அத்தியாயம்-3
ராகவிற்கு ரதியை பார்க்கும் பொழுது தனக்கு ஒரு குட்டித் தங்கை இருந்தால் இப்படித்தானே துருதுருனு இருப்பா!என்று எண்ணம் வராமல் இல்லை.
முடிந்த அளவிற்கு விஸ்வாவின் கண்ணில் படாத அளவுக்கு இந்த பெண் இருந்து விட வேண்டும் நினைத்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தான்.
ராகவ் இன்ரோ பண்ணிடுவோ இல்லாட்டி கோச்சுப்பார்.😁
விஷ்வாவிற்கு குறையாத கம்பீரமும் அவனைப் போன்று ஆறு அடிக்கு குறைவில்லாத உயரமும் கொண்டவன் கண்களில் எப்போதும் குடி கொண்டிருக்கும் சாந்தம் முகத்தில் புன்னகை அரும்ப தன்னிடம் பேசுபவர்களின் தோரணையை பொறுத்தே அவனின் பேச்சும் இருக்கும்.
விஷ்வா வின் PA வாக இருக்கும்போது சிக்ஸ்பேக்ஸ் இல்லாமஇருந்தா எப்படி இருக்க முடியும். விஷ்வா உடற்பயிற்சி செய்யும் பொழுது, இவனும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது விஷ்வாவின் கட்டளை அதனால் ராகவிற்கும் பழனி படிக்கட்டு தான்.
விஷ்வா ஒரு விஷயம் சொன்னா அப்படினா ராகவ் , அடி முதல் நுனிவர அதை பத்தி எல்லாமே தெரிந்து அதை சரி செய்ற அளவுக்கு திறமைசாலி.
விஷ்வாவிற்கு கீழ் எத்தனை பாடி கார்ட்ஸ் வேலை செய்தாலும் ஒரு விடயம் என்று வந்து விட்டால் ராகவை தாண்டி தான் விஷ்வாவிடம் செல்ல வேண்டும் முடிந்த அளவிற்கு ராகவே அனைத்தையும் சரி செய்து விடுவான்.
ராகவுக்கு எல்லாமே அவங்க அம்மா தான். அவங்க அப்பா ரிட்டையர்டு ஆர்மி ஆபிசர் .
அவர் சமீபத்தில் உடல் நிலை சரியில்லாம இறந்ததுக்கு அப்புறம், ராகவோட உலகத்துல அம்மா, விஷ்வா ,பாட்டி மட்டும்தான் .
விஷ்வாவும் ராகவும் கிண்டர் கார்டனில் இருந்தே நண்பர்கள்.
ராகவ் சின்ன வயசுல இருந்தே எல்லார்க்கூடவும் சகஜமா பேசுவான். ஆனால் விஷ்வா தனியாக அமர்ந்து கொள்வான்.
ஒருமுறை அப்படித்தான் பிளே டைமில் அனைவரும் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு பையன் தெரியாமல் விஷ்வாவினை தள்ளிவிட்டு விட்டான். முட்டியில் சரியான காயம் .
ஆனால், சிறிதளவு கூட முகத்தில் வலியை காட்டாமல் அவனே சென்று முதல் உதவி அறையில் மருந்து போட்டுக் கொண்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டான் .
அதனை பார்த்ததுக்கு அப்புறம் ராகவிற்கு என்ன மாதிரியான உணர்வு தெரியல அவன் கூட பேசி பழக ஆரம்பிச்சா.
மத்தவங்க எல்லாருமே விஷ்வாவ பாத்து ஒதுங்கும் போது ராகவ்மட்டும் அவன் கூட சகஜமா பேசுனது விஷ்வாவுக்கு ராகவ் மேல தனியான ஒரு பிரியத்தை ஏற்படுத்திவிட்டது.
அப்ப இருந்து இப்போ வர ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்காங்க. தொழில்னு வரும்போதும் ரெண்டு பேரும் பாஸ் பிஏ வா இருந்தாலும், மத்த நேரத்துல நண்பர்கள் தான்.
