அரக்கனோ என் அரணோ எபிசோட் -4

BalaSneha Velmurugan | 21 Nov 2025 | Share

அத்தியாயம் -4

உள்ளே நுழைந்த ரதியின் கொலுசு ஒளியை கேட்டு திரும்பி பார்த்த விஷ்வாவிற்கு ரதியின் தாவணி நுனி மட்டுமே தெரிந்தது ,

அவன் பார்க்கும் முன்னேகைப்பிடித்து சமயற்கட்டிற்குள் அழைத்து வந்த மாலதி

“ரதிம்மா கெஸ்ட் வந்து இருக்காங்க”ரெண்டு ஜுஸ் போட்டு கொண்டு வரியா?,

யாருக்கா அவங்க? எட்டிபார்த்து கொண்டே ரதி கேட்க?

“விஷ்வா அண்ணா வந்து இருக்காங்கடா என்று புன்னகையுடன் கூற”,

“ரதிக்கும் புன்னகை தொற்றி கொண்டது.”

 ‘2மினிட்ஸ்கா நீ போய் அவங்கள பார் ,நா கொண்டு வரேன்.

சரிடி !!!என் செல்ல தங்கச்சி என்று சென்று, விட்டாள் மாலதி .

“இங்கு ஜூஸ் கலக்கி கொண்ட ரதியின் மனமோ சொல்ல முடியாத அளவுக்கு படபடப்பில் இருந்தது”,

நா ஏன் இப்படி இருக்க ?எதுக்கு அவர் பாக்க நான் இவ்ளோ ஆர்வமா இருக்க? அவரு எப்டி இருப்பாரு ?அய்யோ!?! ரதி யோசிக்காத போய் பாத்து தெரிஞ்சுக்கோ…

இங்கு——-

விச்சுண்ணா!உங்களுக்கு நான் மேல தான் ரூம் அரேஞ்ச் பண்ணி இருக்கேன் அந்த கடைசியில மூணாவது ரூம் உங்களுக்கு.

 ராகவாண்ணா அது பக்கத்துல இருக்க ரூம் உங்களுக்கு.

 நீங்க மேல போய் ரெஸ்ட் எடுங்க. ஜூஸ் குடிச்சிட்டு.

 ஈவினிங் மாப்பிள்ளை, அழைப்பு இருக்கு அதுக்கு மட்டும் கிளம்பி தயாரா வந்தா போதும்.

“பாட்டி வந்தாங்க அப்படினா நான் உங்களுக்கு சொல்லி அனுப்புறேன் .”

நீங்க வந்து கீழே பாட்டியை பாருங்க!.

 சரியா!!!!!

மாலதியிடம் பேசிக் கொண்டிருந்த விஷ்வாவிற்கு ஃபோன் வர எடுத்து பேசி கொண்டு மேலே அவனது அறைக்கு சென்று விட்டான்.

 இங்கு—-

“ஜூஸ் டம்ளரோட வந்த ரதிய பார்த்து ராகவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான்” ..

இந்த பொண்ணு இங்க என்ன பண்ணுது ..

ஐயயோ!!! இவள மட்டும் விஷ்வா பாத்தானா என்ன பண்றது என்று யோசித்துக் கொண்டிருந்த ராகவின் முன் ஒரு கரம் நீண்டது.

ரதி தான் அண்ணா ! இந்தாங்க ஜூஸ் எடுத்துக்கோங்க !!!என்று கூறிக் கொண்டிருந்தாள்.

 என்ன இந்த பிள்ளைக்கு நம்மள அடையாளம் தெரியலையா! இல்ல நம்மள பாக்கலையா!

