அரக்கன் -11

Chellammal Bharathi | 17 Dec 2025 | Share

     ஆதிரனின் அந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் யார் என யோசித்தவாறே தனது கேபினுக்குள் நுழைந்தான் ஆரண்யன். ஆரண்யனின் உள்ளத்தில் அது யார் என தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வம் எழுந்தது. “அவ்ளோ குழப்பமா நம்பிக்கை இல்லாம இருந்தவன் யாரப் பாத்துட்டு அவ்ளோ ப்ரஷா நடத்தி முடிச்சான்? பேசாம ரிஷப்ஷன் ல போய் யாரு னு பாத்ருவோமா? இல்ல வேணாம்… வெய்ட் பண்ணுவோம்… யாரா இருந்தாலும் இப்பிடித்தான அவன் ரூம்க்கு போக இப்பிடித்தான் வந்து ஆகனும். அப்ப பாத்துக்கலாம்… ” என்ற யோசனையுடன் ஆதிரனின் அறைக்கு வெளியே வொர்க்கர்ஸை கவனித்துக் கொண்டிருப்பவன் போல காத்துக் கொண்டிருந்தான் ஆரண்யன். 

       அப்பொழுது வொர்க்கர்ஸ் மத்தியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டு அனைவரும் எழுந்து நிற்க, “யார்ரா அது?” என்ற ரீதியில் பார்த்தான் ஆரண்யன். 

       கோட் சூட் சகிதம் இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் கண கம்பீரமாக வந்து கொண்டிருந்தார் அருணாச்சலம். ஆரண்யனிடம் வந்தவர், “என்ன ஆச்சு ஆரன்?” என அங்கு நின்று கொண்டிருந்த ஆரண்யன்யனிடம் வினவினார் அருணாச்சலம். 

       அவரது கம்பீரத்தில் மெய் மறந்து நின்றவன்,”என்ன ஆச்சு? ஒன்னும் ஆகலயே…” என சாதாரணமாக பதிலளித்தான் ஆரண்யன். 

       “என்னது ஒன்னும் ஆகலயா?” என சிறிய குரலில் கடுமையாக ஆரண்யனுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் கத்தியவர் ,”பர்ஸ்ட் நீ உள்ள வா…” என அவனுக்கு கட்டளையிட்டு விட்டு ஆரண்யனின் கேபினுக்குள் நுழைந்தார் அருணாச்சலம். 

       தன் பின்னே உள்ளே நுழைந்த ஆரண்யனிடம், “நீ தான டா என்னய அவசரமா வர சொன்ன? கோவிலுக்கு கிளம்பிட்டு இருந்தவன் அத விட்டுட்டு வேகமாக வந்தா நீ ஒன்னும் ஆகலயே னு சொல்ற…” எனக் கத்தினார் அருணாச்சலம். 

      “நானா? நா எப்ப உங்கள வர சொன்னேன்? ” எனக் கூலாக கேட்டான் ஆரண்யன். 

      “டேய்… விளையாடாத… நீ தான் கம் பார்ஸ்ட் இமீடியட்லி னு மெஸேஜ் அனுப்புன…” அருணாச்சலம். 

       “ஓஓ… அதுவா… ஸாரி ப்பா அது வேற ஒருத்தருக்கு அனுப்ப வேண்டியத உங்களுக்கு தப்பா மாத்தி அனுப்பிட்டேன்…” ஆரண்யன்.

      “டேய் தம்பி… விளையாடாத… உன் மெஸேஜ பாத்துட்டு என்னமோ பிரச்சனை னு உன் அம்மா கூட கோவிலுக்கு போகாம இங்க வந்துட்டேன்…” அருணாச்சலம். 

        “சோழமுத்தா…போச்சா…” என சிரித்தான் ஆரண்யன். 

        “டேய்… எனக்கு வர்ற கோபத்துக்கு அப்பிடியே உன்னய… ப்ச் போடா…” அருணாச்சலம். 

        “உங்கள யாருப்பா நெட்ட ஆன் ல வைக்க சொன்னது? அது உங்க தப்பு… அதுக்கு நா எதுவும் பண்ண முடியாது…” என கைகளை விரித்தான் ஆரண்யன். 

     அந்நேரம் வெண்ணிலா அவர்களை அவர்களை கடந்து ஆதிரனின் அறைக்குள் நுழைந்தாள். அவள் தன் அறையை கடந்து சென்றதை ஆரண்யன் கவனிக்காமல் தந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். 

