அருணாச்சலம்.

      “அப்பா… அது ஏதோ சும்மா. ப்ளையிங் கிஸ் குடுத்ததுக்காக அவள நா லவ் பண்றேன்னோ அவள தான் நா கல்லியாணம் பண்ணிக்கனும்னோ எந்த அவசியமும் இல்ல.” ஆதிரன். 

      “ஆதி…  நீ உன் அப்பாக்கிட்ட பேசிட்டு இருக்க ங்கிறத மறந்துறாத…” அருணாச்சலம்.

       “நீங்களும் உங்க பையன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க ங்கிறத மறந்துறாதீங்க…” ஆதிரன். 

      “ஓகே… கடைசியா நீ என்ன தான் சொல்ல வர்ற? அந்த பொண்ணுக்கும் உனக்கும் இடையில எந்த ஒரு விசயமும் இல்ல? அதானே சொல்ல வர்ற? ” அருணாச்சலம். 

      “டாட்… நா எப்போ அப்பிடி சொன்னேன்? அந்த பொண்ணு மேல எனக்கு ஒரு க்ரஸ் இருக்கு. அதுனால தான் நிலாக்கு நா ப்ளையிங் கிஸ் குடுத்தேன். அதுல எந்த தப்பும் இருக்குற மாதிரி எனக்குத் தெரியல. இதுல ஒன்னும் அந்த பொண்ணு  பாதிக்கபடலயே… நீங்க சொல்ற மாதிரி பாத்தா நா இதுவரைக்கும் நூத்துக்கும் மேலான பொண்ணுங்களுக்கு ப்ளையிங் கிஸ் குடுத்து இருக்கேன். அவங்க எல்லாரையும் என்னால கல்லியாணம் பண்ணிக்க முடியுமா டாட்? சும்மா காமெடி பண்ணிட்டு இருக்காம போய் வேற வேலை இருந்தா பாருங்க.” ஆதிரன். 

       “நீ ரொம்ப தப்பா போற ஆதி. இதுவரைக்கும் நா உன்னய இப்பிடி பாத்ததே இல்ல. நீ ரொம்ப மாறிட்ட ஆதி… அட் லாஸ்ட் எல்லா பொண்ணுங்களையும் ஒரே மாதிரி நெனக்காத…” எனக் கோவத்துடன் அங்கிருந்து வெளியே சென்றார் அருணாச்சலம். 

      “ஸாரி டாட். உங்கள நா ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். எனக்கே நிலா மேல இருக்குற உணர்வு என்ன னு புரியல. இதுல நீங்க வேற…” என அவஸ்த்தையுடன் நெற்றியை தேய்த்துக் கொண்டான் ஆதிரன். 

     அந்நேரம் ஆதிரனின் அலைபேசி அழைப்பு இசையை ஒலிக்க அதை எடுத்துப் பார்த்தவன், அழைப்பை ஏற்று “சொல்லு குட்டா…” என்றான் ஆதிரன். 

      அந்த பக்கம் ஆரண்யன் கூறிய செய்தியில் பதற்றமாகி, “இதோ வந்துட்டேன்…” என பதட்டத்துடன் கூறி விட்டு விரைவாக அங்கிருந்து புறப்பட்டான் ஆதிரன். 

     அவன் அவ்வளவு விரைவாக செல்வதை தன் அறையில் இருந்தபடி கவனித்த அருணாச்சலம், மகனின் பதட்டத்தை உணர்ந்து தானும் அவன் பின்னே சென்றார். அதி விரைவாக காரை செலுத்தி வெண்ணிலாவின் தந்தையை அட்மிட் செய்திருக்கும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் ஆதிரன். அவன் பின்னே வந்த அருணாச்சலம், ஆதிரன் மருத்தவமனைக்கு வந்திருப்பதைக் கண்டு யோசனையுடன் அவன் பின்னே செல்லலானார். 

       ஆதிரன் வந்த நேரம், வெண்ணிலா கண்ணீருடன் நின்றிருக்க ஆரண்யன் மிகுந்த பதட்டத்துடன் நின்றிருந்தான். தன் அண்ணனைக் கண்டவன், “ஆதி…” என அவனிடம் வந்தான் ஆரண்யன். அவன் பின்னே தந்தையும் வருவதைக் கண்ட ஆரண்யன், “டாட்… நீங்க என்ன பண்றீங்க?” என்றான். 

