அத்தியாயம் -23

Chellammal Bharathi | 30 Nov 2025 | Share

      நிலா அந்த ரௌடியிடம் விசாரிக்கும் நொடியில் அதிரடியாக உள்ளே நுழைந்த இளஞ்சேரன் ரௌடியை கைது செய்தான். கைது செய்து வண்டியில் ஏற்றி தக்க பாதுகாப்புடன் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு மீண்டும் வீட்டின் உள்ளே கடுங்கோவத்துடன் நுழைந்தான் இளஞ்சேரன்.

      அவனது கோபமான விழி வீச்சில் இமையை தட்டி விழித்த நிலா அவனையே பார்த்து நின்றாள். கடுங்கோவத்துடன் நிலாவை நெருங்கியவன் அவளது இடையை கடுமையாக வளைத்து இழுத்து தன்னுடன் நெருக்கி கொண்டவன் அவளது தாடையைப் பிடித்து தன் முகத்தின் அருகே மூச்சுக் காற்று உரசும் நெருக்கத்தில் அவளை கொண்டு வந்தான் இளஞ்சேரன்.

      நிலாவின் கன்னங்கள் இரண்டையும் வன்மையாக அழுத்திக் கொண்டே, “இன்னொரு தடவ என் கேஸ்க்குள்ள நீ வரப் பாத்த…. பொண்டாட்டினு கூட பாக்க மாட்டேன்… உயிரோட பொதச்சுருவேன்…” என கடுங்கோவத்தில் நிலாவை மிரட்டினான் இளஞ்சேரன்.

      அதற்கு நிலா சற்றும் அசராமல், “போன நிமிஷம் வரைக்கும் எனக்கு அந்த ஐடியா இல்ல… ஆனா இப்ப.. ம்கூம்… இனிமே உன் கேஸ்க்குள்ள நான் வர்றத யாரலயும் தடுக்க முடியாது.. “என தனக்கே உரித்தான திமிரான நிமிர்வுடன் கூறினாள்.

       “அப்ப என் வேலையில மூக்க நுழைப்பேன் ங்கிற?” என்ற கேள்வியுடன் நிலாவின் கன்னத்தைப் பற்றி இருந்த கரத்தால் அவளது கழுத்தை கோவத்தில் நெரித்தான் இளஞ்சேரன்.

       “ஆமா… உங்களால முடிஞ்சத பண்ணுங்க.. ” என அதே திமிருடன் கூறினாள் நிலா.

       “பண்றேன்டி.. ” என அழுத்தமான குரலில் கூறியபடி நிலாவின் கழுத்தை மீண்டும் அழுத்தினான் இளா.

      நிலாவிற்கும் இளாவிற்கும் நடக்கின்ற மோதலைக் கண்டு  சற்று பயந்த இசை, சேதுவின் கரம் பற்றினாள். அவளது கரத்தை அழுத்தி பிடித்தவாறு, “அரசி… எனக்கொரு சந்தேகம்… ” என்றான்  சேது.

       “என்னடா? நானே அண்ண கோவத்த பாத்து பயந்து நிக்கிறேன்… ” இசை.

       “எனக்கு அதுல தான்டி சந்தேகமே…” சேது.

      “அதுல உனக்கு என்ன சந்தேகம்? ” இசை.

      “இதுக ரெண்டும் சண்டை போடுதுகளா? இல்ல.. நடு வீட்ல நின்னு ரொமான்ஸ் பண்ணுதுகளா? ” சேது.

      “என்னடா உலர்ற? ” இசை.

      “நீ வேணுனா நல்லா உத்து கவனி… அவனோட ஒரு கை நிலாவோட இடுப்புல எவ்ளோ அழுத்தமா இருக்கு னு… ” சேது.

       “அதான்டா கோவத்துல அண்ண அப்பிடி நிலாவ கஷ்ட்ட படுத்துறாங்க… ” இசை.

        “போடிங்க.. சரி..அந்த கைய விடு… இன்னொரு கையால கழுத்த நெரிக்கிறேன் னு நிலாவோட பின்னங்கழுத்த நுனி விரலால வருடி விட்டுட்டு இருக்கான் பாரு… “சேது.

       உடனே இளாவின் கரத்தை உற்று கவனித்தவள், “அட ஆமான்டா…” என ஆச்சரியமானாள் இசை.

       “மொதல்ல கூட அவ கன்னத்தப் புடிச்சு அழுத்துர்றேன் ங்கிற பேருல என் தங்கச்சி உதட்டுல முத்தம் குடுத்தான் படுபாவி பய..” சேது.

       “என்ன டா சொல்ற? ” என அதிர்ச்சியானாள் இசை.

       ” இப்ப கூட நல்லா பாரு.. மொறைக்கிறேன் ங்கிற பேருல ரெண்டும் லவ்ஸ் விட்டுட்டு இருக்குதுக.. ஆனா என் தங்கச்சியும் ஒன்னும் சளைச்சவ இல்ல…கீழ அவ கால பாரு… ” சேது.

