அத்தியாயம் -7
விடிந்தால் மாலதியின் திருமணம்,,,, “தன்னிடம் பாசமாக பேசும் ஒரே ஜுவனும் , ஒவ்வொரு முறையும் பெரியம்மா, பெரியப்பாவின் திட்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றும் ஒரு உறவும் தன்னை விட்டு செல்வதை நினைத்து தூக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுத்துக் கொண்டிருந்த ரதியால்,”
அதற்கு மேல் தூக்கம் எட்டாக்கனி என நினைத்து கொல்லைப் புறம் உள்ள துணித்துவைக்கும் கல்லில் உட்கார்ந்து நிலவை வெறிக்க ஆரம்பித்து விட்டாள்.
இங்கு மாடியில் ஃபாரின் கால் பேசிக் கொண்டிருந்த விஷ்வாவிற்கு ,
“ரதியின் வரிவடிவம் நிலவின் ஒளியால், ஏதோ!!! ஓவியம் தலைசாய்த்து இருப்பதைபோல் பிரம்மை…”
நீ நிஜமாவே ரதி தேவி தாண்டி !!!என்ன மயக்குறடி!?! ஒரு சின்ன பொண்ணுக்கிட்ட இப்படி என்ன மறந்து முத்தம் வைக்க நினச்சுட்டேனே!!!.
“இந்த விஷ்வா யாரையும் தொட்டது இல்ல” தொட விட்டது இல்ல”!!. என்னய மயக்கிடியே !!!என்ன மந்திரம் போட்ட!!
.ஆனா உன் முகத்துல எதுக்கு இவ்வளவு சோகம்? நா அப்டி நடந்துகிட்டது உனக்கு கஷ்டமா இருக்கா?. என் தொடுகை உனக்கு பிடிக்கலயா???
“இங்க பாரு முயல்குட்டி “உனக்கு பிடிக்காட்டியும் நீ என்ன முழுமனசா ஏத்துக்கனும்.ஏத்துக்க வைப்பான்,இந்த விஷ்வா.
என்ன நடந்தாலும் இந்த விஷ்வா இனிமே உன்ன விடமாட்ட,” நீ என் தேவதை !என் ரதி!என் முயல்குட்டி” உன்மேல இருக்குற உணர்வு என்னனு தெரியல !, என்னனு பிரிச்சு பாக்க விருப்பமும் இல்ல! உன் முகத்துல சிரிப்பு சந்தோசம் தவிர வேற எதுமே உன்ன அண்டாத மாதிரி பாத்துப்பேன்.இனி நீயே நினைச்சாலும் உன்னால என்னைவிட்டு போகமுடியாது பேபி கேர்ள்.
உன்ன எங்ககூட நாளைக்கு கூப்பிட்டு போயிடுவேன். இனி நீ இந்த விஷ்வா கூடதா இருக்க போற பேபி என்று மனதில் பாட்டியிடம் நாளை ரதியே அழைத்து செல்வதை எப்படி பேசுவது என்று நினைத்து கொண்டு பெட்டில் விழுந்து நிம்மதியாக தூங்க தொடங்கினான்.
(((((( நாளைக்கு நீ கூப்பிட்டு போவ ஆனால் , மிஸஸ் .ரதி விஷ்வாமித்திரன் என்ற அங்கீகாரத்தோடு என்று கடவுள் வேறு கணக்கு அல்லவா எழுதிவிட்டார்))))))
இங்கு கொல்லைப்புறத்தில் உட்கார்ந்து இருந்த ரதியை ,யாரோ பின்னால் இருந்து ரொம்ப நேரமாக உற்று நோக்குவது போல் தோன்ற?
சடார் !என்று ‘திரும்பிப் பார்க்க ஒருவனின் கை அவள் முதுகை தொட மிக அருகில் இருக்கவும் பயந்து பின்னோக்கி விழுந்து விட்டாள்!’
என்ன ரதிப்புள்ள ! “நான்தான் உன் மாமா, ஊர்ல இருந்து மாலதி கல்யாணத்துக்கு வந்து இருக்கேன், மாமாவ பாக்காம ரொம்ப வருத்தப்படுறியோ ?அதுதான் இங்கே வந்து உட்கார்ந்திருக்கியோ?
இப்பதான் வந்தேன் .வந்தது உன்ன தான் எங்கேன்னு தேடிட்டு வந்தா ?
