அத்தியாயம் 3

Zaara ❤️ | 22 Nov 2025 | Share

ஆரவ் மற்றும் ஆத்விக் இருவரும் சகோதரர்கள், அதாவது இரட்டையர்கள் (Twins). ஆனால், இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.

பொதுவாக இரட்டையர்களில் மூன்று வகை உண்டு:

 * முதல் வகை: முகச்சாடல் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள் (Identical Twins).

 * இரண்டாவது வகை: முகச்சாடல் வெவ்வேறு மாதிரி இருக்கும் இரட்டையர்கள் (Non-identical Twins).

 * மூன்றாவது வகை: “எனக்குத் தெரியவில்லை! உங்களுக்குத் தெரிந்தால் கமெண்ட் செய்யுங்கள், அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்…” 😉

(சரி, நம்ம கதைக்குள் போவோம்!)

நம் கதையில் வரும் ஆரவ்வும் ஆத்விக்கும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள். அதாவது, பார்க்க ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.

ஆரவ் (Aarav) 😍 (வயது 28):

பார்க்க மிகவும் அழகாக இருப்பான். ஆரவ்வும் சித்தார்த்தும் சேர்ந்துதான் பிசினஸ் செய்கிறார்கள். ஆரவ் எல்லோரிடமும் சிரித்துப் பழகும் ஜாலி டைப். ஆனால், பிசினஸ் என்று வந்துவிட்டால், எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்க மாட்டான்; எதிராளியைத் தெறிக்க விட்டுவிடுவான். பிசினஸில் சித்துக்கு அடுத்தபடியாக இவனை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.

ஆத்விக் (Adhvik) ♥️ (வயது 28):

பிரபலமான வழக்கறிஞர் (Lawyer). இவன் கோர்ட்டுக்குள் வந்தாலே அனைவரும், “ஆத்விக் சார் இந்த கேஸில் ஆஜரானால் வெற்றி அவர் பக்கம் தான்” என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.

 அந்த அளவிற்கு அவன் எடுக்கும் எல்லா வழக்குகளிலும் அவன்தான் வெற்றி பெறுவான். ‘கிங் ஆஃப் லா’ (King of Law) என்று அனைவராலும் அழைக்கப்படுபவன். 

சிக்ஸ் பேக் (Six-pack) உடற்கட்டோடு பார்ப்பதற்கே செம மாஸாக இருப்பான். கோர்ட்டுக்கு அவன் வந்தாலே, அவனை சைட் அடிக்காத பெண்களே இருக்க மாட்டார்கள்; அவ்வளவு அழகாக இருப்பான்.

மாறன் (Maran) ♥️ (வயது 28):

இளம் போலீஸ் அதிகாரி (சென்னை சிட்டி கமிஷனர்).  போலீஸுக்கே உரித்தான கம்பீரமான தோரணையில் அழகாக இருப்பான். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், தப்பு என்றால் தப்புதான் என உள்ளே தூக்கி வைத்துவிடுவான். ரவுடி முதல் அரசியல்வாதி முதற்கொண்டுகள் முதல் கொண்டு இவனைப் பார்த்தாலே தலைதெறிக்க ஓடுவார்கள்.

யாஷ்வந்த் (Yashwanth) ♥️ (வயது 28):

இந்தியாவின் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் (Topmost Heart Surgeon) ஒருவன். பார்க்க மிகவும் அழகாக (Handsome) இருப்பான். இவன் சித்தார்த்தைப் போலவே யாரிடமும் அதிகம் சிரித்துப் பேச மாட்டான்.

 அது ஏன் என்று கதையின் போக்கில் பார்க்கலாம்.

ஹர்ஷித் (Harshid) 😍 (வயது 26):

கல்லூரிப் பேராசிரியர் (Professor). எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பான். இவனுக்கு இவனது அண்ணன் சித்து என்றால் உயிர்; அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வான். அப்படி ஒரு பாசக்காரன். இவன் வேலை பார்க்கும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் எல்லோரும் இவன் பின்னால் பைத்தியமாகச் சுற்றுவார்கள். ஹர்ஷித் இவர்களை விட இரண்டு வயது இளையவன் என்பதால், எல்லோருமே இவன் மேல் பாசமாக இருப்பார்கள். அதனால்தான் அவன் அப்படிச் சொன்னதும் கோபத்தில் ஆரவ் அவனை அடித்தது.