      “என் பொண்டாட்டி கூட அவுட்டிங் போக விடாம பண்ணிட்டு கையையா விரிக்கிற…” என கோபத்துடன் மேசையின் மீது இருந்த பென் ஸ்டாண்டை ஆரண்யன் மேல் தூக்கி வீசினார் அருணாச்சலம்.  

     தன்னை நோக்கி வந்த பென் ஸ்டாண்டை அழகாக கேட்ச் பிடித்து வாய்விட்டு சிரித்தான் ஆரண்யன். “ஏன்டா இப்பிடி பண்ணுன?” அருணாச்சலம். 

      “அடடா… உங்களுக்கு மெஸெஜ் பண்றப்ப ஒரு க்ரிக்டிக்கலான நிலைமை… அதான் கூப்பிட்டேன். ஆனா அடுத்த செகண்ட்டே அண்ணா அத தூசு மாதிரி ப்பூ னு ஊதி தள்ளிட்டான்…” ஆரண்யன். 

     “ஏன்? என்ன ஆச்சு?” என சீரியஸாக வினவினார் அருணாச்சலம். 

      “எல்லாம் அந்த க்ளைன்ட் மீட்டிங் தான்…” என நடந்ததை விவரித்தான் ஆரண்யன்.

      “ஆக… பாக்க வந்த ஆள் யாரு னு தெரிஞ்சுக்கத் தான் வெளில வெயிட் பண்ணிட்டு இருந்தியா?” அருணாச்சலம்.

     “ஆமா ப்பா… என் ஏழாம் அறிவு என்ன சொல்லுது னா, கண்டிப்பா அது ஒரு பொண்ணா தான் இருக்கும் னு சொல்லுது…” ஆரண்யன். 

      “உனக்கு ஆறறிவு இருக்குதா னே தெரியல… இதுல ஏழாவது அறிவு வேறயா?” என சிரிக்காமல் ஆரண்யனின் முகத்தைப் பார்த்தார் அருணாச்சலம். 

      “ஆஹான்… ஜோக்கா? நல்லா இல்ல…” என அருணாச்சலத்தை முறைத்தான் ஆரண்யன். 

       “சரி சரி கோச்சுக்காதடா… அது எப்பிடி ஆதிய பாக்க வந்து இருக்குறது ஒரு பொண்ணு தான் னு சொல்ற?” அருணாச்சலம். 

       “ஆங்… அப்பிடி கேளுங்க. நம்ம ரிசப்பசனிட் கிட்ட பேசுறப்ப நம்ம ஆதி மொகத்துல ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சுச்சு… அத வச்சு தான் சொல்றேன், ஆதிய பாக்க வந்து இருக்குறது ஒரு பொண்ணு தான் னு… ” ஆரண்யன். 

      “நீ சொல்ற மாதிரி பாத்தா நம்ம ஆதிக்கு ரிசப்பசனிட் மேல தான இன்ட்ரஸ்ட் இருக்கனும்…” அருணாச்சலம். 

    “போய்யா லூசு அப்பா… நா போய் ஆதி ரூம்க்கே போய் பாத்துக்கிறேன் எனக்கு வரப் போற அண்ணிய. உன் மருமகள பாக்கனும் னா பாலோ மீ…” என அறையை விட்டு வெளியேறினான் ஆரண்யன்.

      “என்ன நம்மள மரியாதை இல்லாம பேசிட்டுப் போறான்… போனா போகட்டும். நமக்கு மரியாதைய விட மருமக தான் முக்கியம்.” என தனக்குள் பேசியபடி ஆரண்யனின் பின்னே அருணாச்சலமும் ஆதிரனின் அறையை நோக்கி சென்றார். 

       இருவரும் அறையை நெருங்கியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “நாந்தான் தொறப்பேன்…” என ஆரண்யன் கதவின் மேல் கை வைக்க… “இல்ல…  நாந்தான் தொறப்பேன்… ” என ஆரண்யனின் கையை தட்டி விட்டார் அருணாச்சலம். 

      “நாந்தான் இந்த விசயத்தை கண்டுபுடிச்சேன்… ஸோ நாந்தான் தொறப்பேன்…” என மீண்டும் கதவின் மேல் கை வைத்தான் ஆரண்யன். 

      “நா அவனோட அப்பா… ஸோ நாந்தான் தொறப்பேன்…” என மீண்டும் ஆரண்யனின் கையை தட்டி விட்டார் அருணாச்சலம். 

      “நா அவனோட தம்பி…” ஆரண்யன்.

      “உள்ள பாக்க போறது என்னோட மருமகள…” அருணாச்சலம். 

      “உள்ள பாக்க போறது என்னோட அண்ணிய…” ஆரண்யன். 

