அத்தியாயம் 5

தளிர் நிலா | 24 Nov 2025 | Share

சிறை5

ராதைவை இழுத்துக் கொண்டு மண்டபத்தின் வெளியே வந்த மாதவனோ, மூர்த்தி எல்லாம் “ஓகே தானே?” என்று தன் நண்பனிடம் கேட்க.

“ஆமா மாப்ள ஓகே தான்” என்றான் அவனும்.

“ம்ம்… எதுக்கும் மிஸ்டர் ஜனார்தனன் மேல ஒரு கண்ணு இருக்கட்டும்” என்றான் மாதவன்.

மூர்த்தியும் “சரி” என்றான்.

“ஏய் நீ என்னடி இன்னும் முழிச்சிட்டு இருக்க. உன்னை கூட்டுட்டு போக பல்லக்கு வரும்னு நினைச்சியா? ஏய் சீ ஏறு வண்டியில. ஊரே பார்க்கட்டும் நீ என் பொண்டாட்டினு” என்றவன் அவளை முறைத்த படி புல்லட்டை முறுக்க….

அவளோ எதுவும் புரியாமல் அவன் சொன்னதையெல்லாம் செய்தாள்.

“டேய் மூர்த்தி போதை இறங்குன மாதிரி இருக்கு மீதி சரக்கு எங்க இருக்கு” என்று மூர்த்தியிடம் கேட்க.

“பைக் கவர்ல தான் மாப்ள இருக்கு. ஆனா மாப்ள ஏற்கனவே முழு போதையில இருக்க. மறுபடியுமா? வண்டி ஓட்டிருவியா? இல்லை கார் எதுவும் வர சொல்லவா?” என்றவனின் கன்னம் பழுத்திருந்தது.

போதை தெளிஞ்சா கொண்ட சபதம் மறந்து போகும்னு பக்கி ராத்திரி முழுக்க போதை இறங்க இறங்க ஏத்திட்டு இருந்துருக்கு…

பக்கிக்கு போதையில தான் மூளை வேலை செய்யும் போல….

இதுக்கு மங்கை அம்மா வாசல்ல காவல் வேற….

மூர்த்தியோ கன்னத்தை பொத்திக் கொண்டு மாதவனை புரியாது பார்க்க.

“சொன்ன வேலையை மட்டும் செய். அதிகப்பிரசங்கி மாதிரி கேள்வி எல்லாம் கேட்காத புரியுதா?” என்றவன் ராதாவின் முன்னே வண்டியில் இருந்த சரக்கை எடுத்து வாயில் சரிக்க…

மகள் என்னானாளோ என்று பதறி வெளியே வந்த ராதாவின் பெற்றவர்கள் கண்ணிலும் அந்த காட்சி தென்பட… மொத்தமாக உடைந்து போனார்கள்.

ராதாவின் குடும்பம் ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான். ஜனார்தனன் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

ராதை வீட்டில் ஒற்றைப் பெண் பிள்ளை. அவள் இஷ்டம் தான் எல்லாம். வீட்டில் கல்யாணப் பேச்சு எடுக்கும் போது கூட அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.

சொல்லப் போனால் ஜனார்தனனே “உனக்கு யாரையும் புடிச்சா சொல்லுமா நல்லப் பையனா இருந்தா அவனையே பேசி முடிச்சிரலாம். எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம்” என்று அவளின் விருப்பம் கேட்க.

அவள் தான் இப்படி ஒருவன் இருப்பதையே அவரிடம் மறைத்து விட்டாள்.

மகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார். அவளது கல்யாணத்திற்காக அத்தனை கனவுகள் அத்தனை ஆசைகள். அனைத்தும் இன்று மண்ணானது அவன் ஒருவனால்.

அதை விட மகளின் வாழ்வு இப்படி ஒருவனிடம் சிக்கி சீரழியப் போகிறதே என்று அவர் மனம் ரணமாக வலித்தது.

இவர் நினைத்தால் ஓர் நொடி ஆகாது அவனை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவதற்கு. அத்தகைய ஆள் பலமும் பணபலமும் வாய்த்தவர் தான் அவர்.

ஆனால் இத்தனை நடந்தும் மகள் அமைதியாக அவன் கைப்பாவை போல் செயல்படுகிறாளே. என்ன செய்வது? ஒரு வேலை அவளும் முழுமனதுடன் தான் அவனோடு செல்கிறாளோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

அவரை அழுத்தமாக பார்த்தவன் வண்டியை வேகமாக முறுக்கிக் கொண்டு சென்றான்.

இந்த செய்தி வேகமாக மாதவனின் வீட்டிற்கும் அவனது நண்பன் சிவாவிற்கும் செல்ல.

‘எப்படியும் வீட்டுக்குத் தானே வரனும் வாடி மாப்ள’ என்று மாதவனின் பெற்றவர்களும் அவன் தங்கை மாயா மற்றும் நண்பனும் தங்கை கணவனுமான சிவாவும் வீட்டு வாசலில் கட்டையுடன் நிற்க….

சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது என்பது போல தெரு முனையில் ராதாவை இறக்கி விட்டவன், “உனக்கு தான் எங்க வீடு தெரியும்ல போ. உனக்கு ஆரத்தி ஒன்னு தான் கேடு. அப்புறம் எல்லாத்தையும் ரெடி பண்ணி வல. மாமன் ஸ்ட்ரெய்ட்டா பர்ஸ்ட் நைட்டுக்கு வரேன்…. பாய்” என்றவன் தன் கடமை முடிந்ததென சிட்டாக பறந்து விட்டான்.

அவளுக்கோ தயக்கம் எப்படி அங்கே செல்வது என்று..

அவள் அவன் வீட்டிற்கு வருவது இது ஒன்றும் முதல் தடவை இல்லை தான். அவன் வீட்டு ஆட்களும் அவளுக்கு புதியவர்கள் இல்லை தான். இருந்தாலும் இந்த சூழலில் அவர்களை எப்படி எதிர் கொள்வது என்ற தயக்கம் அவளுக்கு.

உற்றவனே இப்படி தன்னை புரிந்து கொள்ளாத போது மற்றவர்கள் மட்டும் எப்படி புரிந்து கொள்ள போகிறார்கள் என்று நினைத்தவள் தெருவில் போவோரும் வருவோரும் அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு போக….

தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பேய் எவ்வளவோ மேல் என்று நினைத்து வீட்டை நோக்கி நடந்தாள்.

அனைவரும் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பின்னால் பார்க்க…. அவளும் அவர்களுடன் சேர்ந்து அங்கு என்ன தெரிகிறது என்று பார்த்தாள்.

அவளை விசித்திரமாக பார்த்தவர்கள் “அவனை எங்க?” என்று ஒன்று போல கேட்க.

அவளோ என்ன சொல்வது என தெரியாமல் திருதிருவென விழித்தாள்.

“ம்ம்…. எப்படியும் இங்க வந்தா அவனை ஒரு வழிப் பண்ணிடுவோம்னு அவனுக்கு தெரியும். அதான் பய தெரிச்சிட்டான். எப்புடியும் சோத்துக்கு இங்க வந்து தானே ஆகனும். அப்போ பார்த்துக்கலாம் இப்போ ப்ரீயா விடுங்க” என்றான் சிவா.

மற்றவர்களும் அவன் சொல்வதை ஆமோதித்தனர்.

ராதாவோ மற்றவர்களின் முகத்தை பார்த்தபடி நிற்க. மங்கைக்கோ கோபம் புசுபுசுவென வந்தது.

‘இந்த வீட்டிலும் சரி அவள் வீட்டிலும் சரி யாரும் இந்த கல்யாணத்திற்கு மறுப்பு சொல்லப் போவது இல்லை. அப்படி இருந்தும் தன் மகனை வேண்டாம் என்று சொல்லி விட்டு வேறு கல்யாணத்திற்கு சம்மதித்து விட்டாளே. அவளாள் தானே என் மகன் இப்படி மொட குடிகாரனாக பாதை மாறிப் போனான். இப்படி ஆகாத வேலையெல்லாம் செய்கிறான்” ஆக அனைத்திற்கும் காரணம் இவள் தான் என்ற கோவம் அவள் மேல் இருந்தது.

அவளை தீயாக முறைத்தவர் எதுவும் சொல்லாமல் வீட்டிற்குள் நுழைந்து கொண்டார்.

அவரை அழுத்தமாக பார்த்த மாதவனின் தந்தை சுந்தரமோ, ராதாவிடம் “உள்ள போமா எதுவா இருந்தாலும் அப்புறம் பொருமையா பார்த்துக்கலாம்” என்றவர் தன் மகளிடம் “மாயா அந்த புள்ளையை உன் அண்ணன் ரூமுக்கு கூட்டிட்டு போம்மா” என்றார்.

“அதெல்லாம் அவங்களுக்கு தெரியும்” என்று முகத்தை கோணிக் கொண்டு போனாள் அவள்.

அவளை முறைத்த சிவாவோ, ராதாவிடம் “உள்ள போம்மா” என்று சொல்ல….

ராதாவும் பெருமூச்சுடன் அவன் அறையில் அடைந்துக் கொண்டாள்.

அவளை அழுத்தமாக பார்த்த சிவாவோ, “நீங்க வருத்தப்படாதீங்க மாமா… அவன் எங்க இருக்கான்னு பார்த்து இழுத்துட்டு வரேன்” என்று சென்ற சிவா வெறும் கையோடு தான் வந்தான்.

ஆளு எங்க போச்சினு தான் தெரியலை. அவனும் அவன் ப்ரென்ட்ஸ் எல்லார்கிட்டையும் விசாரிச்சி பார்த்தாச்சி அந்த மூர்த்தி பய கூட அய்யோ மாப்ள நான்  மாதவனை எங்கையும் பார்க்கலையே… என்று அந்தர் பல்டி அடிக்க சிவா தான் பல்லைக் கடித்தான்.

ஆனால் மூர்த்தியோ அங்கு மாதவனுடன் அமர்ந்து சரக்கடித்துக் கொண்டிருந்தான்.

மற்றவரகளின் காத்திருப்பை பொய்யாக்காமல் நடுராத்தி எல்லாரும் தூங்கியப் பிறகு தான் வீட்டிற்கு வந்தான்.

இந்த ஒரு நாள் இரவு அவன் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி அறியாமல்.

    No comments yet.