அத்தியாயம்
-6
இங்கு மாப்பிள்ளை அழைப்பிற்கு அனைவரும் தயாராகி கீழே வந்துவிட, மாப்பிள்ளை அழைப்பை முன் நின்று எடுத்து செய்வது விஷ்வாவின் முறையாக
இருந்தது .
தன் தங்கையாக இருக்கும் பொழுது மாப்பிள்ளையே உள்ளே அழைக்கும் கடமை
விஷ்வாவிற்கும் ராகவிற்கும் தரப்பட்டிருந்தது.
“இருவரும் சேர்ந்து மாப்பிள்ளையை உள்ளே
அழைத்து வரவேற்றுக் கொண்டிருக்க.”
“சீக்கிரம்
ஆரத்தி எடுத்துட்டு வாங்க”, மாப்பிள்ளை உள்ள அழச்சிட்டு போனும்
இல்ல.
ஏமா!!!! ரதி!!!!அந்த ஆரத்தியை சீக்கிரம் எடுத்துட்டு வாம்மா !!!.
இன்னும்
உள்ள என்ன பண்ணிட்டு இருக்க.
இங்கு
ராகவிற்க்கு மனதில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது.
ஒருவேளை விஷ்வா அந்த பெண்ணை பார்த்து விட்டால் என்ன
செய்வான்.
இங்கு ஆரத்தி
தட்டுடன் பட்டுப்பாவாடை தாவணி அணிந்து கொண்டு கொலுசின் ஒலி கேட்க ஜல்!!!ஜல்!!! என்று விரைந்து நடந்து வந்தால் ரதி….
“ரதியை ஒரு நிமிடம்
பார்த்த விஷ்வாவிற்கு தன் கண்களை அவள் மீது இருந்து எடுக்கறது
மிகவும் சிரமமாக இருந்தது…” .
இவளின் மீது இருந்தத கோபம்
எங்கு சென்றது என்று தெரியவில்லை…
ஒருவரின்
மீது கோபம் வந்தால் அவர்களை ஏதாவது செய்தால் மட்டுமே விஷ்வாவிற்கு நிம்மதி தரும் …
ஆனால் ரதி
விஷயத்தில் அவன் மனது அவன் சொல்வதை கேட்பதே இல்லை. மனம் அவள் அருகமைக்கு ஏங்குகிறது…
மனக்கண்ணில் சிறிது நேரத்துக்கு முன்
அவளை பார்த்தது ஓடிக்கொண்டே இருக்க தன் தலையை சிலுப்பி கொண்டு அதனை மறைத்து
முகத்தை கோபமாக வைத்துக் கொண்டான்.
விஷ்வாவே
ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்த ரதிக்கு கைகால் எல்லாம் வெளவெளவென உதற ஆரம்பித்தது..
அவசர அவசரமாக ஆரத்தி எடுத்துக்கொண்டு உள்ளே
சென்று விட்டாள் …
அவளை
பின்தொடர்ந்து சென்ற விஷ்வாவை பார்த்த ராகவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம்
என்று போல் இருந்தது.
ஐயோ!!! இந்த விஷ்வா பையன் வேற
அந்த பிள்ளை பின்னாடியே போறானே!!!!!
என்னாகப்
போகுதுன்னு தெரியலையே எல்லாரும் இங்க இருக்காங்க???இவன் எதுக்கு இந்த பிள்ளை பின்னாடி போறான்.???
இங்கு சமையல்கட்டிற்குள்————–
ஹலோ
மேடம்!!! “அன்னைக்கு என்னமோ நீங்க பாட்டுக்கு கிள்ளிட்டு ஓடிட்டீங்க”.இப்ப நான் இங்கதான் நிக்கிறேன் !?’முடிஞ்சா என்ன
பண்ண முடியுமோ பண்ணு “!!
அது
அன்னைக்கி!!!
ஏதோ ஒரு கோவத்துல தெரியாம பண்ணிட்டேன்!!!
நீங்கஎன்னை
அப்படி பேசி இருக்க கூடாது.. !நீங்க பேசுனதுக்கு நான் கிள்னதுக்கு சரியா போச்சு.
அதனால இதுக்கு அப்புறம் இத பத்தி நாம பேச
வேண்டாம் எனக்கு நிறைய வேலை இருக்கு கொஞ்சம் வழி விடுங்க!!!நான் வெளியில போகணும் ?
விஷ்வா
அவளை இடித்துக் கொண்டே சென்று பிரிட்ஜுக்கு அருகில் நிறுத்தி வைத்து இவ்வளவு நேரம்
பேசிக் கொண்டிருக்கிறான்.
கொஞ்சம்
நகரிங்களா சார் ?
