அத்தியாயம் -8
திருமணம்
விடியற்காலையில் என்பதனால் மணப்பெண்ணை அலங்கரிக்க வந்த பார்லர் பெண்கள் ரதியையும்
துணைக்கு அழைக்கலாம் என்று வந்து கதவை தட்ட,
இரவெல்லாம் அழுதழுது முகம் எல்லாம் வீங்கி போய்
தூங்கிக் கொண்டிருந்த ரதி கடினப்பட்டு இமைகளை பிரித்து ,”இதோ வர பொறுங்க !!என்று கதவை திறந்தாள்”
கதவிற்கு
அந்தப் பக்கம் இருந்த பார்லர் பெண்கள் உங்களை மாலதி வர சொன்னாங்க .
உங்களுக்கும்
சேர்த்து தான் மேக்கப் போட சொல்லி
இருக்காங்க .”சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க”!
இவர்கள்
சொன்னதை கேட்டு மாலதியின் அறைக்கு சென்ற ரதி,
எதற்காக எனக்கு மேக்கப்
நான் சிம்பிளாவே கிளம்புகிறேன் உனக்கு மேக்கப் போட்ட போதாதா?
நீதான கல்யாண பொண்ணு?.
இங்க
பாரு ரதி செல்லம்! இன்னிக்கு ஒரு நாள் தான் அக்கா இருப்பேன். நான்
சொல்றத நீ சமத்தா கேக்கணும் .யாரும் உன்னை எதுவும் சொல்ல
மாட்டாங்க.
நீயும் வா உனக்கு சாரி கட்டவும் தெரியாது வந்து
இவங்க கிட்ட உட்கார்ந்து சாரி கட்டிட்டு சிம்பிளா மேக்கப் பண்ணிக்கோ சரியா
ரொம்பலாம் வேண்டாம். அப்புறம் உங்க மாமா எனக்கு பதிலா உன்ன கல்யாணம் பண்ணிட்டாங்கனா என்ன
பண்றது?
“எப்ப
பாரு என்கிட்ட வம்பு பேசுறது உங்களுக்கு வேலையா போச்சு போங்க அக்கா” .
1000
பேர் இருந்தாலும் எங்க மாலதி அக்கா மாதிரி வருமா! மாமா அதெல்லாம் என்னை கண்டுக்க கூட மாட்டாரு !
“எங்க
மாலதிக்கா தான் தேவதை மாதிரி இருப்பாங்க இன்னிக்கி “
அங்கு
நின்ற பார்லர் பெண்களிடம் திரும்பி,அக்கா எனக்கு சாரி கட்டி
விட்ருங்க. சிம்பிளா மேக்கப் பண்ணி விடுங்க ரொம்ப ஜாஸ்தியா
எல்லாம் வேண்டாம்.
சரிம்மா! குளிச்சிட்டு வாங்க. உங்களுக்கு பண்ணிடலாம் இவங்களுக்கு அவ்வளவு தான் முடிய போகுது இன்னும்
ஒரு மணி நேரத்துல பூஜைகள் எல்லாம் ஆரம்பிச்சிடுவாங்க கரெக்டா இருக்கும் சீக்கிரம்
குளிச்சிட்டு வாங்க.
சரிக்கா
ஒரு 15 நிமிஷம் நான் உடனே வந்துடுவேன்.
ரூமிற்கு
பரபரவென நடந்து சென்ற ரதி யார் மீதோ மோதி தடுமாறி நின்று பார்த்தால், ராகவ் தான் நின்று கொண்டிருந்தான்.
ரதிம்மா இப்படி மோதுறதே வேலையா இருக்கியா? என்ன அவ்வளவு அவசரம்? நீ இப்படி ஓடுற?
என்று ரதியின் முகத்தை பார்த்த ராகவிற்கு ஏதோ
தவறாகப்பட்டது என்ன இந்த பொண்ணு முகம் இப்படி வீங்கி இருக்கு கண்ணெல்லாம் சிவந்து
இருக்கு? ஒரு
வேலை விஷ்வா ஏதாவது இந்த பொண்ண
சொல்லிட்டானோ !என்று அப்போதும் விஷ்வாவை தான் தவறாக
நினைத்தான்..
