அத்தியாயம் -12
சிறுவயதில் ஏற்பட்ட சில மறக்க முடியாத கடந்த கால கசப்பான நிகழ்வுகளாளும் , பிரச்சனைகளால் அதிகமாக கோபப்பட்டால் அவனது உடல் சில நிமிடத்திலேயே வேர்த்து விறுவிறுத்து மயக்கத்திற்கு சென்று விடுவான் விஷ்வா .
அதிலிருந்து அவன் வெளியில் வருவதற்கே ஒரு நாள் ஆகிவிடும் அதற்குப் பிறகு அடுத்த இரண்டு நாட்களுமே சோர்வாகவும் எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபாடு இல்லாமலும் எதையோ வெரித்துக்கொண்டே உட்கார்ந்து கொள்வான் .அதனால் முடிந்த அளவிற்கு விஷ்வாவினை கோபப்படாமல் பார்த்துக் கொண்டனர்.
அதின் வடிகாலாக தான் விஷ்வா தேர்ந்தெடுத்தது ,இவனின் இந்த அரக்க குணம்.
அவனுக்கு ஒருவர் மீது கோபம் வர ஆரம்பிக்கிறது என்றாலே அவன் யாரென்று பார்க்காமல் அவர்களுக்கு தக்க தண்டனையை கொடுத்து தனது கோபத்தின் அளவை கட்டுப்படுத்திக் கொள்வான். மிகுந்த கோபத்திற்கு சென்றாலும் இல்லை, மிகுந்த மன அழுத்தத்திற்கு சென்றாலும் அவன் மூளையில் எழும் செல்களின் திறன் பாதிப்படைந்து உயிருக்கே ஆபத்தை தரலாம் என்றும் மருத்துவர் கூறியுள்ளார் அதை எல்லாம் நினைத்தும் விஷ்வாவின் இந்த கோபத்தை பார்த்து ராகவும் பாட்டியும் பயந்தனர்.
இதனால் தான் ராகவ் முதலில் ரதியின் மேல் விஷ்வா பார்வை படக்கூடாது என்று நினைத்தது.அவனே அறியாதது. விஷ்வாவின் கோபம் ரதியிடம் மட்டும் கட்டுபாட்டில் இருக்கிறது என்று …மற்றவர்களிடம் காட்டும் அரக்கன் குணம் ரவியிடம் மட்டும் அடங்கிபோகிறது.இல்லை என்று சொல்லமுடியாது ஆனால்,”அவனின் கட்டுபாட்டில் இருக்கிறது.
விஷ்வாகண்ணா!!! “எதுக்கு இவ்ளோ கோபப்படுற ?பொறுமையா இருப்பா ?”என்ன நடந்துச்சு ?நீ சொல்லு கேட்பதற்கு நாங்க இருக்கோ ?என்ன ஆச்சு?”. என்று பாட்டியும்.
ரதி பாப்பாவுக்கு எதனால இப்படி இருக்கா? சொல்லு விஷ்வா! என்று ராகவும் விஷ்வாவைஎந்த அளவிற்கு கோபத்தை தணிக்க வைக்க முடியுமா அந்த அளவுக்கு பொறுமையாக பேசினர்.
பாட்டி——————.
எனக்கு கொஞ்சம் வேலை இருக்குன்னு சொல்லிட்டு நான் வீட்டுக்கு கிளம்பி வந்தேன் ,வந்து பார்த்தேன் யாருமே இல்ல! மேல ஸ்டோர் ரூமில இருந்து ஒரே சத்தம் … என்னனு மேலே போய் பார்த்தா யாரோ ஒருத்த ரதி கிட்ட தப்பா நடந்துகிட்டான் அவனை அடிச்சுட்டு நான் ரதிய கீழே கூட்டிட்டு வந்தேன். அவ ரொம்ப பயத்துல இருக்கா அதனால தான் அவன் நடுங்கிட்டே இருந்தா அதனால தான் என் கோட் கொடுத்தேன் .தனியா இருக்க பயப்படும் போது நான் எப்டி என் டால் விட்டுட்டு வர முடியு , ஆனா!!!எல்லாரும் எதுக்கு அதை பார்த்துட்டு இப்படி தப்பா பேசுறீங்க தப்பான பேசுற எல்லாருக்கும் தண்டனை தர வேண்டாமா? தரனும் தானே என்று கண்கள் ரத்தமென சிவந்து கர்ஜிக்கும் விஷ்வாவை பார்த்த அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைத்து.
ராகவிற்கு ஒருபக்கம் ஆச்சரியம் அதிர்ச்சியும் கூட பேசும்போது ரதியை டால் என்று அவன் சொன்னது கற்பனை கிடையாது கண்டிப்பாக அவனிற்குள்ளே இந்த பெண் ஏதோ சலனம் ஏற்படுத்தி இருக்கிறாள்.இந்த பிரச்சனைகள் முடிந்ததும் அவனிடம் கட்டாயம் கேட்க வேண்டும்.
