K 7
நேரம் ஆவதை உணர்ந்து மறுபடியும் ஆர்யன் உள்ளே செல்ல அங்கு ஆதிராவின் நிலையை கண்டு அதிர்ந்து போனவன் வேகமாய் அவளிடம் சென்றான்.
ஜூஸ் என நினைத்து தப்பாக மாற்றி குடித்துவிட போதையில் அரை மயக்கத்தில் இன்னும் வேண்டுமென ஆதிரா சண்டை போட்டு கொண்டு இருக்க வெயிட்டர் பாவம் அவளிடம் மாட்டிக்கொண்டு முழித்தான்.
” ஹேய்.. ஆதிரா என்ன பண்ணிட்டு இருக்க… பேசாம இரு.. ” என ஆர்யன் சொல்ல திரும்பி அவனை பார்த்தாள் ஆதிரா.
போதையில் இருந்ததால் அவன் யாரென தெரியாமல் குழம்பியவள், ” யார் நீ.. என் பேர் உனக்கு எப்படி தெரியும்.. என்னை பாலோ பண்றியா நீ.. போலீஸ்.. போலீஸ்.. ” என கத்த சுற்றிலும் இருந்தவர்கள் எல்லாம் திரும்பி அவர்களை பார்க்க ஆர்யனுக்கு என்னவோ போல் இருந்தது.
அவளை அப்படியே விட்டு போக மனம் இல்லாத ஆர்யன் அவளின் கையை பிடித்து, ” ஆதிரா போதும்.. விளையாடாத.. உனக்கு ஓவர் ஆகிருச்சு.. வீட்டுக்கு போலாம் வா.. ” என கூப்பிட அவனிடம் இருந்து கையை வேகமாய் எடுத்து கொண்டாள் ஆதிரா.
” நீ யாருனு தெரியலன்னு சொல்றேன்.. உன்கூட நான் எதுக்கு வரணும்… போடா.. ” என ஆர்யனிடம் சொன்னவள் திரும்பி வெயிட்டரை பார்த்தவள்,
” எனக்கு அதே ஜூஸ் மறுபடியும் வேணும்… இப்போ நீ கொடுக்க போறியா இல்லையா.. ” என மிரட்ட,
” என்னை எப்படியாவது காப்பாத்துங்க சார்.. ” என்பது போல் பாவமாய் ஆர்யனை பார்த்தான் அவன்.
” நீங்க போங்க.. ” என ஆர்யன் சொல்லவும் அவன் தப்பித்தோம் என ஓட ஆர்யனை முறைத்தாள் ஆதிரா.
” எனக்கு ஜூஸ் வேணும்.. நீ வாங்கி கொடு.. இல்லனா அவனை கொண்டு வர சொல்லு.. சீக்கிரம்.. எனக்கு ஜூஸ் வேணும்.. ” என ஆதிரா கத்த,
” சரி சரி கத்தாத… நீ எதாவது சாப்பிட்டியா.. ” என அவன் கேட்க ம்ஹூம் என உதட்டை பிதுக்கினாள் ஆதிரா.
” சரி வா.. ” என்றவன் அவளின் கையை பிடித்து சாப்பிட அழைத்து செல்ல வைஷுவின் கண்களும் அவர்களையே தொடர்ந்தது.
வேகமாய் அவனிடம் வந்தவள், ” என்னாச்சு ஆர்யன்.. நீங்க விடுங்க.. நான் ஆதிராவை பார்த்துக்கறேன்.. ” என சொல்ல,
” இட்ஸ் ஓகே வைஷு.. யூ கேரி ஆன்.. பிரியா எங்கன்னு பார்த்தீங்களா.. ” என்றான் ஆர்யன்.
” இல்ல ஆர்யன்.. நான் போய் பார்த்து கூட்டிட்டு வரேன்.. ” என்றவள் நகர ஆதிராவை ஒரு இடத்தில் உட்கார வைத்தவன் அங்கிருந்து சென்றான். ஒரு தட்டில் இரண்டு நாண் வைத்து அவளுக்கு சாப்பிட எடுத்துக்கொண்டு வந்தவன்,
” இந்தா சாப்பிடு.. ” என நீட்ட,
” ம்ஹூம்.. முடியாது.. நீ ஊட்டிவிடு.. ” என்றாள் அவள்.
ஆதிரா சொன்னதை கேட்டு அதிர்ந்து போன ஆர்யன், ” ஹேய் என்ன சொன்ன.. நான் உனக்கு ஊட்டி விடணுமா.. என்ன விளையாடறியா.. அதெல்லாம் முடியாது.. நீயே சாப்பிடு இந்தா.. ” என தட்டை நீட்ட,
” ம்ஹூம்… நான் சாப்பிடமாட்டேன்.. நீதான் ஊட்டி விடணும்… நீ ஊட்டி விடுல அப்படினா நான் சாப்பிடமாட்டேன்.. எனக்கு ரொம்ப பசிக்குது.. ஊட்டிவிடுடா.. ” என ஆதிரா முகத்தை பாவமாய் வைத்துக்கொண்டு சொல்ல அவளை பார்த்து சிரித்த ஆர்யன் வேறு வழி இல்லாமல் அவளுக்கு ஊட்டிவிட்டான்.
