அத்தியாயம் 3

அர்பிதா S | 17 Dec 2025 | Share

3

பெருமைக்குரிய நீதிபதி கையால், அந்த கோப்பையை வாங்கியவனுக்கோ, மிகப் பெரிய அங்கிகாரம் கிடைத்த பெருமிதம்.

இதற்காகவே பல ஆண்டுகள் தவம் கிடந்தவனின் வாழ்க்கையும் கூட அவனுக்கு சதியாகவே மாறிப்போயிருந்தது.

அந்த கசந்த நினைவுகளில் மூழ்கி இருந்தவனின் கவனத்தை ஈர்த்தவாறு ஒலித்தது அரங்கத்தின் கரகோஷம். கனவில் இருந்து மீண்டவன் போல, தலையை லேசாய் உலுக்கி, தோள்களை சீராக்கி அவன் மேடை மேல் பார்வையை சுழற்றிய போது தான் கண்டான், அவனின் எண்ண ஓட்டத்தின் மீதே பார்வையை பதித்த படி, உதட்டில் ஒரு மர்ம புன்னகையுடன், நீதிபதி பேசவும் துவங்கி இருந்ததை. 

“எல்லாருக்கும் வணக்கம், நான் பொதுவா இந்த மாதிரி விழாவுக்கு எல்லாம் வந்து கலந்துக்குற வழக்கத்தை வெச்சிக்குறது இல்லை.

நீதிபதிகளின் பதவி ஏற்பு விழாக்களை கூட இயன்ற வரை தவிர்க்க நினைப்பவன் நான். ஏனோ, இந்த விருதும், விழாவும் இரு கண் துடைப்பு போலவும், வீண் கூச்சல்கள் போலவும் எனக்கும் தோன்றும்.

அப்படிப்பட்ட நான், ஒரு முறை அழைப்பு வந்ததுக்கே, இங்க வர சம்மதித்ததோட காரணம், மிஸ்டர் ஆர்யன் தான்.

தம்பியை நான் முதல்ல பார்த்த அப்போ, ஏதோ பாக்க கட்டுமஸ்த்தா, திடமா இருக்கான், ஜிம் தவிர வேற எங்கயும் அசைந்து, நிமிர்ந்து வேலை செய்ய மாட்டான்னு நெனச்சேன்.

ஆனா அவனோட மூளையின் வேகத்தை கவனிச்ச பிறகு தான், என்னோட பார்வையின் பிழை எனக்கு புரிஞ்சது.

உங்க எல்லாருக்கும் ஆர்யனை, என்னோட வழக்குல உதவி பண்ணின டிடக்டிவ்வா தான் தெரியும். பட் ஹி இஸ் மோர் தான் தட்.

இதுவரைக்கும் உங்களுக்கு தெரியாத உண்மைகளை நான் இப்போ போட்டு உடைக்க போறேன். என்ன ஆர்யன் சொல்லிடவா?” குறும்பும், ஆவலும் சேர்ந்தே அவர் கேள்வி கேட்க,

ஏதோ பதில் சொல்ல ஆர்யன் வாயெடுக்கும் முன்பே,

“சொல்லுங்க சார். எங்களுக்கு அவரை பத்தி தெரிஞ்சிக்கணும். ப்ளீஸ் சொல்லுங்க” மாணவர் கூட்டத்தின் கூச்சல் சத்தம் அதிகரித்து, ஆர்யனின் முயற்சியை தோற்கடிக்கவே, தொடர்ந்தார் சந்துரு, வெற்றி புன்னகையோடு.

ஆர்யன், சுமார் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு சக்ஸஸ்புல் மிலிட்டரி ஆஃபீஸ்ர். சாதாரண சிப்பாயா சேர்ந்து, பின் வேளையில் இருக்கும் போதே உயர் பதவிக்கான தேர்வுக்கும் படிச்சி, அதில் தேர்வானவன், அடுத்த ஒரு வருட பயிற்சி காலத்திலும் படு வேகமாய் தேர்ச்சி பெற்று முன்னேறினான் ஆர்யன்.

அவனின் மனமும், வாழ்க்கையும், வேலையும் பூபோல் பூக்க துவங்கி, ஆனந்தமாய் அவன் வாழ துவங்கி இருந்த வேளையில் தான், அடுத்தடுத்த, வாழ்க்கையின் அடிகளை ஏற்க  துவங்கினான் அவன். பேசும் போதே ஆர்யானின் முகத்தை ஒருமுறை கவனிக்க தவறவில்லை சந்துரு.

