அரக்கனோ என் அரணோ எபிசோட் -14

BalaSneha Velmurugan | 18 Jan 2026 | Share

அத்தியாயம் -14

ஏங்க !! ஏங்க!! என்ன கீழ இறக்கி விடுங்க நானே நடந்து வந்துடுவேன் ப்ளீஸ்…..

ஏன் மேடம்க்கு நான் தூக்கிட்டு போன பிடிக்காதா? நான் இப்போ மட்டும் உன்ன கீழே இறக்கி விட்டேனா !

“இங்கேயே உன்ன விட்டுட்டு போயிடுவ?”

“கம்முனு வரதா இருந்தா வா இல்லைனா இங்கேயே தூக்கி போட்டுட்டு போயிடுவேன் என்ன சொல்ற”…? என்று மிரட்ட,

இல்ல உங்களுக்கு கை வலிக்கும் இல்லையா? நான் கொஞ்சம் வெயிட்டா இருக்கேன் இல்ல…..

விஷ்வாவிற்கு,” அவனையும் மீறி உதட்டில் புன்முறுவல் பூத்தது “

தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்து மெருகேற்றி வைத்திருக்கும் உடலுக்கு இவளின் இந்த பாரம் ,”ஏதோ பஞ்சுகுவியலை தூக்குவது போல தான் இருந்தது”, பார்ப்பதற்கு கொஞ்சம் கொழு கொழு என்று இருந்தாலும் தூக்கிப் பார்க்கும் பொழுது லேசாக தான் இருக்கிறாள்….

இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் , ஆமா!!!” எனக்கு உன்ன தூக்கி கையே உடைஞ்சிடும் போல இருக்கு”, நீ என்ன பண்ணு?….

 நான் உன்ன வீட்டில் இறக்கி விட்டதும் நான் போய் கைக்கு ஒரு கட்டு போட்டுட்டு வந்துடறேன் எனக்கு தெரிஞ்சு உள்ளுக்குள்ள ஏதாவது எலும்பு உடைஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்…என்று அவளை வம்பிழுக்க…

விஷ்வாவிற்கு இதுபோல் வம்பு இழுப்பது புதிதுதான் இருந்தாலும் இவளிடம் இப்படி பேசுவது பிடித்து இருக்கிறது….

அச்சச்சோ மன்னிச்சுடுங்க!!!,” என்ன கீழ இறக்கி விடுங்க நானே நடந்து வந்துடுவேன்”, என்று பயத்தில் உதட்டை பிதுக்க….

அவள் உதடுகளை பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் மனம் தடுமாற தான் செய்தது.

 உடனே என்னடி இப்படி எல்லாம் பண்ணி என்ன மயக்க பாக்குறியா? ஏற்கனவே எல்லாரும் முன்னாடியும் எனக்கு கெட்ட பேர் வாங்கி கொடுத்துட்ட.

 அது போதாதுன்னு என்னையும் மயக்க பார்க்கிறாயா? அது கண்டிப்பா இந்த ஜென்மத்துல நடக்காது ரொம்ப நல்லவளா நடிக்காத நீ பண்றது எல்லாம் பார்த்தா எனக்கு உன் மேல இன்னும் கோபம் தான் வருது….

 இல்லங்க! நான் இப்போ உங்களை எதுவுமே பண்ணல! நான் உங்களை என்ன கீழே இறக்கி தான் விட சொன்னேன் நீங்களாஒன்ன நினைச்சுட்டு என்ன திட்டுனா நான் என்ன பண்ண முடியும்.

“மொத என்னை இறக்கி விடுங்க”….

அப்போ மேடம்!!! என்னையே பேசி மடக்குறீங்களோ ??

 சரி ஓகே! “ நான் இப்போ உன்னை கீழே இறக்கி விடுற “,ஆனா! “ நான் கட்டுன தாலியையும் என் கிட்ட கழட்டி கொடுத்துட்டு நீ போ”…ஓகே வா டால்..