ராகவிற்கு என்ன ஒரு வருத்தம்! இந்த விஷ்வா கூட இருக்க நாள்தான் நமக்கு லவ் செட்டாகமாட்டுதோனு நினைச்சு ஃபில் பண்ணிட்டு விஷ்வா வாழ்க்கைல ஒளி ஏத்துவோம்னு அட்வைஸ் பண்ண போய் பலமுறை முதுகுல நாளுடின்னு வாங்கிட்டு வலியோட வர அக்மார்க் சிங்கிள் தாங்க .
அவனுக்கும் நிறைய பொண்ணுங்க நட்பு வட்டம் இருக்கு, நிறைய பேரு கூட ஜாலியா கடலை போடுவா, பொண்ணுங்க கிட்ட எவ்ளோ ஜாலியா பேசுனாலும், அதற்கும் எல்லைகோடு உண்டு.
காதல் என்ற உணர்வு யாரு மேலயும் வரல வருமானு தெரியல!!!! ஒருவேளை நம்ம வாழ்க்கை இந்த விஷ்வா கூடயே போய்டுமோ …
அது நினைச்சாலே நெஞ்சே வலிக்குதே!!!
ஒண்டிக்கட்டையா போய் சேர்ந்துருவோமோ!!! என்ற பயம் அவனுக்கு..
(கடவுள்: யூ டோன்ட் ஃபீல் பக்தா. நான் உனக்கு இங்க ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கேன் ஓகேவா 🤣
ராகவ்: என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே 🙄
கடவுள்: சே சே .கடமை அழைக்கிறது பிறகு சந்திப்போம் வரட்டா டா).
————————–
விஷ்வாவும்,ராகவும் வீட்டின் முன் வந்து நிற்க ,
விஷ்வா அண்ணா!!! என்று ஓடி வந்து கட்டிக் கொண்டால் மாலதி.
எங்க நீங்க வரமாடிங்களோனு நினைச்சு வருத்தபட்டேன் விச்சுண்ணா!
என்று சொன்ன மாலதியை கனிவோடு பார்த்தால்தான் விஷ்வா .
சிறுவயதில் இருந்தே மாலதி மேல் தனி பாசம் விஷ்வாவிற்கு விச்சு அண்ணா! விச்சு அண்ணா !
என்று பின்னாடியே சுற்றும் கள்ளம் கபடம் இல்லாத மாலதியின் மேல் இருந்த அன்பின் வெளிப்பாடு தான் இந்த திருமணத்திற்கு விஷ்வா வந்தது.
அப்பறம் ,ராகவ் அண்ணா
“எப்படி இருக்கீங்க ?ஏன் அம்மாவை கூட்டிட்டு வரல?”
அம்மாவுக்கு லாங் டிராவல் ஒத்துக்க மாட்டுது மாலதிமா .
கல்யாணம் முடிச்சுட்டு நீ அங்கதானே வருவ ,
“அங்க வந்து பாத்துக்கலாம் சரியா”
சரிண்ணா!?
நான் கண்டிப்பா நேரில் வந்து அம்மாகிட்ட பேசிக்கிறேன் .
அச்சச்சோ!!!!
நா உங்களை வெளியவே நிக்க வச்சு பேசிட்டு இருக்கேன் . உள்ளவாங்க ரொம்ப நேரமா நீங்க டிராவல் பண்ணி இருப்பிங்க.
உள்ள வாங்க உள்ள வந்து ரெஸ்ட் எடுங்க…
இங்கு டெய்லர் கடையில தைத்த ஜாக்கெட்களை வாங்கிக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டால் ரதி…
விஷ்வா யார மறுபடியும் பார்க்க கூடாதுன்னு நினைக்கிறானோ அங்க தான் ரதியு இருக்கா…
ஒருவேளை ரதிய விஷ்வா பார்த்துட்டானா என்ன பண்ணுவான்????
காத்திருங்கள் ….அரக்கன் வருவான் அரணாக…❤️❤️❤️❤️
No comments yet.