விஷ்வாவின்
மேல் ராகவிற்க்கு நம்பிக்கை எல்லாம் இல்லாமல் இல்லை. பெண்கள் விஷயத்தில் அவன் இதுவரை நடந்து கொண்ட
விதத்தைப் பார்த்து ராகவ் அப்படி நினைத்துக் கொண்டான்.
விஸ்வ
கடன்கார என்ன பண்ணானு வேற தெரியலயே!!அந்த பொண்ணு கிட்ட பேசுற மாதிரி தெரியல .சரி அப்புறம் இதை பத்தி விஷ்வா கிட்ட பேசணும், என்று அங்கிருந்து ரதிக்கு வழி விட்டு , சரிமா
அவசரமா போயிட்டு இருக்க நம்ம அப்புறம் பேசலாம்.
“சரிங்க
அண்ணா “!
குளித்து தயாராகி வெளியே வந்த ரதி வெறும்
பாவாடையும், ரவிக்கையும்
மட்டும் கட்டிக்கொண்டு மாலதியின் அறைக்கு சென்றால் அங்கே சென்று அவளுக்கான சின்ன, சின்ன ஒப்பனைகள் மட்டுமே செய்து கொண்டால்.
ஏற்கனவே
இடைவரை கூந்தல் இருப்பதினால் பெரிதாக ஜவுரி எதுவும் வைக்க வேண்டிய அவசியம்
இல்லாமல் போயிற்று.
எல்லாம்
முடித்த பின் ரதியை பார்த்த மாலதிக்கும் பார்லர், பெண்களுக்கும் இவள்
உண்மையிலேயே ரதிதானோ! தேவலோகத்தில் இருந்து கீழே இறங்கி வந்த
பெண்ணா என்று கூட சந்தேகம் வந்துவிட்டது.
அந்த சில்வர் ஜரிகை போட்ட புடவையில் அளவான
ஒப்பனையுடன் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தால்.
நான்
மட்டும் பொண்ணா இருந்தேன்வை ரதி,” உன்னையே கல்யாணம் பண்ணிக்குவேன்” என்ற மாலதியின்
பேச்சைக் கேட்டு
போங்க
அக்கா! எனக்கு
வெக்கமா இருக்கு! என்று அவள் வெட்கத்தில் சிவக்க,” அவளின் சிவந்த கன்னங்கள் இரண்டும் மேலும் செர்ரி பழம் போல் சிவந்து
காட்சியளித்தது”.
அங்கு
நின்று பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் சிறிதாக பொறாமை கூட எட்டிப் பார்த்தது ரதியின்
அழகை பார்த்து.
எனக்கு
என்னமோ ரதி, இன்னைக்கு எனக்கு கல்யாணமா இல்ல? உனக்கும் கல்யாணம் நடக்க போகுதா தெரியல? “மாப்ள
மட்டும் ரெடி பண்ணிட்டோம்னா ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில் கல்யாணம் பண்ணிக்கலாம்
இல்லையா” ?
சட்டென்று
மருது !சொல்லி
சென்ற வார்த்தை ரதியின் மனதில் வந்து பயத்தை ஏற்படுத்த. ஐயோ!!! அக்கா அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க! என்னால
அதை பத்தி யோசிக்க கூட முடியாது எனக்கு இன்னும் கொஞ்ச நாள் டைம் வேணும் நான்மேல படிக்கலாம்னு இருக்கேன் நடுங்கிய குரலில்
கூறினாள்
சரி சரி!! நான் இப்ப என்ன
சொல்லிட்டேன்னு இப்படி பயப்படுற? அதெல்லாம் ஒன்னும் நடக்காது இன்னும் ரெண்டு வருஷம் மேல படி, அம்மாட்ட சொல்லி உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவேனா நீ அங்க
இருந்தே படிக்க போயிட்டு வருவியா சரியா !
மாலதி
சொன்ன விஷயங்களை கேட்டு ரதியின் மனம் சந்தோஷப்பட்டாலும், நேற்று மருது சொல்லி
சென்ற வார்த்தைகள் இன்னும் மனதை தைக்க தான் செய்தது.
பெரியம்மா தன்னை என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் தனக்கு
படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா ?என்று பல சிந்தனைகளை மனதில் போட்டு குழப்பிக்கொண்டு அமைதியாக தலையை மட்டும் ஆட்டி விட்டு நின்று விட்டாள்.
சரி அக்கா நா கிளம்பிட்டேன் இல்லையா? நான் போய் மத்தது எல்லாமே
கரெக்டா ஔ பண்ணிட்டாங்களா இல்லையான்னு பாத்துட்டு வரேன் !