      “இந்த கேள்விய நா உங்க ரெண்டு பேரையும் பாத்து கேக்கனும். யாருக்கு என்ன ஆச்சு?” என தன் மகன்கள் இருவரையும் பார்த்த அருணாச்சலம் அப்பொழுது தான் கண்ணீருடன் அமர்ந்திருக்கும் வெண்ணிலாவைக் கண்டார். 

     தன்னை தொடர்ந்து வந்த தந்தையைக் கண்டு ஆச்சரியப்பட்ட ஆதிரன்,  தந்தையின் பார்வை வெண்ணிலாவை தொட்டு நிற்பதைக் கண்டு சங்கடமாக உணர்ந்தான். சிறிது நேரத்திற்கு முன்பு தான் வெண்ணிலாவின் மீது தனக்கு எவ்வித ஈடுபாடும் இல்லை என கடினமாக பேசியவன் சில நிமிடங்களிலேயே அவள் முன்பே நிற்பதை உணர்ந்து சங்கடமாக நெளிந்தான் ஆதிரன். 

      “யாருக்கு என்ன ஆச்சு?” என வெண்ணிலாவின் மீதிருந்த பார்வையை சற்று விலக்கி ஆரண்யனைப் பார்த்துக் கேட்டார் அருணாச்சலம். 

     “நிலாவோட அப்பாக்கு உடம்பு சரியில்லை ப்பா…” என நடந்ததை விவரித்தான் ஆரண்யன். 

     “ஓஓஓ… ” என ஆதிரனைப் பார்த்தவர், பின்பு, “டாக்டர் என்ன சொல்றாங்க?” என ஆரண்யனிடம் வினவினார் அருணாச்சலம். 

     “இன்னும் எதுவும் சொல்ல ல ப்பா… நிலா தான் பாவம் ரொம்ப பயந்துட்டா…” ஆரண்யன். 

     “சரி… நீ இங்க எதுக்கு வந்த ஆதி?” என அருணாச்சலம் ஆதிரனிடம் கேட்டுக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி மருத்துவர் வரவும் அனைவரின் கவனமும் அவரிடம் திரும்பியது. 

     “டாக்டர்… டாக்டர்… என் அப்பாக்கு என்ன ஆச்சு?  அவரு இப்ப கண்ணு முழிச்சுட்டாரா? ” என மருத்துவரிடம் கண்ணீரில் வினவினாள் வெண்ணிலா. 

      “பயப்படாதீங்க… இப்போ அவரு சேப். நீங்க போய் அவர பாக்கலாம்…” டாக்டர்.

      “ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர்… அப்பாக்கு எந்த பிரச்சினையும் இல்ல தானே?” வெண்ணிலா. 

      “இனித்தான் உங்க அப்பா ரொம்ப கவனமா இருக்கனும். அதிகமான மன அழுத்தம் கவலை டென்சன் காரணமா அவருக்கு மைல்ட் அட்டாக் வந்து இருக்கு. இன்னொரு தடவ இப்பிடி வராம பாத்துக்கிறது உங்க கையில தான் இருக்கு. அவர டென்ஷன் ஃப்ரீயா வச்சுக்கங்க. அதிகமான அதிர்ச்சியோ அதீத சந்தோஷமோ அவர் ஹெல்த் க்கு ரொம்ப டேன்ஞர். ஸோ இனி அவர ரொம்ப கவனமா பாத்துக்கனும். மெடிசன் எல்லாம் நர்ஸ் சொல்லுவாங்க. நீங்க அவங்கள பாலோ பண்ணிக்கங்க. நா சொன்னதெல்லாம் மனசுல வச்சுட்டு அவர போய் பாருங்க…” எனக் கூறிவிட்டு சென்றார் மருத்துவர். 

