அத்தியாயம்
-11
ப்ளீஸ்!!” என்னை எதுவும் பண்ணிராதீங்க”! நான்தான் சொல்றேன்ல உங்களை கல்யாணம்
பண்ணிக்கிறேனு!
அப்புறம் ஏன்?
என்கிட்ட இப்படி நடந்துக்கிறீங்க எல்லாரும் என்ன ரொம்ப கேவலமா பேசுவாங்க.
என்ன ரதிகண்ணு
உன் வாய் தான் சொல்லுது நீ என்ன கல்யாணம் பண்ணிக்குவ!!கல்யாணம் பண்ணிக்குவேன்னு!! ஆனா உன் கண்ணும் நடத்தையோ அப்படி சொல்லலையே? எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணம்
பண்ணிக்க தான் போறோம். அதனால
முன்னாடியே நம்ம புருஷன் பொண்டாட்டியா இருந்துருவோம் சரியா! என்ன தான் உனக்கு பிடிக்கும் இல்லையா! என்ன தானே கல்யாணம் பண்ணிக்க போற
அப்புறம் என்ன வா இங்க…..
அவள்
பக்கத்தில் வந்து அவளை அணைப்பதற்காக இரண்டு கைகளையும் பிடிக்க செல்ல,” ரதி ஒரே தள்ளாக
தள்ளிவிட்டு முடிந்த அளவுக்கு அந்த இடத்தில் இருந்து அவன் கையில் சிக்காமல் ஓடி
ஒளிந்து கொண்டே இருந்தால்”
எவ்வளவு
தூரம் தான் நீ என்கிட்ட இருந்து தப்பிக்கிற நான் பாக்குறேன்.அவங்க வரவரைக்கும் நீ என்கிட்ட தப்பிச்சாலும் வந்து
பாக்கும் போது என்னென்ன உனக்கு சேதாரம் ஆகுதோ!!! அதெல்லாம் பார்த்துட்டு அவங்க
எல்லாரும் நம்மள தப்பா தான் நினைச்சுக்குவாங்க நமக்கு கல்யாணம் நடக்க தான் போகுது!.
என்ன அதுக்கு முன்னாடி ஒரு டிரையல் பார்த்துக்கலாம் நான் நினைக்கிறேன். நீ தான் சரிப்பட்டு வர மாட்டீங்கிற,” நீயா வந்துட்டேன்னா எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது.”என்று அவளை பிடிக்க மருது முன்னேறி
கொண்டிருந்தான்.
இங்கு
வீட்டிற்கு விரைந்து வந்த விஷ்வாவிற்கு எங்கு தேடியும் ரதியின் உருவம் கண்ணில் தென்படவே இல்லை. வீட்டிலேயும் யாரும் இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்ன செய்வது என்று
ஒரு நிமிடம் சுற்றிப் பார்த்த விஷ்வாவிற்கு மேலிருந்து ஏதோ விழும் சத்தம் கேட்கவும் ஒரு நிமிடம்
யோசித்து விட்டு படப்படவென்று படிகளில் ஏறி மேலே ஸ்டோரிமை நோக்கி ஓடினான் .
நீண்ட
நேரமாக அவனிடம் போராடிக் கொண்டிருந்த ரதிக்கு,” ஒரு நிமிடம் தலை சுற்றுவது போல் இருக்க சுவற்றை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டால் ,இதுதான் சமயம் என்று பார்த்த மருது சடார் !என்று அவளை இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு
அறை வைக்க ரதி சுருண்டு விழுந்துவிட்டால்
அவளால் எழுந்து கூட நிக்க முடியவில்லை”.
“இதற்கு
மேல் அவ்வளவுதான்”! இது நாள்
வரை பட வேண்டிய அனைத்து கஷ்டங்களையும் பட்டாலும்,மானமாவது மிச்சமாக இருந்தது.”
இன்று அதுக்கும் களங்கம் ஏற்படப் போகிறது இதற்கு
மேலும் தன்னால் எதுவும் செய்ய முடியாது. இவன் தன்னை என்ன செய்து விட்டாலும் ,அனைவர் முன்பும் தன்னை குற்றவாளியாக நிப்பாட்டுவதற்கு முன்பு தன்
உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு கண்ணை மூடி படுத்துவிட்டாள் ரதி. போராடும் அளவுக்கு உடலில் இருந்த மொத்த தெம்பும் வடிந்து விட உயிரற்ற ஜடமாக
மட்டுமே கிடந்தாள் ரதி.
.அவளை பார்த்துக்கொண்டே அவள் மீது படர்வதற்காக மேலே
விழுந்த மருதுவின் காதுகளில் யாரோ கதவை பலம் கொண்ட
மட்டும் உடைப்பது போல் சத்தம் கேட்க அவனது
உடைகளையும் , தலையும்அங்கே அங்கே கலைந்தது போல் பண்ணிக்கொண்டு ரதி மேலே போட்டுட்டு இருந்த சேலையை
உருவி தூர எறிந்தான்.