குபுக்! என்று கண்களில் கண்ணீர் வர அமைதியாக இருந்து விட்டால்…ரதி

எப்படிதான் இந்த பொண்ணுங்க மட்டும் உடனே கண்ணுல வாட்டர்ஃபால்ஸ் திறந்துவிடுறிங்களோ!!!!!

“.ரியலி இரிடேட்டிங் ஷிட்ட்”…

இவர்களின் இந்த சண்டையில் , விஷ்வா ரதிக்கு தாலி கட்டிய நிகழ்வின் தாக்கத்தில் இருந்து வெளிவரமுடியாமல், ஆதங்கத்திலும், வயிற்றெரிச்சலிலும் மிகுந்த சந்தோஷத்திலும் அங்கே இருந்தவர்கள் அவர்கள் இருவரை பார்த்து கொண்டிருந்தனர்.

பாட்டிக்கு சந்தோஷத்தில் மனம் நிறைந்தது.

“எங்கு தன் பேரன் கல்யாணம் பண்ணிக் கொள்ளவே மாட்டானோ”? இல்லையென்றால்,

அங்கு யாராவது ஒரு பிள்ளையை இழுத்துக் கொண்டு வந்து, “ இவள்தான் உங்கள் மருமகள் என்று சொல்லிவிடுவானோ” ஃ என்று பயம்

 பாட்டியின் வயதிற்கு அங்கே முக்கா காலுக்கும் ,அரை காலுக்கும் உடை அணிந்த பெண்களை பார்க்கும் பொழுது அவர்களின் மீது அந்த அளவுக்கு நல்ல அபிப்பிராயமும் இல்லை.

காரணம் இவர் பார்த்தவர்கள் அனைவருமே கிளப்,பார் என்று சுத்தும் பொழுது அவருக்கு கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்தது.

பின்னே பாட்டி இருக்கும் போதே விஷ்வாவின் தொழில்துறை நண்பர் ஒருவரின் மகள் விட்டால் விஷ்வா மேலயே விழுந்துவிடும் அளவுக்கு குழைவதும் மினுக்குவதும் பார்த்த பயம் தான்….

ரதியை திருமணம் செய்த பின்பு தான் பாட்டிக்கு ஏதோ ஒரு பெரிய பாரம் இறக்கி வைத்தது போல் இருந்தது.

டேய் ராகவ்கண்ணா சீக்கிரம் இவங்கள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகனும். ஆரத்தி கரச்சி வைக்க சொல்லணும்.

 எனக்கு இன்னும் ஒரு விருப்பம் இருக்குடா விஷ்வாவையும் ரதியையும் குலதெய்வம் கோயிலுக்கு கூட்டிட்டு போயிட்டு அதுக்கு அப்புறம் நம்ம ஊருக்கு போகனும்.

 விஷ்வா என்ன சொல்லுவான்னு தெரியல எனக்காக நீ கொஞ்சம் போய் பேசு என் தங்கம் தானே!!

பாட்டிமா வேணும்னே என்ன கோர்த்து விடுறீங்க பாத்தீங்களா இந்த மாதிரி விஷயத்துல நீங்க சொன்னா கூட கேட்பான்.

 ஆனா நான் சொன்னேன்னா எனக்கு முதுகுல டின்னு கட்டிருவான் அதுவும் இப்ப என்ன மனநிலையில இருக்கான்னு வேற நமக்கு தெரியல அதனால நீங்களே சொல்லுங்க இத்தனை பேர் முன்னாடி சொன்னா கண்டிப்பா எதுவும் சொல்ல மாட்டான் முடிஞ்ச அளவுக்கு நீங்களே சொல்லிடுங்க ……

என்னடா என்ன கோர்த்துவிடுற நான்தான் கல்யாணம் பண்ணிக்க சொன்ன அந்த கோபத்துல இருந்தா ….ஆத்தி அம்மா தாயே உன் இடத்துக்கு கூட்டிட்டு வரனும் நினைக்கிற நிறவேத்தி குடுமா என்று அவசரமாக அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து விட்டு….

