அன்றைய பொழுதென்னமோ சாதாரணமாகத் தான் விடிந்தது. அதே சூரியன் அதே காற்று ஜன்னல் ஓரத்தில் அதே குருவி சத்தம் பக்கத்து வீட்டில் ஒலிக்கின்ற அதே கந்த சஷ்டி கவசம் இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் வெண்ணிலா அதே வெண்ணிலா இல்லையே… காலையில் எழும் போதே நெஞ்சில் உறுத்தியது அந்த தாலி.
உடையின் உள்ளே இருந்து அதை வெளியே எடுத்தாள் வெண்ணிலா. காலையில் எழுந்ததும் முதன் முதலில் ஆதிரன் கட்டிய மாங்கல்யத்தில் தான் கண் விழித்தாள் வெண்ணிலா.
“இத ஏன் இன்னும் நா கழட்டாம வச்சு இருக்கேன் னு தெரியல… ஆனா இத என்னால கழட்ட முடியல. இதுக்கு முன்னாடி இப்பிடி ஒரு குழப்பத்துல நா இருந்ததே இல்ல…” என கண்ணை மூடி ஆழ மூச்செடுத்து சுவாசித்தவள், “என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் வெண்ணிலா…” என படுக்கையை விட்டு எழுந்தாள் வெண்ணிலா. மறக்காமல் தாலியை உடைக்குள் மறைத்துக் கொண்டே எழுந்தாள்.
“அப்பா… நேரம் ஆச்சு எந்திரிங்க…” எனக் குரல் கொடுத்தபடி சமையலறைக்குள் நுழைந்து காபி போட ஆரம்பித்தாள் வெண்ணிலா.
“உனக்கு முன்னாடியே நா எந்திரிச்சுட்டேன். இன்னக்கி நா தான் பர்ஸட்…” என சிரிப்புடன் செய்தித் தாளுடன் உள்ளே வந்தார் சுந்தரம்.
“நைட் லேட்டா தூங்குனேன் ல ப்பா. அதான் எந்திரிக்க லேட் ஆகிருச்சு. இன்னக்கி ஒரு நாள் சீக்கிரமா எந்திரிச்சுட்டு ரொம்ப பேசாதீங்க…” என மூக்கை சுழித்து அலகு காட்டினாள் வெண்ணிலா.
“இன்னக்கி நா தான் பர்ஸ்ட் னு ஒரு வார்த்தை தான சொன்னேன். அதுக்கு நா ரொம்ப பேசுறேனா?” என மகளின் மூக்கை பிடித்து கிள்ளி விட்டு சிரிப்புடன் சமையலில் மகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார் சுந்தரம்.
“அப்பா… நீங்க ஏன் இதெல்லாம் செய்றீங்க? ரெண்டு பேருக்குத் தான? நானே செய்றேன்…” வெண்ணிலா.
“அதே தான் நானும் சொல்றேன்… ரெண்டு பேருக்குத் தான? நானே செய்றேன். நீ ஸ்கூலுக்கு கிளம்புற வேலைய பாரு…” சுந்தரம்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம்…” வெண்ணிலா.
“நீ போய் ஸ்கூலுக்கு கிளம்பு நிலா…” என சமையலறையில் இருந்து மகளை வெளியே தள்ளினார் சுந்தரம்.
“ரொம்ப பண்றீங்க ப்பா… சாப்பாடு மட்டும் நல்லா இல்ல… நீங்க காலி… சொல்லிட்டேன்…” என்ற செல்லக் கோவத்துடன் பள்ளிக்கு கிளம்பச் சென்றாள் வெண்ணிலா.
“நா சமைச்ச சாப்பாட்ட சாப்பிட்டுத் தான் மேடம் நீங்க வளந்தீங்க… அப்ப தெரியலயோ…” என சமயலறையில் இருந்து குரல் கொடுத்தார் சுந்தரம்.
“சின்ன புள்ளையில ஒன்னும் தெரியல… அதுக்காக இப்பவும் அப்பிடியேவா இருக்க முடியும்?” என தன் அறையில் இருந்து கத்தினாள் வெண்ணிலா.
“இந்த வாய்க்கு ஒன்னும் கொறச்சல் இல்ல… வர வர வாய்க்கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சு நிலா…” சுந்தரம்.
“என் கிட்ட பேசிக்கிட்டே சாப்பாட்ட கெடுத்துறாதீங்க… நா குளிக்க போறேன்…” எனக் கத்தியபடி குளிக்க சென்றாள் வெண்ணிலா.
