அரக்கனோ என் அரணோ எபிசோட் -15

BalaSneha Velmurugan | 27 Jan 2026 | Share

அத்தியாயம் -15

ஊரைவிட்டு
சற்று தள்ளி வந்ததுமே ஒரு உணவகம் தென்பட்டது.

 அதை பார்த்தவுடன் ராகவ் டேய் மச்சான் அங்க
பாருடா ஹோட்டல் வண்டிய நிறுத்துடா
.
இப்போதா எனக்கு ஒளியே வருது டேய் எங்கடா போற நிப்பாட்டுடா  ….கண்ணதொறந்து பாருஇந்த இடத்துல
பார்கிங் இல்ல தள்ளிபோய்தான் நிறுத்தனும்
.அதுக்குள்ள எருமமாடு
மாறி கத்துற
….

டேய் விஷ்வா நீயெல்லாம் மனுசாலாடா உமக்குலாம்
பசிக்காதாடா
என்ன பிறவிடா நீஎனக்கு பசில
காது அடைக்குதுடா இப்போதிக்கு உன்ன திட்டுற மூட் எனக்கு இல்ல சாப்பிட்டு எனர்ஜி ஏத்திட்டு
உன்ன பேசிக்கிறேன்
….

ஏன் டார்லிங்
அவனுக்குதான் பசிக்கல நீ எப்டி இவ்வளோ ஸ்ட்ராங்கா இருக்க எனக்கு தெரியாம பந்தில முதல்
ரவுண்டு போய் சாப்புட்டியா என்று பாட்டியை வம்பிற்கு இழுக்க
..

மாலதிக்கு
கல்யாணம் காலையில தான அப்போ சாப்பாடு போடாமையா இருப்பாங்க
எல்லாரு சாப்டோம் நீதான் கடமை
அழைக்கிறதுனு அவசரமா போன் தூக்கிட்டு ஓடிட்டு இப்போ என்ன வந்து கண்ணு வைய்கிறிய சாப்பிட்டது
உடம்புலயே ஒட்டி இருக்காது போடா பொலமாடா
..

 ராகவ் மைண்ட் வாய்ஸில் ஆமா எல்லாம் உங்க அரும பேரன்  தான் கூப்பிட்டான் இல்லை என்றால்
நான் ஏன் போக போறேன்
…… போய் டைம்க்கு நிக்கலனா அதுக்கு வேற தேவையில்லாம அடிப்பான் இல்ல …. கடவுளே இதுக்குலாம் ஒரு என்ட் இல்லயா சார்…….

ஆனாலு டார்லிங்
இப்படி தான் எப்பவு சொல்ற ஆனா பாரே என்றும் பதினாறு மாறில இருக்க என்று கூற பாட்டிக்கு
வெட்கம் வந்து விட்டது தாத்தா கூட எப்பவு இப்படிதான் சொல்லுவாரு

ம்ம்ம்ம்ம்……அப்படியா என்று தாடையில் கை
வைத்து யோசிக்க
….

ஏன்டா என்ன
யோசிக்கிற
……

பொலைக்க
தெரிஞ்ச மனுசன்
….அதான் அப்படி சொல்லி இருக்கார்என்று கூறி சிந்தனை வயப்பட

இதனை பார்த்த
ரதிக்கு சிரிப்பு வர
,” பாட்டி அண்ணா உங்கள வம்பிழுக்குறார்.தாத்தா உங்ககிட்ட
பொய் சொல்லி ஐஸ் வச்சுத்தான் காலம் தள்ளுனார்னு சொல்றார்
….

அடேய்ய்ய்….உன்ன என்று பாட்டி ராகவை துரத்த
அவர்கள் இருக்கும் இடத்திற்கு பார்க் செய்துவிட்டுவந்த விஷ்வா
,பாட்டிமா எதுக்கு இப்படி ஓடுறிங்க

….ஏய்ய் இடியட் .. பார்த்துட்டே நிக்கிற பாட்டி ஓடுறாங்க
கீழவிழுந்துட்டா என்ன ஆகும்
.

நீ எதுவும்
சொல்ல மாட்டியா
…?. பெரியவங்க இப்படி ஓடிட்டு இருக்காங்க இல்லையா இப்படி பார்த்துட்டு சும்மா
நிப்பியா கீழே விழுந்துட்டா என்ன பண்றது
?

