அரக்கனோ என் அரணோ எபிசோட் -13

BalaSneha Velmurugan | 07 Jan 2026 | Share

அத்தியாயம்
-13

மருது
இங்கே இல்லவே இல்லை பிறகு யாரை ரதி கூறுகிறாள்
,என்று திரும்பி பார்த்த விஷ்வாவிற்கு ரதி தன்னை
தான் கூறுகிறாள் என்று புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் எடுத்தது
….

 உடனே ராகவ் , “ ரதியின் பக்கத்தில் சென்று மெதுவாக பாப்பா
எனக்கு தெரியும் மருது தான் உன்கிட்ட அப்படிநடந்துகிட்டானு ஆனா நீ ஏன் விஷ்வாவ
சொல்ற கண்டிப்பா இது பொய்யின்றது உனக்கு எனக்கு விஷ்வாக்கு தெரியும்
.இதனால ஏற்படப்போற பிரச்சினைகளும் கஷ்டங்களையும் உன்னால சகிச்சுக்க
முடியாது
. 

விஷ்வாவோட இன்னொரு முகம் உனக்கு
தெரியாது வேண்டாம்டா
!பொய்
மட்டும் சொல்லாத உண்மைய சொல்லு எதுவா இருந்தாலும் நான் உனக்கு துணையா
இருக்கேன் . நம்ம பார்த்துக்கலாம் தயவு செஞ்சு பொய் மட்டும்
பேசாதாடா….

ராகவன் பேச்சுக்கு எதுவுமே பேசாமல் அவன்
கண்களை நிமிர்ந்து பார்த்த ரதியின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீரும்
, கெஞ்சலும்
இருந்தது…. ஆனால் ஒரு வார்த்தை வாயைத் திறந்து பேசவே இல்லை…

உடனே
ரதியின் பெரியம்மா மறுபடியும் பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்
.எனக்கு அப்பவே தெரியும் இவ சங்கதி இப்படி சீவி சிங்காரிச்சு நிக்கும்
போது
.மறு வீட்டுக்கு வர வேண்டாம் பொருள்
எல்லாம் எடுத்து வை னு சொல்லும்போது நானும் அக்கா கூட வரேன்னு அடம் பிடிக்காம நான்
சொன்னதும்சரினு
மண்டைஆட்டிட்டு கேட்டா அப்பவே 
நான் யோசிச்சு இருக்கனு

 இவ இருக்கிற மாதிரி இருப்பாளா ?இவன் வேலை இருக்குன்னு சொல்லிட்டு
அங்கிருந்து வருவானா
? நம்ம
எல்லாருக்கும் தெரியாம இங்க நல்லா 
உல்லாசமா இருக்கலாம் நினைச்சு இருக்காங்க அதுக்குள்ளேயே நம்ம வந்துட்டோம்
இவங்க  குட்டு
வெளிலவந்துடுச்சு
…. சீ என்ன ஜென்மமோ‌அம்மா அப்பா இருந்து வளர்த்து இருந்தா ஒழுக்கம்னா என்னனு தெரியு!!! என்று வார்த்தைகளில் விஷம்தடவிபேச

நீங்க
பஞ்சாயத்துல பேசி இனிமே
இவ யார்கிட்டயும் பேசக்கூடாதுனு வீட்டோட முடக்கி
வச்சிடுங்க
.எந்த பசங்களையும் நிமிர்ந்து பார்க்கக்கூடாது அந்த மாதிரி தண்டன குடுங்க அப்பதான்
இவளுக்கெல்லாம் புத்தி வரும்
….( சீக்கிரம்
இவள
எல்லாரு ஒதுக்கிட்டா மருதுக்கு கட்டி வச்சுடனும்என்று மனதில்வக்கிரமாக நினைத்தார்)

இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்த ரதிக்கு எங்கிருந்துதான்
அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை
!!??யாருக்கு யாரு தண்டனை கொடுக்கிறது? நீங்க 
சொல்றத
எல்லாத்தையும் தான் கேட்டுட்டு இருந்தேன் அவ்வளோதா!!? நீங்க என்ன வேணா என்ன பேசுவீங்களா? அவரு என்ன கல்யாணம் பண்ணிகிறேன்னு
சொன்னாரு அதனால  பேசிட்டு இருந்தோம்
, என்கிட்ட எல்ல மீறி உரிமையா நடந்துக்கிட்டாரு அதுல
ஒன்னும் தப்பு இல்லையே
! எப்படி
இருந்தாலும் என் கணவனாக போறவர்தானே
!அவர்
என்கிட்ட அப்படி நடந்துகிறதுல
என்ன தப்பு இருக்கு இதுல நீங்க எதுக்கு எனக்கு
தண்டனை கொடுக்குறீங்க
???

