வேதாவிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.
முன்பே நிறைய வாங்கிக் கொடுத்திருக்கிறானே இப்ப எதுக்கு என எண்ணி வேண்டாம் என்றதற்கு அவன் இவ்வளவு கோபம் கொள்வான் என அவள் எதிர்பார்க்கவில்லை.
கோபத்தில் சிவந்து விட்ட அவன் முகமே கண் முன் தோன்ற அங்கேயே அமர்ந்திருந்தவள் பத்மா பாட்டி வந்து அழைக்கவும் தான் நனவிற்கு வந்தாள்.
அவன் உடை கூட மாற்றாமல் காருக்கு சென்றிருக்க பத்மா பாட்டியிடம் வேதாவை கீழே வரும்படி சொல்லி அனுப்ப பாட்டி வந்து சொன்னதும் உடனே எழுந்து கீழே ஓடினாள்.
காரை எடுத்தவன் அங்கு போய் சேரும் வரையிலும் எதுவும் பேசவில்லை. இவளுக்கும் என்ன சொல்வது என எதுவும் தோன்றாததால் அமைதியாகவே வர அந்த அமைதி இருவர் மனதையும் தாக்கியது.
அம்மா வீட்டிற்கு வந்த பின்பும் கூட அவன் முகம் மாறுவதாக தெரியவில்லை.
வர்ஷாவிடம் பிறந்தநாள் வாழ்த்து கூறியவன் மேலே அவன் அறைக்கு சென்று விட்டான். வேதாவும் வாழ்த்து கூறிவிட்டு அவன் தந்த பரிசை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க பின் வேதாவை தனியாக அழைத்த சுபத்ரா என்ன ஆச்சு என விசாரிக்க ” ஒன்றுமில்லை அத்தை ஏதோ ஆபீஸ் டென்ஷன் அதான் ” என சொல்லி சமாளித்தாள்.
பின் இரவு உணவிற்கு அவனை அழைக்க மேலே வந்தவள் அவன் உறங்கி கொண்டிருப்பதை பார்த்ததும் கீழே சென்று விட்டாள். இவளுக்கும் சாப்பிட மனம் இல்லை தான் ஆனாலும் அனைவரும் ஏதேனும் நினைக்க கூடும் என எண்ணியவள் அளவாக சாப்பிட்டு முடித்தாள்.
பின் ஒரு டம்ளரில் பாலும் பழ கூடையில் இருந்த பழங்களில் சிலதை எடுத்து கட் பண்ணி ஒரு கிண்ணத்திலும் எடுத்துக் கொண்டவள் அறைக்கு திரும்பினாள்.
‘ ஃபஸ்ட் டைமா நான் ஆசையா வாங்கிட்டு வந்து தரேனேனு கூட நினைக்காம எப்படி அவ வேண்டாம்னு சொல்லலாம். ஏன் ஏற்கனவே நகை இருந்தா இப்ப என்ன. கடமைக்குனு வாங்கி தந்ததுக்கும் ஆசையா வாங்கி தரதுக்கும் வித்தியாசம் இல்லையா. இது ஏன் அவளுக்கு புரியல ‘ என ஏதேதோ மனதில் கேள்விகள் முளைக்க கோபம் கோபமாய் வர எதுக்கு இவ்வளவு கோபம் வருதுனு கூட புரியாமல் படுத்து இருந்தவன் சாப்பிட அவள் அழைக்க வந்த போது சாப்பிட செல்ல மனம் இல்லாததால் வேண்டும் என்றே தூங்குவது போல் படுத்து இருக்க பின் அவள் கீழே சென்ற பின் அப்படியே உறங்கிப் போனான்.
மேலே வந்தவள் அவன் இன்னும் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் கொண்டு வந்த பாலும் பழத்தையும் டேபிள் மேல் வைத்தவள் அவன் அருகே சென்றாள்.
இவள் திருப்பி தந்த மோதிரத்தை கையிலேயே தான் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். இதைக் கண்டவளுக்கோ உதட்டில் சிறு புன்னகை பூத்தது.
பின் மெதுவாக மெத்தையின் ஓரத்தில் அமர்ந்தவள் அவன் கையில் இருந்த டப்பாவை மெல்ல எடுத்து அதில் இருந்த மோதிரத்தை எடுத்து அணிந்து கொண்டாள்.
‘ என்னமா கோபம் வருது. அம்மா வீட்டிற்கு வந்திட்டு யார்கிட்டேயும் சரியா பேசாம சாப்பிடாம எப்படி தூங்கிட்டு இருக்கார் ‘ என அவனையே பார்த்துக் கொண்டு மனதில் புலம்பிக் கொண்டவள் குழந்தை போல் தூங்கிக் கொண்டிருக்கும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவன் விழிக்க திடுக்கிட்டவள் எழுந்து நகர டக்கென்று எழுந்து அவள் கையை பற்றியவன் கையில் அவள் மோதிரம் அணிந்திருப்பதை பார்த்ததும் சந்தோஷத்தில் மனம் துள்ள அவள் முகத்தை காண தன் பக்கமாய் அவளை இழுக்க நிலை தடுமாறியவள் அவன் மேலேயே விழ பூங்கொத்து போல் தன் மேலே விழுந்தவளை அப்படியே அள்ளிக் கொண்டான்.
