தன் அலுவலக அறையின் உள்ளே வெண்ணிலா நுழைந்ததில் இருந்து அவன் அவனாகவே இல்லை. அவன் வேறோருத்தனாக மாறிக் கொண்டிருந்தான். கருப்பு வண்ண சேலையில் இவ்வளவு அழகாக இருப்பாள் என அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.
உள்ளே நுழைந்ததும் தங்கள் இருவரின் உடையைக் கண்டு அவள் உள்ளம் தடுமாறிய அழகைக் கண்டு ஆதிரன் உள்ளம் தடுமாறி அதை மறைக்க கோபத்தை கையில் எடுத்தான். தன் தடுமாற்றத்தை மறைக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்க, வெண்ணிலா பணத்தை திரும்ப அளிக்க வந்திருப்பதாக கூறுகையில் உண்மையிலேயே கோபம் கொண்டான் ஆதிரன்.
உள்ளுள் எழுந்த கோபத்தின் விளைவாக அவளுடன் பேசிக் கொண்டே அவளை நெருங்கினான். ஆதிரன் தன்னை இவ்வாறு நெருங்குவான் என்பதை நினைத்துப் பார்க்காத வெண்ணிலா அதிர்ச்சியில் என்ன செய்வது எனப் புரியாமல் பயந்து பின் நோக்கி நடந்தாள். எவ்வளவு தூரம் தான் பின் நோக்கி நடப்பாள், ஒரு கட்டத்தில் சுவற்றில் இடித்து அவனிடம் இருந்து தப்பித்து செல்ல முடியாத வகையில் ஆதிரனிடம் சிக்கிக் கொண்டு முழித்தாள் வெண்ணிலா.
வெண்ணிலாவின் மாசு மருவற்ற இயற்கையான அழகை மூச்சுக் காற்று உரசும் நெருக்கத்தில் கண்டவன் தன்னை மீறி தன் காதலை கண்களில் வெளிப்படுத்தினான் ஆதிரன். ஆனால் வெண்ணிலா அதைக் கவனிக்காமல், மிக நெருக்கமாக ஆதிரன் நின்றதால் கண்ணை மூடியபடி அருவெறுப்பாக முகத்தை திருப்பிக் கொண்டு நின்றிருந்தாள்.
அவளின் அந்த முகத்திருப்பலைக் கண்டவன், அவளின் அரக்கனாக மாறினான். அரக்கனாக மாறிய வேகத்தில்,”இதத் தான் சொன்னேன்… இதயும் கழட்டி அந்த பணத்தோட சேத்து குடு வாங்கிக்கிறேன்…” எனக் கூறியபடி அவள் மார்பில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தில் குனிந்து முத்தம் வைத்தான். மாங்கல்யத்துடன் சேர்ந்து அவளது மார்புக்கும் அந்த முத்தம் சென்றடைய… பட்டென வெண்ணிலாவின் கரம் வேகமாக ஆதிரனின் கன்னத்தில் இறங்கியது.
அவள் மார்பில் தன் இதழ்கள் உரசியது ஆதிரனுமே முற்றிலும் எதிர்பாராதது. எதிர்பாராமல் தற்செயலாக அச்செயல் நிகழ்ந்து விட அடுத்த நொடியே வெண்ணிலாவின் கரம் ஆதிரனின் கன்னத்தில் பதம் பார்த்ததை அவன் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை.
“ஏய்… உன்னய மாதிரி வீட்ல ஒருத்தி வெளில இன்னொருத்திய தேடுற பொம்பள பொறுக்கிக்கிட்ட லாம் வந்து உதவி கேட்டேன் னு நினைக்கிறப்பவே எனக்கு அருவெறுப்பா இருக்கு… ச்சீ நீ இவ்ளோ கீழ்த்தரமா நடந்துக்குவ னு நினைக்கவே இல்ல…” என ஆதிரனின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் அருவெறுப்பில் முகத்தை சுழித்தபடி கத்தினாள் வெண்ணிலா.
அவள் தன்னை அடித்ததிலேயே கோபம் கொண்டவன், வெண்ணிலா பேசியதைக் கேட்டு பெருங்கோபம் கொண்டான் ஆதிரன்.
“யாரப் பாத்து டி பொம்பள பொறுக்கி னு சொன்ன?” என வெண்ணிலாவை அடிக்க கை ஓங்கியவன் அந்தரத்தில் அப்படியே கையை நிறுத்திவிட்டு, “ச்சீ…” என்றவாறு கையை கீழிறக்கினான் ஆதிரன்.