நான் அவரு
கல்யாணம் பண்ணிட்டு இந்த ஊரை விட்டு போயிடுறேன்
என்று முழு மூச்சாக பேசிமுடித்தால் , இவ்வளவு பிரச்சினைகளிலும் விஷ்வா
எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை ரதியை மட்டுமே உருத்துவிளித்துக் கொண்டிருந்தான்.
அவனின் பார்வை ரதியின் உடம்பை கூறுபோடுகிறது இருந்தாலும் அவன் பார்வையை
வேண்டுமென்றே தவிர்த்தால்
.

ஓஓஓஓஓ!!!மகாராணிக்கு அந்த நெனப்பு வேற
இருக்கோ
!அந்த பையனுக்கு
இருக்கிற பணத்துக்கும்,அந்தஸ்துக்கும் அவன் வீட்டில
வேலைக்காரியா கூட வச்சுக்க மாட்டான்
.அவன் உன்ன நல்லா ஏமாத்திருக்கா அதே நம்பிட்டு நீ அவன்கூட குலாவிட்டு
இருந்திருக்கடி
..

அடியே..வாய் இருக்குன்னு என்ன வேணா பேசுவியா வாய கிழிச்சு தைச்சுருவேன்
என் பேரன  பத்தி எனக்கு தெரியும்
. அவ ஒன்னும் கண்டவன் மாறி மேயுறவன்
கிடையாது இதுவரைக்கும் ஒரு பொண்ண கூட எறெடுத்து பார்த்ததில்லை அப்படி இருந்தா
.இன்னேரோ வரிசைல பொண்ணு  கல்யாணம் பண்ணிக்க நிக்கும்

இப்பவும் எனக்கு என் பேர மேலேயும் அந்த புள்ள
மேலயும் தப்பு இருக்கும் தோணல
.இத்தன பேர் முன்னாடி கூடபிறந்தவளோட பொண்ணு தன்பொண்ணு மாறிற்று யோசிக்காம அந்த புள்ளய என்னவார்த்த கேட்டுட்ட அடுக்குமா உனக்கு..

 இந்த நிரஞ்ச சபையில என் பேரன் அவள மனைவியா ஏத்துக்கிற
கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கானு சொல்லி இருக்கா
!!

என்ன
இருந்தாலும் இனிமே அந்தபுள்ள தான் எங்க வீட்டு மருமக
. விஷ்வா என்ன பண்ணுவ எனக்கு தெரியாது?,,,” ரதிய நம்ம வீட்டுக்கு எனக்கு
ஒத்தாசைக்கு கூட்டிட்டு போகலாம்னு தான் நான் சொல்லி இருந்தேன் ஆனா இனிமே அவ
நம்ம வீட்டுக்கு மருமகளா தான் வரணும் .

நீ இந்த பாட்டி சொன்னா கேட்பேனு
நினைக்கிறேன்
..இல்ல  கேட்கமாட்ட அப்படினா ந என்னோட கடைசி ஆசையா  நினைச்சுக்கோ,    ரதிய நீ கல்யாணம் பண்ணிட்டு உன் பொண்டாட்டியா
தான் நம்ம இந்த ஊர்ல இருந்து
அவள கூட்டிட்டு போறாம்’”, என்ன சொல்ற?

இவ்வளவு
விஷயங்கள் நடந்த பிறகும் விஷ்வாவின் மனதில் ரதி சொன்ன அந்த வார்த்தை மட்டும்
மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருந்தது
. “இவர்தான் என்னிடம் தப்பான நடந்துட்டாரு இவர்தான்
என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி என்கிட்ட எல்ல மீறி நடந்து கிட்டார்
’”
என்ற வார்த்தை மட்டுமே மனதில்
ஓடிக்கொண்டே இருக்க
..