 சித்தார்த் குடும்பம் 

 * தாத்தா: சக்கரவர்த்தி

 * பாட்டி: பானுமதி

சக்கரவர்த்தி – பானுமதி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் (ஒரு மகன், ஒரு மகள்).

 * மகன்: அசோக் சக்கரவர்த்தி. இவர் மனைவி மீனாட்சி. இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

   * மூத்தவன் தான் நம் ஹீரோ சித்தார்த் அபிமன்யு ♥️

   * இளையவன் ஹர்ஷித்.

 சக்கரவர்த்தி மகள்: வானதி.

   சக்கரவர்த்திக்குத் தன் மகளைப் பிரிந்து இருக்க மனம் வராததால், தங்கள் கம்பெனியில் விசுவாசமாக வேலை பார்த்த ராஜாவை, வீட்டோடு மாப்பிள்ளையாகக் கேட்டு திருமணம் செய்து வைத்தார்.

   * வானதி – ராஜா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் (இரட்டையர்கள்).

   அனுசுயா மற்றும் அவந்திகா. (இவர்கள் இருவரும் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள்). இவர்களைப் போகப் போக கதையில் பார்க்கலாம்.

சித்தார்த்தின் அம்மா (மீனாட்சி) ஒரு விபத்தில் இறந்துவிட்டதால், அவனது அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

 * அவர் பெயர் வசுந்தரா.

 * அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்: மகன் விஷ்வா, மகள் அஞ்சலி.

அஞ்சலிக்குத் தன் அண்ணன் சித்தார்த் என்றால் ரொம்பப் பிடிக்கும். அஞ்சலி முதலாம் ஆண்டு படிக்கிறாள். அனுசுயா, அவந்திகா, அஞ்சலி அனைவரும் ஒரே கல்லூரியில்தான் படிக்கிறார்கள்.

 (முக்கியமான விஷயம் என்னவென்றால், அனுசுயாவுக்கு சித்து மேல் ஒரு காதல் உண்டு. ஆனால், சித்து இது எதையுமே கண்டுகொள்ள மாட்டான்).

ஆரவ் – ஆத்விக் குடும்பம்: 😍

ஆரவ் மற்றும் ஆத்விக்கின் அம்மா, அப்பா இருவரும் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்கள். சித்துவின் அம்மா உயிருடன் இருந்தவரை அவர்தான் இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டார். சித்துவின் அம்மா இறந்த பிறகு, அப்போதிலிருந்து இப்போது வரை சித்துதான் இவர்களைப் பார்த்துக்கொள்கிறான்.

மாறன் மற்றும் யாஷ்வந்த் இருவரும் ஓர் ஆசிரமத்தில்தான் வளர்ந்தார்கள். இவர்கள் எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்பதைப் போகப் போகக் கதையில் பார்க்கலாம்.

சித்து ♥️ இப்போது அவன் குடும்பத்துடன் இல்லை. ஹர்ஷித், மாறன், ஆரவ், ஆத்விக், யாஷ் என நண்பர்கள் எல்லோரும் தனியாக சித்துவின் வீட்டில்தான் இருக்கிறார்கள்.

சரி வாங்க, நம்ம ஹீரோ சார் என்ன பண்ணுகிறான்னு  பார்ப்போம்…

மருத்துவமனையில் எல்லோரும் அமர்ந்து, சித்து எப்போது கண் விழிப்பான் என்று காத்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஐசியூ (ICU) அறையிலிருந்து வந்த ஒரு நர்ஸ், யாஷிடம், “சார், உள்ளே போங்க. பேஷண்ட் கண் முழிச்சிட்டாங்க. எல்லாரும் போய் அவரை டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க சார்,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

உடனே அனைவரும் சித்து இருந்த அறைக்குச் சென்றார்கள்.

ஹர்ஷித் சித்துவின் அருகில் அமர்ந்து, “அண்ணா… ஏன் இப்படி பண்ணீங்க?” 🥺 என்று அழுதுகொண்டே கேட்டான். அவன் கேட்டதற்கு சித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை அமைதியாகவே இருந்தான்.