ஆதிரா ஏதேதோ உளறிக்கொண்டே இருக்க அனைத்திற்கும் ம்ம்.. ம்ம்ம்.. என சொல்லிய ஆர்யன் அவனும் பேசிக்கொண்டே அவளுக்கு ஊட்டிவிட்டான். ஆதிரா சாப்பிட்டு முடித்ததும் டிஷ்யூ பேப்பர் கொண்டு அவளது வாயை துடைத்துவிட அவள் இன்னும் உளறுவதை நிறுத்தவில்லை.
ஏதேதோ உளறிக்கொண்டு இருந்த ஆதிரா திடீரென அழ, ” என்னாச்சு ஆதிரா.. ஏன் அழறீங்க… ” என பதட்டத்துடன் கேட்டான் ஆர்யன்.
” என்கிட்ட நீ எதுக்கு பொய் சொல்ற.. நீ செல்வா தான.. ” என ஆதிரா கேட்க அவன் அவளை புரியாமல் பார்த்தான்.
” என்ன கேக்கறீங்க செல்வாவா.. அது யாரு.. ஓ.. என்னை மாதிரியே யாரையோ பார்த்து இருக்கறதா சொன்னிங்களே அவரை சொல்றிங்களா.. நான் அவரு இல்லங்க.. நீங்க தப்பா புருஞ்சுகிட்டு இருக்கீங்க.. ”
” இல்ல.. இல்ல.. இல்ல.. நீ செல்வா தான்.. எனக்கு தெரியும்.. என்கிட்ட எதுக்குடா மறைக்கற.. ப்ளீஸ் உண்மைய சொல்லுடா.. ” என்ற ஆதிரா அவனின் சட்டையை பிடித்து உலுக்கியவள் அவனை அப்படியே அவன் மார்பில் சாய்ந்துகொண்டு புலம்ப அங்கு வந்த பிரியாவும் வைஷுவும் அதை பார்த்து அதிர்ந்து போய் நின்றனர்.
வேகமாய் ஆதிராவிடம் வந்த வைஷு,” ஏய் விடுடி… என்ன பண்ணிட்டு இருக்க.. அவரை விடுடி.. ” என்றவள் ஆதிராவை பிடித்து இழுக்க அவளோ அவனை மேலும் இறுக்கமாக அணைத்து கொண்டாள்.
” ஆதிரா என்னடி பண்ற.. எல்லாரும் பார்க்கறாங்க… வாடி.. ” என்ற பிரியா அவளை இழுக்க அப்பொழுதும் அவள் அவனிடம் இருந்து விலகவில்லை.
பிரியா ஆர்யனை பாவமாய் பார்க்க அவர்களை அமைதியாக இருக்க சொன்னவன் அவளை அணைத்தபடியே அழைத்து கொண்டு வெளியே வந்தான்.
பிரியாவை பார்த்த ஆர்யன், ” நீங்க எப்படி வீட்டுக்கு போவீங்க.. கேப் புக் பண்ணிருக்கிங்களா.. ” என கேட்க,
” இல்ல ஆர்யன்.. வந்த கேப் அனுப்பிட்டோம்.. இனிதான் புக் பண்ணனும்.. இருங்க புக் பண்றேன்.. ” என்ற பிரியா போனை எடுக்க அவளை தடுத்து நிறுத்தினான் ஆர்யன்.
” வேண்டாம் பிரியா.. இந்த நிலைமையில நீங்க கேப்ல. போகவேண்டாம்.. நான் கார்ல தான் வந்துருக்கேன்.. நானே உங்களை ட்ராப் பண்றேன்.. ” என ஆர்யன் சொல்ல பிரியாவுக்கும் அதுவே சரியென தோன்றியது.
பிரியா சரியென தலை அசைக்க ஆர்யனை அதிர்ச்சியுடன் பார்த்த வைஷு, ” என்ன சொல்றிங்க… அதெல்லாம் வேண்டாம்.. நீங்க போறது சரியா இருக்காது ஆர்யன்.. நான் சொல்றதை கேளுங்க வேண்டாம்.. ” என சொல்ல பிரியாவுக்கு கோபம் வந்தது.
” ஏய் என்ன வைஷு.. என்ன பேசிட்டு இருக்க நீ.. எப்படி இந்த நிலைமையிலகூட உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது.. நீ வீட்டுக்கு கிளம்பு.. நாங்க ஆர்யன்கூட கிளம்பறோம்.. வாங்க ஆர்யன் போலாம்… ” என பிரியா சொல்ல ஆர்யன் ஆதிரைவை தோளில் சாய்த்தபடி அழைத்து செல்ல அதை பார்த்த வைஷுவுக்கு பயங்கரமாக கோபம் வந்தது.
