அரக்கன் -12

Chellammal Bharathi | 17 Dec 2025 | Share

      வெண்ணிலா அவ்வறையை விட்டு வெளியே சென்ற அடுத்த நொடி சற்றும் தாமதிக்காமல் ஆரண்யனை பொய் கோபத்துடன் அடிக்கத் தொடங்கினான் ஆதிரன். டேய் அண்ணா… நீ பண்ணுன காரியத்துக்கு நாந்தான் உன்னய அடிக்கனும்…” எனக் கத்தினான் ஆரண்யன். 

      “ஓஓ… ஸாருக்கு அந்த நினைப்பு வேற இருக்கா?” என மேலும் ஆரண்யனை அடித்தான் ஆதிரன். 

      “அதெல்லாம் போகட்டும்…  ஆதி ஸாருக்கு எப்போல இருந்து என் ப்ரண்ட் மேல கண்ணு?” என அடி வாங்கியதால் கசங்கிய சட்டையை சரி செய்து கொண்டு கேட்டான் ஆரண்யன்.

      “ஏய் லூசு… கண்ணு லாம் ஒன்னும் இல்ல. புடிக்கும்… அவ்ளோ தான்… அதுக்கு மேல ஒன்னும் இல்ல.” ஆதிரன். 

      “ஆதி… சீரியஸா பதில் சொல்லு… உனக்கு நிலாவ புடிச்சு இருக்கா?” என நேரடியாக வினவினார் அருணாச்சலம். 

        அதற்கு பதில் ஏதும் வார்த்தையால் கூறாமல் வெட்கத்துடன் தன் தலை கோதி சின்ன சிரிப்பில் தன் பதிலை தெரிவித்தான் ஆதிரன். “ஹைய்யோ… அண்ணனுக்கு வெக்கத்துல பேச்சே வரல…” என ஆதிரனை மேலும் சிரிக்க வைத்தான் ஆரண்யன். 

       அவனின் வெட்கச் சிரிப்பிற்கு பின்னாடி அரக்கனின் சிரிப்பு ஒளிந்திருப்பதை ஆதிரன் மட்டுமே அறிவான்.

       “சிரிக்காம வாயத் தொறந்து பதில் சொல்லு ஆதி… திஸ் இஸ் நாட் எ ஜோக் அண்ட் நாட் எ கேம்…” என ஒரு தந்தையின் பொறுப்புடன் கேட்டார் அருணாச்சலம். 

      “இதுக்கு என்ன ப்பா உங்களுக்கு பதில் வேணும்? நேத்து தான் அம்மா கிட்ட கல்லியாணத்துக்கு ரெண்டு வருஷம் போகட்டும் னு சொன்னான். ஆனா இப்போ  நிலா வ பாத்ததும் ஸார் பக்கா ப்ளாட்… நீங்க அத பாத்து இருக்கனும். க்ளைண்ட் மீட்டிங் சரியா வரல னு அவ்ளோ டென்ஷனா இருந்தவன், நம்ம ரிசப்பசனிட் நிலா வந்து இருக்குறத சொல்லி இவன் அவ முகத்த பாத்ததும் ஸாருக்கு வந்துச்சே ஒரு எனர்ஜி. மீட்டிங் ல படு பயங்கரமா பின்னிட்டான் ஆதி. பையன் ஒரு க்ரிக்டிக்கலான நிலைமை இருக்குறப்ப எந்த ஒரு பொண்ணு அவனுக்கு எனர்ஜிய குடுத்து அவன சக்சஸ் பண்ண வைக்கிறாளோ அவ தான அந்த பையனுக்கு சரியான லைப் பாட்னரா இருக்க முடியும்? ” ஆரண்யன். 

        “நீ கொஞ்சம் சும்மா இரு ஆரன்.. நா ஆதிக்கிட்ட பேசிட்டு இருக்கேன்… இது ஜஸ்ட் தியரிடிக்கலா பாக்க வேண்டிய விசயம் இல்ல… இது லைப் மேட்டர். நீ சின்ன பையன் உனக்கு ஒன்னும் தெரியாது… ” அருணாச்சலம். 

      “என்னது சின்னப் பையனா?” என தன்னைத் தானே மேலிருந்து கீழாக ஒரு முறை பார்த்தவன், “மீ? ” எனத் தந்தையிடம் கேள்வி கேட்டான் ஆரண்யன். 

      “ஆமா…” என தீர்க்கமாக பதிலளித்தார் அருணாச்சலம். 

       “அப்ப அன்னக்கி மட்டும் லாலிபப் தின்னுட்டு இருந்தப்ப ஏழு கழுதை வயாசாச்சு இன்னும் சின்னப் பையன் மாதிரி குச்சி முட்டாய் சாப்பிட்டுட்டு இருக்க னு என் கிட்ட இருந்து பறிச்சுட்டு போய்டீங்க. அப்ப மட்டும் நா பெரிய பையன் இப்ப நா சின்னப் பையனா?” ஆரண்யன். 

