அரக்கனோ என் அரணோ எபிசோட் -10

BalaSneha Velmurugan | 18 Dec 2025 | Share

அத்தியாயம்
-10

அனைத்து
சடங்குகளும் முடித்து
மறு வீடு செல்ல அனைவரும் தயார் ஆகி கொண்டிருந்தனர்.

ஏய் ரதி!! குலதெய்வக் கோயிலுக்கு
போகனும் என்னென்ன வேணுமோ எடுத்துவச்சிடு
! அதுபோக மறு
வீட்டுக்கு போய்டு நாங்க வரும் போது கரெக்ட்டா ஆரத்தி கரச்சு வச்சுட்டு நில்லு எங்கயாது
போய் உட்கார்ந்துகாத புரியுதா
! என்று ரதியை விரட்டி கொண்டிருந்தார்
அவள் பெரியம்மா
.

விஷ்வாவின்
பாட்டிக்கு ரதியை  இப்படி வேலை வாங்குவதை
பார்க்கும் பொழுது கோபமாக வந்தது இருந்தாலும் எதுவும் சொல்ல முடியாது என்ற
காரணத்தினால் ஏன் பிள்ளைய போட்டு வேலை வாங்குற அதுக்கு தான் ஆளுங்க இருக்காங்கல்ல
அவங்க பண்ணட்டும் அந்த பிள்ளையும் நம்ம கூட மறு வீட்டுக்கு வரட்டுமே
?இப்ப எதுக்கு அந்த பிள்ளை
மட்டும் இங்க இருக்க சொல்ற
.

அப்படி
இல்லம்மா
!!! வேற
ஒன்னும் கிடையாது மாலதிக்கு ரதிதான தங்கச்சி. அப்ப அவ தானே எல்லாமே பண்ணனும்
.

 அதனால அவதா இந்த முறைகள் எல்லாம் செய்யணும்
அதுபோக குலதெய்வ கோயிலுக்கு போவதற்கான பொருள்கள் எல்லாம் எங்க இருக்கு எந்த
இடத்தில் இருக்குது ரதிக்கு தான் தெரியும்
.

 அவதான் எல்லாமே எடுத்து வச்ச அதனால தான்
சொன்னேன் அனைவரும் பார்க்கிறார்கள் என்று தெரிந்தபின்
,”வேண்டுமென்றே இந்த
வீட்டோட எல்லா பொருள்களும் எங்க இருக்கு எப்படி பார்த்துக்கணும் எல்லா
பொறுப்பையும் நான் அவ கிட்ட தான் கொடுத்து இருக்கேன் அவளைக் கேட்டு நாங்க
பண்ணிட்டு இருக்கோம் எந்த இடத்துலயும் நாங்க அவ்வள ஒதுக்கி வைக்கவே கிடையாது
”.

 எனக்கு உடம்பு முடிலஅதனாலதான் அவகிட்ட என்
பொறுப்புகளை ஒப்படைச்ச என்று அனைவரையும் ஒரு ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே பேசி
முடித்து விட்டார்
.

ரதிக்கு
இதெல்லாம் பழகிய விஷயம்இவர் இப்படித்தான் என்பதால் சிறு இதழோர விரக்தி புன்னகை
மட்டுமே சிந்தி விட்டு பாட்டிமா நான் எல்லாமே பாத்துக்கிறேன்
.

 நீங்க பத்திரமா போயிட்டு வாங்க மாலதி அக்காக்கு
நான் பண்ணாமல் வேற யாரு பண்ணுவா
? நான் போய் எல்லாமே ரெடி பண்றேன் ஸ்டோர் ரூம் கீ மட்டும் குடுங்க
பெரியம்மா
.

இவ்வளவு
நேரம் அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்துநின்று கொண்டிருந்த மருதுவிற்கு ரதி
ஸ்டோர் ரூம் கீ பெரியம்மாவிடம் கேட்டதும் கண்கள் இரண்டும் பளிச்சிட்டது
. அப்படியே மெதுவாக
நகர்ந்து சேர்ந்து கொல்லைபுரத்திற்கு சென்று விட்டான் யாரும் பார்க்காதவாறு
.

ஏனோ
விஷ்வாவின் மனது இன்னும் நெருடலாகவே இருந்தது
! 
என்னவோ ரதியை விட்டு செல்ல வேண்டாம் அவள் பக்கத்திலேயே இருக்க வேண்டும்
என்று மனதில் ஒரு பக்கம் தோன்றி கொண்டே இருந்தது இருந்தாலும் அதனை ஒரு ஓரமாக
ஒதுக்கிவிட்டு அங்கு நடப்பதை மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று விட்டான்
.

அனைவரும்
கிளம்பி வந்துவிட
, வேனில் ஏறி அனைவரும் மறுவீட்டிற்கு சென்று விட்டனர்.  போகும் அவர்கள் எல்லாரையும் ஒரு
முறை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தாள்
.

மனம் முழுக்க
விஷ்வாதன்னிடம் பேசிய முறையும்
, பெரியம்மா தனக்கு இதற்கு பின் என்ன செய்வார் என்ற சிந்தனையும் ஓடிக்கொண்டிருக்க,
கை அதன் வாக்கில் ஆரத்தி தட்டை ரெடி செய்து முடித்தது.

அக்கா எல்லாம்
ரெடிபண்ணிட்டேன்
.நான் மேல போய் பொங்கல் வைக்கபாத்திரம் எடுத்துட்டு வரேன்.நீங்க நான் சொல்ற பொருள் மட்டும் வாங்கிட்டு வந்துடுங்க?

சரிடா நான்
வாங்கிட்டு வர
. கைக்கு எட்டுற பொருள் மட்டும் எடு நான் வந்தது மத்தஜாமான் எடுக்கலாம்.