     அவர் கூறியதை முழுதாக கிரகித்துக் கொள்ள வெண்ணிலாவிற்கு சில நொடிகள் ஆனது. அவளின் உறைந்த நிலையைக் கண்டு, “அப்பாவ போய் பாத்துட்டு வா நிலா…” என அவளை சுந்தரம் இருக்கும் அறையை நோக்கி தள்ளினான் ஆரண்யன். 

      “பயமா இருக்கு ஆரா…” எனத் தயங்கினாள் வெண்ணிலா. 

      “வா… நானும் கூட வர்றேன்…” என வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு சுந்தரம் இருக்கும் அறையில் நுழைந்தான் ஆரண்யன். 

      உள்ளே கண் மூடி படுத்திருக்கும் சுந்தரத்தைக் கண்டு, “அப்பா…” என மெல்லிய குரலில் அழைத்தாள் வெண்ணிலா.

     மகளின் குரலைக் கேட்டு மெதுவாக கண் விழித்துப் பார்த்தவர், “எனக்கு ஒன்னும் இல்ல. நீ பயப்படாத…” என கஷ்ட்டப்பட்டு பேசியவர் நிலாவின் அருகில் நிற்கும் ஆரண்யனை கேள்வியாகப் பார்த்தார் சுந்தரம். 

      “இது… என்னோட ப்ரண்ட் ப்பா. இவன் தான் உங்கள கரக்ட் டைம்க்கு ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேத்தான்…” வெண்ணிலா. 

      ஆரண்யனைப் பார்த்து கையெடுத்து கும்பிட போன சுந்தரத்தை தடுத்து, “நானும் உங்களுக்கு நிலா போலத்தான். டாக்டர் உங்களுக்கு ஒன்னும் இல்ல னு சொல்லிட்டாங்க. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க. இப்போதைக்கு நீங்க எதுக்காகவும் ஸ்டெரெய்ன் பண்ணிக்க கூடாது… நாங்க வெளில இருக்கோம். ” என அவரிடம் கூறிய ஆரண்யன்,  “நிலா… வா… அங்கிள் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்…” என சுந்தரத்தை அதிகம் பேச விடாமல் நிலாவை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். 

     “என்ன? எல்லாம் ஓகே தான?” என வெண்ணிலாவைப் பார்த்தபடி ஆரண்யனிடம் வினவினான் ஆதிரன். 

      “அங்கிள் ஓகே தான் ஆதி… எனக்கு கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு அதான் உன்னய கூப்பிட்டேன். வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆதி…” என ஆதிரனை கட்டியணைத்தான் ஆரண்யன். அவனின் அணைப்பிலேயே தெரிந்தது ஆரண்யன் எவ்வளவு பதட்டத்தில் இருந்துள்ளான் என்பதை. 

     “சரி சரி ரிலாக்ஸ். அதான் எதுவும் ஆகல ல…” என ஆரண்யனை தட்டிக் கொடுத்துக் கொண்டு வெண்ணிலாவின் மீதிருந்த பார்வையை அகற்றாமலே கூறினான் ஆதிரன். 

     வந்ததில் இருந்து ஆதிரன் வெண்ணிலாவையே பார்த்தாலும் அவள் சிறிதும் ஆதிரனை நிமிர்ந்து பார்த்தாளில்லை. ஆதிரன் நிலாவைப் பார்ப்பதும் நிலா, ஆதிரன் முகத்தை திரும்பிக் கூடப் பார்க்காமல் இருப்பதையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார் அருணாச்சலம். 

     “ஈவினிங் ஆகிருச்சு டாட். நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கெளம்புங்க. நா நிலாக்குத் தொணைக்கு இங்கயே இருக்கேன். அம்மா தேடப் போறாங்க. அம்மாக் கிட்ட சொல்லிருங்க…” ஆரண்யன். 

     ஆதிரன் அதை மறுக்கும் முன்பே, “ஆல்ரெடி உங்க அம்மா ரெண்டு தடவ ஃபோன் பண்ணிட்டா. நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கெளம்புறோம். நீ நிலாவ பாத்துக்கோ. ஏதாவதுனா கால் பண்ணு ஆரன்… ” எனக் ஆரண்யனிடம் கூறிவிட்டு, “பயப்படாத நிலா… நாங்கலாம் உன் கூட இருக்கோம். எதுனாலும் உன் ப்ரண்ட்க்கிட்ட தைரியமா கேளு. அவன் உன்னய பாத்துப்பான்.” என நிலாவின் தலை மீது கை வைத்து பாசத்துடன் கூறினார் அருணாச்சலம். 