“ஓஓ… பண்றதெல்லாம் பண்ணிட்டு இதுல அடிக்க வேற கைய ஓங்குறியா? நா அப்பிடி உனக்கு என்ன தான் பண்ணிட்டேன்? எனக்கு இப்ப வரைக்கும் புரியல… சரி… அதெல்லாம் விடு… காலேஜ் டைம் ல உன்னய ஏதோ நா ஹர்ட் பண்ணி இருக்கேன் னு எனக்கு புரியுது. ஆனா, இப்ப என்ன பண்ணிட்டேன்? நீ குடுத்த பணத்த உன்னோட பணத்த திரும்ப குடுக்க வந்தேன்… அதுக்கு… இப்பிடி என்னய அசிங்கப்படுத்துவ னு நினைக்கல ஆதி…” என முகம் பொத்தி அழுதாள் வெண்ணிலா.
“கொஞ்சம் அமைதியா இருக்குறியா? உனக்குத் தான் பேச தெரியும் னு உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போகாத… ஏற்கனவே நீ பேசுனதுக்குத் தான் நா இப்பிடி மாறி இருக்கேன். ஏய்… அதெல்லாம் உனக்குத் தேவை இல்லை. இந்த தாலி அதாவது நா கட்டுன தாலி உன் கழுத்துல இருக்குற வரைக்கும் நீ என்னோட பொண்டாட்டி தான். நா கட்டுன தாலிய இப்பிடி உன் கழுத்துல தொங்க போட்டு ஆட்டிட்டு திரியுறது எனக்கு உன் கிட்ட எல்லா உரிமையும் இருக்கு னு சொல்லாம சொல்லிட்டு இருக்குற நீ…” என கோபத்தில் மேலும் அவளை நெருங்கி சுவற்றொடு சுவறாக அவளை நசுக்கியபடி தன் மொத்த எடையையும் அவள் மேல் சாய்த்தபடி நின்றான் ஆதிரன்.
அவன் செய்கையில் மூச்சுக்காற்றுக்காக வெண்ணிலா தடுமாற நூல் நுழையும் அளவு விலகி நின்றான் ஆதிரன்.
“என்னய விட்டு தள்ளிப் போ ஆதிரா…” என உச்சபட்ச கோபத்தில் தன் பலம் கொண்ட மட்டும் ஆதிரனை தள்ளினாள் வெண்ணிலா. அவள் தள்ளிய தள்ளலில் ஒரு அடி தான் அவனை பின்னே தள்ள முடிந்தது அவளால்.
“ஃபைனலி… பல வருஷம் கழிச்சு உன் வாயால மறுபடியும் என்னய அப்பிடி சொல்லிட்ட போல…” என இகழ்வாக இதழ்களை வளைத்தான் ஆதிரன்.
அவ்வார்த்தைகளை கேட்ட வெண்ணிலா, “இல்ல… இல்ல… நா அப்பிடி சொல்ல ல ஆதி…” என எச்சிலை கூட்டி விழுங்கினாள் வெண்ணிலா.
“நீ எப்பிடி வேணுனாலும் அண்ட் என்ன வேணுனாலும் சொல்லிட்டு போ… நீ சொன்னதும் உடனே அதுக்கு கீழ்படியுற அந்த ஏமாளி ஆதிரன் நா இல்ல. இப்போ தி க்ரேட் மான்ஸ்டர் ஆதிரன் நானு… உன்னோட பிடி என் கையில நிலா. நீ மூச்சு விடுறதா இருந்தா கூட நா அனுமதிச்சா மட்டும் தான் உன்னால மூச்சு விட முடியும்… ” என ஆணவத்துடன் கூறியபடி மேசையில் ஏறி அமர்ந்தான் ஆதிரன்.
“இவன் என்ன சொல்றான்?” என புரியாமல் ஆதிரனை ஒரு வித பயத்துடன் பார்த்தாள் வெண்ணிலா.
“ஓகே… உனக்கு புரியுற மாதிரியே தெளிவா சொல்றேன்… நா உன் கழுத்துல கட்டி இருக்குறது சாதாரண கயிறு இல்ல… அது உனக்கு கட்டுன சுருக்கு கயிறு… ஹா ஹா ஹா…” என வாய்விட்டு சிரித்தான் ஆதிரன்.