      அப்பொழுதுதான் நிலாவின் பாதத்தைப் பார்த்தாள் இசை. அங்கு நிலாவின் பாதமோ இளாவின் பாதங்கள் மீதிருந்தது.

      “யப்பா… டேய் புருஷா.. என்ன வகை ரொமான்ஸ் டா இது? ” என விழி விரித்து கேட்டாள் இசை.

      “நானே இப்ப தான் இவங்கள பாத்து கொஞ்ச கொஞ்சமா கத்துட்டு வர்றேன்.. நீயும் கத்துக்கோடி… நம்ம அடுத்த புள்ளைக்கு யூஸாகும்… “என திருட்டு முழியுடன் கூறினான் சேது.

      “விளக்கமாறு பிஞ்சுரும்…” என பல்லைக் கடித்தாள் இசை.

       “ரைட்டு விடு… “சேது.

       “ஆனா எப்பிடி டா… எப்ப பாரு நாலு பேருக்கு முன்னாடி தான் ரொமான்ஸ் பண்றாங்க இவங்க… க்ரவுண்ட்ல பந்தால வேற மாதிரி ரொமான்ஸ் பண்ணுறாங்க.. இப்ப இத்தன பேருக்கு முன்னாடி நடு வீட்டுல நின்னுட்டு செம க்யூட்டா ரொமான்ஸ் பண்றாங்க… ” இசை.

       “நீ இப்பிடி சொல்ற… உன் பக்கத்துல ஒரு ஜீவன் இதுக ரெண்டும் சண்டை தான் போடுதுக னு நம்பி பயத்துல கண்ணு கலங்கி நிக்கிது.. ” என இசையின் அருகில் நின்றிருக்கும் அபியை காண்பித்தான் சேது.

       தன் அருகில் நின்றிருக்கும் அபியை கண்ட இசை, “அடக் கொடுமையே… ” என வெளிப்படையாகவே தலையில் அடித்துக் கொண்டாள்.

       “அவன விடு… இந்த ஜோடிய பாரு.. சுத்தி நடக்குறது எதுவும் தெரியாம மொறைக்கிறேன் ங்கிற பேருல இன்னும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குதுக…  வா போய் மொதல்ல அவங்கள பிரிச்சு விடுவோம்… ” சேது.

       “நீ திருந்தவே மாட்டியாடா? சண்டை காட்சி பாத்தாச்சு.. காமெடி காட்சி பாத்தாச்சு.. அடுத்து நடந்துட்டு இருக்குற இந்த காதல் காட்சிய ஏன்டா கலைக்கிற? ” இசை.

       “லவ் பண்றவங்கள பிரிக்கிறதுல இருக்குற சுகமே தனி டி.. நீ வர்றியா ?இல்லயா? நான் போறேன்.. ” சேது.

         “நீ கடைசி வரைக்கும்  திருந்தவே மாட்ட டா… ” இசை.

         “ஹி ஹி ஹி ஹி… ” என இசையிடம் பல்லை காட்டியவாறு இளா – நிலா அருகில் சென்றான் சேது.

         சுற்றி நடக்கும் எதையும் உணராமல் இருவரும் தங்களின் உலகில் மூழ்கி இருந்தனர். அவர்களின் அருகே சென்ற சேது, “கமிஷனர் ஸார்.. ” என்றான்.

        அதில் தன்னிலை அடைந்த இளா, நிலாவை கடுமையாக பார்த்தபடி அவளை பற்றி இருந்த கரங்களை நிலாக்கும் மட்டும் தெரியும்படியாக வருடியபடி அவளிடம் இருந்து எடுத்துக் கொண்டான்.

      அதை மிகச் சரியாக கவனித்த சேது, “மெல்ல.. மெல்ல.. என் தங்கச்சி இடுப்பு உடைஞ்சுற போகுது.. ” என்றான்.

       “உன் வாய ஒடைக்க போறேன் டா.. ” என சேதுவைப் பார்த்து சீறினான் இளா.

       “எப்புடி? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் தங்கச்சி வாய ஒடைச்சிங்களே? அது மாதிரியா கமிஷனர் ஸார்? ” என நக்கலாக வினவினான் சேது.

      சேதுவின் கேள்வியில் வலக்கண்ணை மூடி இடக் கண் புருவத்தை உயர்த்தி நுனி நாக்கை கடித்தபடி, “பாத்துட்டானோ… ” என தனக்குள் கேட்டபடி பின்னங்கழுத்தை அழுத்தமாக நீவிக் கொண்டு அழகாக வெட்கம் கொண்டான் இளா.

      அதையும் சரியாக கண்டு கொண்ட சேது, “என்ன மச்சான் வெக்கமா? ” என இளாவின் காதில் மென் குரலில் கேட்டான்.

      “இல்ல… துக்கம்… ” என சேதுவை முறைத்தான் இளா.

      “இருக்கும்.. இருக்கும்.. உன்னோட ரொமான்ஸ் பாதில நின்னுருச்சு ல.. அதுல துக்கம் வரும்.. வர்றது நியாயம் தான்.. ” என தலையை ஆட்டினான் சேது.