     இருவரும் மாறி மாறி ஆதிரனின் அறைக்கு வெளியே நின்று அடிக்கும் கூத்தை அந்த ஆபீஸே கண்டும் காணாமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் இருவருக்குள்ளும் சண்டை முற்றி இருவரும் தடுமாறி கதவில் பலமாக மோத கதவு திறந்தது. 

      திறந்த கதவின் வழியே இருவரும் கண்ட காட்சி, வெண்ணிலா கதவிற்கு அருகில் நிற்பதையும் அவளுக்கு பின்னே அவளிற்கு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஆதிரனையும் தான். ஆதிரனின் செயலை வெண்ணிலா கவனிக்காமல் இருந்தாலும் அருணாச்சலமும் ஆரண்யனும் நன்றாக பார்த்து விட்டனர். 

      ஆதிரனைப் பற்றிய குழப்பத்தில் யோசனையுடன் வெளியே செல்ல கதவை திறக்க முயலுகையில் திடீரென கதவு திறக்கப்பட்டு இருவர் எட்டிப் பார்க்க அவ்விருவரையும் கண்டு லேசாக அதிர்ச்சியானாள் வெண்ணிலா. 

      ஆதிரனுமே திடீரென கதவு திறக்கப்பட்டு தந்தையும் தம்பியும் தன் செய்கையை பார்த்து விட்டதைக் கண்டு லேசான அதிர்ச்சியில் இருந்தான். 

      திடீரென தன் முன்னே வந்து நின்ற இருவரையும் கண்டு முதலில் அதிர்ச்சியானாலும் பின்பு அவர்களைப் பார்த்து லேசாக புன்னகைத்தாள் வெண்ணிலா. 

       அங்கு, ஆதிரனின் அறையில் வெண்ணிலாவை முற்றிலும் எதிர்பார்க்காத ஆரண்யனும் இன்ப அதிர்ச்சிக்குள்ளானான். சில நொடிகளில் தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்து, “ஹேய் வாயாடி… நீ இங்க என்ன பண்ற?” என சிரிப்புடன் வந்து ஆரண்யன் வெண்ணிலாவை கட்டி அணைத்தான். 

     ஆரண்யன் , தன் முன்னே வெண்ணிலாவை அணைப்பதைக் கண்டு, ஆரண்யனின் மேல் லேசான பொறாமையும் வெண்ணிலாவின் மேல் பயங்கர கோபமும் எழுந்தது ஆதிரனுக்கு. 

      வெண்ணிலாவை அணைத்த ஆரண்யனோ, அவளின் பின்னால் நின்றிருந்த தன் அண்ணனைப் பார்த்து, “அண்ணியா?” என வாயசைத்தான். 

       தான் வெண்ணிலாவுக்கு அளித்த பறக்கும் முத்தத்தை இருவரும் பார்த்து விட்டனர் என தெரிந்து சிறிது வெட்கத்துடன் எழுந்து நின்றவன், வெண்ணிலாவை ஆரண்யன் அணைக்கையில் ஏற்பட்ட பொறாமையும் தன் தம்பி கேட்ட ஒற்றை கேள்வியில் வெட்கம் வந்து அப்பொறாமையை அழித்து விட ஆரண்யன் இதழசைத்து கேட்ட கேள்விக்கு வெட்கத்துடன், “ஆமாம்” என தலையசைத்தான் ஆதிரன். 

      அண்ணந்தம்பி ஒரு புறம் மௌன நாடகம் அரங்கேற்றி கொண்டிருக்க…  அருணாச்சலமோ வெண்ணிலாவை ஆராய்ந்து கொண்டிருந்தார். சற்று முன் கண்ட ஆதிரனின் செய்கையிலேயே அவருக்கு புரிந்து விட்டது தன் மகன் மனதில் இப்பெண் நிறைந்து இருப்பதை. இதில் தன் இரண்டாவது மகனும் அப்பெண்ணை ஏற்கனவே தெரிந்தது போல் காட்ட அவளை நன்கு ஊன்றி கவனிக்கத் தொடங்கினார் அருணாச்சலம். 

        ஆரண்யனின் அணைப்பில் இருந்து விலகியவள், “எப்பிடி இருக்க?” என்றாள் வெண்ணிலா. 

        “ம்ம்… பாத்தா எப்பிடி தெரியுறேன்?” என தன் பேண்ட் பாக்கெட்டில் இருபுறமும் கை விட்டபடி சிரிப்புடன் ஒரு முறை தன்னை சுற்றி காண்பித்தான் ஆரண்யன். 

       “ம்ம்… ஓகே தான்…” என சிரித்தாள் வெண்ணிலா. 

