சிறை4
இப்போ என்ன நடந்தது என்று எதுவும் புரியாமல் தன் கழுத்தில் கிடந்த தாலியையும் மாதவனையும் ராதா புரியாது பார்க்க.
“என்னடி என்ன விட வசதியா ஒருத்தன் கிடைச்சதும் என்னை விட்டு அவனை புடிச்சிரலாம்னு கனவு கண்டியா? அது நான் இருக்க வர நடக்காதுடி” என்றான் பல்லை கடித்துக் கொண்டு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
அதற்குள் அந்த இடமே சலசலப்பாக, மணமேடையில் மாதவனைப் பார்த்து ஓர் நொடி அதிர்ந்து பின் ஆத்திரத்துடன் மாதவனை ராதையின் உறவினர்கள் அடிக்கப் பாய….
தன் சட்டைப் பையில் இருந்த கத்தியை சடுதியில் எடுத்து ராதாவின் கழுத்தில் வைத்தவன், “என் மேல சின்ன கீறல் விழுந்தாலும் உங்க பொண்ணு உங்களுக்கு இல்லை” என்று அவன் மிரட்ட…
“என்ன மிரட்டுறீயா? கத்தியால குத்தப் போறவன் என்ன ம**** தாலி கட்டப் போறான். இரண்டு பேரும் சேர்ந்து ஊர் முன்னாடி குடும்ப மானத்தை வாங்கிட்டு. டேய் முதல்ல கூட்டத்தை கலைங்க அப்புறம் அவனைப் புடிச்சி கட்டுங்கடா இன்னைக்கு அவன் உயிசுரு என் கையில தான் போகனும்” என்று ராதாவின் தந்தை ஜனார்தனன் மீசையை முறுக்க.
சட்டென ஜனார்தனனின் ஆட்கள் கூட்டத்தைக் கலைக்க… சிலர் மாதவனை அடிக்கப் பாய்ந்தனர்.
அவனோ அவர்களை ஓர் பார்வை பார்த்தவன் கத்தியில் அழுத்தம் கொடுக்க, ராதாவின் கழுத்தில் ரத்தம் கசிய, அவளோ வலியில் முகத்தை சுறுக்கினாள்.
“டேய் என்னடா பண்ற என் பொண்ண?” என்று எகிறினார் ஜனார்தனன்.
ஹாஹா…. என்று வாய்விட்டு சிரித்த மாதவனோ “என்னைய்யா இங்க குத்துனா அங்க வலிக்குதா? மக மேல அம்புட்டு பாசமோ? வலிக்கட்டும் வலிக்கட்டும். நான் என்ன உன் பொண்ணு கூட வாழ தாலி கட்டுனேன்னு நினைக்குறியா? அவளை வாழ விடக் கூடாதுனு இந்த தாலியைக் கட்டி இருக்கேன்டா” என்றவன் சிரிக்க.
அவன் கையில் மெழுகு பொம்மைப் போல் நின்றாள் ராதா. அவளது கண்களில் மெல்லிய நீர் படலம் தென்பட… அவளை நக்கலாகப் பார்த்தவன் “இந்தாருங்க மிஸ்டர் ஜனார்தனன், நான் ஒன்னும் உங்க மக பின்னாடி சுத்தலை… அவ தான் நீ தான் என் உயிரு **** னு பின்னாடி சுத்துனா. நானும் பதமா சொல்லிப் பார்த்தேன் உன் மக கேட்டபாடில்லை. நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்குறது. சரி கழுதை போனா போகுதுனு லவ் பண்ணுவோம்னு பார்த்தா. உன் மக எமகாதகியா இருப்பா போல. இத்தனை நாள் என் கூட பல்லை காட்டிட்டு ஊரெல்லாம் சுத்துனவ என்னை விட வசதியா ஒருத்தன் வந்ததும் என்ன கலட்டி விட்டுட்டா. நான் என்ன சொம்பையா ***** போக…. எப்படி தூக்குனனா” என்று சிரிக்க…
“என்னலே என்கிட்டையே என்ற மகளைப் பத்தி தப்பா பேசுறியா? உன்னை இங்கனையே வெட்டி ஏறுன தாலி அதே வேகத்துல இறக்கி காட்டுறேன்” என்றவர் மீசையை முறுக்க.