சின்ன சிரிப்புடனே தன் சமையல் வேலையை தொடர்ந்தார் சுந்தரம்.
சூரிய ஒளி முகத்தில் பளீரென்று அறைகையில் தான் கண் விழித்தான் ஆதிரன். கண் விழித்ததும் முதலில் தன் ஃபோனில் உள்ள வெண்ணிலாவின் முகத்தை கண்ட ஆதிரன் முகத்தில் பேரழகான புன்னகை ஒன்று அழகாக பூத்தது. “ஹாப்பி மார்னிங் தேவி…” எனக் கூறி விட்டு நெற்றியில் இதழ் பதித்தான் ஆதிரன்.
“இன்னக்கி நீ ஆபீஸ்க்கு வருவ னு எதிர்பாக்குறேன்… உன்னய நேர்ல பாக்காத வரைக்கும் மனுஷனா தான் இருக்குறேன். நேர்ல பாத்துட்டா அரக்கனா மாறிர்றேன். என்னய ஏன்டி இப்பிடி மாத்துற?” என வெண்ணிலாவின் பிம்பத்துடன் பேசியபடி அவளது மூக்கை திருகினான் ஆதிரன்.
குளித்துக் கொண்டிருந்த வெண்ணிலாவிற்கு பலமாக தும்மல் வந்தது. “என்ன இது… மொதல்ல அப்பா மூக்க கிள்ளுனதுக்கா இப்ப எனக்கு மூக்கு வலிக்குது? இப்ப யாரோ என்னய கிள்ளுன மாதிரி இருக்கே…” என்ற குழப்பத்துடனே குளித்து முடித்தாள் வெண்ணிலா.
குளித்து வெளியில் வந்தவன், “இன்னக்கி அவளுக்கு புடிச்ச ப்ளாக் கலர் ல போவோம்… பாத்துட்டு அதுக்கு தனியா சண்டை போடட்டும்…” என புன்னகை மாறாமலே ப்ளாக் கலர் ஃபுல் ஹேண்ட் சட்டை அணிந்து இன் செய்து ஆபீஸ்க்கு கிளம்பி கீழே வந்தான் ஆதிரன்.
காற்றில் அலை அலையாய் கலையும் தன் சிகையை கோதியவாறு கம்பீரமாக கீழிறங்கி வரும் ஆதினைக் கண்டு நெட்டி முறித்து கொஞ்சினார் சிவகாமி. அப்பொழுது, “அம்மா… நானு நானு…” என அவரின் முன்னே வந்து நின்றான் ஆரண்யன்.
ஆதிரனைப் போலவே ஆஷ் கலர் ஃபுல் ஹேண்ட் சட்டை அணிந்து நீட்டாக கிளம்பி வந்து நின்றிருந்தான் ஆரண்யன். அவனைக் கண்ட சிவகாமி, “நீ எங்க டா கிளம்பிட்ட?” என ஆச்சரியமாக வினவினார் சிவகாமி.
“அதெல்லாம் அப்புறம் சொல்றேன். நீ பர்ஸ்ட் அவனுக்கு பண்ணுன மாதிரியே எனக்கும் பண்ணு… டேய் அண்ணா… நீயும் வா…” என ஆதிரனையும் இழுத்து தன் அருகில் நிற்க வைத்தான் ஆரண்யன்.
“என் ரெண்டு பசங்களும் கொள்ளை அழகு… எந்த பொண்ணு கண்ணும் பட்டுற கூடாது…” என இருவருக்கும் சேர்த்து நெட்டி முறித்து தன் கண் மையிலிருந்து சிறிது எடுத்து இருவரின் காதோரத்திலும் திருஷ்ட்டிப் பொட்டு வைத்து மகிழ்ந்தார் சிவகாமி.
“அவனுங்களுக்கு மட்டும் வைக்கிற… எனக்கு…” என ஏக்கத்துடன் வந்து நின்றார் அருணாச்சலம்.
டீசர்ட் கைலியுடன் வந்து நின்ற அருணாச்சலத்தைக் கண்டு, “நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ அழகா இருக்கோம்… அதுனால அம்மா எங்களுக்கு திருஷ்ட்டிப் பொட்டு வச்சாங்க. நீங்க எப்பிடி இருக்கீங்க னு கொஞ்சம் கண்ணாடி ல பாருங்க…” எனக் கேலியாக கூறினான் ஆரண்யன்.