      “டேய்… எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுற? அது வேற இது வேற டா…” அருணாச்சலம். 

       “ஆனா அப்ப இருந்த அதே நாந்தான இப்பவும் இருக்கேன்?” ஆரண்யன்.

      “ஷப்பா… முடியல டா உங்கூட. நீ கொஞ்சம் வெளில போறியா?” அருணாச்சலம். 

     “வாட்… நா வெளில போகனுமா?” ஆரண்யன். 

     “ஆமா… நீதான்… வெளில போ…” அருணாச்சலம். 

      “ப்பா… நா உங்க பையன் ப்பா… என்னய வெளில போக சொல்றீங்க? நா என்னமோ வெளி ஆள் மாதிரி என்னய வெளில போக சொல்றீங்க? திஸ் இஸ் நாட் ஃபேர் டாடி…” ஆரண்யன். 

      “டேய்… நா உன் அப்பா டா… நாந்தான் உன்னய வெளில போக சொல்றேன். இப்ப உன்னால வெளில போக முடியுமா முடியாதா?” அருணாச்சலம். 

      “நோ… ஐ காண்ட் டூ இட். அத இந்த அருணாச்சலம் சொன்னாலும் சரி… அந்த ஆண்டவனே சொன்னாலும் சரி. நா வெளில போக மாட்டேன்…” ஆரண்யன். 

      “இப்ப நீ வெளில போகலனா உன் ரூம்ல ரொம்ப சீக்ரெட்டா ஒளிச்சு வச்சு இருக்குறத நா உன் அம்மாக் கிட்ட எடுத்து குடுத்துருவேன்…” அருணாச்சலம். 

     “சீரியஸ்லி?” ஆரண்யன். 

     “ஹன்ட்ரண்ட் பர்சன்ட் சீரியஸா சொல்றேன்…” அருணாச்சலம். 

     “இல்ல… நா… உங்களுக்கு ஏதாவது ஹெல்ப்… ” ஆரண்யன்.

     “நீ வெளில போறது தான் எனக்கு பெரிய ஹெல்ப்… இப்ப நீ போறியா? இல்ல சிவாக்கு ஃபோன் பண்ணவா?” அருணாச்சலம். 

     “ஓகே ஓகே கூல் டாடி… வெளில போ னு சொன்னா போயிறப் போறேன்… அதுக்கு ஏன் இவ்ளோ இன்டீசன்ட்டா அம்மாக்குலாம் ஃபோன் பண்ணிக்கிட்டு. கொஞ்சமாச்சும் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கங்க…” என வெளியில் சென்றான் ஆரண்யன். 

     “ஹைய்யோ… கடவுளே… இவன எந்நேரத்துல பெத்தேன் னு தெரியல. பேசியே என் உசுர எடுக்குறான்…” என்றவாறு தண்ணீரை எடுத்து ஒரே மூச்சில் குடித்து முடித்தார் அருணாச்சலம். 

     “ஏன் ப்பா அவன இப்பிடி சொல்றீங்க?” என சிரித்தான் ஆதிரன். 

     “பின்ன என்ன?  நா பெத்த ரெண்டும் ரெண்டு ரகம். ஒருத்தன், உள்ள என்ன யோசிக்குறான்? என்ன செய்ய நினைக்கிறான் னு தெரியாம பேசாம இருந்தே ஒருத்தன் கொல்லுறான்… இன்னொருத்தன், மனசுல நெனக்கிறத பட்டு பட்டு னு சொல்லி பேசியே  கொல்லுறான் இன்னொருத்தன்… இவனுக ரெண்டு பேருக்கும் இடையில மாட்டிக்கிட்டு நாந்தான் முழிக்கிறேன்…” அருணாச்சலம்.

      “இப்ப நா உங்க கிட்ட என்ன மறைச்சுட்டேன்?” ஆதிரன். 

      “நிஜமாவே என் கிட்ட நீ எதுவும் மறைக்கலயா ஆதி?” அருணாச்சலம். 

      தந்தையின் கண்களை பார்க்கையில் திருமண விசயம் நெஞ்சினுள் உருத்த… இருப்பினும் அதை மறைத்து, “இல்ல டாட்… என் கிட்ட இருந்து உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கனும்?” என்றான் ஆதிரன். 

       “அப்போ நா கேக்குற கேள்விக்கு உண்மைய மட்டும் தான் சொல்லுவேன் னு உன் அம்மா மேல சத்தியம் பண்ணி சொல்லு…” அருணாச்சலம். 