“அய்யோ…. அய்யோ…. நீங்க இன்னும் பச்சை நொள்ளையாவே இருக்கீங்க நோமா சாரி சாரி மாமா. ஆதாரம் இல்லாம இவ்வளவு தூரம் யாராவது இறங்குவாங்களா? அப்புறம் எனக்கு சேதாராமாகிடாது” என்று அவரிடம் சொன்னவன் “டேய் மாப்ள…. மாமாவுக்கு ஒரு சாம்பிள் காட்டு” என்று நக்கலாக சிரித்த படி சொல்ல…
“என்னலே கல்யாணத்தையும் நிறுத்திட்டி நக்கல் **** பண்ணிட்டு இருக்கீயா?” என்று ஜனார்தனன் எகிறினார்…
“என்ன மாமா உங்களுக்கு பிபி அதிகமா இருக்கும் போலவே. அத்தை மாமாவுக்கு அந்த பிபி மாத்திரை இருந்தா குடுங்க. பாவம் வீடியோ பார்த்து செத்து கித்து போய்டா என்ன பண்றது. போங்க போங்க போய் மாத்திரை எடுத்துட்டு வாங்க” என்றவன் சொல்ல..
ஜனார்தனனோ பல்லைக் கடித்தார்.
“மீசை டென்சன் ஆகுது சீக்கிரம் வீடியோவேப் போடுடா வெண்ணை” என்று மாதவன் கத்த.
“இதோ மாப்ள” என்று எங்கிருந்தோ ஓடி வந்த மூர்த்தியும் அங்கே பொருத்தப் பட்டிருந்த எல்ஈடியில் வீடியோவை ஓட விட்டான்.
அதில் மாதவனும் ராதாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோ என்று வரிசையாக ஓட…
ஜனார்தனனோ ராதாவை தீயாக முறைத்தார்.
“மாப்ள என்ற மாமனாரு ரொம்ப சூடா இருக்காரு. மாமாவை கூல் பண்ண அந்த ரிப்போர்ட்டையும் அவர் கையில குடு பார்போம்” என்று தோரணையாக மணமேடையில் அமர்ந்த படி சொல்ல.
மூர்த்தியும் அவரது கையில் ஒரு பைலைக் கொடுத்தான்.
அதை படித்தவரின் விழிகள் அதிர்ச்சியில் விரிய அவரது கையில் இருந்த ரிப்போர்ட் தானாக கீழே விழுந்தது.
“ஹாஹா…. என்ன மாமனாரே நல்லா குளுகுளுனு இருக்கா? அப்புறம் டேய் மாப்ள அந்த ஸ்வீட்டையும் மாமனாருக்கு குடுடா. தாத்தாவாகப் போற சந்தோஷத்தைக் கொண்டாடட்டும்” என்றான் சிரித்த படி.
அவன் சும்மா வார்த்தையாக சொல்லியிருந்தாள் கூட அவர் நம்பியிருக்க மாட்டார்.
அந்த புகைப்படமும் ப்ரெக்னன்சி ரிப்போர்ட்டும் அதை விட மகளின் அமைதியும் அவரை நிலை குலைய செய்ய அப்படியே தொய்ந்து அமர்ந்தார்.