கதவை உடைத்து உள்ளே நுழைந்த விஷ்வா
,”ரதியின் நிலைமையை பார்த்து
ருத்ரமூர்த்தியாக மாறி பக்கத்தில் தெனாவட்டாக உட்கார்ந்திருந்த மருதுவின் நெஞ்சில்
ஓங்கி ஒரு மிதி மிதித்தான்”.
மிதித்ததில்
அந்த பக்கம் போய் சுருண்டு விழுந்து விட்டான்.
விஷ்வா
மிதித்த மிதியில் மருதுஅந்த இடத்திலேயே மயக்கத்திற்கு போய்விட அவன் உயிரோடு இருக்கானா?
இல்ல செத்துப் போயிட்டானா ?என்ற எந்த ஒரு அறிகுறியும் தெரியாமல்
கிடந்தான்.
இங்கே! ரதியின் பக்கத்தில் வந்த விஷ்வா, ரதிமா!!! ரதிமா!!! எந்திரி பேபி டால்!! என்ன ஆச்சு உனக்கு? ஓகே தானே? “உனக்கு
ஒன்னும் பிரச்சனை இல்ல” இங்க
பாரு! இங்க பாரு! விஷ்வா வந்திருக்கேன்._நான் தெரிகிறேனா”.
ப்ளீஸ்!என்ன காப்பாத்துங்க !என்ன காப்பாத்துங்க! நீங்க என்ன இங்க இருந்து வெளியில கூட்டிட்டு போங்க எனக்கு இங்க இருக்க பயமா இருக்கு! வெளிய கூட்டிட்டு போங்க! அதை மட்டுமே பயத்தில் உளறி கொண்டே இருந்தால்,
உனக்கு ஒன்னும் இல்லடா பேபி டால்! அதான் நான் இருக்கேன் இல்ல நான்
பாத்துக்குறேன் என்று அவன் போட்டிருந்த கோட்டை மட்டும் கழட்டி அவளுக்கு போர்த்தி
விட்டு அவளை மெதுவாக தூக்கிக்கொண்டு வீட்டின் முன்புற ஹாலில் உட்கார வைத்தான்.
தண்ணி
வேணும்! குடிக்கறதுக்கு தண்ணி வேணும்! ப்ளீஸ் கொஞ்சம் தண்ணி மட்டும் தாங்களேன் .
ஓகே! ஓகே! ஒன்னுமில்லடா! இரு
எடுத்துட்டு வரேன் என்று எழுந்து கிச்சனுக்கு செல்ல , “மித்ரா என்னவிட்டு போகாதீங்க எனக்கு பயமா இருக்கு போகாதீங்க!!!! போகாதீங்க!!!
அச்சோ
டால்!! நா இங்கதா
இருக்க உன்னைவிட்டு எங்கும் போகல என்று அவளை
தூக்கி கொண்டு கிச்சன் திண்டில் உட்கார வைத்து ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் அவளின்
முதுகை தடவி கொடுத்து கொண்டே மெதுவாக புகட்டினான்.
குடித்து முடிக்கும் வரைக்கும் அவனை விட்டு
விலகாமல் நடுங்கிக்கொண்டே அவனைப் பிடித்துக் கொண்டே தான் தண்ணீர் குடித்து
முடித்தாள் அவள் எவ்வளவு தூரம் பயந்து இருக்கிறாள் என்று விஷ்வாவிற்கு புரிந்தது.
“அவனது
அரக்க குணம் சிறிது நாட்களாக அமைதியாக இருக்க “இன்று அந்த அரக்க குணத்திற்கு தீனி போடும்
வகையில் மருது நடந்து கொண்டது அவனை மேலும் மேலும் கோபப்படுத்தி கொடூரமாக அவனை சித்திரவதை செய்ய
வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டு வர வைத்தது”.
என்ன தைரியம் இருந்தா, என்னோட டால் கிட்ட இவன் இப்படி நடந்துட்டு
இருந்து இருப்பான் இவனுக்கு நான் நரகத்த
காட்டணும் என்று யோசித்துக்கொண்டே போனில்
ராகவிற்க்கு அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்தான் அடுத்து ஒரு சில நிமிடங்களில்
மருதுவை இரண்டு அடியாட்கள் தூக்கிக்கொண்டு விஷ்வா வின் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்றனர்.
பேசியது
அனைத்தும் ரதிக்கு ஒரு அளவிற்கு புரிந்தும் புரியாமலும் இருக்க என்ன நடந்தாலும்
இவனிடமிருந்து பிரியக்கூடாது என்ற மனதில் நினைத்துக் கொண்டே அவனை மேலும் இறுக்கமாக
கட்டிக் கொண்டாள் என்ன நினைத்தானோ விஷ்வாவும் முதுகை ஆதரவாக தடவி கொடுத்துக்கொண்டே
இருந்தான். அவளை
விட்டுஇம்மியும் பிரியாமல் பக்கத்தில் அணைத்து கொண்டே அனைத்து கட்டளைகளும் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.