       “டாட்… ஒரு அப்பா மாதிரி பேசுங்க. சும்மா எப்ப பார்த்தாலும் ப்ளாக்மெய்லர் மாதிரி பேசிட்டு இருக்காம… ” ஆதிரன். 

      “நானும் உங்க கிட்ட அப்பாவா தான் நடந்துக்கனும் னு ஆசைப்படுறேன். ஆனா நீங்க தான் என்னய இப்பிடி நடந்துக்க வைக்கிறீங்க…” அருணாச்சலம். 

      “இட்ஸ் நாட் ஃபேர் டாடி…” ஆதிரன். 

       “உண்மைய சொல்ல உனக்கு என்ன கஷ்டம்? அதுக்கு ஏன் நீ இவ்ளோ ஆர்க்யூ பண்ற?” அருணாச்சலம். 

       “அதே தான் டாட்… உண்மைய சொல்றதுல எனக்கு என்ன கஷ்ட்டம்? அத ஏன் நீங்க அம்மா மேல ப்ராமிஸ் பண்ண சொல்றீங்க?” ஆதிரன். 

      “அப்ப தான நீ உண்மைய மட்டும் சொல்லுவ?” என அந்த உண்மை எனும் வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கேட்டார் அருணாச்சலம். 

       “டாட்… ப்ராமிஸா எனக்கு டைம் இல்ல. வொர்க் நிறைய பெண்டிங் இருக்கு. வேணுனா நாம இந்த ஆர்க்யூமென்ட்டா ஈவினிங் வீட்ல வச்சுக்கலாமா?” ஆதிரன். 

        “ஓகே… பைன்… நா உங்க அம்மாக்கிட்ட விசயத்த சொல்லி அவளையே கேக்க சொல்றேன்…” அருணாச்சலம். 

       “அப்பா… ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க. அம்மாக் கிட்ட மட்டும் இல்ல, உங்க கிட்டயும் நா உண்மைய தான் சொல்லுவேன்… ” ஆதிரன். 

      “அப்பிடியா?” அருணாச்சலம். 

     “நீங்க என் கிட்ட என்ன கேக்கனுமோ கேளுங்க டாட்…” ஆதிரன். 

     “நீ உண்மைய தான் சொல்லுவ னு என்ன கேரண்டி?” அருணாச்சலம். 

     “அப்பா… நீங்க உங்க மகன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க… வேற யார்க்கிட்டயோ பேசுற மாதிரி ல பேசிட்டு இருக்கீங்க…” ஆதிரன்.

    “சரி…  சரி… டென்ஷன் ஆகாத…” அருணாச்சலம். 

    “பேசுறதெல்லாம் பேசிட்டு டென்ஷன் ஆகாத னு சொல்றீங்க… சரி கேளுங்க. என்ன கேக்கனுமோ கேளுங்க…” ஆதிரன். 

       “நிலாக்கு எதுக்கு உதவி பண்ணுன? ஐ மீன் என்ன நோக்கத்தோட உதவி பண்ணுன?” அருணாச்சலம். 

        “இது என்ன ப்பா கேள்வி? அவ என்னோட ப்ரபஸர் கிட்ட ஹெல்ப் கேட்டு போய் இருக்கா. அவரு தான் என் கிட்ட போக சொல்லி, சொல்லி இருக்காரு. என் மேல நம்பிக்கை வச்சு மரியாதை வச்சு என் ப்ரபஸர் என் கிட்ட அனுப்பும் போது எப்பிடி ப்பா நா ஹெல்ப் பண்ணாம இருக்க முடியும்? அதுவும் நம்ம குட்டாவோட ப்ரண்ட். நீங்களே உங்க கண்ணு முன்னாடி பாத்தீங்கல்ல… ஒரு வருஷமா எவ்ளோ தான் நம்ம கிட்ட சிரிச்சு பேசுனாலும் அவன் இன்னும் அதுல இருந்து வெளில வரல ப்பா. அது உங்களுக்கு நல்லா தெரிஞ்சு தான் அவன வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சீங்க. அங்க அனுப்பி வச்சு என்ன புரோயஜனம்?  அங்க இருந்து வந்த ரெண்டாவது நாளே சுவத்துல அடிச்ச பந்தாட்டம் இங்க வந்து நிக்கிறான். ஆனா அவள பாத்ததும் அவக்கிட்ட பேசறப்பவும் நா நம்ம பழைய குட்டன பாத்தேன் டாட். எனக்குத் தெரியும் என் தம்பிய பத்தி…  அவன் அவ்ளோ முக்கியமா நெனக்கிற அவனோட ப்ரண்ட்க்காக நா இது கூட செய்ய கூடாதா?” என மூச்சு விடாமல் பேசி முடித்தான் ஆதிரன். 