“இந்தா பாருங்க மாமா, பிரச்சனை உங்களுக்கும் எனக்கும் இல்லை. உங்க மகளுக்கும் எனக்கும் தான். தேவையில்லாம என்னை வெட்டுறேன் குத்துறேன்னு எதாச்சி சீன் க்ரியேட் பண்ணிங்க இப்போ நீங்க பார்த்த எல்லாம் ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சி ஒட்டுவேன். எல்லார் செல்லுக்கும் சுட சுட வீடியோ பறக்கும். அப்புறமா நான் பார்க்கலாம்னு ஸ்பெஷலா எடுத்து வச்சது இன்னும் நிறைய இருக்கு. அப்புறம் ஊரேப் பார்க்கும். உங்க பணம் பதவி எல்லாம் என்கிட்ட காட்டதீங்க. உங்களுக்கு உங்க மக தான் உயிருனு எனக்கு தெரியும். அப்புறம் அந்த உயிருக்கே உத்திரவாதம் இல்லாம போய்ற போகுது” என்றவன் “அப்புறம் மாமா… நல்ல நேரம் முடியப் போகுது உங்க மகளை புகுந்த வீட்டுக்கு அனுப்ப வேணாமா? போங்க போங்க போய் ஆக வேண்டிய வேலையைப் பாருங்க” என்றான் நக்கலாக.
அவரோ அசையாது அவனையே பார்த்த படி இருக்க. “அப்புறம் மாமா… இந்த மாப்பிள்ளைக்கு மாலை மரியாதை லொட்டு லொசுக்கு எல்லாம் சரியா இருக்கனும்… அப்புறம் மாப்ள கோச்சுக்குவேன்” என்று அவன் சொல்ல…
அவரோ மகளை தீயாக முறைத்தவர் ‘என் நேரம்’ என்று நினைத்துக் கொண்டார்.
“இன்னும் என்னடி அங்க லுக்கு போ போய் மாமா மாமிக்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பொட்டி படுக்கையோட ரெடியாகி இரு புகுந்த வீட்டுக்கு போக” என்றவன் அங்கிருந்தவர்களை நக்கலாக பார்த்தபடி இருக்க.
ஜனார்தனனோ, மகளிடம் “என்னம்மா இது” என்றார் இயலாமையுடன்.
இந்த கிறுக்குப்பயலுடன் மகளை அனுப்பவும் அவருக்கு விருப்பம் இல்லை. அதே சமயம் எங்கே இந்த வீடியோ விவகாரம் வேளியே போனால் மகளது பெயர் கெட்டு விடுமே.
ஏற்கனவே பாதி கெடுத்து விட்டான். அவனை அவன் வழியில் போய் தான் அடக்க வேண்டும் என்று நினைத்தவர் “பானுமதி பிள்ளை கழுத்துல ரத்தம் வருது அதுக்கு மருந்து போடு” என்றவர் மகளிடம் “அவன் கூட போறதும் போகாததும் உன் விருப்பம். ஆனா எந்த முடிவு எடுக்குறதா இருந்தாலும் இந்த அப்பன் உன் கூடவே இருப்பேன் அதை மட்டும் நினைவுல வச்சிக்கோ” என்று சொல்ல.
அவள் எதுவோ சொல்ல வாயெடுக்க….
‘அப்புறம் மாமா வரட்டாஆஆஆஆஆ….. பாய்…. அப்பாவுக்கு பாய் சொல்லு செல்லம்” என்றவன் அவளை வம்படியாக தூக்கிக் கொண்டு சென்றான்.
அவரோ எதுவும் செய்ய முடியாமல் இயலாமையுடன் மகளைப் பார்த்தார்.
பானுமதியோ, “என்னங்க இது, இப்படி பார்த்துட்டு இருக்கீங்க. நம்ப முன்னாடியே பிள்ளை கழுத்துல கத்தியை வைக்கிறான்” என்றவர் அழுகையுடன் கேட்க.
அவரும் அதையே தான் நினைத்தார் போலும் அப்படியே தொய்ந்து அமர்ந்தார்.
எப்படி நடந்திருக்க வேண்டிய கல்யாணம். எல்லாம் செய்தது யாருக்காக மகளுக்காக தானே. கடைசியில் அவளே கண்ணீர் சிந்தும் படியாகி விட்டதே என்று மனதால் நொறுங்கிப் போனார்..
No comments yet.