இல்லாட்டி
நான் உனக்கு உதவி பண்ணிட்டு போகட்டும்மா

வேண்டாம்கா!” அவங்க வரதுக்குள்ள எல்லாம்
எடுக்கணு
.நீங்க போய்டு வாங்க

சரிடா பத்தரமா
பண்ணு
ரதிமீது
அன்பு செலுத்தும் மற்றொரு வேலையாள்
.

நடந்த அனைத்தையும்
மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த மருது
, வேலைக்கார ஆள் வெளியே சென்றதும், ரதி சென்ற திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

உள்ளே பாத்திரங்கள்
எடுக்கும் சத்தத்தில்
,மருது உள்ளே வந்து கதவை தாள் போட்டது ரதிக்கு கேட்கவேயில்லை.

படார்!! என்று ரதியை
பின்னிருந்து வாயைபொத்தி தூக்கி சென்று
,ஒரு இடத்தில் வைத்து
அவள் எழுந்து ஓட முடியாத அளவுக்கு அவளை அழுத்தி மேல் படுக்க முயல
,,,

ரதி பலம்
கொண்டவரை அவன் கையை கடித்து
,
கையில் கிடைத்த பொருளை வைத்து தலையில் அடித்து எழுந்து கதவை நோக்கி ஓட
ஆரம்பித்தால்
!

தலையை பிடித்தவாறே
எழுந்த மருது இங்க பாரு புள்ள நான் சொல்றத கேட்டு நல்லபடியா நடந்துகிட்டா
!!! என்னய கல்யாணம்
பண்ணிக்கிட்டு ராணி மாறி இருக்கலா
, நீ இப்படி பிடிவாதம் பிடிச்சி
முரண்டு பண்ணேண்வை உன்ன நா எனக்கு சொந்தமாக்கிட்டுதா மறுவேலை பார்ப்பேன்
. அந்த கதவு உன்னால திறக்க முடியாது மேல உனக்கு எட்டவுசெய்யாது .வீணா முயற்சி பண்ணாத .

ஐய்யோ!!! என்ன விட்டுறுங்களே!!
உங்க கால்ல கூட விழுற தயவு செஞ்சுகதவ தொறங்க உங்களுக்கு இது தப்பா தெரியலையா?
என்று ரதி கதறி அழ துளி கூட இரக்கம் இல்லாமல் அவளை பார்த்து ரசித்து
கொண்டிருந்தான்
.

எவ்ளோ அழகா
இருக்க தெரியுமா நீ
!!! இன்னிக்கி உன்ன நா என் பொண்டாட்டி ஆக்கம விட போறது இல்ல.எல்லாரு வரவரைக்கு நம்ம இதுக்குள்ளதா இருக்க போறோம் .நம்மள ஒன்னாபாத்தா கண்டிப்பா எல்லாரு நமக்குள்ள உறவு இருக்கு , அதுஇதுனு இட்டுக்கட்டி பேசுவாங்க! அப்படியே எங்கள்
தப்பா யாரும் பேசவேண்டாம்! இந்த இடத்துலேயே நாங்க கல்யாணம் பண்ணிக்கிறோ
! எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க சொல்லிடுவேன்.எப்டி இருக்கு
என் பிளான்
.

இதவிட்டா
நீ எனக்கு கிடைக்க மாட்ட
!!!!ஆரம்பத்துல ஒரே ரூம்ல இருந்தா போதும் தான் நெனச்சா ஆனா இன்னிக்கு உன்ன இவ்வளோ
அம்சமா பாத்துட்டு நான் எப்டிபுள்ள அமைதியா இருப்பே
?

ரதியும்
மனதில்
,” இவனிடம்
இருந்து தப்பிக்க நாம் இவன் வழியில் பேசித்தான் இவனை சரிகட்ட வேண்டும் என்று அழுகை
அடக்கி கொண்டு
,” இங்க பாருங்க என் மனச நான் மாத்திகிட்ட
பெரியம்மா வந்ததும் நானே
! இவர கல்யாணம் பண்ணிக்க முழுசம்மதம்
, எப்போ பண்ணி வச்சாலும் சரின்னு சொல்லிடுற . என்ன
இப்போ கீழ போக விடுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு
.

இதனை கேட்டு
கொண்டே கோணல் சிரிப்பு சிரித்து  ரதியை
நோக்கி முன்னேற
,பயத்தில் உடல் எல்லாம் ஜில்லிட ஆரம்பித்துவிட்டது.

நீ சொல்றது
கேட்குற அளவுக்கு நான் ஒன்னு முட்டாள்கிடையாது
. நீ பேசுறது கேட்கும் போது காதுல தேன்பாயுற மாறிதா
இருக்கு ஆனா நீ என் காதுல பூ சுத்துறியே ரதி கண்ணு
…….

என்ன பண்ணலாம்
உன்ன என்று மேலும் முன்னேற ரதிக்கு இப்படியே புதைந்து இறந்துவிட மாட்டோமா என்று குறுகி
போய்விட்டால்
.

இங்கு—————————————-

ஏனோ! “மறு வீட்டிற்கு வந்ததில்
இருந்து ரதியின் முகமே வந்து போக இனி எது நடந்தாலும் சரி அவளிடம் தன்னிலையை எடுத்துகூறவேண்டும்
என காரை விரைந்து ஓட்டிக்கொண்டு புறப்பட்டான் விஷ்வா
”….

           தன்னிலை கூற வந்தவன் அவளின்
நிலை கண்டால் என்னாவான்
??

காத்திருங்கள்

   அரக்கன் வருவானா அரணாக? ❤ ❤ ❤

 

 

    No comments yet.