“ஏன்? எனக்கென்ன குறைச்சல்? என் பொண்டாட்டிக்கு நா அழகா தெரிஞ்சா போதும்… நீயே சொல்லு சிவா… நா உன் கண்ணுக்கு அழகா இல்லையா?” அருணாச்சலம்.
“என் கண்ணுக்கு என் புருஷன் எப்போதும் பேரழகன் தான்…” எனக் காதலுடன் அருணாச்சலத்தின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு, “டேய் வாங்கடா… இன்னக்கி இடியாப்பமும் தேங்கா பாலும் செஞ்சு இருக்கேன். வந்து மொதல்ல சாப்பிடுங்க…” என எதுவுமே நடக்காதது போல் உணவு மேசையை நோக்கி சென்றார் சிவகாமி.
“ஓஹோ…” எனக் கிண்டலாக கத்தியபடி தாயின் பின்னே சென்றான் ஆரண்யன்.
ஆதிரனோ வெண்ணிலாவின் நினைவில் காந்த புன்னகையை சிந்தியபடி, “என்ன ப்பா… ஒரே ரொமான்ஸா இருக்கு?” என அருணாச்சலத்தின் தோளை இடித்தான்.
சிவகாமி தந்த முத்தத்தில் இன்ப அதிர்ச்சியில் இருந்தவர், “டேய் பாத்தீங்களாடா… உங்கள விட சிவாக்கு என்னய தான் ரொம்ப புடிக்கும்…” என இளைஞனாய் துள்ளிக் குதித்தபடி சிவகாமியின் கன்னத்தில் பதில் முத்தத்தை பதித்து விட்டு சமத்து பிள்ளையாக உணவு மேசையில் அமர்ந்தார் அருணாச்சலம்.
“இங்க நாங்களும் இருக்கோம்…” என இதழுக்குள் சிரித்தபடி கூறினான் ஆரண்யன்.
“உன்னய யாரு டா இருக்க சொன்னது? சாப்பிட்டு கிளம்பு…” அருணாச்சலம்.
“உஷ்… வம்பிழுக்காம சாப்பிடுங்க…” என அதட்டினார் சிவகாமி.
உடனே அருணாச்சலம் நல்ல பிள்ளையாக குனிந்து இடியாப்பத்தை சாப்பிடத் தொடங்கினார்.
“இது தான் மனைவி சொல்லே மந்திரமா ப்பா?” என சிரித்தான் ஆதிரன்.
“பேசாம சாப்பிடு டா…” என சாப்பாட்டில் கவனம் செலுத்தினார் அருணாச்சலம்.
“ஆமா… ஆரண், நீ எங்க வெளில கிளம்பிட்ட?” என அவனுக்கு இடியாப்பத்தை பரிமாறியபடி கேட்டார் சிவகாமி.
“இதென்ன கேள்வி? ஆபீஸ்க்குத் தான் ம்மா…” ஆரண்யன்.
“வெளிநாட்ல இருந்து வந்து ஒரு நாள் தான டா ஆச்சு? அதுக்குள்ளயும் கிளம்பிட்ட…” சிவகாமி.
“நா என்ன டூரா போனேன்… பிஸினஸ் விசயமாத் தான ம்மா போனேன்…” ஆரண்யன்.
“டேய் குட்டா… இன்னும் ஒரு ரெண்டு நாள் வீட்ல இரு டா… ஆதி தான் கேக்க மாட்டான்… ” சிவகாமி.
“அம்மா… அப்பிடி என்னய கூப்பிட கூடாது னு சொல்லி இருக்கேன் ல… ” என முகத்தை சுருக்கியவாறு தாயைப் பார்த்தான் ஆரண்யன்.
“ப்ச் போடா…” என சோகமானார் சிவகாமி.
“அவன் போனா போகட்டும் சிவா… நா இருக்கேன். இன்னக்கி நாம ரெண்டு பேரும் கோவிலுக்கு போகலாம்…” என மனைவியை சமாதானப்படுத்தினார் அருணாச்சலம்.
” டேய்… அதான் அம்மா இவ்ளோ தூரம் சொல்றாங்கல்ல, இன்னும் ரெண்டு நாள் வீட்ல இருந்துட்டு வாடா…” ஆதிரன்.