பெரியம்மா இல்லைன்னா என்னை திட்டுவாங்க.
நீ
ஒன்னும் பார்க்க வேண்டாம் என்கூட அமைதியா உட்காரு, அம்மா எல்லாத்துக்குமே ஆல்ரெடி ஆள்
வச்சு எல்லாமே பண்ணிட்டாங்க சரியா.
ஆமாம்
மாலதிக்கா நான் ஒன்னு கேட்க மறந்துட்டேன் உங்க விச்சுண்ணா பாட்டி எங்க ?அவங்கள நம்ம பாக்கவே இல்ல இல்லையா?
ஐயோ!! ரதி நானுமே மறந்துட்டேன்.
நேத்து பாட்டிமா சீக்கிரமே தூங்கிட்டாங்க
அவங்களுக்கு நேத்து நிறைய வேலை இருந்துச்சு . கல்யாண சடங்கு பொருள் வாங்க அலைஞ்ச நாளா கொஞ்சம் உடம்பு அசதி ஆயிருச்சு
வயசானவங்க இல்லையா? அதனால சீக்கிரமே தூங்கிட்டாங்க .
எப்படியும்
அவங்க எல்லாம் விடிய காலைலயே எந்திரிச்சு இருப்பாங்க வா! நம்ம ரெண்டு பேரும் போய்
இப்ப அவங்க எப்படி இருக்காங்கன்னு பாத்துட்டு அப்படியே ஆசீர்வாதமும் வாங்கிட்டு
வந்துடலாம்னு நினைக்கிறேன் .நீயும் என் கூடவே வரியா நம்ம
போய் பாத்துட்டு வரலாம் ???
சரிக்கா
வாங்க போய் பாக்கலாம். அவங்க என்ன பண்றாங்கறனு. நேத்து இருந்து அவங்கள பாக்கவே இல்ல.
இருவருமே
மாடியில் இருந்து கீழே இறங்க கீழே ஹாலில் உள்ள அனைவரின் கண்களும் ரதியைத்தான்
மொய்த்தது.
மாலதி
எப்பொழுதும் ஆடம்பரம் இல்லாத அமைதியான அழகு என்றாலும் இதுவரை, “ரதியை
இவர்கள் இந்த மாதிரி ஒப்பனையில் பார்த்ததே இல்லை.
எப்பொழுதும் எண்ணெய் வைத்து மடித்து சீவியதலையுடன்
பாவாடை ,
தாவணி என்று அவள் உலாவி கொண்டிருக்க இன்று பார்க்கும் பொழுது பெரிய பெண்ணாக தெரிந்தால்,மேலும் அழகாகவும் இருந்தால்”.
சில பெரியவர்கள் தன் பையனுக்கு பெண் கேட்கலாமா
என்று கூட முணுமுணுத்து கொண்டிருந்தனர்.
அப்பொழுதுதான்
சமையல் கட்டில் இருந்து வெளியே வந்து பெரியம்மா ரதியின் ஒப்பனைகளை பார்த்து முகம்
கடுகடுக்க ,”ஏண்டி
என் புள்ளைக்கு கல்யாணமா இல்ல உனக்கு கல்யாணமா இப்படி சீவி சிங்காரிச்சுட்டு வந்து
நிக்கிற?”
மா!!! ரதிய ஒண்ணு சொல்லாதீங்க. நான் தான் அவளுக்கு இதெல்லாம் பண்ண சொல்லி, சொல்லி
இருந்தேன் .எத்தனை நாளைக்கு தான் இப்படியே சுத்திட்டு
இருப்பா அவளும் அடுத்தடுத்து கல்யாணம் பண்ணிட்டு போற பிள்ளை தானே .எல்லாரும் இங்க நல்ல கிராண்ட்டா டிரஸ் பண்ணி இருக்கும்போது அவ மட்டும் ஏன்
அழுது வடிஞ்சிட்டு இருக்கணும் .
என்
கல்யாணத்துல இப்படி இருந்தா நல்லா
இருக்குமா நம்மள நம்பி வந்த பிள்ளையை நம்ம இப்படி வச்சிருக்கோ? எல்லாரும் பேசணுமா ?உன் மரியாதை என்ன ஆகிறது என்று சரியாக அவரை மடக்கி பிடித்தாள். அவரைப் பொறுத்த வரைக்கும் கௌரவம் என்பது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்
அதனை மனதில் கொண்டே மாலதி பேச அவரின் முகம் ஒரு நிமிடம் சிந்தனை வயப்பட்டது.