யாஷ், “ஹர்ஷித் கொஞ்சம் தள்ளு,” என்று சொல்லிவிட்டு, சித்துவின் அருகில் சென்று “ஏன் இப்படி பண்ண ” என்று கேட்டான்.

அதற்கும் சித்து அமைதியாகவே இருந்தான் அதை பார்த்த யாஷுக்குக் கோபம் வந்து சித்துவின் கன்னத்திலேயே ‘பளார்’ என அறைந்துவிட்டான்.

மற்ற எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.

ஏனென்றால், யாஷ் சித்துவிடம் பேசி பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது பேசியது மட்டுமல்லாமல், அவனை அடித்ததும் எல்லோருக்கும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

‘அவங்க ரெண்டு பேரும் மனசுல உள்ளதைப் பேசி, பிரச்சனையை முடிக்கட்டும்’ என்று நினைத்து, மற்ற அனைவரும் அறையை விட்டு வெளியே சென்றுவிட்டார்கள்.

யாஷ் சித்துவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

யாஷ் மீண்டும் சித்துவைப் பார்த்து, “ஏன்டா இப்படி பண்ண ?” என்று கேட்டான்.

சித்து அவனைப் பார்த்து, “ஏன் மச்சான்… இப்போ மட்டும் பேசுற? ஓஹோ… நான் செத்துட்டா பேச முடியாம போயிரும், அதுக்காக இப்பவே பேசுறியாடா?” என்று விரக்தியாகக் கேட்டான்.

அவன் அப்படிப் பேசி முடிப்பதற்குள், யாஷ் மீண்டும் சித்துவின் கன்னத்தில் அடித்தாவன் “இன்னொரு தடவை இப்படிப் பேசுன… அப்புறம் நானே உன்னைக் கொன்னுடுவேன்டா,” என்று கோபம் பொங்கச் 😡 சொன்னான்.

சித்து வலி கலந்த சிரிப்புடன் அமைதியாக இருந்தான்.

“ஏன் சித்து இப்படிப் பண்ண?” என்று யாஷ் மீண்டும் ஆதங்கத்தோடு கேட்டான். சித்து உடனே யாஷைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தான்.

“என்னால முடியலடா… அவ்ளோ கஷ்டமா இருக்கு. அவ நிம்மதியா போயிட்டா… ஆனா போகும்போது என்னோட உயிரையும் சேர்த்து எடுத்துட்டுப் போயிட்டாளேடா…” என்று சொல்லி கதறி அழுதான் 🥺🥺.

யாஷுக்கு சித்துவை இப்படிப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது.

யாஷ் தன் மனதிற்குள், ‘அம்மு… நான் உனக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன், சித்துவை எப்பவும் ஹாப்பியா பாத்துப்பேன்னு. ஆனா இன்னைக்கு இப்படி நடந்துருச்சு. இனிமே என்ன ஆனாலும் அவனை நான் நல்லா பாத்துப்பேன் அம்மு ♥️. உனக்குக் கொடுத்த வாக்கை நான் காப்பாத்துவேன்,’ என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

பின் சித்துவைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“சித்து… நீ இப்படி இருந்தால் உன் அம்முவுக்கு… உன் முயல் குட்டிக்கு ♥️ பிடிக்குமா? அவளுக்குப் பிடிக்காததை நீ ஏன் செய்ற?” என்று கேட்டான்.

சித்து அப்படியே அமைதியானான்.

யாஷ்: “அவளுக்கு நீ எப்படி இருந்தா பிடிக்கும்னு உனக்கே தெரியும். நான் சொல்ல ஒன்னும் இல்ல,” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

யாஷ் பேசிய அனைத்தையும் நினைத்து, சித்து மனதில் ஒரு முடிவு எடுத்தான்.

(வாங்க நம்மளும் அவன் என்ன முடிவு எடுத்தான்னு பார்ப்போம்)

சித்து (மனதிற்குள்): ‘ஆமாம்… நான் இப்படி இருந்தால் என் முயல்குட்டிக்கு ♥️ பிடிக்காது. அவ மட்டும் இப்போ கூட இருந்து, நான் கையை கட் பண்ணிக்கிட்டது தெரிஞ்சா ரொம்ப ஃபீல் பண்ணுவா. அவ இருந்தாலும் இல்லைனாலும், அவ ஃபீல் பண்ற விஷயத்தை நான் பண்ணவே மாட்டேன்.’