    அவரைப் பார்த்து லேசாக புன்னகைத்த நிலாவின் கன்னத்தில் மெல்லியதாக தட்டி, “பயப்படாத…” என்று கூறி விட்டு அதற்கு மேல் ஆதிரனை அங்கு நிற்க விடாமல் கையோடு அழைத்துக் கொண்டு புறப்பட்டார் அருணாச்சலம். 

    அவர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டு செல்வதை பொறுமையாக பார்த்திருந்த ஆரண்யன், வெண்ணிலாவின் கையை இறுக்கமாக பிடித்து இழுத்துக் கொண்டு அம்மருத்துவமனையின் பின்புறத்தை நோக்கி நடந்தான். அவனது பிடியில் இருந்த வலிமையில் வெண்ணிலாவிற்கு வலி எடுக்க, “ஆரா… கைய விடு வலிக்குது. என்னய எங்க கூட்டிட்டுப் போற? அப்பா அங்க தனியா இருப்பாரு…” என்றாள் வெண்ணிலா. 

      “உன் கிட்ட கொஞ்சம் பேசனும் நிலா…” என வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு அவளை அம்மருத்துவமனையின் பின்புறத்தில் யார் கவனத்தையும் கவராத இடமாக பார்த்து வெண்ணிலாவை நிறுத்தினான் ஆரண்யன். 

     “என் கிட்ட என்ன பேசனும் ஆரா? எதுவா இருந்தாலும் அங்க வச்சே பேசலாமே. அதுக்கு ஏன் இங்க இப்பிடி கை வலிக்க வலிக்க கூட்டிட்டு வந்து இருக்க?” என அவனிடம் இருந்து தன் கரத்தை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொண்டாள் வெண்ணிலா. 

      “நாம கொஞ்சம் ஓப்பனா பேசலாமா?” என இறுக்கம் தளராமல் வினவினான் ஆரண்யன். 

      “என்ன விசயம் னு சொல்லு ஆரா. இங்க பாரு கை எப்பிடி செவந்து இருக்கு னு…” என ஆரண்யனின் பிடியினால் சிவந்து இருந்த கையை தேய்த்தபடி கூறினாள் வெண்ணிலா. 

    “சரி நா நேரடியாவே கேக்குறேன். உனக்கு எப்ப கல்லியாணம் ஆனுச்சு?” என வெண்ணிலாவை கூர்மையாக கவனித்தபடி கேட்டான் ஆரண்யன். 

     அவனின் கேள்வி காதில் விழுந்த அடுத்த நொடி இதயத்தில் மின்னல் தாக்கியதைப் போல் அதிர்ந்து ஆரண்யனைப் பார்த்தாள் வெண்ணிலா.

     “என்ன அப்பிடி பாக்குற? எனக்கு எல்லாம் தெரியும். யாருக்கும் தெரியாம ட்ரெஸ்க்குள்ள தாலிய மறைச்சு வச்சு இருந்தா நீ செஞ்ச தப்பு யாருக்கும் தெரியாம போயிருமா? உன் அப்பாக்கு சரி ஆகட்டும் னு தான் இவ்ளோ நேரம் பொறுமையா இருந்தேன். உன் அப்பாக்கு இந்த விசயம் தெரியாது தான? இப்ப அவரு இருக்குற நிலைமையில, தான் பொண்ணு தனக்குத் தெரியாம திருட்டுக் கல்லியாணம் பண்ணிக்கிட்டா னு அவருக்குத் தெரிஞ்சா அவரோட நிலைமைய யோசிச்சு பாத்தியா நீ?” எனக் கடுங்கோவத்துடன் அதட்டினான் ஆரண்யன். 

     ஆரண்யன் கூறிய சூழ்நிலையை கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத வெண்ணிலா, உள்ளம் துடி துடித்துப் போனாள். 