விஷ்வா கண்ணா ஒரு விஷயம் சொல்லணும்.

சொல்லுங்க பாட்டிமா !!!அதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம்…

இங்க இருக்க எல்லாருக்கும் இங்க என்ன நடந்துச்சுனு புரியும்.

யாருக்கு நான் விளக்கம் சொல்லனும்னு அவசியம் இல்ல ,விளக்கம் சொல்லவும் முடியாது!

புரிஞ்சவங்க அமைதியா இருங்க புரியாம இதுக்கு மேலயும் ஏதாவது கேள்வி கேட்கணும் அப்படின்னா தாராளமா என்கிட்ட கேள்வி கேட்கலாம் .

ஆனால் நான் எதுக்கும் பதில் சொல்ல மாட்டேன் என்னோட பதில் வேற மாதிரி தான் இருக்கும் இதுக்கு அப்புறம் என்னையோ இல்ல ரதியோ யாராவது இனி ஏதாவது பேசினீங்க அப்படின்னா!!!

என்று ஒரு விரலை காட்டி மிரட்டல் மட்டுமே விட அனைவரும் கப்சிப் என்று இருந்து விட்டனர் .

பாட்டி இடம் திரும்பி, “ பாட்டி நம்ம இங்க நிற்க வேண்டாம் நம்ம போயிட்டு மொத சாப்பிடலாம் நானும் இன்னும் சாப்பிடல அதுக்கப்புறம் நம்ம என்ன பண்ணனும்னு பேசிக்கலாம்.

உடனே அங்கிருந்த மாலதி , “அண்ணா! என் மேல உனக்கு என்ன கோபம் நான் என்ன சொன்னேன்”?.

மாலதிமா! “ உன் மேல எனக்கு எந்த கோபமும் கிடையாது நீ கண்டிப்பா அங்கு வந்தேனா எங்க வீட்டுக்கும் ராகவ் வீட்டுக்கும் வா வரனும்.

 ஆனா இந்த இடத்தில் எனக்கு நின்னு பேசவோ இதுக்கு மேல இருக்கவோ எனக்கு பிடிக்கல . நீ அங்க வா நம்ம பேசிக்கலாம் வரட்டுமா என்று செல்லவும்.

 “ திரும்பி ஒரு முறை மாலதியை வருத்தமாக பார்த்துவிட்டு கண்ணீர் சிந்திய ரதியை பார்த்த விஷ்வாவிற்கு கோபம் பற்றி கொண்டு வந்தது.

என்னமோ இதுக்கப்புறம் மாலதிய பாக்கவே மாட்டேன் என்கிறமாறில அழுகுற இன்னும் ரெண்டு நாள்ல அங்க வருவா உடனே சீன் கிரியேட் பண்ணாத சரியா?

“எப்படித்தான் இப்படி எல்லாம் இருக்கீங்க காட்”…

உடனே ரதிக்கு வந்த கோபத்தில், “ என்ன மொத இறக்கி விடுங்க நான் சாப்பிட எங்கேயும் வரல !” “என்ன விட்டுருங்க”! நான் கார்லயே இருக்க.

 நீங்க போய் எல்லாம் சாப்பிட்டு வாங்க எனக்கு பசிக்கவே இல்லை என்று சொல்லும் போது அடுத்த நொடி அவள் வயிற்றிலிருந்து சத்தம் வர ஆரம்பித்தது.

 இந்தமுறை விஷ்வாவிற்கு சிரிப்பை அடக்க சிரமப்பட வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்து விட்டால் ரதி.

சரியான ராட்சசி!! பாக்கதா குழந்தை மாதிரி இருக்கா பண்றது எல்லா ராட்சசிதனம் இவள !!!!!

நீ மட்டும் இப்ப ஒழுங்கா சாப்பிட வரலனா???? உங்க பெரிம்மா கிட்டே விட்டுட்டு போயிடுவேன் .இல்லைன்னா போற வழியிலேயே தூக்கி போட்டுட்டு போயிருவேன் எப்படி வசதி என்று மிரட்ட.

