அத்தியாயம் -2
பாட்டியின் போனிற்கு அழைப்பு வர எடுத்த உடனேயே,
ஏம்பா கண்ணா சாப்டியா ? எப்போ வருவ ? சாயந்தரத்துக்குள்ள வந்துடுபா!
பாட்டி என்ன மொத பேச விடுங்க நானு ராகவும் ஊரு கிட்ட வந்துட்டோம் அத சொல்லதா கூப்டேன்.
சரி பாத்து வா கண்ணா!!!
இங்கு—-
அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, டெய்லர் கடை நோக்கி சென்ற ரதியை!!!
“ஏ குட்டச்சி” எங்க போற ?
எவண்டா அது என்னையே பார்த்து குட்டச்சி சொன்னது, என்று திரும்பி பார்த்தால் பக்கத்து வீட்டு குட்டிவாண்டு.
டேய் பொடியாக காப்பிடியாட்ட இருந்து கிட்டு என்ன குட்டச்சி சொல்றியா?
இரு உங்க அம்மா கிட்ட சொல்றேன்…
சொல்லிக்கோ எனக்கு என்ன பயமா????நீ என்ன விட கொஞ்சம் தான் வளர்த்தியா இருக்க ஹாஹாஹா என்று சிரிக்க!
டேய் உன்ன என்ன பன்ற பார் ? அவனை தூரத்தி கொண்டு ஓட ! யார் மீதோ மோதி கீழே விழுந்துவிட்டால்.
யார்ரா அவா கீழ விழுந்து கிடக்குறோ தூக்கி விடுவோம்னு இல்லாமா ! என்று யோசனையாக நிமிர்ந்து பார்த்தவளுக்கு கழுத்து வலி வந்தது தான் மிச்சம் . சரியான வளர்ந்தமாடு, நெட்ட கொக்கு இன்னும் சில சொற்கள் மனதில் வசைபாடிக் கொண்டு எழுந்து நிற்க.
ஏய் !!! இடியட் !!!!இப்படிதான் முன்னாடி யாரு இருக்காங்கனு பாக்காம வந்து இடிப்பியா!!! பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்க முடியாத என்று திட்ட ஆரம்பித்து விட்டான்.( நம் கதையின் நாயகன்).
ரதிக்கு கோபம் வந்துவிட்டது…
என்ன ஏதுன்னு தெரியாம என்னையா திட்டுறிங்க? என்று அவன் சுதாரிக்கும் முன் அவன் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்துவிட்டு ஓடிவிட்டால் ரதி ….
இப்பொழுது இவள் என்ன செய்தால் என்று யூகிக்கவே அவனுக்கு ஒரு நிமிடம் ஆகிவிட்டது….
💃💃💃💃💃💃💃💃
ஹீரோ இன்ரோ——–😚
பெயர் விஷ்வாமித்திரன். பெயருக்கு தகுந்தாற் போன்று விசுவாமித்திரன் தான் பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்ணியமானவன். ஆனால் தொழில் என்று வந்துவிட்டால் அதற்கு அப்படியே நேர் மாறாக ஈவு இரக்கமே இல்லாத அரக்கன். இந்த 29 வயதிலேயே ஒரு தொழில் சாம்ராஜ்யத்தையே எடுத்து நடத்தக்கூடிய அளவுக்கு திறமைசாலி .
ஆறடிக்கு குறையாத உயரம். அலை அலையான கேசம். எதிரில் இருப்பவரை எடை போடும் கூர்மையான கண்கள் அதையும் தாண்டிய நிதானம்…
என்னிடம் ஒரு அடி தள்ளியே நில் !என்ற முகம். சிரிக்க மறந்த இறுக்கிய உதடுகள் தன்பாட்டியிடம் பேசும்போது மட்டும் தோன்றும் சிறுசிரிப்பு அதுவும் சிரித்தானா?என்று தோன்றக்கூடிய அளவுக்கு தான் இருக்கும்.
உடற்பயிற்சியின் விளைவாக திண்ணியமார்பு, கோபியர் கொஞ்சும் கண்ணனின் நிறம் ஆனால் இவன் பெண்களை கண்டாலே வெறுத்து ஒதுக்குபவன் .