“இவன் என்ன பைத்தியமா? தெளிவா சொல்றேன் னு சொல்லிட்டு இப்பவும் புரியாமலே பேசுறான்… உஃப்… இவன் என்ன வேணுனாலும் பேசிட்டு போகட்டும். இவனோட பணத்த குடுத்துட்டு இவன் இருக்குற பக்கம் கூட நாம இனி திரும்ப வரக் கூடாது… ” என நினைத்தபடி “நீ எந்த கயிர வேணுனாலும் என் கழுத்துல கட்டி இருக்கலாம். அத பத்தி எனக்கு கவலை இல்ல… நா வந்தது உன்னோட பணத்த திருப்பி குடுக்கத் தான். அப்புறம் அர்த்த ராத்திரியில எனக்கு ஃபோன் பண்ற வேலையெல்லாம் வச்சுக்காத… அப்பிடி இனி பண்ணுனா இப்ப வாங்குன மாதிரி செருப்பால வாங்க வேண்டியது இருக்கும்…” என பதட்டத்தை உள்ளே மறைத்தபடியே பேசினாள் வெண்ணிலா.
“இந்த பணத்த குடுத்துட்டா நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுரும் னு நெனச்சியா?” எனக் கேலியாக வினவினான் ஆதிரன்.
“அக்ரிமென்ட் போட்டதே நீங்க தான ஸார்… பதினஞ்சு லட்சம் பணம் கேட்டு வந்தேன், அந்த பணம் வேணுனா நீ என் கழுத்துல தாலி கட்டனும் ஏதோ பழி வாங்கனும் னு சொன்ன… இப்ப அந்த பணம் எனக்குத் தேவைப்படல. போலீஸ் திருடன புடிச்சாச்சு… அப்புறம் இந்த பணம் எனக்கு எதுக்கு? இந்த பணத்தோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுருச்சு. அதானே அக்ரிமென்ட்டும் கூட…” வெண்ணிலா.
“எல்லாமே கரக்ட் தான்… பணம் குடுத்தா மாதிரி தான அதையும் கட்டுனேன். அப்ப அதையும் கழட்டி இப்பிடி வச்சுட்டு நீ போய்ட்டே இருக்கலாம். இத தான் நா சொன்னேன்… நீ வேற ஏதோ புரிஞ்சுக்கிட்டு ஏதேதோ பேசி…” என அவள் மார்பில் ஊஞ்சலாடும் மாங்கல்யத்தை பார்த்தவாறு அவள் அடித்த கன்னத்தை தேய்த்தவன், “இட்ஸ் ஓகே… நா அத வேற மாதிரி கழிச்சுக்கிறேன்…” என அவளை ஒரு மார்க்கமாக பார்த்தான் ஆதிரன்.
அவனது பார்வையில் உடல் கூசிப் போன வெண்ணிலா, “அக்ரிமென்ட் படி இத நா என்ன வேணுனாலும் செய்யலாம்… அத ஏன் எதுக்கு னு கேக்குற உரிமை உங்களுக்கு இல்ல… ” எனக் கோபமடைந்தாள்.
“அத கட்டுனவனே நாந்தான் டி…” ஆதிரன்.
அவனது பேச்சுக்கள் அவளை கோபமடைய வைத்தாலும் ஏனோ அவன் கட்டிய மாங்கல்யத்தை கழட்ட மனம் வரவில்லை. “என்னால முடியாது… அதுக்கு பதிலா வேற என்ன வேணுனாலும் செய்றேன்…” என இயந்திர கதியில் பதில் கூறினாள் வெண்ணிலா.
“எனக்கு அது தான் வேணும்… தாலிய கழட்டி குடுத்துட்டு போய்ட்டே இரு…” என அசராமல் பதில் கூறினான் ஆதிரன்.
“முடியாது…” வெண்ணிலா.
“ஏன் முடியாது?” ஆதிரன்.
அதற்கு பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள் வெண்ணிலா. “அப்பிடி உனக்கு கஷ்ட்டமா இருந்துச்சுனா நானே கழட்டுறேன்…” என அவளை மீண்டும் நெருங்க முயன்றான் ஆதிரன்.
“இல்ல… என் கிட்ட வந்தா அப்புறம் நா உன்னய என்ன பண்ணுவேன் னு உன்னால கனவுல கூட யோசிச்சு இருக்க மாட்ட…” என ஒரு கையால் தன் தாலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆதிரனை விரல் நீட்டி எச்சரித்தாள் வெண்ணிலா.
“என்ன? என்ன பண்ணுவ?” என மீண்டும் அவள் அருகில் நெருங்கி கன்னத்தில் முத்தமிட்டான் ஆதிரன்.
அவன் கொடுத்த முத்தத்தின் அதிர்ச்சியில், “நோ…” என பெருங்குரலெடுத்துக் கத்தினாள் வெண்ணிலா.
“என்ன நோ?” என்ற ஆதிரனின் குரல் எங்கேயோ கேட்பது போல் தோன்ற விழிகளைத் தட்டி நன்றாக பார்த்தாள் வெண்ணிலா. ஆதிரனின் அறை வாசலிலேயே தான் நின்று கொண்டிருப்பதும் அவன் மேசையின் அந்த பக்கம் அமர்ந்து ஏதோ முக்கியமாக எழுதிக் கொண்டிருப்பதும் தெரிந்தது.