(எப்படிடா தெரியும்! அவனே ஆறு அடிக்கு இருக்கான் அவனுக்கு பின்னாடி நீ இருக்கிறது. இவளுக்கு எப்படி தெரியும் அதுவும் அந்த பிள்ள கீழே விழுந்து கிடக்கும் போது ரெண்டு பேரும் ஏதோ ஷோ பாக்குற மாதிரி பாத்துட்டு இருந்தீங்க அந்த பிள்ளை கடுப்புல அவனை கிள்ளி வச்சிட்டு ஓடிடுச்சு இதுல எங்கிட்டு உன்னை பார்க்கிறது அதனால தான் தெரியல))))))

மாலதிம்மா ! இந்த பொண்ணு யாரு? இங்க என்ன பண்ணுது?

அண்ணா இவ என் சித்தி பொண்ணு தான். பேரு ரதி இங்கதான் இருக்கா .நான் கூட சொல்லியிருந்தேன் இல்லையா !

 “. ஓ சரி சரி நல்லா இருக்கியா பாப்பா.”

“ நல்லா இருக்கேன் அண்ணா. “

ரதியை பார்க்கும்போதெல்லாம் ராகவிற்க்கு தங்கை உணர்வு துளிர்வது தடுக்க முடியவில்லை.

இந்த விஷ்வ கண்ணுல மட்டும் பாப்பா படாம நம்ம பார்த்துக்கணும் ,இந்த ரெண்டு நாள் எப்படி காப்பாற்றுவது என்ன பண்ணலாம்???

இங்கே ,ராகவ் யோசிச்சிட்டு இருக்கிற நேரத்துல அந்த பக்கம் ரதி அக்கா உங்க விச்சுணா எங்கக்கா?

 அவருக்கு ஜூஸ் கொடுக்கலாம் பார்த்தேன்.

 அவர் போயிட்டாரா !!இல்லடா ரதிமா அவர் மேல தான் இருக்காரு அந்த மூனாவது ரூம்தா நீ போய் கொடுத்துட்டு வந்துடுறியா?

 நான் இந்த ஜாக்கெட் எப்படி இருக்குனு அளவு பார்த்து சொல்றேன் உன்கிட்ட.பிளீஸ் என் செல்ல தங்கச்சி இல்ல. சரிக்கா நான் போய் கொடுத்துட்டு வரேன் என்று மாடிப்படிக்ககட்டிகளில் ஏற ஆரம்பித்துவிட்டால் ரதி.

சிந்தனையில் இருந்து வெளிவந்து பார்த்த ராகவிற்க்கு மேலே ஏறிக் கொண்டிருக்கும் ரதியை பார்த்து குடித்துக் கொண்டிருந்த ஜூஸ் பொறை ஏறிவிட்டது!!!!

ரதிமா! ரதிமா! நில்லு நான் போறேன் நீ போக வேண்டாம். எனக்கு கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு நான் கொடுத்துட்டு பேசிக்கிறேன் நீ போய் மத்த வேலையை பாரு போ.

“தற்காலிகமாக ரதியை விஷ்வா பார்ப்பதை தவிர்த்து விட்டான்,ராகவ்.”

அப்பா ஒரு வழியா விஷ்வா கிட்ட இருந்து இந்த பிள்ளையை காப்பாத்தியாச்சு ..

“கடன்கார எதாது பண்ணிட்டான “என்ன பண்றது.

ரதிக்கோ சின்ன வருத்தம் அவர பாக்க முடியாம போச்சே !

மாலதிக்கா அடிகடி சொல்லுவாங்க .அவர் எப்படி இருப்பார் நானே ஒரு மாதிரி யோசிச்சு வச்சிருந்தேன் சரி அப்புறம் பாத்துக்கலாம் நம்ம போய் டிரஸ் போட்டு பார்ப்போம் நமக்கு எப்படி இருக்குன்னு என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.

“ராகவிற்கு தெரியவில்லை இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பில் விஷ்வாவும் ரதியும் பார்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்று,”

காத்திருங்கள் அதுவரை….

           அரக்கன் வருவானா அரணாக …..❤️❤️❤️❤️

(என் கதை பற்றிய உங்கள் கருத்துகள்  என்னை மேலும் ஊக்கப் படுத்தும் நன்றி)

    No comments yet.