அதனின் தாக்கம் உணர பெற்றவனின் முக வாட்டமும், அது சொல்லும் வலியையும் உணர்ந்தவர்,

“ட்ரைனிங் முடிய போகுற கடைசி மாசம், எல்லையில யுத்த அறிவிப்பு வந்தது. அதுவும் பாகிஸ்தான், சீனா ரெண்டுமே ஒரு சேர தங்களை தாக்க போறதா தகவலும் வர, படையை முன்னேடுத்தி செல்லும் பொறுப்பில், தன்னுடன் ஐவரை அழைத்து கொண்டு ஆர்யனின் குழு சீனா எல்லைக்குள் நுழைய, மற்ற குழுக்கள் அனைவரும் பாகிஸ்தானில் சிலரும், சீனாவில் சிலரும் என பிரிந்து, தன் தன் கடமையாற்றி, கிட்டத்தட்ட வெற்றி வாகை சூடி நாடு திரும்பும் போது தான்,

சீனா நாட்டு ராணுவத்தின் குண்டு ஒன்று ஆர்யனின் கால்களில் துளைத்து, அவனை காயமாக்கி, ஒரு மாதம் ஓய்வும் எடுக்க அனுமதி தந்தது நம் நாட்டு ராணுவம்.

அது அவன் காலில் லேசாய் ஒரு பாதிப்பை உண்டாகியத்தை போல தான் முதலில் தெரிந்தது. நலமாக தான் இருக்கிறான் என்று, சில பல தேற்றல்கள் கொடுத்து ஆர்யனை மருத்துவமனையில் இருந்து அனுப்பியும் வைத்து விட்டார்கள் மருத்துவர்கள்.

ஆனால் போக போக, ஆர்யன் தன் கால் கொண்டு நிற்கும் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டு வரவே, ஒரு மாதம் கழித்து,

மீண்டும் ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்த ஆர்யன், மருத்துவரை நாடியபோது தான், அவன் வாழ்வை புரட்ட போகும் தகவலை அறிந்தான் அவன்.

அவன் கால்களை துளைத்த அந்த குண்டின், வீரியத்திலோ, இல்லை அதை எடுக்கும் போது உடலிலேயே தங்கி போன அதனின் மிச்சமோ, எதுவோ அவனின் காலில் தங்கி, அதனின் கேடுகள் அவனின் கால் மொத்தமும் பரவவே, கால் மொத்தமும் வீங்கி, சிவந்து, கொப்புலங்கள் பூத்து, நடக்கவும் முடியாமல் போன போது தான் ஆர்யன் அறிந்தான், அந்த விஷம் கேடுகள் தன் எலும்புகளையும் பதம் பார்த்து கிடந்ததை.

அவனின் எலும்புகளும் கூட பலவீனமாகி, மாதத்தில் நான்கு முறை உடைவது போல வலியை அவனுக்கு கொடுக்க, அதில் அவன் துடிப்பதுமாகவே காலம் கடக்க, முழுதாய் அந்த எலும்பை மாற்றுவதே ஒரே தீர்வு என்பதை உணர்ந்தவன், செயற்கை எலும்புகளையும் தன்னுள் புகுத்தி கொள்ள ஒப்பும் கொண்டான் ஆர்யன்.

செயற்கை எலும்புகள் பொறுத்த பெற்றவன் அதற்கு மேல் ராணுவத்தில் தொடர, அவர்களின் கோட்பாடுகள் அனுமதிக்காத காரணத்தால், அங்கிருந்து வந்தவன் சில மாதம் வீட்டில் மட்டுமே முடங்கி கிடந்தான்.

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதுனு சொன்னது போல, வீட்டுக்குள்ளேயே இருக்கிறது ஆர்யனின் தன்னம்பிக்கையையும், வாழும் ஆசையையும் அவனுள் இருந்து குறைத்து கொண்டே போனது.

அப்போது தான், காவல் துறையில், அவர்களுக்கு உதவி செய்யும் டிடேக்டிவ் வேலையில் இவனை சேர்க்க அழைப்பு வர, முதலில் அதை நிராகரித்தவன்.