கண்கள்
எல்லாம் இரத்தமென மீண்டும் சிவந்துவிட்டது
.குலதெய்வகோயிலுக்கு சொல்லலாம் என்று வாங்கி
வைத்திருந்த மஞ்சள் சாரடையும் மஞ்சள் கிழங்கையும் ஒரே முடிச்சாக போட்டு கைகளில்
வைத்துக்கொண்டு ஒவ்வொரு அடியும் அழுத்தமாக வைத்து ரதியை‌
நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் விஷ்வா.

பார்த்துக்
கொண்டிருந்த அனைவருக்கும் விஷ்வா அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று தெரிந்துவிட
தடுக்கும் மனநிலை எவருக்கும் இல்லை
தைரியமும் இல்லை.

பாட்டிக்கு
ஒரு புறம் சந்தோஷம் இருந்தாலும் ஏதோ ஒன்று தவறாக உள்ளது என்று மட்டும் புரிந்தது

ராகவிற்கும்
ஒரு பக்கம் தன் நண்பனிற்கு திருமணம் நடக்கப் போகிறது என்ற சந்தோஷம் இருந்தாலும்
, மருது செய்த தவறுக்கு இந்த பெண்
விஷ்வாவை பழி சொன்னது எதனால்
?  இதனால் அவளுக்கு விஷ்வாவிடம்
இருந்து ஏற்படப் போக்கும் சித்திரவதைகளை நினைத்து மனமும் வலிக்கத்தான் செய்தது
”.

 இருந்தாலும் விஷ்வாவிற்கு ரதியின் மேல் சிறு ஈர்ப்பு
இருக்கிறது என்பது தெரிந்து கொண்டபின் அந்தப் பெண் விஷ்வாவை சரி செய்து விடுவாள்
என்று மனதார நம்பினான்
….

 ரதியின் முன் நின்று விஷ்வா ரதியின் முகத்தைப்
பார்த்துக் கொண்டே இருந்தான். விஷ்வா வந்து நின்றது தெரிந்தும் அவன் முகத்தை நிமிர்ந்து‌
பார்க்கும் தைரியம் இல்லாமல் அவனின்
பாதத்தையே பார்த்துக் கொண்டு குனிந்து கொண்டே அழுது கொண்டிருந்தாள்
.

இப்ப நீ ,
என்ன பாக்க போறியா இல்ல எல்லாரும்
முன்னாடியும் நான் உன்ன கிஸ் பண்ணட்டுமா
”!!!….

 இவர் சரியாகத்தான் சொன்னாரா! இல்லை என் காதிற்கு தான் தவறாக
கேட்டு விட்டதா
?  , ஹாஃக்   என்று நிமிர்ந்து விஷ்வாவினை பார்த்த ரதியின்
கண்களுக்கு விஷ்வாவின் சிவந்த கண்கள் பயத்தை கொடுக்க கண்களை மூடிக்கொண்டு அப்படியே
நின்று விட்டால்
….

நீதான
சொன்ன
? நான் உன்கிட்ட எல்ல மீறி
நடந்துக்கிட்டேன்ல எந்த அளவுக்கு  நடந்து
கொண்டேனு
எனக்கு
தெரியவில்லையா
???? அச்சச்சோ
 என்று நக்கலாக உச்சுக் கொட்டினான்.

கல்யாணம்
நடந்தது அப்புறம் என்னன்னாநான்
பண்ணேண்ணு ஒவ்வொன்னா என்கிட்ட  காட்டுவியாம். என்று பல்லை கடித்து கொண்டுஉருமினான்

வெல்கம் டூ மை ஹெல் “!!!டால் என்று மூன்று முடிச்சு போட்டு மிஸஸ் ரதி விஷ்வாமித்திரனாக  ஆக்கி
கொண்டு கைகளில்
ரதியை அள்ளி கொண்டான்..

   ரதிக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் மனதார இந்த வாழ்க்கை( விஷ்வா )கடவுள் குடுத்த பொக்கிஷமாக எண்ணி நிம்மதி அடைந்தாள்….

 காத்திருங்கள்….

அரக்கன்
வருவானா
?அரணாக ?❤ ❤ ❤ ❤

 

 

    No comments yet.