அரக்கனோ என் அரணோ எபிசோட் -5

BalaSneha Velmurugan | 24 Nov 2025 | Share

அத்தியாயம் -5

அங்கு வந்த ரதியை மாலதி போதும், வேலை பார்த்தது சாயந்தரம் நமக்கு நிறைய வேலை இருக்கு நீ கொஞ்ச நேரம்
வந்து என் ரூம்ல படுத்து ரெஸ்ட் எடு
.

 அப்படியே ரெடி ஆயிட்டு கீழே போய்க்கலாம் நான்
அம்மாகிட்ட பேசிகிறேன் நீ என் கூட மேல வா
!”என்று
அழைத்து சென்றுவிட்டாள்
மாலதி.

 மற்ற
சடங்குகளை முடித்து வீடு திரும்பிய பாட்டி முதலில்
பார்த்தது அட ராகவ கண்ணா எப்ப வந்தீங்க”? அந்த விஷ்வா பையன் எங்க?.

ஏ டார்லிங்! உன்ன
பாக்காம துரும்பா இளைச்சு போயி வந்திருக்கேன்
!!!!நீ
என்ன பத்தி கேட்காம உன் பேரனையே 
கேக்குறியா
?.

நா உன்னையும் தாண்டா மிஸ் பண்ணே”!

 டார்லிங் ! உன்ன
பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே
? 
இங்க கல்யாண பொண்ணுக்கு டப் 
கொடுக்கிற மாதிரில அழகா சுத்திக்கிட்டு இருக்க
.

பேசாம நீயே மாப்பிள்ளய கட்டிக்கலாம்
இல்லையா.  என் டார்லிங் தான் கல்யாணம்
பொண்ணு. லாஸ்ட் மினிட்ல பொண்ணு சேன்ஜ் பண்ணிட வேண்டியது தான்
!!!

என்ன டார்லிங் சொல்ற கல்யாணம்
பண்ணிக்கிறியா.

டேய் பொலமாடா

வந்தது வராதும்மா என்கிட்ட வம்பு
இழுக்கிறது உனக்கு வேலையா போச்சு டா  போடா
அங்கிட்டு .

எங்கடா  
விஷ்வா.

ஆமா அவன் தான் எப்ப பாரு அவன் முத
பொண்டாட்டிய கைல தூக்கிட்டு அலையுறான்ல
!வந்துருவான் .

தொழில் விஷயமா மேல மாடியில பிசினஸ்  பத்தி பேசிட்டு இருக்கா என்று ராகவா சொல்லிக்
கொண்டிருக்கிற.

தடக் ! தடக் !

என்று சத்தம் வர விஷ்வா நடந்து வந்து
கொண்டிருந்தான். என்ன ராகவ்
?ஏதோ பொண்டாட்டின்னு சொன்ன மாதிரி
இருந்துச்சு .

அய்யய்யோ !!!கேட்டுட்டானோ
சமாளிப்போ
!!!அது ஒன்னு இல்ல விஷ்வா டார்லிங்கு
தண்டட்டி வேணுமா
?

இங்க இருக்க மாதிரி அதான் கேட்டுச்சு. நான் அப்புறம் வாங்கி தரேன்னு சொன்னேன் .

இல்லையா டார்லிங் ஹிஹூஹிஹூஹி என்று  திருட்டு முழி முழித்தான்.இவனுக்கு இதே வேலையா போச்சு….

விஷ்வா கண்ணு எப்படிப்பா இருக்க? இந்த ஒரு வாரத்துல துரும்பா இளைச்சு போயிட்டியேபா?

. ஏ டார்லிங் உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி
இருக்கா
?இவன இப்ப விட்டாலும் அர்னால்டுக்கு டூப் போடுற மாதிரி இருக்கான் அவனை
பார்த்து இந்த வார்த்தை சொல்றியே உனக்கே அடுக்கு மா
?.

போடா பொசகேட்ட பயலே கண்ணு வைக்காதடா என்
விஷ்வா பார்த்து. நீ சொல்லுப்பா பயணம் எல்லாம் பரவாயில்லையா அலுப்பா இருக்கா கொஞ்ச
நேரம் நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்களேன்.

 அதெல்லாம் ஒன்னும் இல்ல நாங்க நல்லா இருக்கோம் பாட்டி”.

 நீங்க எப்படி இருக்கீங்க ?எப்படி
இருந்துச்சி இங்க இருக்கிறது உங்களுக்கு. இங்கே எல்லாமே ஓகேவா.
?

 நான் இங்க ரொம்ப நல்லா இருக்கேன் விஷ்வா. போங்க
போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நானும் சாயந்திரம் போல உங்களை எழுப்பி விடுறேன்.

சரி பாட்டி நாங்க போய் ரெஸ்ட்
எடுக்குறோம் நீங்களும் கொஞ்ச நேரம் படுத்து எந்திரிங்க மத்த வேலை எல்லாம்
சாயந்தரம் பாத்துக்கலாம்.

 எனக்கு என்னப்பா ரொம்ப நாளைக்கு அப்புறம் சொந்த
ஊருக்கு வந்துருக்க அழுப்பே தெரியல. எல்லா வேலையும் செய்யறதுக்குன்னு ஒரு பொண்ணு
இருக்கா எவ்ளோ துறுதுறுனு  இருக்கா
தெரியுமா
!!!