சட்டென குனிந்து தன் கழுத்தைப் பார்த்தவள், அங்கு அவளது தாலி வெளியில் இல்லாமல் உள்ளே பத்திரமாக இருப்பதை உணர்ந்தாள் வெண்ணிலா. “அப்ப எல்லாமே கனவா? நிஜம் மாதிரியே தெரிஞ்சுச்சே…” என சுற்றும் முற்றும் அவள் சாய்ந்து நின்ற சுவர் என அனைத்தையும் நன்கு ஆராய்ந்தாள்.
மாற்றம் எதுவும் இல்லாமல் போகவே, “அப்ப இதெல்லாம் கனவு தானா?” என தன்னையே ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் வெண்ணிலா. உள்ளே நுழைந்ததும் அவனது உடையையும் தன் உடையையும் கண்டவள் கனவுலகிற்கு சென்று விட்டாள் என்பதை புரிந்து கொண்டாள் வெண்ணிலா.
“ஹலோ எக்ஸ் க்யூஸ் மீ… நானும் நீங்க உள்ள வந்ததுல இருந்து பாத்துட்டு இருக்கேன். அந்த இடத்துலயே ஆணி அடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்கீங்க… இதுல நோ னு வேற கத்த வேண்டியது. என்ன விசயமா என்னய பாக்க வந்தீங்க?” என கறார் பேர்வழியாக ஏதோ எழுதிக்கொண்டே பேசினான் ஆதிரன்.
“இது அவன் தானா? ஏதோ என்னய தெரியாத மாதிரியே பேசுறானே…” என மீண்டும் தன் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் வெண்ணிலா.
“என்ன மறுபடியும் அப்படியே நின்னுட்டு இருக்கீங்க?” என சற்று குரலை உயர்த்தினான் ஆதிரன்.
“இல்ல… இல்ல… இது கனவில்ல… நிஜம் தான்… ” என வலித்த தன் கரத்தை தேய்த்தபடி, “உங்களோட பணத்த குடுத்துட்டு போகலாம் னு வந்தேன்…” என பயத்துடன் கூறினாள் வெண்ணிலா. எங்கே தான் சற்று முன் கற்பனை செய்து கொண்டதைப் போல் பேசி விடுவானோ என பயந்தபடியே அவனது பதிலுக்காக நின்றிருந்தாள்.
“ஓஓஓ… ஓகே டேபிள் ல வச்சுட்டு கிளம்புங்க…” என வெண்ணிலாவின் முகத்தைக் கூட பார்க்காது எழுதுவதிலேயே கவனம் செலுத்தியபடி கூறினான் ஆதிரன்.
“நைட் எப்பிடிலாம் பேசுனான். இப்ப முகத்த கூட நிமிந்து பாக்க மாட்டேன் ங்குறான்…” என சிந்தித்தவாறு பணத்தை எடுத்து மேசையில் வைத்து விட்டு திரும்பினாள் வெண்ணிலா.
அவள் திரும்பிய அந்த நேரத்தில் வெண்ணிலாவை நோக்கி பறக்கும் முத்தங்களை ஆதிரன் பறக்க விட்டான்.அந்நேரம் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஆரண்யனும் மற்றொரு முக்கிய நபரும் உள்ளே வர… அறைக்குள் நடப்பதைக் கண்டு உள்ளே வந்த இருவரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இங்க என்ன நடக்குது?” என அவ்விருவரும் அறைக்குள் நுழைந்தனர்.
அறைக் கதவை நோக்கி திரும்பிய வெண்ணிலாவின் எதிரே இருவர் வந்து நின்றதைப் பார்த்து சற்று அதிர்ச்சியானாலும் பின்பு அவர்களைப் பார்த்து சிரித்தாள் வெண்ணிலா.
“ஹேய் வாயாடி… இங்க என்ன பண்ற?” என சிரிப்புடன் வந்து ஆரண்யன் வெண்ணிலாவை கட்டி அணைத்தபடி அவளின் பின்னால் நின்றிருந்த தன் அண்ணனைப் பார்த்து, “அண்ணியா?” என வாயசைத்தான்.
தான் வெண்ணிலாவுக்கு அளித்த பறக்கும் முத்தத்தை இருவரும் பார்த்து விட்டனர் என தெரிந்து சிறிது வெட்கத்துடன் எழுந்து நின்றவன் ஆரண்யன் இதழசைத்து கேட்ட கேள்விக்கு வெட்கத்துடன், “ஆமாம்” என தலையசைத்தான் ஆதிரன்.
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.