      “இவன… தங்கச்சி.. இசை… உன் புருஷன அடிக்கடி ஊரு பொம்பளங்க குளிக்கிற ஆத்துப் பக்கம் திரியுறதா நியூஸ் வந்துச்சு… ” என இசையிடம் ஒரு ஊசிப்பட்டாசை தூக்கிப் போட்டான் இளா.

       “ஐயோ அண்ணே… அதுனால தான் இவன் அடிக்கடி காணாம போறானா? ” என சேதுவை கொலை வெறியுடன் முறைத்தாள் இசை.

      “ஆத்தீ… நிலா… உன் ப்ரண்ட் கிட்ட இருந்து என்னைய காப்பாத்து.. ” என நிலாவின் பின்னே சென்று நின்று கொண்டான் சேது.

      இசை அவனை அடிக்க வருகையில் நிலாவின் பின்னிருந்து சற்று ஓங்கிய அழுகை சத்துணவு கேட்டு அனைவரும் அங்கு திரும்பி பார்த்தனர். அங்கு உடைந்து சில்லு சில்லாய் கிடந்த தனது எண்ணெய் பாட்டிலைப் பார்த்து அழுது கொண்டிருந்தார் அலமேலு.

      “அய்யோ.. என் எண்ணெய் பாட்டில் போச்சே… இனி நா எப்பிடி எண்ணெய் தேய்ப்பேன்? ” என ஓங்கிய குரலில் அழத் தொடங்கினார் அலமேலு.

      அப்பொழுது தான் பயத்தில் இருந்து நீங்கிய வள்ளி, அலமேலுவைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார். கதிர்வேலுவும் அப்பொழுது தான் மேசையின் கீழ் இருந்து எழுந்து வந்தார்.

       “இந்த குட்டச்சி தான் ஏம்முட்டு எண்ணெய் பாட்டில உடைச்சுட்டா.. அவளுக்கு முடி வளரல னு நா முடி வளக்குறத பாத்து பொறாமைப்பட்டு வேணும்னே அத உடைச்சுட்டா.. அவன் மண்டைய உடைக்க இவளுக்கு வேற எதுவுமே கிடைக்கலயா? ” என தரையில் உருண்டு அழுதார் அலமேலு.

       “அப்ப நிலா அடிச்சத பாத்து அலமேலு வாய பொளந்துக்கலயா? அதோட எண்ணெய் பாட்டில் உடைஞ்சதுக்குத் தான் அதிர்ச்சில வாயப் பொளந்துச்சா?” என அதிர்ச்சியுடன் அழும் அலமேலுவைப் பார்த்தாள் இசை.

      “அதான பாத்தேன்.. நம்ம அலமேலுவாச்சும் பயப்படுறதாவது… அது எமனுக்கே அல்வா குடுத்துட்டு இருக்குற ஆளாச்சே… அது எப்பிடி பயப்படும்? ” என மெல்லிய குரலில் கூறினான் சேது.

      அலமேலு அழுவதைப் பார்த்த நிலா, அங்கு சிதறி இருந்த பாட்டில் ஓடுகளை எடுக்க ஆரம்பித்தாள்.

     “இல்ல நிலா… நா சுத்தம் பண்றேன்.. நீ போய் உக்காரு… ” என ஓடி வந்து நிலாவைத் தடுத்து தானே சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் வள்ளி. அவருடன் இணைந்து அபியும் சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

      தன் தாய் அழுவதைக் கண்டு அவரை தேற்றியபடி வெளியே அழைத்துச் சென்றார் கதிர்வேல்.
      
       அப்பொழுது சுற்றும் முற்றும் பார்த்த இளா, “எங்கடா கவின்? ” என சேதுவைப் பார்த்து கேட்டான் இளா.

      “இங்க தான் டா இருந்தான்… ” என அப்பொழுது தான் வெகு நேரமாக தன் மகன் அங்கில்லாததை உணர்ந்தான் சேது.

      “போடா இடியட்… ” என சேதுவை கடிந்து கொண்டு வீடு முழுவதும் கவினை தேடத் தொடங்கினான் இளா.

      அவனின் பதற்றம் உணர்ந்து நிலாவும் இசையும் கவினை தேட.. எங்குமே கவின் தென்படாமல் குழம்பினர்.

      “உன் கிட்ட என்ன சொன்னேன்? கவின் பத்ரம் னு தான சொன்னேன்? ” என சேதுவின் சட்டையைப் பிடித்து கர்ஜித்தான் இளா.

      “இங்க தான் எங்காவது போயிருப்பான்… டென்ஷன் ஆகாதீங்க.. “என நிலா சேதுவின் மீதிருந்த இளாவின் கரத்தை விலக்க… கோபம் தாங்காமல் நிலாவை இழுத்து அறைந்தான் நிலாவின் சேரன்.

                             (சேரநிலா மிளிர்வாள்…)

                          -செல்லம்மாள்பாரதி

    No comments yet.