அவள பாக்கும் போதெல்லாம் நம்ம கூட
கூப்பிட்டு போகனு எனக்கு ஆசையா இருக்கு.

யாரசொல்றீங்க பாட்டி நீங்க”, என்ற ராகவின்   கேள்விக்கு.

 அதுதாம்பா  ரதி புள்ளை எவ்வளவு அழகா பொறுமையா எல்லா
வேலையும் செய்து அந்த பிள்ளையை தான் என் கூட கூட்டிட்டு போக ஆசையா இருக்கு இந்த
விஷ்வா பையன் தான் சரின்னு சொல்லுவானா என்னன்னு தெரியல
!!!

மாலதி அம்மாகிட்ட பேசி பார்க்கணும் மொத. 
ராகவ் உடனே இடையில் புகுந்து உங்களுக்கு தான் அங்க அத்தனை வேலைக்காரங்க
இருக்காங்களே
!

அப்புறம் ஏன் ? இந்த
பொண்ண கூட்டிட்டு போனும் நினைக்கிறீங்க
?. அங்க அத்தனை பேர்
இருந்தாலும் என் ஊர்ல இருந்து எனக்கு கூட்டிட்டு போற மாதிரி வருமா ?
அந்த புள்ளைய நான் ஒன்னும் வேலைக்காக கூட்டிட்டுபோல “!

எனக்கு ஒரு துணைக்கு ஆள் வேணுமே! என்ன பாத்துக்கிறதுக்கு இரண்டு ஆம்பள பிள்ளைங்க இருக்கீங்கனு தா!!!! சொல்லறிங்க .

எவனாவது ஒரு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்து
அன்பா பேசுறீங்களா வேலை வேலைன்னு ஓடிடுறீங்க. 
ஒத்தாசைக்கு ஒரு ஆள் வேணாமா
?

அதனாலதான் நான் கூட்டிட்டு போலாம்னு
நினைக்கிறேன்
.நீ சொல்லு விஷ்வா !!!!நம்ம கூட்டிட்டு போலாமா.

பாட்டி எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு! இத பத்தி நம்ம அப்பறம் பேசலாம் என்று,  இதில் தனக்கு
விருப்பம் இல்லாததை மறைமுகமாக
கூறிவிட்டு
மேலே விறு விறு என்று சென்று விட்டான்
.

 பாட்டியும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில்
வசந்தாவிடமும் அவள் வீட்டுக்காரரிடம் பேசிக் கொள்ளுவோம் பிறகு இதைப் பற்றி
பேசிக்கொள்வோம் என்று விட்டுவிட்டார்.

மாப்பிள்ளை அழைப்பு தொடங்க ஆரம்பிக்க
இன்னும்
சில மணிநேரம்  இருக்க மாலதி சென்று உள்ளே
குளித்துக் கொண்டிருந்தாள் பிறகு பார்லர்
பெண்கள் மருதாணி போட
வரவேண்டும் என்று
,

 இங்கு ரதி குளித்துவிட்டு வேறு உடை மாற்றிக்
கொண்டிருந்தாள்
,மாலதியிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று
உள்ளே நுழைந்த விஷ்வா கதவை தட்ட மறந்து திறந்துவிட
வெரும்
ரவிக்கையுடனும்
, பாவாடையுடன் நின்று இருந்த தியின்
பின்புறத்தை பார்த்து ஒரு நிமிடம் திகைத்து விட்டான்
.

யார் ?என்று
திரும்பிப் பார்
த்த ரதி  கைகள் தன்னிச்சையாக மார்பினை
மறைத்துக் கொள்ள
.வள் அங்க
ளைவுகளை பார்த்த விஷ்வாவிற்கு அவளின் மேல் இருந்து கண்களை பிரித்து
எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது
.

சடார் !!!என்று
கதவை சாற்றி விட்டு திரும்பி சென்று விட்டா
ன். இங்கு ரதிக்கோ அடுத்து என்ன செய்வது
என்று தெரியாமல்
பயத்தில்  பெட்டில் அமர்ந்து விட்டால்

 அவள் மனமும் நம்ம கிள்ளி வச்சவர் தானே இவரு ?    இங்க என்ன பண்றாரு?யார்
இவர்
?

அங்கு விஷ்வாவும் இது நம்மள கிள்ளிட்டு போன
பொண்ணு தானே
? இவ ங்க
என்ன பண்றா
? யாரு இவ ?முதல
மாலதி வந்த
தும்  கேக்கணும் என்று இருவரும்
வெவ்வேறு மனநிலையில் ஒருவரை பற்றி ஒருவர் நினைத்துக் கொண்டே மாப்பிள்ளை
அழைப்பிற்கு கிளம்பி கொண்டிருந்தனர்
..

(“பாட்டி சொன்ன பெண்ணும் ,மாலதி சொன்ன தங்கையும் இவனை கிள்ளி சென்ற பெண்ணும் ஒரே ஆள் தான்
என்று தெரிந்தால் விஷ்வாவின் மனநிலை

 மாலதி அண்ணா என்று சொல்லிக் கொண்டிருக்கும் விச்சு
அண்ணா
,இவள் கிள்ளி வைத்துவிட்டு சென்றவனும் இப்பொழுது தன்னை பார்த்து சென்றவனும்
ஒருவன் தான்
என தெரிந்தால் ரதி மனநிலை
…..????

காத்திருங்கள் …….

அரக்கன் வருவான் அரணாக…..

 

    No comments yet.