“நீ சும்மா இரு டா… நீ மட்டும் ஆபீஸ்க்கு ஜாலியா போயிருவ. அம்மா பாட்டுக்கும் அது இது னு சமைச்சு குடுத்துட்டே இருப்பாங்க… நானும் ஒரு ஃப்லோ ல எல்லாத்தையும் சாப்பிட்டு ஒரு வாரத்துல பத்து கிலோ கூடிருவேன். அப்புறம் எல்லா பொண்ணும் என்னய அங்கிள் அங்கிள் னு தான் கூப்பிடுவாங்க…” என சோகமாக கூறினான் ஆரண்யன்.
“பத்து கிலோவா? இதெல்லாம் ரொம்ப டா… நீ போ… ஆபீஸ்க்கே கிளம்பு… நா எதுவுமே சொல்ல ல. எனக்கு என் புருஷன் இருக்காரு…” சிவகாமி.
“அப்பிடி சொல்லு டி என் செல்லக்கிளி…” என பெருமையுடன் தன் மனைவிக்கு காற்றில் முத்தம் குடுத்தார் அருணாச்சலம்.
“ம்ம்… ம்ம்… நடக்கட்டும் நடக்கட்டும்…” என கை கழுவியபடி எழுந்தான் ஆதிரன்.
“இன்னும் ஒன்னு சாப்பிட்டு போடா…” சிவகாமி.
“ப்ரோ… நில்லுங்க… நானும் வந்துட்டேன்…” என அவசர அவசரமாக இடியாப்பத்தை வாய்க்குள் அமுக்கினான் ஆரண்யன்.
“நீ மெதுவா சாப்பிட்டு வாடா… நா முன்னாடி போறேன். இன்னக்கி முக்கியமான ஒரு க்ளைன்ட் மீட்டிங் இருக்கு… ” என கழுவிய கையை சிவகாமியின் புடவை முந்தானையில் துடைத்தான் ஆதிரன்.
“இல்ல இல்ல… அவ்ளோ தான் வந்துட்டேன்… ” ஆரண்யன்.
“டேய்… ஏன் டா என் பொண்டாட்டி சேலையில தொடைக்கிற? அங்க தான் துண்டு இருக்குல்ல…” என சிடுசிடுத்தார் அருணாச்சலம்.
“எனக்கு னு ஒரு பொண்டாட்டி வர்ற வரைக்கும் அம்மா முந்தானையில தான் துடைப்பேன். அதுக்கு எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு…” என வேண்டுமென்றே மெதுவாக துடைத்தவன், “கிளம்புறேன் ம்மா…” என தாயின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான் ஆதிரன்.
“பாத்தியா பாத்தியா… எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான். என்னய வெறுப்பேத்திட்டு போறான்…” அருணாச்சலம்.
“எப்ப பாரு புள்ளைங்க கூட போட்டி போட்டுட்டு… பேசாம சாப்பிடுங்க. நா போய் கோயிலுக்கு கிளம்புறேன்… ” சிவகாமி.
“நானும் கிளம்புறேன் ம்மா. பை…” என ஆரண்யனும் சிவகாமியின் புடவையில் கையை துடைத்துவிட்டு கன்னத்தில் முத்தமிட்டு ஓடினான்.
“ரெண்டு பேரும் வேணும்னே பண்றானுக சிவா…” என மனைவியிடம் முறையிட்டார் அருணாச்சலம்.
“பேசாம சாப்பிட்டு கோயிலுக்கு கிளம்புங்க…” என சிரித்தவாறு உள்ளே சென்றார் சிவகாமி.
காரை ஸ்டார்ட் செய்து திருப்புகையில் ஓடி வந்து காரில் ஏறிக் கொண்டான் ஆரண்யன். “ஏன்டா இவ்ளோ அவசரமா என் கூட வர்ற? மெதுவா வர வேண்டியது தான?” ஆதிரன்.
“உன் கூட வந்தா அப்பிடியே வந்துருவேன். இல்லனா அம்மா ஏதாவது சொல்லி வீட்ல உக்கார வச்சுருவாங்க அண்ணா. அத்தோட அப்பாவ ரொம்ப வெறுப்பேத்திட்டு வந்து இருக்கேன். ரெண்டு பேரும் டைம் ஸ்பென்ட் பண்ணட்டும். நா இருந்தா அம்மா என்னய தான் கவனிச்சுட்டு இருப்பாங்க… அதான்…” என சிரித்தான் ஆரண்யன்.