” ச்ச.. நான் கொஞ்சம் ஆசால்டா இருந்துட்டேன்.. அதுக்குள்ள இந்த ஆதிரா இப்படி பண்ணிட்டாளே.. என்ன ஆனாலும் சரி ஆர்யன் எனக்குதான்… ஆர்யனை நான் யாருக்கும் விட்டுகொடுக்கமாட்டேன்.. ” என நினைத்த வைஷு கோபமாய் அங்கிருந்து கிளம்பினாள்.
ஆர்யன் ஆதிராவை ஒரு வழியாய் காரில் உட்கார வைக்க பிரியாவும் அவளுடம் அமர்ந்து கொள்ள ஆர்யன் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தான். கண்ணாடி வழியே பிரியாவை பார்த்தவன்,
” பிரியா.. உங்க வீட்டு லொக்கேஷனை எனக்கு ஷேர் பண்ணுங்க.. ” என சொல்ல கூகுல் துணையுடன் லொக்கேஷனை அவனுக்கு அனுப்பி வைத்தாள் பிரியா.லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு ஆர்யன் காரை ஸ்டார்ட் செய்து கிளம்ப ஆதிரா புலம்பலும் ஆரம்பம் ஆனது.
ஆர்யன் காரை வேகமாய் ஓட்டிக்கொண்டு வந்ததில் அவர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் வந்துவிட காரை நிறுத்தினான் ஆர்யன்.
” ஆர்யன் சீக்கிரம் இவளை உள்ள கூட்டிட்டு போகணும்.. யாராவது பார்த்துட்டா பெரிய பிரச்சனை ஆகிரும்.. ” என பிரியா கவலையுடன் சொல்ல,
” சரி பிரியா.. முதல்ல நீங்க இறங்கி யாராவது வராங்களான்னு பாருங்க.. ” என ஆர்யன் சொல்ல பிரியா காரில் இருந்து கீழே இறங்கி பார்த்தாள்.
” யாரும் இல்ல ஆர்யன்.. நீங்க வாங்க.. ” என பிரியா சொல்லவும் கீழே இறங்கி வந்த ஆர்யன் ஆதிராவை கைப்பிடித்து கீழே இறங்க வைத்தவன் யாரும் பார்க்கும் முன் வேகமாய் அவர்களது பிளாட்டுக்கு அழைத்து சென்றான்.
பிரியா வேகமாய் கதவை திறக்க ஆதிராவை உள்ளே அழைத்து வந்த ஆர்யன் அவளது அறையை கேட்டு அங்கு அழைத்து சென்று படுக்க வைக்க அரை மயக்கத்தில் இருந்தவள் படுத்ததும் தூங்கி போனாள்.
அவள் தூங்கியதும் ஆர்யன் வெளியே செல்ல பிரியா அவளுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு லைட்டை ஆப் செய்துவிட்டு வெளியே வந்தாள்.
“ ஓகே பிரியா.. டைம் ஆச்சு.. நான் கிளம்பறேன்.. “ என ஆர்யன் கிளம்ப போக,
“ ஆர்யன் ஒரு நிமிஷம்.. நீங்க சாப்பிட்டீங்களா.. “ என கேட்டாள் பிரியா.
“ இல்ல பிரியா… ஆதிரா சாப்பிட்டாங்க.. நானே ஊட்டிவிட்டுட்டேன்… அது தப்பா எடுத்துக்காதீங்க.. ஊட்டிவிட்டா தான் சாப்பிடுவேன்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க.. அதான் ஊட்டிவிட்டேன்.. “
“ பரவாயில்ல ஆர்யன்.. எப்படியோ அவ சாப்பிட்டால்ல அது போதும்.. நீங்கதான் எதுவும் சாப்பிடுல.. மாவு இருக்கு.. இருங்க நான் தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்.. “
“ இல்ல பிரியா வேண்டாம்.. இதுக்கு மேல நான் இங்க இருக்கறது சரியா இருக்காது… நான் சக்திய பிக்கப் பண்ண ஹோட்டலுக்கு போகணும்.. அப்போ சாப்பிடுக்கறேன்.. நேரமாச்சு நான் கிளம்பறேன்.. ஆதிராவை பார்த்துக்கோங்க… எதாவதுன்னா தயங்காம எனக்கு போன் பண்ணுங்க.. நான் உடனே வரேன்.. “ என்ற ஆர்யன் கிளம்ப,
“ ஆர்யன் ஒரு நிமிஷம்.. நான் ஒன்னு கேட்பேன் நீங்க தப்பா எடுத்துக்ககூடாது.. நீங்கதான செல்வா… “ என பிரியா கேட்க அவளை பார்த்து சிரித்தான் ஆர்யன்.
No comments yet.