ரதிக்கு
முதலில் என்னவென்று புரியவில்லை
. பின்பு தான் விஷ்வா தன்னை திட்டுகிறான் என்பதே உணர்ந்தால் ,;

முதல்ல
இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு ஏதோ ஒன்னு பேசாதீங்க
!

பாட்டியும்
,ராகவ்
அண்ணாவும் சிரிச்சு பேசிட்டு இருந்தாங்க அன்பாதான் சண்டை போட்டுட்டு இருக்காங்க
நீங்க தேவையில்லாம இதுல மூக்கநுழைச்சு  என்ன தேவை இல்லாமல் திட்டுறீங்க
??

இந்த
நண்டுக்கு எவ்வளவு தைரியம்
”! என்கிட்ட பேசவே பயப்படுவாங்க ஆனா
எப்படி முறைக்கிறா எதிர்த்து பேசுறாஇவள
??????

 என்ன எதிர்த்து பேசுற கீழ விழுந்திருந்தாலும்
இப்படித்தான் பார்த்து சிரிச்சிட்டு  நின்னுட்டு
இருப்பியா
?

ஒன்ன
 நல்லா புரிஞ்சுக்கோங்க
”!!!

 அவங்க இப்ப கீழ விழல!!அவங்க விளையாண்டுட்டு
தான் இருக்காங்க
. இன்னொன்னு ராகவ் அண்ணாவும் வேகமா ஓடல!
எதுவுமேதெரியாம என்ன திட்டுறீங்க….

 உண்மைதான் விஷ்வா நானும் ராகவ்
தான் விளையாடிட்டு இருந்தோம் எதுக்கு ரதி பிள்ளையை திட்டுற முதல் வந்து சாப்பிடு
அதுக்கு அப்புறம் இதெல்லாம் பாத்துக்கலாம் என்று விஷ்வை
,ரதியையும்
கூப்பிட்டுக்கொண்டு அனைவரும் சாப்பிட உட்கார்ந்து விட்டனர்
….

விஷ்வா
மீண்டும்  சாப்பிடும் போது ரதியை
முறைத்துக் கொண்டே சாப்பிட ரதி முடிந்த அளவிற்கு பாட்டி இடமே ஒண்டிக்கொண்டாள்
….

எல்லாரும்
வீடு சென்று அடைய மாலை நேரத்திற்கு மேல் ஆகும் என்பதனால் கொஞ்சம் செரிமானம் ஆகும்படி
உணவு வாங்கிக் கொண்டனர்
….

 உணவு வாங்கிய அடுத்த நொடியே அனைவரும் சாப்பிட
ஆரம்பிக்க ஒரு பக்கம் ராகவ் பசியின் காரணமாக யாரையும் கண்டுகொள்ளாமல் சாப்பிட
ஆரம்பித்தான்
.

 இங்கு ரதியோ ஒருஇட்டிலியைஇரண்டாக பிய்த்து
அப்படியே வாயில் போட்டு மென்று  சாப்பிட்டு
முடித்துவிட்டால்
, மறுபடியும் அதே மாதிரி உண்ண,


அவளை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வாவிற்கு
, பாட்டிக்கும்
ஒரு நிமிடம் அதிர்ச்சியாகவும்
,சந்தேகமாகவும் இருந்தது
இருவரும் அவர்களின் முதல்இட்டிலியே இன்னும் சாப்பிட்டு முடிக்காமல் இருக்க
, ரதி சாப்பிட்டு முடித்துவிட்டு மூடியேவைத்து விட்டால் இலையை”!!!!

சாப்பிட்டு
முடித்த பின் நிமிர்ந்து பார்க்க ரதிக்கு அப்பொழுது தான்
, தான் செய்த காரியம் புரிந்தது
உடனே கண்கள் இரண்டிலும் நீர்திரையிட தலை குனிந்து கொண்டு அமைதியாக உட்கார்ந்து விசும்பினாள்

எதுக்கு
ரதிகண்ணா
, “அழுவுற
இப்ப நாங்க என்ன சொல்லிட்டோம்
?என்ன ஆச்சு?

 பொறுமையாகவே சாப்பிடலாம் இல்லையா எதுக்கு
இவ்வளவு அவசரம்
…..அவ்ளோ பசியா வேணும்னா இன்னும் ரெண்டு சாப்பிடுமா ஏன் மூடி வைச்ச!!!

 இல்ல நான் அத!!!!அது!!! வந்து!!அப்படியே பழகிருச்சு .