“இவன் கூட வந்தால் வெண்ணிலாவை பார்த்து விட்டு செல்ல முடியாதே… கழட்டி விடலாம் னு பாத்தா கோந்து மாதிரி வந்து ஒட்டிக்கிட்டான்…” என உள்ளத்தில் மூண்ட ஏமாற்றத்துடன், “சரி சரி…” என இறுக்கமாக கூறியபடி காரை சாலையில் செலுத்தினான் ஆதிரன்.
குளித்து முடித்து பள்ளிக்கு கிளம்பி சாப்பிட வந்து அமர்ந்தாள் வெண்ணிலா. “வா… வா… சாப்பாடு எல்லாம் சூடா இருக்கு…” என சமைத்ததை எடுத்து பரப்பி வைத்தார் சுந்தரம்.
“பார்ரா… வாசனையே ஆள தூக்குதே…” என தந்தையை மெச்சியபடி தட்டை எடுத்து வைத்தாள் வெண்ணிலா.
“உனக்காக இட்லி… தொட்டுக்க மல்லி சட்னியும் சாம்பாரும் செஞ்சு இருக்கேன். அப்புறம் கருவேப்பிலை பொடி இருக்கு…” என பெருமையாக கூறினார் சுந்தரம்.
“சாம்பாரா? அப்ப மதியத்துக்கு சாம்பார் சாதமா?” என இட்லியை எடுத்து தனக்கும் தந்தைக்கும் தட்டில் எடுத்து வைத்தபடி கேட்டாள் வெண்ணிலா.
“கரெக்ட்டா சொல்றியே… எப்பிடிமா கண்டுபுடிச்ச?” என ஆச்சர்யமாக வினவினார் சுந்தரம்.
“ஆமா… இது பெரிய சிதம்பர ரகசியம்… நா ஸ்கூல் படிக்கிறப்ப இதே தான செஞ்சு தருவீங்க…” என சிரித்தாள் வெண்ணிலா.
தன் மகளின் சிரிப்பை ரசித்துப் பார்த்தார் சுந்தரம். அவர் அவ்வாறு பார்ப்பதைக் கண்ட வெண்ணிலா, “என்னப்பா அப்பிடி பாக்குறீங்க? என்னய என்னமோ புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க?” என சாப்பிட்டவாறே கேட்டாள்.
“இன்னக்கி என்னமோ புதுசா தான் டா தெரியுற நீ… உன் முகத்துல ஏதோ புதுசா ஒரு தேஜஸ் வந்து சேந்து இருக்கு. பொதுவா கல்லியாண பொண்ணுங்களுக்குத் தான் இந்த மாதிரி தேஜஸ் முகத்துல தெரியும் னு சொல்லுவாங்க…எனக்கென்னமோ உனக்கு கல்லியாணக் களை வந்துருச்சு னு நெனைக்கிறேன். சீக்கிரமே மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுறனும்…” என அன்பாக புன்னகைத்தார் சுந்தரம்.
அவர் கூறியதைக் கேட்டு வெண்ணிலாவிற்கு புரையேறித் தடுமாறினாள். “தண்ணிய குடி மா…” என எழுந்து வெண்ணிலாவின் தலையில் தட்டியவாறு கூறினார் சுந்தரம்.
வெண்ணிலாவிற்கு இருமல் நின்றதும், “ப்பா… சும்மா இருங்க ப்பா. காலையில ஏதாவது உலறிட்டு இருக்காம. என் கல்லியாணத்துக்கு பணம் சேக்குறேன் னு சொல்லித்தான் ஒரு பெரிய பிரச்சனையில மாட்டி அதுலருந்து வெளி வந்து ஹப்பாடா னு மூச்சுக் கூட விடல, அதுக்குள்ள மறுபடியும் கல்லியாணப் பேச்ச எடுக்குறீங்க?” என அதட்டினாள் வெண்ணிலா.
“அதுக்காக உனக்கு கல்லியாணம் பண்ணாமலேயேவா இருக்க முடியும்? இப்போல இருந்து பாக்க ஆரம்பிச்சா தான் அடுத்த வருஷத்துக்குள்ள கல்லியாணம் பண்ணலாம்… என்ன டா பாக்கட்டா?” என ஆசையுடன் வினவினார் சுந்தரம்.
