அத்தியாயம் -1
விடியற்காலை 4 மணி இன்னும் இரவின் ஆதிக்கம் சற்று இருக்கத்தான் செய்தது.
சில்லென்று காற்று வீச உடலும் மனதும் இன்னும் சிறிது நேரம் தூங்க சொல்லி கெஞ்சி கேட்க, அவளுக்கும் ஆசைதான்!
ஆனால் முடியாதே !நேற்று வேலை முடியவே நள்ளிரவு ஆகிவிட்டது .அந்த களைப்பு இன்னும் இருக்கத்தான் செய்தது.
நாளை மாலதி அக்காவிற்கு திருமணம் இன்று மணமகன் அழைப்பு அனைத்து வேலைகளையும் பெரியம்மா சொல்லி விட்டார்.நேரத்திற்கு செய்யாவிட்டால் வசைச்சொற்கள் நிறைந்த நாளாக அன்று முடிந்து விடும் .
முதல் வேலையாக வாசல் தெளித்து அழகிய பூ கோலம் ஒன்று மட்டும் வரைந்தாயிற்று.
அடுத்தடுத்து இட்லி அவிக்க வேண்டும் வந்த அனைவருக்கும் காப்பி தண்ணி கலந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அதற்குள் ஒரு பெரியவர் எழுந்துவிட்டு !
ஏம்மா இன்னுமா காப்பி தண்ணி கலந்து கொடுக்கல ?
இப்படித்தான் இருப்பீங்களா பொண்ணு வீட்டுல விரசா யாராவது காப்பி போட்டு கொடுங்களேன் என்று ஆரம்பித்துவிட்டார்.
ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்கய்யா !இதோ போட்டு கொண்டு வாரேன் என்று அடுத்தடுத்த எழுந்த அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தவளை ஒருவர் கூட நீ “ஒரு வாய் குடித்தாயா “
காலையில் இருந்து கேட்கவில்லை என்ற ஏக்கம் மனதில் இருக்கத்தான் செய்தது.
ஏ ராசாத்தி !!!நீ வந்து குடி வா காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாம வேலை பார்த்துட்டே இருக்க வயிர எதுக்கு காய போட்டிருக்க வா வந்து குடி உனக்கும் சேர்த்து தான் நான் காப்பி எடுத்து வச்சேன்.
கடந்த ஒரு வாரமாக ஒரு குரல் அவளுக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது, இந்த அன்பு எனக்கு தானா இது எனக்கு மட்டும் தானா இது போல் யாரும் தன்னிடம் பேச மாட்டார்களா என்று அவள் ஏங்கிய தருணங்கள் ஏராளம்.
இங்கவா மொத உட்காரு இதக்குடி அப்றோ போய் வேலைய பாரு.
சரி பாட்டி நீங்களு கூடிங்க.
ஆமா ராசாத்தி உன் பேர் என்ன ஒரே ஆளாஎம்புட்டு வேலைய பாக்குற.உன் அம்மா அப்பா என்ன பண்றாங்க .
அவள் கண்கள் கண்ணீர் குளம் கட்ட பாட்டி என் பேரு ரதிதேவி எங்க அம்மா அப்பா ரெண்டு பேரும் ஒரு கார் விபத்துல இறந்துட்டாங்க.
அதுக்கப்புறம் என் பெரியம்மா தான் என்ன கூட்டிட்டு வந்து வளர்த்திட்டு இருக்காங்க. நான் 12 வரைக்கும் படிச்சு முடிச்சிட்டேன்
அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சதும் மேல படிக்க வைக்கிறேன் சொல்லி இருக்காங்க பெரியம்மா.
பாவம் ரதிக்கு தெரியவில்லை அவருக்கு இவளை படிக்க வைக்கும் எண்ணம் எல்லாம் இல்லை.
வீட்டோடு வேலைக்காக வைத்து கொண்டு ஊரோடு கட்டிக் கொடுத்து கடமை முடிந்தது என்று நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கும் சொந்த தங்கை மகள் .
ஆத்தி !!
உன் பேருக்கு ஏத்த மாதிரி ரதி மாதிரி தான் இருக்க.நீ என்கூட டவுனுக்கு வந்துடு என் பேரன் இருக்கா பேஙசாம உனக்கு கட்டி வச்சுடுற. என்ன என் பேரன் கட்டிக்கிறியா. அவனுக்கு அப்பப்போ கோவம் மட்டும் வரும் மத்தபடி ரொம்ப நல்லவன் நீ பொறுமையா அழகா இருக்க எல்லா வேலையும் அழகா செய்ற என் பேரன கட்டி வச்சிடறேன் உனக்கு என்ன கட்டிக்கிறியா???
அய்யய்யோ நல்ல வேலை இந்த மட்டும் பெரியப்பா காதுக்கு விழுந்துச்சு என்னை தோல உரிச்சு தொங்விட்ருவா என்று நினைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு மெதுவாக,
“உங்களையே எனக்கு அவ்ளோ புடிச்சிருக்கும் போது உங்க பேரன பிடிக்காதா”.
கண்டிப்பா உங்க பேரன கட்டிக்கிறேன். சரிதானே பாட்டி என்று கள்ளம் கபடம் இல்லாமல் சிரித்துச் சொன்ன ரதியை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்.
ரதிய இன்ரோ பண்ணிடுவோமா❤️❤️❤️
துருதுருகுட்டி கண்கள் கூர் நாசி அதில் மிளிரும் குட்டிகல் மூக்குத்தி ,செவ்விதழில் அதில் குடி கொண்டு இருக்கும் புன்சிரிப்பு, புது நிறம்.
பூசினாற் போன்ற உடல் அமைப்பு அதுவும் அவளுக்கு அழகுதான் இடைவரை நீண்ட கூந்தல் பார்ப்பவர்கள் ஒரு முறை திரும்பி பார்க்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு அழகுதான் .யார் கண்ணும் பட்டு விடக்கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ கன்னத்தில் திருஷ்டி பொட்டு போல் மச்சம். தனக்கு பிடித்தவர் அழுத்தி அதட்டினாலோ, இருட்டு என்றால் மட்டும் பயம் .மத்தபடி வீரமங்கைனு நினைப்பு,…
ஏய் ரதி கூறுகெட்டவளே அங்க என்ன பேச்சு வந்து பாத்தரத்த கழுவு, அப்படியே போய் உனக்கும் அக்காவுக்கும் தைக்க கொடுத்த ஜாக்கெட்டை வாங்கிட்டு வந்திரு?
என்ன போ போய் வேலைய பாரு உட்கார்ந்து வாய் அடிக்காம என்று விரட்டினார் பெரியம்மா.
சரிங்க பெரியம்மா இதோ போற , அப்பறம் பேசலாம் பாட்டி.
ரதி வாழ்க்கை பேரனின் வருகையால் மாறுமா???
காத்திருங்கள்… அரக்கன் வருவானா அரணாக ❤️
Sry sagos en story dlte akitu some issues .marupadiu rewrite panituka . unga support enaku rmpa mukiyam my frst step nd frst story .keep supporting me .
Kavi Kaviya
gd start keep writing siis