அவன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அப்படி கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.
பல பெண்கள் இவன் கேசத்தினை வருட நினைத்து கை உடைந்து சென்றது தான் அதிகம். இன்னும் சில பெண்கள் ஒரு நாளாவது இவனோடு வாழ்ந்து விடமாட்டோமா என்ற ஏக்கம் கொண்டும்,அவன் மீது வன்மம் கொண்டும் அவனை சுற்றி தான் இருக்கிறார்கள். ஆண் அழகன் தாங்க நம்ம ஹீரோ என்ன கொஞ்சம் அரக்கனும் கூட….
விஷ்வாவின் தொழில் என்பது பல நாடுகளிலும் பல ஊர்களிலும் பல கிளைகளை கொண்டுள்ளது அப்படி அவன் செய்வது ,விவசாயத்திற்கு தேவையான விளைச்சலைத் தரும் உரங்களில் முடிந்த அளவிற்கு செயற்கை சேர்க்காமல் இயற்கையான முறைகளை கொண்டு உரங்களை தயாரித்து அதனை மக்களுக்கு குறைந்த விலையில் தந்து விவசாயத்தை மேலும் வளர செய்வதும் ,லாபம் ஈட்டுவதும் தான்..
இதனால் இனிவரும் காலத்தில் விவசாயம் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். இவனின் இந்த இயற்கை உரம் தயாரிக்கும் ஃபார்முலாவை திருடுவதற்கும் விலை பேசுவதற்கும் நிறைய பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
தொழில் சாம்ராஜ்யத்தில் அனைவருக்கும் விஷ்வா ஆனால் மறைமுகமாக இவனை எதிர்க்கும் எதிரிகளுக்கு மான்ஸ்டர், விஷ்வாவிற்கு பல ஷாப்பிங் மால்கள் தியேட்டர்கள் இருந்தாலும் இவனின் முதல் முக்கியமான தொழில் இயற்கை உரங்களை முடிந்த அளவிற்கு எந்த ஒரு செயற்கையும் இல்லாமல் தயாரிப்பது தான் அந்த பார்முலாவை இன்னும் கண்டுபிடித்து முடிக்கவில்லை அவனது ஆராய்ச்சி கூடத்தில் பத்தரமா பாதுகாத்து வருகிறான்.
(விஷ்வாவின் தொழில் என் கற்பனையே)..
————
“என்ன நம்ம பாஸ் அந்த பொண்ணு கிள்ளிட்டு போகுது ஏதோ மெடல் வாங்கின மாதிரில அட்டென்ஷன்ல நிக்கிறாரு போய் தான் பாப்போம் “என்று முன்னாடி எட்டிப் பார்க்க ….
ஆத்தி! அந்த ஆளு கோவத்துல நிக்கிறாரு . நல்ல வேல எதுவும் வாயை விடல . இல்லாட்டி நம்ம முதுக பஞ்சர் ஆக்குவா…. நம்ம பாட்டுக்கு இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடுவோம்….
உன்ன!!!!!! இரிட்டேட்டிங் இடியட்! சரியான பட்டிக்காடு கடவுள் கிட்ட வேண்டிக்கோ! இன்னொரு டைம் நீ என் கண்ணுல பற்ற கூடாதுனு. ஒரு வேல உன்னை நான் இன்னொரு டைம் பாத்துட்டேனா !நான் என்ன பண்ணுவேன் நீ அப்ப பார்ப்ப என்று விட்டு திரும்பி,
இந்த பொண்ண பத்தின டீடெயில்ஸ் எல்லாமே எனக்கு வேணும். நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது! என்று அவன் பின்னே நின்றிருப்பவனிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தான்…
(ஸாரி விச்சு கண்ணா நீ சொன்னது கடவுளுக்கு கேட்காது ஏன்னா நான் 5-எபில உங்க ரெண்டு பேரையும் பார்க்கவச்சிடுவேன்)…
காத்திருங்கள்…அரக்கன் வருவானா அரணாக….❤️❤️❤️ ❤️
No comments yet.