“அப்பா… சும்மா இருங்க ப்பா… இப்போதைக்கு அந்த பேச்ச எடுக்காதீங்க. நா ஸ்கூலுக்கு கிளம்புறேன்…” என எழுந்தாள் வெண்ணிலா.
“சரி மா, அத விடு… இன்னக்கி போய் அந்த தம்பிக்கிட்ட பணத்த குடுத்துட்டு வந்துர்றியா?” சுந்தரம்.
“ம்ம்… ஆமா ப்பா… ஸ்கூல்லுக்கு போய்ட்டு பர்மிஷன் வாங்கிட்டு போய் குடுத்துட்டு வந்துடுறேன்…” வெண்ணிலா.
“சரி… அப்பிடியே அந்த தம்பிய சாப்பிட கூப்பிட மறந்துறாத…” சுந்தரம்.
“ஹான்… ஹான்… போய்ட்டு வர்றேன் ப்பா…” என தலையை ஆட்டியபடி தந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் வேகமாக வெளியேறினாள் வெண்ணிலா.
வீட்டை விட்டு வெளியே வந்து தான் மூச்சை இழுத்து விட்டாள் வெண்ணிலா. “ஏற்கனவே தாலி என் கழுத்துல இருக்குறப்ப நா எப்பிடி ப்பா இன்னொரு கல்லியாணத்துக்கு ஒத்துக்குவேன்? ” என வேதனையுடன் நினைத்தவாறு பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வெண்ணிலா.
தன்னுடைய ஸ்கூட்டி இருந்தாலும் பள்ளி பக்கத்திலேயே தான் என்பதாலும் நடந்து செல்வது மனதுக்கு நிம்மதியாக இருக்கும் என்பதாலும் பெரும்பாலும் பள்ளிக்கு வெண்ணிலா நடந்தே தான் செல்வாள்.
அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ஆளே மாறிப் போனான் ஆதிரன். ஒரு பக்கா பிஸினஸ்மேனாக மாறிப் போனான் ஆதிரன். ஆரண்யனும் பொறுப்பான முதலாளியாக தனக்கு இடப்பட்ட பொறுப்புகளை கவனிக்க சென்றான்.
அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முக்கியமான க்ளைன்ட் மீட்டிங் சற்று சொதப்ப தோல்வியை ஏற்க முடியாமல் கோபத்தின் உச்சத்தில் இருந்தான் ஆதிரன். இறுதியாக, “அப்பாவ வர சொல்லலாமா அண்ணா?” என மெதுவாக கேட்டான் ஆரண்யன்.
“அப்ப என்னால முடியாது ங்கிறியா?” என பதிலுக்கு கத்தினான் ஆதிரன்.
அப்பொழுது இன்டர்காமில் அழைப்பு வர… எடுத்து காதில் வைத்தான் ஆதிரன். “ஸார்… உங்கள பாக்க மிஸ் வெண்ணிலா ங்கிறவங்க ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க…” எனத் தயங்கி தயங்கி வரவேற்பாளர் கூற… சட்டென அவனுள் மின்னல் தாக்கியது.
தன் கணினியில் சிசிடிவி ரெக்கார்டை எடுத்து அதில் பார்வையை பதித்தபடி, “என்ன பேர் சொன்னீங்க?” என்றான் ஆதிரன்.
“மிஸ் வெண்ணிலா ஸார்… உங்கள நேர்ல பாத்து ஏதோ குடுக்கனுமாம்…” என அந்த பக்கம் இருந்து பதில் வந்தது.
சில்வர் பார்டரில் ப்ளைன் கருப்பு வண்ண புடவை அணிந்து பதட்டத்துடன் சுற்றும் முற்றும் ஆராய்ந்தபடி அமர்ந்திருக்கும் வெண்ணிலாவை கண்களால் ரசித்தபடி, “இப்ப எனக்கு ஒரு முக்கியமான க்ளைன்ட் மீட்டிங் இருக்கு. ஒரு டூ ஹவர் வெயிட் பண்ண சொல்லுங்க…” என கடுமையான குரலில் கூறி விட்டு இன்டர்காமை வைத்தான் ஆதிரன்.
கணினியில், வரவேற்பாளர் வெண்ணிலாவிடம் கூறுவதும் உடனே வெண்ணிலாவின் முகம் கோபத்தையும் சோகத்தையும் கலந்து வெளிகாட்ட அதை கண்ணிமைக்காமல் ரசித்தான். ஆதிரனின் முக மாற்றங்களை விடாமல் பார்த்திருந்தான் ஆரண்யன்.
