“அரசி.. அடியேய் அரசி… எங்கடி இருக்க?” என ஃபோனை பார்த்துக் கொண்டே வீட்டினுள் தன் மனைவியை தேடினான் சேது.
“என்னடா? ” எனக் கத்தியபடி சமையலறையில் இருந்து கரண்டியுடன் வெளி வந்தாள் இசை.
“என் தங்கச்சி சிரிக்கிறாளாம் டி… ” என பதட்டத்துடன் கூறினான் சேது.
“நீ என்ன லூசா? நேத்து தான் அவ சிரிச்சதுக்கு சந்தோஷப்பட்ட… இப்ப இப்பிடி அலருற? ” இசை.
“நானாடி லூசு? நீ தான் லூசு… அவ எவனையோ பாத்து சிரிக்கிறாளாம் டி.. ” என மீண்டும் பதட்டப்பட்டான் சேது.
“எந்த கிறுக்கன் சிக்குனான் னு தெரியலயே… ” என சிரித்தாள் நிலா.
“என்னடி சிரிக்கிற? அங்க ஒரு உசுரு ஊசலாடிட்டு இருக்கு டி பேயே.. ” சேது.
“போனா போகுது… நிலா ஒன்னும் சும்மா லாம் யாரு மேலயும் கை வைக்க மாட்டா.. அவன் என்ன பண்ணுனானோ.. ” என தன் சமையலை தொடர்ந்தாள் இசை.
“அதுவும் உண்மை தான்.. அபி வேற வர சொல்லிட்டு இருக்கான். வாயேன்… செலவே இல்லாம ஒரு சண்டைப் படம் பாத்துட்டு வந்துறலாம்.. “சேது.
அதைக் கேட்ட இசை, சமைத்துக் கொண்டிருந்ததை சட்டென நிறுத்தி விட்டு, “அப்பிடிங்கிற? ” என சேதுவை பார்த்தாள்.
“சீக்கிரம் வா.. நான் போய் கார் எடுக்குறேன்… ” என்றபடி வெளியே வந்தவன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த கவினைக் கண்டவன், “டேய் மவனே.. உன் அத்தம்மா வீட்டுக்கு போலாமா டா? ” என்றான் சேது.
“என்ன நான் கேக்கமதேயே கூப்புடுத?” என விளையாட்டில் கவனம் செலுத்தியபடி சந்தேகத்துடன் கேட்டான் கவின்.
“அது ஒன்னுல்ல டா மவனே.. அங்க ஒரு சண்டை காட்சிய பாக்க போறோம். நீ வர்றியா இல்லயா? ” என அவனருகில் வந்து அமர்ந்தான் சேது.
சட்டென சேதுவை நிமிர்ந்து பார்த்து விட்டு ஓடிச் சென்று தனது சட்டை பாக்கெட் கால் சட்டை பாக்கெட் என அனைத்திலும் கற்களை எடுத்து நிரப்பிக் கொண்டே, “நா தெதி… வா.. ” என சேதுவின் முன் வந்து நின்றான் கவின்.
அவனின் செயலை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சேது, “என் செல்ல மவனே… ” என அவனை தூக்கிக் கொண்டு காரை எடுத்தான் சேது. அதற்குள் கையில் ஒரு சிறிய பையுடன் வந்து ஏறினாள் இசை.
அவள் கையில் இருந்த பையை கவனித்தவன், “எனக்கு முறுக்கு எடுத்து வச்சியாடி? ” என்றான் சேது.
“ஆஹ்… என்ன உலர்ற? நான் எதுவுமே எடுக்கலயே… ” எனக் கையில் இருந்த சிறிய பையை திருட்டு முழியுடன் மறைத்தாள் இசை.
“அங்க சண்டைய பாத்துட்டே ஸ்நாக்ஸ் சாப்பிடத் தான இந்த பையில ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வர்ற? ” என காரை எடுத்தான் சேது.