       “நீ சொல்ற எல்லாமே கரக்ட் தான் டா கண்ணா… நம்ம ஆரனுக்காக பண்ணுன னு சொல்ற, ஆனா அத அவனுக்கே தெரியாம ல மறைச்சு வைக்கப் பாத்த? உன்னய பாக்க வந்து இருக்குறது ஆரனோட ப்ரண்ட் நிலா ங்கிறது உனக்கு நல்லா தெரிஞ்சும், நிலா வந்து இருக்குற விசயத்த ஏன் நீ அவன் கிட்ட சொல்லாம மறைச்ச?” அருணாச்சலம். 

      “அப்பா… அது அப்பிடி இல்ல ப்பா?” ஆதிரன். 

      “வேற எப்பிடி?” அருணாச்சலம். 

       “அய்யோ… எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாரே…” என மனதினுள் மருகினாலும் வெளியே தன் கெத்தை விடாமல், “இப்பிடி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்னப்பா அர்த்தம்? கேக்குற கேள்விய நல்லா யோசிச்சு தான் கேளுங்களேன்…” என்றான் ஆதிரன். 

       “எதுக்கு? நா யோசிக்கிற கேப் ல என்னய எப்பிடி சமாளிக்கலாம் னு நீ யோசிக்கவா?” அருணாச்சலம். 

      “ஆனாலும் நீங்க இவ்ளோ ஸ்மார்ட்டா இருக்க கூடாது ப்பா…” என ஆதிரனின் மனசாட்சி கவுண்டர் குடுக்க…”என்ன ப்பா?  என்னய போய் இப்பிடி பேசுறீங்க? என்னயப் பத்தி தெரிஞ்சுமா இப்பிடி லாம் கேள்வி கேக்குறீங்க?” என தந்தையை பாவமாக பார்த்தான் ஆதிரன். 

        “உன்னயப் பத்தி நல்லா தெரிஞ்சதுனால தான் கேக்குறேன்…” என தன் பிடியில் விடாமல் , “நிலாக்கு ஹெல்ப் பண்ணுனத, நிலா நம்ம ஆபீஸ்க்கு வந்து இருக்குறத ஏன் ஆரன் க்கிட்ட இருந்து மறைச்ச?” என்றார் அருணாச்சலம். 

      “எப்பிடி சுத்துனாலும் கரெக்ட்டா அங்கயே வந்து நிக்குறாரே…” என நெற்றியை லேசாக தேய்த்தவன் , “அவன சர்ப்ரைஸ் பண்ணலாம் னு நெனச்சேன் ப்பா. ஆனா அவனே எனக்கு சர்ப்ரைஸ் பண்ணிட்டான் நிலாவ அண்ணியா னு கேட்டு…” என பின்னந்தலையை கோதிக் கொண்டான் ஆதிரன்.

      “சரி… ஏதோ அவனுக்கு சர்ப்ரைஸ் னு சொல்ற. அத விடு…  நிலா மேல உனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கா?” அருணாச்சலம். 

      “இப்பிடி கேட்டா நா என்ன ப்பா பதில் சொல்றது?” ஆதிரன்.

      “இருக்கு னா இருக்கு னு சொல்லு…  இல்ல னா இல்ல னு பதில் சொல்லு… அவ்ளோ தான் சிம்பிள்…” அருணாச்சலம். 

      “சிம்பிளா? அய்யோ… இவர் கிட்ட நா இப்பிடி சிங்கிளா மாட்டிக்கிட்டேனே. குட்டன் இருந்தா கூட ஏதாவது பேசி என்னய காப்பாத்துவான். ஒருவேளை அதுக்காகத் தான் அப்பா ப்ளான் பண்ணி அவன வெளில அனுப்பிட்டாரோ? இருக்கும் இருக்கும்… இவரு என்னய விட கிரிமினல். எனக்கே அப்பாவாச்சே… இப்ப நா என்ன சொல்றது? இன்ட்ரஸ்ட் இருக்கு னு சொன்னா, கல்லியாணத்த பத்தி அம்மா கேட்டப்போ அப்புறம் எதுக்கு ரெண்டு வருஷம் போகட்டும் னு சொன்ன? னு கேப்பாரு… இல்ல னு சொன்னா, உன் தம்பி நிலாவ அண்ணி னு சொல்றப்ப எதுக்கு ஆமா னு மண்டைய ஆட்டுன னு கேப்பாரு… இப்ப என்ன பண்றது? எந்த பக்கம் போறது?” என வசமாக மாட்டிக் கொண்டு விழித்தான் ஆதிரன். 

                                (நிலவு மலரும்…)

                            -செல்லம்மாள்பாரதி

           

    No comments yet.