அதெல்லாம் என்ன ஒன்னும் பண்ண முடியாது .நீங்க என்ன வேணாலும் சொல்லுவீங்க நான் பயப்படுவேன் நினைச்சீங்களா! பாட்டியும் ராகவண்ணாவும் இருக்காங்க! அவங்க ரெண்டு பேரும் பாத்துக்குவாங்க.

ஓ!!!!! உனக்கு அந்த அளவுக்கு தைரியம் வந்துருச்சா ?பாட்டி ராகவும் நான் சொல்றத கேப்பாங்களா? இல்ல நீ சொல்றத கேப்பாங்களா?

விஷ்வா சொன்னதை கேட்டு ஒரு நிமிடம் மழங்க மழங்க விழித்து விட்டு பின் அமைதியாக இருந்து விட்டால்!!!!!

“என்ன சத்தத்தையே காணோம் “? ஹான்.

நான் ஏன் பேசணும்? இப்ப நம்ம என்ன பேசிட்டு இருந்தோம்? நம்ம ரெண்டு பேர் பேசுன மாதிரி எனக்கு ஞாபகமே கிடையாது? உங்க கூட நான் பேசறத இல்ல? அப்பவே சொல்லிட்ட இல்ல தேவையில்லாம என்கிட்ட பேசாதீங்க! எனக்கு வேற பசிக்குது.!

மீண்டும் அவன் உதட்டோரம் சிறு புன்முறுவல் பூத்தது.

இந்த முறை அவனின் சிரிப்பினை கண்டவளுக்கு, ‘மற்ற அனைத்தும் மறந்து விட்டது “,”எவ்வளவு அழகா சிரிக்கிறார்”, “பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு” அப்புறம் ஏன் அடிக்கடி உர்ரான்குட்டான் மாதிரி மூஞ்சியை வச்சுக்கிறாரு…?

“இப்ப இது ரொம்ப முக்கியம் பார் “ரதி உனக்கு என்ன ஆகப்போகுதுன்னு தெரியல? அந்த ஆளு வேற உன்னை பழி வாங்குறே?உனக்கு நரகத்தை காமிக்கிறேன் சொல்லிட்டு இருக்காரு நீ அந்த ஆளையே ரசிச்சிட்டு இருக்கியா!.

எப்படித்தா உன் மூளை இப்டிலா வேலை செய்யுதோ ? என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு தலையில் அடித்துக் கொண்டாள்…..

இதனை பார்த்த விஷ்வாவிற்கு, ஒரு பைத்தியத்தை கல்யாணம் பண்ணிட்டோமோ??? காட்! இவள!!! என்று நினைக்க…

விஷ்வா கண்ணா ரதியை தான் கொஞ்சம் இறக்கி விடு! இனி யாரு தூக்கிட்டு போக போறா? உன் பொண்டாட்டி தான் இனிமே யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க இறக்கி விடு என்க…

ரதி வெட்கத்தில் முகத்தை மறைக்க விஷ்வாவின் நெஞ்சோடு சாய்ந்து கொள்ள ?? அவனின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது….

அவன் மோனநிலை கெடுக்கும் வகையில்….

டேய் விஷ்வா!!! நீ பண்ண களபரத்துல என் வயிறு, “ வணக்கமுங்கோ ப்ரண்ட்ஸ்! எனக்கு பசிக்குது ப்ரண்ட்ஸ் “,கத்துதுடா! வாடா போலாம் என்று ராகவ் கத்த…

அனைவரும் காரில் ஏறி ஹோட்டல் நோக்கி பயணத்தை தொடங்கினர்………

காத்திருங்கள்…….

 அரக்கன் வருவானா??? அரணாக???? ❤️❤️❤️❤️

 [உங்களின் கருத்துக்கள் தான் என்னை மேலும் மேலும் எழுத ஊக்கப்படுத்தும்.

உங்கள் கருத்துகளுக்கு ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்…]

    No comments yet.