மாமாவ பாக்காம வருத்தத்துல நீ இங்க உட்கார்ந்து இருக்க ? மாமாக்கு நீ வருத்த பட்டா எப்படி தாங்கிக்க முடியும்சொல்லு?
அதான் ஆறுதல் சொல்லலாம்னு வந்தேன். நீ என்னன்னா இப்படி பயப்படுறியே??
மொத இங்கிருந்து போங்க !!உங்களை யார் இங்க வர சொன்னா !!இங்கிருந்து போங்க யாராவது பார்த்தா என்னதான் தப்பா நினைப்பாங்க!!! ரதிக்கு பயத்தில் பேச்சே எழவில்லை….
உன்னை எதுக்கு தப்பா நினைக்க போறாங்க ?எப்படி இருந்தாலும் நான் தான் உன்னை கட்டிக்க போறேன் .”கட்டிக்க போறவ வந்து பார்க்கிறதுனால” யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.
ஏ புள்ள!!! பக்கத்துல வந்து நில்லு !!மாமன பார்த்து எவ்வளவு நாளாச்சு? என்ன மாமா ?எப்படி இருக்கீங்க ?நல்லா இருக்கீங்களா ?ஆறுதலா நாலு வார்த்தை பேசலா இல்லையா?என்று மருது கோணல் சிரிப்பு சிரித்து வைக்க,,,
ரதிக்கு உடல் எல்லாம் வெலவெலத்து விட்டது .
இவன் பெரியம்மாவின் தூரத்து சொந்தம் பல தடவை வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவளை தொல்லை பண்ணாமல் செல்வதே இல்லை. முடிந்த அளவுக்கு இவன் வரும் போதெல்லாம் வீட்டிற்குள் அடைந்து கொள்வாள்.
இல்லை மாலதியின் பின்னாலே சென்று விடுவாள்!! இன்று தெரியாமல் தனியாக மாட்டி விட்டோமே !என்று பயத்தில் அவன் பார்வை தன்னை இருந்து விழிப்பதில் கோழி குஞ்சாக குறுகிப் போய் நின்று கொண்டிருந்தாள்.
“இந்த தாவணி பாவாடையில் எம்புட்டு அழகா இருக்க !அப்படியே தேவதை கணக்கால இருக்க! இங்க வா மாமா பக்கத்துல நின்னு பேசு !நான் என்ன உன்னை கடிச்சா தின்ன போறேன்”.
அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் இப்ப எல்லாம் ஒன்னும் பண்ண மாட்டேன்.
சீய்ய்ய்!!! என்கிட்ட இப்படி எல்லாம் பேசாதீங்க எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல !
யார் சொன்னா ?”நான் உன்னை கல்யாணம் பண்ணிக்குவேனு.நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”
ஹா!!! ஹா !!!ஹா!!! உனக்கு சேதி தெரியாதா ?”மாலதிய கல்யாணம் பண்ணி வச்சு ,ஒரு மாசத்துல உனக்கு எனக்கு கல்யாணம் .
உங்க பெரியம்மா சொல்லலையா? நடக்கலேன்னாலும் நான் நடத்தியே காட்டுவேன்.
அதெல்லாம் கிடையாது ! நீங்க பொய் சொல்றீங்க ! மேல படிக்க நான் மாலதி அக்கா கூட போயிடுவேன் .”பெரியம்மா என்ன படிக்க வைக்கிறேன் சொல்லி இருக்காங்க.” என்று அழுகை குரலில் சொல்ல,
எதுக்கு இப்ப அழுவுற??”நான் உன்னை படிக்க வைக்கிறேன் டி !தங்கம்!!. என்ன கல்யாணம் பண்ணிட்டு வந்துரு நான் உன்ன படிக்க வைக்கறேன் என்று பொய் சொல்லி கொண்டே அவளை நெருங்கி,
மாமா பக்கத்துல வந்து பேசு எதுக்கு தூரமாக நின்னுட்டு இருக்க !! ரதியின் கையைப் பிடித்து இழுப்பதற்காக அவன் கையை பிடிக்க செல்ல!!!
எலேய் மருது!!! என்று ரதியின் பெரியம்மா அவன் கன்னத்தில் சப் !!!என்று அறைந்து விட்டார்.