மாலதியின் அம்மாவிற்கு தெரிந்தது, “ இது அனைத்தும் மருதுவின் வேலை என்று” அந்த எடுபட்ட பைய மட்டும் என் கையில கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு.
பொறுமையா இருடான்னு சொன்னா கேட்காம இப்படி ஒரு விஷயத்தை பண்ணி வச்சிருக்கானே இதை எப்படி சரி பண்ணுவேன்.
அதற்குள் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர், சரி தம்பி!!! நீங்க சொல்றதே உண்மையா இருக்கட்டு.
தம்பி நீங்கதான் யாரோ ஒருத்தவங்க தப்பா நடந்துக்கிட்டாங்கன்னு சொன்னீங்க இல்ல? எங்க அந்த பயள காணோம் போலீஸ்ல புடிச்சு குடுத்துட்டீங்களா? இல்ல அடிச்சு போட்டு இருந்தீங்க அப்படின்னா எங்க இருக்கான் அவனை காட்டுங்க நாங்க அவன்கிட்ட பேசணும் என்றார்….
விஷ்வாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை!!ஒரு வேலை மருதுஅவனின் கஸ்டடியில் எடுத்துச் சென்றது எல்லாம் இங்கு தெரிந்தால் இத்தனைநாள் தான் செய்த ஒவ்வென்றும் பாட்டிக்கு தெரிந்து அவர் வேதனைபடுவார்.
நான் சரியாகி வருகிறேன் என்று நினைத்து சந்தோஷப்படும் இவர் தனது அரக்ககுணம் தெரிந்தால் என்ன ஆகுவார் என யோசித்து கொண்டே சொல்ல தயங்க…
விஷ்வாவின் தயக்கம் புரிந்த ராகவ், “ஏங்க குற்றவாளிய ட்ரீட் பண்ற மாறி கேள்வி மேல் கேள்வி கேட்கிறீங்க!! அங்க அந்த புள்ள பயந்துபோய் நடுங்கிட்டு இருக்கு…ஒரு வார்த்தை ஆறுதலா பேசாம இப்படி நடத்துறிங்க!!! சே!!!!!…
அம்மாடியோ… இவ ஊருமேஞ்சுட்டு வருவா!!! நாங்க இந்த அம்மாவ தாலாட்டனுமா!!! தப்பா நடந்துகிட்டா சொன்னிங்க இல்லையா? ஒன்னு அந்த ஆள காட்டுங்க இல்லன்னா நீங்கதான் தப்பு செஞ்சீங்கன்னு ஒத்துக்கோங்க ..
எந்த புத்துக்குள்ள எந்த பாம்பு இருக்குன்னு யாருக்கு தெரியும்??? என்று ஜாடைபேச்சு ஒவ்வொருவரும் பேச ஆரம்பிக்க,
என்னடி ஊருள இருக்கவளுங்க அத்தனை பேரும் வாய் இருக்கும் என்ன வேணா பேசுவீங்களா எல்லாரு வாய ஒட்ட நறுக்கிடுவேன். என் பேரனை பத்தி எனக்கு தெரியும் அவன்தான் அடிச்சு போட்டு இருக்கேன்னு சொல்றான்ல கூட்டிட்டு வருவான் என்ன?? வாய மூடிட்டு இருங்க அதுவரைக்கும் தேவையில்லாம அது இதுன்னு பேசிட்டு இருந்தீங்க எல்லாரும் சிண்ட அறுத்து போடுவே!! என்று பாட்டி ஒருப்புறம்ஞ கோபமாக, விஷ்வாவிற்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.
ராகவ்விற்கு விஷ்வா கண்ணை காட்ட புரிந்து கொண்டு உடனே மருதுவை இவர்கள் பேசும் இடத்திற்கு உள்ளே அழைத்து வரலாம் என்று திரும்ப அதற்குள் ஒரு மெல்லிய குரல் கேட்டது.
இவர்தான் என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தாரு உன்ன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் நம்ம ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி இருக்கலாம். என்னை நம்புனு என்கிட்ட சொன்னாரு.
என்று யார் முகத்தையும் பார்க்காமல் தரையைப் பார்த்துக் கொண்டேன் ரதி நடுக்கத்துடன் கூற…..
ஒவ்வொருவரும் ரதியை வெவ்வேறு மனநிலையில் பார்த்தனர்…
இனி விஷ்வாவின் மனநிலை? ரதியின் இந்த மாற்றி பேசும் பேச்சு எதனால்??????
காத்திருங்கள்….
அரக்கன் வருவானா அரணாக
No comments yet.