இவர்கள் இங்கு இப்படி இருக்க மறு வீடு அழைப்பு எல்லாம் முடிந்து அனைவரும் திரும்பி
வந்து வாசலில் நிற்கும் பொழுது ,
நடுநயமாக
ஹாலில் விஷ்வாவும் ரதியும் கட்டிபிடித்து கொண்டு இருப்பது போல் தெரிந்தது மேலும்
ரதியின் கலைந்த தலைமுடியும் விஷ்வாவின் கோர்ட்டு ரதியை மூடிக்கொண்டிருப்பது
பயத்தில் ரதி விஷ்வாவின் சட்டையை இறுகப்பிடித்திருந்ததுதான் விளைவாக அவனது சட்டை
கசங்கிருப்பதும், வெளியே
இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன மாதிரியான சூழ்நிலையாக அவர்களுக்கு
தெரிந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதே இல்லை!!!!
முதலில் பார்த்த மாலதிகோ அல்லது அவளது
கணவருக்கும்,” அது
தவறாக தெரியவில்லை.”.
ஏதோ ஒரு
தவறு நடந்திருக்கிறது! அதனால் தான் இப்படி இருக்கிறார்கள் அதனால் தான் இப்படி
நடந்து இருக்கிறது என்று ஓரளவுக்கு அவர்கள் சரியாக கனித்திருக்க , மேற்கொண்டு விச்சுண்ணா!
என்ன பிரச்சனை? என்ன ஆச்சு? எதனால ரதி இப்படி இருக்க? ஏதோ மாதிரி இருக்கா? நம்ம டாக்டர் பாக்கலாமா!!! என்னதான் ஆச்சு சொல்லுங்களேன் என்று உண்மையாறஅக்கறையில் விசாரிக்கத்,
இன்னும்
என்னதான் ஆகணும் கண்றாவி!
இப்படித்தான் ஒரு நல்ல நாள் அதுவுமா
நல்லது நடக்கிற வீட்ல இப்படித்தான் கூத்தடிச்சிட்டு இருப்பாங்களா? இதெல்லாம் நான் நீங்க உங்களோட ஊர்ல
பழகிட்டு வந்தீங்களா? இந்த கேடுகெட்ட சிறுக்கி எப்போ எவன்டா வருவான் எவனடா மயக்கெல்லாம் தான்
சுத்திட்டு இருந்தா இப்போ இத்தனையும் பண்ணிட்டு! ஹால்ல உக்காந்து இருக்கீங்க சீ!!!!!! உங்களுக்கே வெக்கமா இல்லையா.
அதுதானே!!! இப்படி ஒரு நல்ல காரியம் நடக்கிற இடத்துல இப்படித்தான் இருப்பீங்களா
உங்க பட்டணத்தில் இதுதான் சொல்லிக் கொடுத்தாங்களா? இன்னைக்கு ,” இந்த புள்ள இவ்வளவு அழகா ஜோடிச்சிட்டு வந்து
நிக்கும் போது நினைச்சேன் பட்டிணத்து காரண மயக்க இப்படி பண்ணி இருக்கான்னு”….
இனிமே இவகிட்டலாம் பார்த்து தான் நடந்துக்கணும்
போல இருக்கு எங்க வீட்டு பசங்கள எல்லாம் நாங்கதான் பொத்தி பொத்தி வச்சுக்கணும் போல
இருக்கு இவ கிட்ட இருந்து, இல்லன்னா எங்க பசங்களையும் மயக்கி இவ தப்பா
நடந்துக்கிட்டானா என்ன பண்றது…
என்று ஒவ்வொருவரும் ரதியை தவறாக பேச யாருமே
அவளுக்கு ஆதரவாக பேச
முன்வரவில்லை.. பரிதாப பார்வை மட்டுமே
சிலரால் பார்க்க முடிந்து அவளின் பெரியம்மாவின் பேச்சிற்கு பயந்து… இவ்வளவு நாட்கள் அவள் இருந்த இடமும் எப்படி
மற்றவர்களிடம் அவ்வளவு அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்த தன்னை ஒரு நிமிடத்தில் தவறாக பேசுகிறார்கள் இவர்கள் என்று மனம் வலிக்க கசந்த புன்னகை மட்டுமே ரதிக்கு….
அத்தனையும் பார்த்து கொண்டிருந்த விஷ்வாவிற்கு கோவம் எல்லையை தாண்ட ,”முன்னே இருந்த சோபாவை ஓங்கிமிதிக்க அனைவரும் பயந்து அவனை பார்த்து வாயை
மூடிக் கொண்டார்”…….
அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த ராகவ் , பாட்டியும் விஷ்வாவின் நிலை பார்த்து பயத்தையும் தாண்டி கவலை கொண்டனர்….
(((((இனி ரதி மட்டும் விஷ்வாவின் பாதைகள்
ஒன்றாகுமா? விஷ்வாவை
பார்த்து அவர்கள் கவலை கொள்வதற்கான காரணம் என்ன?????)))))))))
.அரக்கன்
வருவானா? அரணாக??? ️
️
️
️
No comments yet.