இங்க என்ன பண்ணிட்டு இருக்க மருது? வீட்டுக்குள்ள அவ்ளோ வேலை இருக்கும்போது இங்க என்ன பண்ணிட்டு இருக்க ?அது ராத்திரி பொட்ட புள்ளகிட்ட என்ன பேச்சு ஒழுக்கமா வீட்டுக்குள்ள வந்து வேலையை பாக்குற வழியை பாரு! என்று அவனை தர தரவென்று இழுத்துக்கொண்டு சென்று விட்டார்.
ஐயோ அக்கா !கைய விடு மொத ! அவள நான் ஒன்னு பண்ணல கட்டிக்க போறவ தானே அதாசும்மா சீண்டி பாத்தே!!!
அடேய் கூறுகெட்டவனே !?”உனக்கு கட்டிக் குடுக்குற விஷயம் யாருக்குமே தெரியாது”.அதுக்குனு சரியான நேரம் பார்த்து பொறுமையா சொல்லனு, எடுத்தோ கவுத்தோனு பண்ற விஷயம் இல்ல !
அதுவரைக்கும் கைய கால வச்சுட்டு கம்முனு இரு !நாளைக்கு மாலதிக்கு கல்யாணம் .ஏதாவது நீ தில்லுமுல்லு பண்ணி பிரச்சன நடந்துச்சுன்னா. நானே உன்னை கொன்னு போட்டுறுவ!!!
சரிக்கா ! நான் எதுவும் பண்ணல !அதான் நீ பார்த்துக்கிறேன்னு சொல்ற இல்ல! அப்புறம் நான் ஏன் பண்ண போறேன்.
ஆனால் அவன் மனதில் வேறொரு திட்டம் இருந்தது [[நாளைக்கு நான் பண்ண போற விஷயத்துல நீங்களே அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் போறீங்க]]
இங்கு ரதிக்கும் , “மருது சொன்ன விஷயத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.”
அப்போ பெரியம்மா என்கிட்ட பொய்சொல்லி இருக்காங்களா ? இவங்க நம்மள!!!நம்மள!!? கல்யாணம் பண்ணி கொடுத்திடுவாங்களா ?என் வாழ்க்கை இப்படியே போயிடுமா ?
ஏ! கடவுளே என்னை இப்படி படச்சீங்க! எனக்குன்னு ஆசை எதுவும் இருக்க கூடாதா?” ‘”அவன மட்டும் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படின்னா அடுத்த நிமிஷமே நான்செத்துருவேன்’”!
எனக்கு இந்த வாழ்க்கையே வேண்டாம் நானும் எங்க அம்மா அப்பா கூட போயிட்டுவேன் என்று கேவி அழ,
“இதற்கு நடுவில் விஷ்வாவின் முகமும் ஒரு நிமிடம் வந்து போக எனக்கு எந்த ஒரு விஷயத்துலையுமே அதிர்ஷ்டமே கிடையாது”!!! நான் ஆசைப்பட்டது எதைவுமே நடக்காது!!! நான் இப்படித்தான் அதிர்ஷ்டம் கெட்டவளாக இருப்பேன்!!! எங்க அம்மா அப்பா இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா!!!
கடவுளே!!! எனக்கு இதிலிருந்து வெளியில வரதுக்கு ஏதாவது ஒரு சின்ன வாய்ப்பையாது ஏற்படுத்தி கொடுங்க? கடைசியா உன்கிட்ட இதமட்டும் கேக்குறேன்…..???
[[[[[[[கடவுள்; கண்டிப்பா உன்னை தாங்குற மாதிரியான ஒருத்தனை நான் அனுப்பிவிட்டேன் .ஆனால் ,உன்னோட காதல நீ எப்படி அவனுக்கு கொண்டு வரன்றது உன் கையில தான் இருக்கு)))))
இங்கு ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விஷயங்கள் ஓடிக் கொண்டிருக்க யாருக்காகவும் காத்திருக்காமல் அடுத்த நாள் விடிந்தது பலரின் வாழ்க்கையில் திருப்பத்தை கொண்டு வரும் நாளாகவும் அமைந்தது….
காத்திருங்கள்…..
அரக்கன் வருவானா அரணாக❤️❤️❤️
(உங்கள் கருத்துகள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்கப்படுத்தும்)( 2 நாளுக்கு ஒரு யூடி அரக்கனோ என் அரணோ,,,, பாலைவனத்தில் பூத்த ரோஜா தினமும் ஒரு யூடி என இனிமேல் சரியாக வரும்)
No comments yet.