தன் மேல் விழுந்தவளை கட்டிக் கொண்டவனின் கைகள் அவள் இடுப்பை சுற்றி இருக்க அவன் முகம் அவள் கழுத்து வளைவில் புதைந்திருக்க அவளின் வாசமும் பூவின் நறுமணமும் அவனை ஏதோ செய்ய கண்களை இறுக்க மூடி சுவாசத்தை ஆழ்ந்து இழுத்து ரசித்தவன் இப்படியே நேரம் நீளாதா என்று இருக்க அவன் மேல் விழுந்தவளோ அவன் உடலில் வெப்பம் சுடுவதாய் உணர இடுப்பு வளைவில் இறுக்கிக் கொண்டிருந்த அவன் கைகளை எடுத்து விட மனம் இல்லாமல் இருந்தாள்.
கழுத்து வளைவில் அவன் விடும் மூச்சுக்காற்று ஏனோ அவளுக்குள் ஆயிரம் வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ண அங்கிருந்து நகர முயல அவன் பிடியோ தளர்வதாய் தெரியவில்லை.
இவள் இங்கே திண்டாடிக் கொண்டிருக்க அவளின் வாசம் பிடித்தவனோ போதை கொண்டவனாய் அவளை இன்னும் இறுக்கி தன்னோடு அணைத்துக் கொள்ள மேலும் முன்னேறிச் செல்ல அவன் மனம் தூண்ட இது தவறு என மூளை எச்சரித்தும் எதுவும் அது அவன் மனதிற்கு எட்டாமல் போக அவள் கழுத்து வளைவில் தன் இதழ் பதித்தான்.
அவன் தந்த இதமான முத்தம் அவளுக்கோ மின்சாரம் தாக்குவது போல் இருக்க அவள் விழிகள் தானாய் மூட கைகள் அவன் சட்டையை இறுகப் பற்ற முதுகில் தன் சட்டையை இறுகப் பற்றும் அவள் கைகளின் வளையல்கள் தன்னை தீண்டுவதும் இன்பமாய் உணர்ந்தவன் இன்னும் கொஞ்சம் முன்னேறி செல்ல துடித்தான்.
மெல்ல அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் அவள் இதழில் மென்மையாக இதழை ஒற்றி எடுக்க அவள் இதழின் மேல் இருந்த ஈரப்பதம் தேன் சுவையாய் தித்திக்க மறுபடியும் இதழ் வைத்தவன் பூவில் தேன் உறிஞ்சும் வண்டாய் மாற அவளோ மூச்சு கூட விட முடியாமல் தடுமாற தன்னால் முடிந்த மட்டும் தன் கைகளை அவன் நெஞ்சின் மேல் வைத்து அழுத்தி தள்ளி ஒரு வழியாக அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் மொட்டை மாடிக்கு ஓடினாள்.
அவள் சென்ற சிறிது நேரம் வரை அப்படியே அமர்ந்திருந்தவன் தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.
‘ எப்படி இப்படி ஒரு தப்பு பண்ணேன். ஏன் என்னோட மனசு அவளையே சுத்துது. மனச கண்ட்ரோல் பண்ண தெரியாம அவகிட்ட இப்படி நடந்துகிட்டேனே…. என்ன பத்தி என்ன நினைப்பா என்னோட நிழல் கூட உன் மேல படாதுன்னு சொல்லிட்டு இப்படி பண்ணலாமா ‘ என தன்னைத்தானே நொந்து கொண்டவன் அவள் மேல் தான் வைத்திருக்கும் காதலையும் புரிந்து கொண்டான்.
ஆனால் எப்படி எங்கிருந்து வந்தது இந்த புது உணர்வு என்பதை அறியான்.
அவள் அருகாமையில் வேண்டும் என்று துடிக்கும் மனம் எப்பொழுதும் அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டான்.
தன் மனதை புரிந்து கொண்டவனோ ‘ ஒரு வருடம் மனைவியாக நடிக்க கூப்பிட்டு இப்போது மனைவியாகவே வாழ்நாள் முழுவதும் உடன் இருக்க முடியுமா என எப்படி கேட்க முடியும். அவளுடைய ஆசை கனவு எத பத்தியும் நினைக்காமல் என்னுடைய சூழ்நிலைகாக அவளை இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளிட்டு இதுல நான் உன்னை விரும்புகிறேன் அதான் அப்படி நடந்து கிட்டேன் என்னை ஏத்துபியானு எப்படி கேட்க…அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியாம எப்படி என் மனசுல இருக்கிறத சொல்றது ‘ என எண்ணங்கள் பல ஓட ‘ சரி ஒரு வருஷம் முடியட்டும் அதுக்கப்புறம் எல்லாம் பேசிக்கலாம். இப்போதைக்கு தள்ளியே இருக்கலாம் அது தான் நல்லது. அவ மனசையும் புரிந்து கொள்ள முயற்சி பண்ணலாம் ‘ என எண்ணியவனாய் அவளைக் காண மொட்டை மாடிக்குச் சென்றான்.
அவள் மாடியில் விளக்கு கூட போட்டுக் கொள்ளாமல் இருட்டில் அங்கு போடப்பட்டிருந்த சேரில் கால்களை மேலே வைத்து கைகளால் கட்டிக்கொண்டு முகத்தை முழங்காலில் சாய்த்து அமர்ந்திருந்தாள்.
அது முதன் முதலாக அவளை பார்த்ததை ஞாபகப்படுத்தியது.
No comments yet.