அவள் ஒரு வித கவலையுடன் இருக்கையில் உட்காருவதை கவனித்து விட்டு, “குட்டா… மீட்டிங் க்கு அரேன்ஜ் பண்ணு…” என உற்சாகமாக கூறினான் ஆதிரன்.
அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஆரண்யன், “சரி டா அண்ணா…” என மீட்டிங் வேலையை கவனிக்கச் சென்றான்.
தனக்காக காத்திருக்கும் வெண்ணிலாவை ஒரு வித திருப்தியுடன் கவனித்தவாறே மீட்டிங்க்கு உற்சாகத்துடன் தயாரானான் ஆதிரன். சிறிது நேரத்தில் ஆரண்யன் வந்து, “அனைத்தும் ரெடி அண்ணா…” என அழைத்தான்.
“ஓகே…” என ஆரண்யனுடன் மீட்டிங் ஹாலை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆதிரன்.
“இந்த தடவை சக்சஸ் ஆகிருமா ண்ணா?” என ஆதிரனுடன் நடந்தபடி வினவினான் ஆரண்யன்.
“நீயே வந்து பாரு…” என புன்னகையுடன் மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தான் ஆதிரன்.
உற்சாகத்துடன் மீட்டிங்கை தொடங்கிய ஆதிரன், அடுத்த அரை மணி நேரத்திலேயே அந்த க்ளைன்ட் மீட்டிங்கை வெற்றிகரமாக முடித்தான். அனைவரும் வழக்கத்தை விட மிக சிறப்பாகவே மீட்டிங் நடந்தது என கூற ஆரண்யன் மிகுந்த ஆச்சர்யமானான்.
“எப்பிடி டா அண்ணா?” என ஆச்சர்யமாக வினவியவாறு ஆதிரனின் பின்னே அவனின் கேபினுக்குள் நுழைந்தான் ஆரண்யன்.
“என்ன… எப்பிடி?” என சின்ன சிரிப்புடன் தனது சுழல் இருக்கையில் அமர்ந்து இலகுவாக சுழன்றபடி கேட்டான் ஆதிரன்.
“டேய் டேய் நடிக்காதடா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் என்ன பண்றது னு தெரியாம அப்பாவ கூப்பிடலாம் னு சொன்னதுக்கு என் மேல கோவப்பட்டு கத்துனவன் அதுக்கு அடுத்த செகண்ட்டே ஆளே மாறிட்ட… யார்ரா அந்த சீக்ரெட் ஆப் யுவர் எனர்ஜி?” ஆரண்யன்.
“அதெல்லாம் யாரும் இல்லை… நீதான் அப்பாவ கூப்பிடலாம் னு என் ஈகோ வ தூண்டி விட்ட… அதான் அந்த ஈகோவுக்கு தீனி போடுற மாதிரி மீட்டிங்க சக்ஸஸா முடிச்சேன்…” ஆதிரன்.
“சும்மா பொய் சொல்லாத டா அண்ணா… நா எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருந்தேன்… பாப்போம் பாப்போம் ஒரு நாள் டேய் குட்டா னு என் கிட்ட வந்து நின்னு தான் ஆகனும்… அப்போ கவனிச்சுக்கிறேன்…” என சிரிப்புடன் அங்கிருந்து தன் கேபினுக்கு சென்றான் ஆரண்யன்.
அவன் சென்றதும் கணினியில் வெண்ணிலா தனக்காக காத்திருப்பதை கண்ட ஆதிரன், வரவேற்பாளரிடம் கூறி அவளை உள்ளே வர சொன்னான். சில நொடிகளில் அறைக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, “கம் இன்…” என தன் எதிர்பார்ப்பை வெளியில் காட்டாது கடுமையான குரலில் கூறினான் ஆதிரன்.
உள்ளே நுழைந்த வெண்ணிலாவைக் கண்டு, அவன் விழிகள் தேடியது உடைக்குள் மறைக்கப்பட்டிருக்க ஏமாற்றத்துடன் “என்ன விசயம்?” என புருவத்தை உயர்த்தினான் ஆதிரன்.
“அது… இல்ல…” என அவனின் உடையையும் தன் உடையையும் கண்டு தடுமாறினாள் வெண்ணிலா.