வெற்று மூளை பேய்களின் வீடு என்பதை உணர்ந்தவன், பொழுது போக்காய் அதை ஏற்று கொண்டு, அதிலும் தன் பணியை சரியாய் செய்தவனின் உழைப்பும், நேர்மையும் தான் அவனை இவ்விடம் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.

இதை எல்லாம் நான் இங்க சொல்ல காரணம், வளரும் வழக்கறிஞர்கள் நீங்க எல்லாரும், தன் வேலையில் இதே நேர்மையும், கண்ணியமும் கடைபிடிக்கணும்ன்றதை நினைவு படுத்த தான்” என்றவர் தன் உரையை முடித்தும் விட்ட சில நொடிகள் கடந்து தான் அரங்கில் கைகள் தட்ட படும் ஓசையே ஒலிக்க துவங்கி இருந்தது.

ஏனோ, இத்துணை நாள் கம்பீர ஆண்மகனாய், பெண்களை கவர்ந்து, ஆண்களுக்கு முன்னுதாரணமாய் இருந்தவனின் வாழ்க்கையில் இத்தனையையும் நிகழ்ந்து இருக்கும் என்பதை துளியும் எதிர் பார்க்க வில்லை அவ்விடம் இருந்த யாருமே.

அனைத்தும் தெரிந்த பின், முன்பு இருந்த மதிப்பு , அன்பின் சாயம் கொண்டு மரியாதையாக மாறி இருந்தது.

அனைத்தும் கூறப் படும் போது கூட, லேசாய் ஒரு சில வினாடிகள் மட்டும்  சோகத்தின் கீற்றுகள் புலப்பட்ட ஆர்யனின் முகத்தில், அதன் பின் புன்னகை மட்டுமே நிறைந்து இருந்தது.

நீதிபதியின் உரை முடிந்ததும், ஆர்யனை பேச அழைத்தாள், அந்த நிகழ்ச்சியை நடத்தி கொண்டு இருந்த பெண்ணொருத்தி.

அவன் பேச்சை கேட்கவே ஆவலாய் காத்து கிடந்த மாணவ கூட்டத்தில் இருந்து கரகோசம் அட்டகாசமாய் வெளிவர, அது தந்த உற்சாகத்தில் மைக்கை நெருங்கியவன், அதை பற்றி இரண்டு நொடிகள் நின்ற பின் தான் கை தட்டும் ஓசை லேசாய் குறைந்து இருந்தது.

மைக்கை கையில் பற்றியவன், பேச வாயெடுக்கும் போதே, ஏதோ ஒன்று அவன் தொண்டை குழியில் சிக்கி கொண்டு, காற்றை மட்டுமே வெளியேற்ற, அந்த தடை நீக்க எண்ணியவன், லேசாய் தொண்டையை செருமி, அவனின் கர்ஜனை மைக்கின் உதவியால் அந்த அரங்கம் மொத்தமும் ஒலித்த வேளையில், அவனின் குரலையும், பேச்சையும் கேட்க காத்திருந்த கூட்டத்தில், அவனின் செருமலே ஒரு மின்னலை பாச்சியது போல, பரவிய உற்சாகத்தில், அவனையே வெறித்த மாணவ கூட்டத்தின் ஈர்ப்பையும் தாண்டி, பேச துவங்கியவனின் பார்வை நுழைவாயிலில் நிலை பெற்று இருப்பதில் வியந்த அனைவரின் பார்வையும் வாசலை பார்க்க, அங்கோ.

காக்கி உடையில், சட்டையில் சில நட்சத்திரங்கள் பதித்த படி, காவல் அதிகாரி தோரணையில் வந்த அவரை பார்த்து சற்று பதறி தான் போயிருந்தனர் அனைவருமே.

ஆர்யனின் முகத்திலும் தெரிந்த சில குழப்ப ரேகைகளினால் தானே மேடை விட்டு இறங்கி, வந்த அந்த அதிகாரியின் பக்கம் சென்று, அவர் கூறிய செய்தியை கேட்டவன், சற்று மிரண்டு தான் விட்டான் என்றே தான் கூற வேண்டும்.

அதிகாரி கூறிய செய்தியில், குழம்பி போய், அவன் முகத்தில் திடீரென முளைத்த சோக ரேகைகள், விபரீதத்தை உணர்த்த.,

அடுத்த துயர் நெருங்கியதை போல உணர்ந்தவன், உண்மையில் அடுத்த சங்கடத்தை சந்திக்க விழைவானா ஆர்யன் !!!

    No comments yet.