பாட்டி,அவர என்னை திட்ட வேண்டாம்
சொல்லுங்க
. நான் இனிமேல்  சாப்பிடுவதற்கு கத்துக்குறேன் என்ன திட்ட
வேணாம்னு சொல்லுங்க
!

உன்னை
யாரு இங்க திட்ட போறதில்ல இப்ப சொல்லு என்ன ஆச்சு
?  
ரொம்ப பசிக்குதா அப்படின்னா ஏன் இரண்டு இட்லியோட நிப்பாட்டிட்ட இன்னும்
வாங்கி சாப்பிடலாம் இல்லையா
….

இல்ல
பாட்டி பெரியம்மா வீட்ல இருக்கும்போது எப்போதுமே அவங்க சாப்பிட்டது போக இருக்கிற
சாப்பாடும் இல்ல முந்தின நாள் மீந்துபோன சாப்பாடு தான் எனக்கு கிடைக்கும் அதுவும்
சாப்பிடுவதற்கு ரொம்ப நேரம் பண்ணாலும் பெரியம்மா தேவை இல்லாம திட்டுவாங்க.

 இரவு
நேரத்தில் சாப்பிடறதுனாலும் இல்ல டிபன் சாப்பிடுறதுனால ரெண்டுக்கு மேல எனக்கு
கிடைக்காது அது கிடைச்சாலும் அன்னைக்கு இருக்கிற எல்லா பாத்திரமும் விளக்க
போட்டுருவாங்க அஞ்சு நிமிஷத்துக்கு மேல நான் சாப்பிட லேட் பண்ணா அந்த பாத்திரத்தை
எல்லாம் வேலைக்கு முடிக்கிறதுக்கு எனக்கு விடிஞ்சிடும் அதுக்கப்புறம்  விடிய காலைல எந்திரிச்சு வேலை செய்யணும்னு போது
எனக்கு அந்த அளவுக்கு தெம்பாக இருக்காது
.

 அதனாலதான் நான் கண்டுபிடிச்ச ஐடியா இப்படி ஒரே
நேரத்துல டக்குனு ரெண்டு இட்டிலியையும் பிச்சு சாப்பிட்ட அப்படின்னா சீக்கிரமா
சாப்பிட்டு முடிச்சிடலாம்
..

அதே
மாதிரி ஒரு அளவுக்கு சீக்கிரமா தூங்கிட்டு எந்திரிக்க முடியும் இல்ல அப்படின்னா
அன்னைக்கு நாள் முழுக்க எனக்கு தூக்கம் வந்துட்டே இருக்கும் பெரியம்மா கிட்ட
தேவையில்லாம திட்டு வாங்கணும்
.

மாலதி
அக்கா ஊர்ல இருந்து வந்தா மட்டும் நான் கொஞ்சம் ஃப்ரீயா இருப்பேன் அப்பவும் அவங்க
ஊருக்கு போயிட்டாங்க படிக்கிறதுக்கு அப்படின்னா அதுக்கும் சேர்த்து எனக்கு வேலை
வரும்
.

 அதுவே இப்படியே பழகிருச்சு இனிமேல் நான் முடிஞ்ச
அளவுக்கு மாத்திக்கிறேன் எனக்கு ஒரு தடவை திட்டாமல் சொல்லிக் கொடுங்க
…. என்று மூச்சு விடாமல்
சொல்லி முடித்தால்
….

ரதி ஒவ்வொரு
விஷயத்தையும் சொல்லி முடிக்க பாட்டிக்கு இந்த சிறுவயதில் இந்த பெண் எவ்வளவு
கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறாள்
. எப்படி இந்த பெண்ணை இந்த அளவிற்கு துன்புறுத்த முடிந்தது .அதுவும் சொந்த தங்கைமகளை கடவுளே!!!  என்று நினைத்து வேதனைபட்டார்

 ஆனால் இங்கு விஷ்வாவிற்கு கட்டுபடுத்த முடியாத
அளவிற்கு கோவமும் ஆத்திரமும்  வந்தது
.இந்நேரம் மட்டும்
மாலதியின் அம்மா முன்னால் நின்றிருந்தால் கொன்று குவித்து இருப்பான் அந்த அளவுக்கு
ஆத்திரம்

ஆனால்
அவர்களை எப்படி பழிவாங்க வேண்டும் என மனதில் முடிவெடுத்து விட்டான்
……..நம் அரக்கன்…

 காத்திருங்கள்…….

    அரக்கன் வருவானா அரணாக ❤ ❤ ❤ ❤ ❤

 

 

 

    No comments yet.