       “ஹே வெயிட் உன்னய ஒருத்தருக்கு இன்ட்ரோ பண்ணனும்…” என தன் தந்தையைப் பார்த்து, “ப்பா… இது நிலா… என்னோட டியரஸ்ட் டியரஸ்ட் ப்ரண்ட்… மை லவ்லி கேர்ள்…” என வெண்ணிலாவை தோளோடு அணைத்தபடி அருணாச்சலத்திடம் கூறினான் ஆரண்யன். 

       “நிலா… மீட் மை டாடி. இந்த ஆதி இண்டஸ்ட்ரீஸோட சேர்மன். தி க்ரேட் பிஸினஸ்மேன் அருணாச்சலம்…” என தந்தையை அறிமுகப்படுத்தியவன் அப்படியே ஆதிரனின் பக்கம் அவளை திருப்பி, “இது என்னோட அண்ணா…  உனக்கு தெரிஞ்சு இருக்குமே நம்ம காலேஜ் ல தான் படிச்சாரு… ஆமா… நீ இங்க என்ன பண்ற?” என்றான் ஆரண்யன். 

        “கொஞ்சம் என்னய பேச விடுடா…” என ஆரண்யனின் தலையில் கொட்டியவள், “ஹாய் ஸார்… உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம்…” என அருணாச்சலத்தை நோக்கி கை நீட்டினாள் வெண்ணிலா. 

       “எனக்கும் உன்னய பாத்ததுல ரொம்ப சந்தோஷம்…” என பதிலுக்கு வெண்ணிலாவுடன் கை குலுக்கினார் அருணாச்சலம். 

       “வா நிலா… உக்காந்து பேசலாம். உனக்கு கால் வலிக்கும்…” என அருணாச்சலத்தைப் பார்த்து கண்ணடித்தபடி வெண்ணிலாவை பிடித்து இருக்கையில் அமர வைத்தான் ஆரண்யன். “அப்பா… நீங்க ஏன் நிக்கிறீங்க? நீங்களும் உக்காருங்க… டேய் அண்ணா… ஒரு ஜூஸ் சொல்லேன். நிலாக்கு தாகமா இருக்கும்…” என வெண்ணிலாவிற்கு மிக அருகாமையில் நெருக்கமாக அமர்ந்தான் ஆரண்யன். 

      “டேய் ரொம்ப ஓவரா போறடா…” என ஆரண்யனின் காதில் ரகசியமாக கூறி விட்டு அவன் அருகில் அமர்ந்தார் அருணாச்சலம். 

        அவன் பதிலுக்கு சிரித்தபடி ஆதிரனை நோக்கி கண் காட்டினான் ஆரண்யன். ஆதிரன் பக்கம் திரும்பி பார்த்த அருணாச்சலமோ குபீரென கிளம்பிய சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டார். 

        ஆரண்யனின் ஒவ்வொரு செய்கையும் ஆதிரனுக்கு பொறாமையை தூண்ட… அதீத பொறாமையால் எந்நேரமும் வெடித்துச் சிதற தயாராய் இருந்தான் ஆதிரன். 

       வெண்ணிலாவோ முள்ளின் மீது அமர்ந்து இருப்பதைப் போல் அமர்ந்து இருந்தாள். அவளது அவஸ்தையைப் பார்த்த ஆரண்யன், “இப்ப ஏன் நீ இவ்ளோ டென்ஷன் ஆகுற? ரிலாக்ஸ் நிலா…  சரி சொல்லு. நீ இங்க என்ன பண்ற?” என்றான். 

        “அது… அது…” என மென்று முழுங்கியபடி ஆதிரனைப் பார்த்தாள் வெண்ணிலா. 

        “அங்க என்ன பார்வை?  இங்க பாத்து சொல்லு… என்ன விசயமா என் அண்ணன பாக்க வந்த? அண்ணன பாக்க வந்த நீ என்னய பாக்கனும் னு உனக்கு தோனல ல…” ஆரண்யன். 

        சரி… வருவது வரட்டும் என அனைத்தையும் கூறினாள் வெண்ணிலா. அதில் திருமணத்தை மட்டும் மறைத்து உதவி கேட்டதும் ஆதிரன் செய்து விட்டான் என்ற ரீதியில் கூறினாள் வெண்ணிலா. அந்த பணத்தை திருப்பி குடுப்பதற்காகத் தான் வந்ததாக கூறினாள். 

       “ஓஓ… இவ்வளவு நடந்து இருக்கா? ஆதி நீ அந்த திருடன சும்மாவா விட்ட?” என ஆதிரனைப் பார்த்து வினவினார் அருணாச்சலம். 