“என்ன விசயம் னு கொஞ்சம் சீக்கிரமா சொன்னா நல்லா இருக்கும். எனக்கு இத விட நிறைய முக்கியமான வேலை இருக்கு… ” ஆதிரன்.
“இல்ல… உங்களோட பணம் என் கிட்ட இருந்தது. அத திருப்பி குடுக்கலாம் னு வந்தேன்… ” என தடுமாற்றத்தை தவிர்த்தபடி கூறினாள் வெண்ணிலா.
“என்னோட பணமா?” ஆதிரன்.
“ஆமா… நேத்து என் அப்பாவ காப்பாத்த குடுத்தீங்கல்ல… அதான் போலீஸ் ஸ் ல திருடன புடிச்சுட்டாங்கள்ல. அதுனால இந்த பணம் தேவைப்படல… நேத்தே குடுத்து இருக்கனும்… நேத்து இருந்த அதிர்ச்சியில குடுக்க மறந்துட்டேன். இந்தாங்க உங்த பணம்…” என பணத்தை குடுத்தாள் வெண்ணிலா.
“இந்த பணத்துக்காகத் தான நேத்து அக்ரிமென்ட் போட்டது. ஸோ இந்த பணம் என்னோடது இல்ல. உன்னோடது தான். எடுத்துட்டு கிளம்பலாம்… ” ஆதிரன்.
“இல்ல ஸார்… என் அப்பா குடுத்துட்டு வர சொல்லி இருக்காரு… இந்தாங்க…” என உள்ளுக்குள் மூண்ட கோபத்தை உள்ளடக்கி பணத்தை எடுத்து மேசையில் வைத்தாள் வெண்ணிலா.
“ஓஓஓ… இது என்னோட பணம் னு திருப்பி குடுக்குற… அதே போல என்னொட பொருள் ஒன்னு உன் கிட்ட இருக்கு. அதையும் சேத்து இதோட குடு. நா வாங்கிக்கிறேன்… ” எனக் கூறியபடி இருக்கையில் இருந்து எழுந்து வெண்ணிலாவின் அருகில் வந்தான் ஆதிரன்.
“என்ன? என்ன பொருள்?” என அவனின் அருகாமையில் தடுமாறினாள் வெண்ணிலா.
“ஓஹோ… என்ன னு உனக்குத் தெரியாது?” என வெண்ணிலாவை மேலும் நெருங்கினான் ஆதிரன்.
“இல்ல… நிஜமா தெரியாது…” என தடுமாறியபடி அவனின் நெருக்கம் காரணமாக பின்னோக்கி நடந்தாள் வெண்ணிலா.
அவள் பின்னே நடக்க நடக்க முன்னே நடந்தான் ஆதிரன். இறுதியில் வெண்ணிலா சுவற்றில் முட்டிக் கொண்டு நிற்க, அவனும் அவளை மிக நெருக்கமாக நின்றான். அவனின் மூச்சுக் காற்று நிலாவிற்கு அவளது பழைய நாட்களை நினைவுப் படுத்த மிகவும் பலவீனப்பட்டாள் அவள்.
“இப்ப நீயா வெளில எடுக்குறியா? இல்ல நா எடுக்கவா?” என மேலும் அவளை நெருங்கி நின்றான் ஆதிரன்.
“இல்ல… புரியல…” என அவளால் இதழ்களை மட்டும் தான் அசைக்க முடிந்தது.
“நீ எடுக்க மாட்ட… நானே எடுக்குறேன்…” என்றபடி வெண்ணிலாவின் உடைக்குள் இருந்த மாங்கல்யத்தை வெளியில் எடுத்தான் ஆதிரன்.
“இதத் தான் சொன்னேன்… இதயும் கழட்டி அந்த பணத்தோட சேத்து குடு வாங்கிக்கிறேன்…” எனக் கூறியபடி அவள் மார்பில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தில் குனிந்து முத்தம் வைத்தான். மாங்கல்யத்துடன் சேர்ந்து அவளது மார்புக்கும் அந்த முத்தம் சென்றடைய… பட்டென வெண்ணிலாவின் கரம் வேகமாக ஆதிரனின் கன்னத்தில் இறங்கியது.
அந்நேரம் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஆரண்யனும் மற்றொரு முக்கிய நபரும் உள்ளே வர… அறைக்குள் நடப்பதைக் கண்டு உள்ளே வந்த இருவரும் அதிர்ச்சியாகி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இனி என்ன நடக்கும்?
(நிலவு மலரும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.