யாராவது
பாத்தா என்ன நினைப்பாங்க?இப்படி தான் ஒரு பொண்ணு கிட்ட நின்னு பேசுவீங்களா ?”கொஞ்சம்
வழியை விட்டு நில்லுங்க’
நீ என்ன
கிள்ளிட்டு போனதுக்கு நான் உனக்கு ஏதாவது ஒரு தண்டனை தரணுமே? என்ன பண்ணலாம் ?என்று, அவளை மேலிருந்து கீழ் வரை பொறுமையாக அங்குலம்
அங்குலமாக ரசித்து கொண்டிருந்தான்.
அவள் மூக்குத்தியிலிருந்து கண்களை பிரித்தெடுக்க முடியவில்லை மூக்கை பிடித்து
நிமிண்ட வேண்டும் என்று தோன்றிய எண்ணத்தை கடின பட்டு அடக்கி கொண்டான்.
“கன்னத்தில்
ஏதோ ஒட்டி இருப்பது போல் தோன்ற மெதுவாக கைகளை கொண்டு சென்று கன்னத்தை மிருதுவாக தடவ”,
ரதி
சொல்ல முடியாத உணர்ச்சியில் தத்துளித்துக் கொண்டிருந்தாள் .”அவனின் தொடுகை அவளுக்கு
அருவருப்பையோ!!!!?பிடிக்காத தன்மையோ!!!
தரவே இல்லை. அதையும் தாண்டி அவனின் தொடுகை அவள் உடல் ஏற்று
வெட்கப்பட செய்தது.
இது உன்
மச்சம் ஆ!!?! நா
கூட ஏதோ கருப்பு கலர்ல ஒட்டி இருக்குன்னு நினைச்சேன் என்றும் அதனை மேலும் அழுத்தமாக கன்னத்தை பிய்த்து எடுப்பது போல் துடைத்து
விட்டான் ..
“ரதிக்கு
கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டது. “ கண்கள் இரண்டும் மூடி அமைதியாக
நின்று விட.
அவளை நோக்கி
மெதுவாக குனிந்த விஷ்வா யாரோ வரும் அரவம் கேட்டு நகர்ந்து நின்று கொண்டான்.
ரதிக்கு
ஒரு நிமிடம் தன் நிலை நினைத்து “
தேவையில்லாத ஆசைகள் மனதை அலைய விடாதே “,”உனக்கு
எதுவும் நிரந்தரமாக கிடைக்காது “
ரதிமா!!!ரதிமா !!?என்ன பண்ற ?எங்க இருக்க ?,”இங்க
வா உன்னஅம்மா கூப்பிடுறாங்க ..
சடார்
என்று கேட்ட மாலதியின் குரலில் தன்னிலை உணர்ந்த ரதி அவனை விட்டு பிரிந்து
நின்றான். உள்ளே நுழைந்த மாலதி.
“விச்சுண்ணா
நீங்க இங்கதான் இருக்கீங்களா !நான் ரதிய தேடி வந்தேன். ரதிய பார்த்தீர்களா?
அப்படி
யாரு நான் இங்கே பார்க்கலையே இந்த
பொண்ணுதான் இங்க நிக்கிறா..
ஐயோ!! “விஷ்வாணா! இந்த பொண்ணு தான் ரதி”.
“ரதிமா
நான் சொன்னேன் இல்ல விச்சுண்ணா .”. அவருதான் இவரு என்னோட விச்சு
அண்ணா.
ரதிக்கும்
விஷ்வா விற்கும் ஒரே நேரத்தில் அதிர்ச்சி தான் .
“தான்
பார்க்க நினைத்த விஷ்வா!இவர்தானா ?என்று
நினைத்து விஷ்வாவை கண்கள் வெளியே தெரித்துவிடும் அளவிற்கு பார்த்துக்
கொண்டிருந்தாள்.
ரதியைப்
பார்த்து விஷ்வாவிற்கும் மாலதி அடிக்கடி சொல்லும் பெண் இவள் தானா என்று அவளையும்
அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். .
இருவர் மனதிலும்
இருவர் மீதும் சிறு ஈர்ப்பு எழ தான் செய்தது.
சரி வா
ரதி நம்ம ரெண்டு பேரும் பார்லர்
வரைக்கும் போயிட்டு வந்துரலாம்.அதுக்காக தான் உன்னை கூப்பிட்டேன் .
“சரிக்கா
வாங்க போயிட்டு வரலாம்”
சரி அண்ணா!
நாங்க வரோம் .
ரதியும்
விஷ்வாவைஒரு நிமிடம் கண்களால் பார்த்து சென்று வருகிறேன் என்று கண்களில் மூடித்திறக்க”
“விஷ்வாவும்
அவளை போல் கண்கள் மூடித் திறந்தான்”.
நாளை கல்யாணத்தில்
ரதிக்கு நடக்கும் விபரீதத்தில் இருந்து ரதியை காப்பற்ற விஷ்வா வருவானா!!!?
காத்திருங்கள்….
அரக்கன் வருவானா அரணாக ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
( கதை பற்றிய உங்களின் கருத்துக்கள் என்னை மேலும் மேலும் எழுத ஊக்கப்படுத்தும்)
No comments yet.