        “அவன போலீஸ் ல ஹேண்ட் ஓவர் பண்ணியாச்சு ப்பா…” என வெண்ணிலா ஆராய்ச்சி பார்வை பார்த்தவாறே கூறினான் ஆதிரன். 

        “இவ்ளோ தூரம் உதவி பண்ணுனதே போதும் ஸார்… ரொம்ப நன்றி. சொல்ல மறந்துட்டேன், அப்பா உங்கள ஒரு நாள் வீட்டுக்கு சாப்பிட வர சொன்னார் ஸார்… ஆனா நா சொல்லிட்டேன், ஆதி ஸாருக்கு நிறைய வேலை இருக்கும். அதுல நம்ம வீட்டுக்கு வர்ற அளவுக்கு லாம் அவருக்கு டைம் இருக்காது னு…” என நீ வரக் கூடாது என்ற ரீதியில் ஆதிரனைப் பார்த்துக் கூறினாள் வெண்ணிலா. 

        “அப்ப அழைப்பு அண்ணனுக்கு மட்டும் தானா?” ஆரண்யன். 

        “இல்ல அப்பிடி இல்ல…” வெண்ணிலா. 

        “அப்ப நாங்களும் வரலாமா?” அருணாச்சலம். 

        அவ்வளவு பெரிய மனிதர் கேட்கையில் வெண்ணிலாவால் மறுத்து எதுவும் கூற முடியவில்லை. 

       “ஸார்… நீங்கள்லாம் என் வீட்டுக்கு வர குடுத்து வச்சு இருக்கனும் ஸார்…  கண்டிப்பா நீங்க ப்ரீயா இருக்குறப்ப வீட்டுக்கு வாங்க ஸார்…” வெண்ணிலா. 

       “ப்ரீ என்ன மா ப்ரீ… நாளைக்கே வர்றோம். என் மனைவியும் ரொம்ப சந்தோஷப்படுவா… டேய் ஆதி நாளைக்கு உன் மீட்டிங் எல்லாம் கேன்சல் பண்ணிக்கோ. நாளைக்கு நாம எல்லாரும் நிலா வீட்டுக்குப் போறோம்…” அருணாச்சலம். 

        “ரொம்ப சந்தோஷம் ஸார்… நா கிளம்புறேன். நாளைக்கு பாக்கலாம் ஸார்…” என அவர்களிடத்தில் விடைபெற்றாள் வெண்ணிலா. 

       “அய்… அப்ப நாளைக்கு அண்ணி வீட்டுக்கு நாமலாம் போறோம்…” என சந்தோஷத்துடன் கூறினான் ஆரண்யன். 

       கதவு வரை சென்ற வெண்ணிலா திரும்பி, “இப்ப என்ன சொன்ன நீ?” என ஆரண்யனைப் பார்த்துக் கேட்டாள். 

        “நாளைக்கி வெண்ணி லா வீட்டுக்கு நாமலாம் போறோம் னு சொன்னேன்… ஏன் உனக்கு என்ன கேட்டுச்சு?” என அசராமல் திருப்பிக் கேட்டான் ஆரண்யன். 

       “இல்ல… ஒன்னுல்ல… பை…” என வெளியேறினாள் வெண்ணிலா. 

      அவள் வெளியே சென்றதும் ஆரண்யனை விளையாட்டாக அடிக்கத் தொடங்கினான் ஆதிரன். “டேய் அண்ணா… நீ பண்ணுன காரியத்துக்கு நாந்தான் உன்னய அடிக்கனும்…” எனக் கத்தினான் ஆரண்யன். 

        “ஆதி… சீரியஸா பதில் சொல்லு… உனக்கு நிலாவ புடிச்சு இருக்கா?” என நேரடியாக வினவினார் அருணாச்சலம். 

        அதற்கு பதில் ஏதும் வார்த்தையால் கூறாமல் வெட்கத்துடன் தன் தலை கோதி சின்ன சிரிப்பில் தன் பதிலை தெரிவித்தான் ஆதிரன். “ஹைய்யோ… அண்ணனுக்கு வெக்கத்துல பேச்சே வரல…” என ஆதிரனை மேலும் சிரிக்க வைத்தான் ஆரண்யன். 

       அவனின் வெட்கச் சிரிப்பிற்கு பின்னாடி அரக்கனின் சிரிப்பு ஒளிந்திருப்பதை ஆதிரன் மட்டுமே அறிவான்.

                                (நிலவு மலரும்…)

                            -செல்லம்மாள்பாரதி

           

    No comments yet.