    “இல்ல… அப்பிடி எதுவும் நடக்க கூடாது. எனக்கு இருக்குற ஒரே சொந்தம் அவரு மட்டும் தான். அவருக்கு எதுவும் ஆக கூடாது. அவருக்கு எதுவும் தெரியவும் கூடாது…” என அழுதாள் வெண்ணிலா. 

     “ஏய் ச்சீ… சும்மா சும்மா அழுகுறத நிறுத்து. அவன் என்ன உனக்குத் தெரியாமலா உன் கழுத்துல தாலி கட்டுனான்? உன் சம்மதத்தோட தான தாலி கட்டுனான்?” ஆரண்யன். 

      “ஆமா…” என பதில் கூற முடியாமல் அழுகையுடன் தலையசைத்தாள் வெண்ணிலா. 

     அவளின் பதிலைக் கேட்ட ஆரண்யன் அளவுக்கு மீறிய கோவத்தில், “பண்றதெல்லாம் பண்ணிட்டு நல்லவளாட்டம் இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க?” என வெண்ணிலாவை இழுத்து அறைந்தான். 

     வலிமையான ஒரு ஆணின் முரட்டுத்தனமான அடியை வாங்கிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள் வெண்ணிலா. 

     “அடியையும் வாங்கிட்டு அமுக்குனியாட்டம் நிக்கிறத பாரு. உனக்குலாம் கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லையா? இப்பிடி ஒரு வேலைய செஞ்சுட்டு வந்து நிக்கிற? ச்சீ நீலாம் என்ன பொண்ணோ? நா உன்னய பத்தி என்னெல்லாம் கனவு கண்டு வச்சு இருந்தேன் தெரியுமா?” 

     “என் கிட்ட இவ்வளவு கேள்வி கேக்குறியே… உன் அண்ணங்கிட்ட ஏதாச்சும் கேட்டியா?” எனக் கோவத்துடன் கேட்டாள் வெண்ணிலா. 

     “என் அண்ணங்கிட்ட நா என்ன கேக்கனும்? அவன் என்ன தப்பு பண்ணான்? பண்றதெல்லாம் நீ பண்ணிட்டு வந்து நிக்கிற உன்னய நா கேள்வி கேட்டா… எதுவுமே பண்ணாத ஆதிய எதுக்கு நா கேள்வி கேக்கனும்?” ஆரண்யன். 

     “உன் அண்ண என்ன பண்ணானா? எல்லாமே அவன் தான் டா பண்ணான். எல்லாமே அவன் தான் பண்ணான். என் வாழ்க்கைய இப்பிடி கொண்டு வந்து நிறுத்துனதே அவன் தான் டா… நீ எப்பிடி அவன கேள்வி கேப்ப? நீதான் அவனோட தம்பியாச்சே…” என ஆரண்யனின் சட்டையை பிடித்து ஆவேசமாக பேச ஆரம்பித்து இறுதியில் விரக்தியாக அழுதாள் வெண்ணிலா. 

      “இல்ல… எனக்கு புரியல. நீ பண்ணுன தப்புக்கு ஆதி எப்பிடி காரணமாவான்?” ஆரண்யன். 

      “எப்பிடி காரணமாவானா? இத என் கழுத்துல கட்டுனது யாரு னு தெரியுமா?” வெண்ணிலா. 

      “திருட்டு கல்லியாணம் பண்ணுனவன் என்ன பெரிய யோக்கயனவா இருப்பான்? எவனாவது ஒரு அயோக்கிய ராஸ்கலா தான் இருப்பான்…” என இகழ்வாக இதழ் வளைத்தான் ஆரண்யன். 

      “ஓஹோ… உனக்கு ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டா?அந்த அயோக்கிய ராஸ்கலே உன் அண்ணன் தான்…” என வெறுப்பாக கூறினாள் வெண்ணிலா. 

      இனி ஆரண்யன் என்ன முடிவு எடுப்பான்?🤔

                                   (நிலவு மலரும்…)

      

                                -செல்லம்மாள்பாரதி 

    

    No comments yet.