சரி சரி
நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் .போங்க போய் ரெண்டு பேரும் முன்னாடி நிறைய பேர் இருக்காங்க அவங்க கிட்ட
பேசிட்டு இருங்க.
இல்லம்மா
? நான்
பாட்டிய பார்த்துட்டு வரேன் நேத்து உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு படுத்து
இருந்தாங்க இல்லையா இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்க
அவங்களா
உள்ள பூஜை அறையில குத்து விளக்கு எல்லாத்துக்குமே பொட்டு வச்சுட்டு இருக்காங்க சாமி
கும்பிட்டு மண்டபத்துக்கு கிளம்பனும்.நீங்களும் போய் வேணா அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க அதுக்கப்புறம் கூட போய்
வெளில இருக்குறவங்கள பாத்துக்கலாம் போங்க போய் ஹெல்ப் பண்ணுங்க.
பூஜை
அறைக்குள் உள் நுழைந்த மாலதியையும் ரதியும் பார்த்த பாட்டியின் முகம் புன்னகையோடு, வாடம்மா உள்ள வாங்க. அட நம்ம ரதிபுள்ளயா இது எம்புட்டு அழகா இருக்க!!!!
போங்க
பாட்டி நான் நம்ப மாட்டேன் எல்லாரும் அப்படித்தான் சொல்றீங்க ஒருவேளை நான் சேலை
கட்டி இருக்கனால அப்படி தெரியுது போல
நிஜமாவே
ராசாத்தி கணக்கா ல இருக்க நீ. மாலதி மா அப்படியே அம்மன் மாதிரியே இருக்கடா.
கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கணும் அது தான் இந்த பாட்டியோட ஆசை
சரி பாட்டி
இப்போ உங்க உடம்பு எப்படி இருக்கு.
எனக்கு
ஒன்னும் இல்ல எனக்கு நல்லா இருக்கு சரி வாங்க நம்ம எல்லாரும் சேர்ந்து பூஜை அறையை
ஒழுங்கு படுத்திட்டு சாமி கும்பிடலாம். மாலதி நீ அந்த குத்து விளக்குக்கு
பொட்டு வை. நான் இங்க படத்துக்கு எல்லாம் பொட்டு வச்சிடறேன் .அந்த
கூடையை எடுத்துட்டு போய் கொஞ்சம் பூ மட்டும் நீ தோட்டத்துல பறிச்சிட்டு வந்துரு ரதி
சரியா.
பூஜைக்கு தேவையான அளவு பூக்கள் இங்கு இருக்கும்
பொழுது இன்னும் பூ எதற்கு பாட்டி ? போதும்தானே இதுவே என்ற மாலதியை
பார்த்துக் கொண்டே.
இங்க
இருக்க பூ போதுண்டா கண்ணா! இருந்தாலும் உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம குலதெய்வம் கோயிலுக்கு
போவோம் அங்க போகும்போது நம்ம வீட்ல இருந்து நம்ம பூ தொடுத்துட்டு போனோம்னா இன்னும்
நல்லா இருக்கும் அதுக்கு தான் பறிச்சுட்டு வர சொல்றேன்.
நீ போய் பறிச்சுட்டு வா ராதிம்மா என்ற,” பாட்டியின் மனம் வேறு
ஒரு கணக்கை போட்டது .”
சிறிது
நேரத்திற்கு முன்புதான் தான், “கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடைபயிற்சி செய்து விட்டு
வருகிறேன் என்று விஷ்வா சொல்லி சென்றான்.” ரதியை இந்த
கோலத்தில் பார்த்தால் கண்டிப்பாக விஷ்வாவின் மனதில் ரதி பதிந்து விடுவாள் என்று
பாட்டிக்கு ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.”
((இங்கு ரதியின் மென் இதழ்கள் விஷ்வாவின் முரட்டு இதழின் முத்தத்தால்
உதட்டுச் சாயம் பூசியதின் நிறத்தை காட்டிலும் மேலும் சிவந்து விட்டது)))))
காத்திருங்கள்…
அரக்கன் வருவானா அரணாக ❤️❤️❤️.
No comments yet.