‘இந்த ஜென்மத்துக்கும் எனக்கு அவ மட்டும் தான். அவ இடத்துல வேற யாரையும் வச்சி என்னால பார்க்க முடியாது,’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு ஒரு முடிவை எடுத்தான்.

யாஷ் சித்துவின் அறையை விட்டு வெளியே போனானே, அவன் என்ன பண்ணுகிறான் என்று நாம் போய் பார்த்துவிட்டு வருவோம்.

யாஷ் ஐசியூ ரூமை விட்டு வெளியே வந்து சேரில் (Chair) அமர்ந்துவிட்டான். அவன் வந்ததும் ஆரவ், “சித்து என்னடா சொன்னான்?” என்று கேட்டான்.

யாஷ், “இனிமே அவன் இப்படிலாம் பண்ண மாட்டான்டா,” என்றான்.

(யாஷ் சித்துவிடம் ஏன் பேசாமல் இருந்தான் என்று பார்ப்போம் வாங்க)

ஆரவ்: “அது எப்படிடா இவ்வளோ உறுதியா சொல்ற? ஆல்ரெடி அவன் இப்படி பண்ணதுக்குத்தான் இத்தனை வருஷமா நீ அவன் கூட பேசாம இருந்த. ஆனா இவன் மறுபடியும் பண்ணிருக்கான். எப்படி இனிமே இப்படி பண்ண மாட்டான்னு நீ நம்புற?” என்று கேட்டான்.

யாஷ்: “அவன் இனிமே இப்படிப் பண்ண மாட்டான்டா. ஏன்னா, அவன்கிட்ட அம்முவைப் பத்திப் பேசிருக்கேன். சோ, இனிமே இப்படிப் பண்ண மாட்டான். ஏன், அதைப் பத்தி யோசிச்சுக் கூட பார்க்க மாட்டான்டா. அவனை இனிமே பழையபடி ஹாப்பியா மட்டும் பாத்துக்கிட்டா போதும்டா,” என்று யாஷ் சொன்னான்.

யாஷ் அனைவரையும் பார்த்து, “சரிடா… நீங்க எல்லாரும் கிளம்புங்க. நானும் சித்தும் மார்னிங் டாக்டர்கிட்ட செக் பண்ணிட்டு வந்துடுறோம்,” என்று சொன்னான்.

அனைவரும் “ஓகே” என்று சொல்லிவிட்டு ஆரவ், ஆத்விக், மாறன், ஹர்ஷித் அனைவரும் மருத்துவமனையை விட்டு கிளம்பினார்கள்.

அதுவரை இவர்கள் அனைவரையும் ஒரு உருவம் கண்களில் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தது.

அவர்கள் கிளம்பவும், அந்த உருவம் யாஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மற்ற நான்கு பேரின் பின்னால் சென்றது.

யாஷ் சித்து இருக்கும் அறைக்குள் சென்றான். அங்கு சித்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

யாஷ் சித்துவின் பக்கத்தில் சென்று, “என்ன மச்சான்… நெக்ஸ்ட் டைம் எப்படி கட் பண்றதுனு திங்க் பண்றியாடா?” என்று நக்கலாகக் கேட்டான்.

சித்து அவனை முறைத்து 😡 பார்த்துவிட்டு, “அதுல ஒன்னும் இல்ல. எனக்கு என்னனு தெரியலடா… மனசு ஒரு மாதிரி இருக்கு. யாருக்கோ ஏதோ ஆகப்போற மாதிரி தோணுதுடா,” என்று கலக்கத்துடன் சொன்னான்.

யாஷ்: “மச்சான்… என்னாச்சுடா?”

சித்து: “தெரியலடா… பயமா இருக்கு,” என்று சொன்னான்.

 * சித்து எதை நினைத்து பயம் கொள்கிறான்?

 * கண்ணீரோடு அவர்களைப் பார்த்த அந்த உருவம் யார்?

இதை எல்லாம் அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.

 அசுரனை ஆளும் தேவதை❤️ 

    No comments yet.