“ஆங்… அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இது எனக்கே பத்தாது.. ” என இதழை சுழித்துக் கொண்டு திரும்பி அமர்ந்தாள் இசை.
“ரொம்ப தான் பண்ற டி.. எனக்குத் தராம தின்னு.. அப்புறம் இருக்கு.. “சேது.
“போ… நான் தர மாட்டேன் டா.. என்ன பண்ணுவ? ” இசை.
“தாராளம எனக்கு குடுக்காம தின்னு.. ஆனா நானே உன் கிட்ட இருந்து எடுத்துக்குவேன்.. ” சேது.
“நான் தான் மறைச்சு வச்சுருவேனே.. எப்பிடி எடுப்ப? ” இசை.
“உன் வாயில இருந்து நானே எடுத்துப்பேன் டி பொண்டாட்டி… ” என அவளின் இதழ் பார்த்து கண்ணடித்தான் சேது.
“செருப்பு பிஞ்சுரும் டா.. ” என குரல் கோவமாக இருந்தாலும் இசையின் கண்களும் கன்னங்களும் வேறு கதை கூறின.
“நா இங்க தா இதுக்கேன்.. ” என அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தான் கவின்.
“ஆங்… இதோ… உன் அத்தம்மா வீடு வந்துருச்சு… நீ உள்ள போ.. நான் உன் அம்மாக் கிட்ட ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றேன்… ” என்றவாறு கவினை கீழே இறக்கி விட்டான் சேது.
“உன்னைய என் அம்மாக் கித்த வித்தா என் அம்மா வ கதிச்சு வச்சுதுவ… வா ம்மா.. ” என கையோடு இசையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான் கவின்.
“ச்சே.. முறுக்கு போச்சே.. ” என பின்னந்தலையை அழுந்த கோதியவாறு நிலாவின் வீட்டின் உள்ளே வந்தான் சேது.
வீட்டின் உள்ளே நுழைந்த மூவரும் உள்ளே இருந்த நிலைமையைக் கண்டு சோகம் கொண்டனர். “என்னடி… சண்டை காட்சி முடிஞ்சுருச்சு போலயே… “என சோகமாக இசையின் காதில் முனுமுனுத்தான் சேது.
“ப்ச்… சண்டைய விடுடா.. இங்க ஒரு காமெடி காட்சி நடந்துட்டு இருக்கு.. அத பாரு டா.. ” என்றபடி அங்கு கீழே அமர்ந்து இருந்த அபியின் அருகில் அமர்ந்தாள் இசை.
சேதுவும் அவளருகில் அமர்ந்து கவினையும் தன் அருகில் அமர வைத்துக் கொண்டான். இசையின் கரம் தன்னாலயே கொண்டு வந்து இருந்த பையை பிரித்து அதிலுள்ள ஸ்நாக்ஸை எடுத்து அபியிடம் சிறிது அளித்து விட்டு மீதியை தான் எடுத்து கொறிக்க ஆரம்பித்தாள். சேதுவும் கவினும் பையினுள் கை விட்டு எடுத்து கொறித்துக் கொண்டே அங்கு நடந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.
வெற்றிலை பாக்கு இடித்த உரலுடன் விழி பிதுங்கி பயந்து சுவற்றில் பல்லி போல் ஒட்டி அமர்ந்து இருந்தார் அலமேலு. வள்ளியோ பயத்தில் தூணை உடும்பாக கட்டிக் கொண்டு அரண்டு விழித்துக் கொண்டு இருந்தாள். கதிர்வேலோ பயத்தில் மேசையின் அடியில் தஞ்சம் புகுந்து இருந்தார்.
இவர்களின் பயத்திற்கு காரணமானவளோ தனது ஷூவில் தெறித்து இருந்த இரத்தத் துளிகளை நிதானமாக துடைத்துக் கொண்டிருந்தாள். நாற்காலியில் அமர்ந்து ஒரு காலின் மீது மற்றொரு காலை மடித்து போட்டுக் கொண்டு நிறுத்தி நிதானமாக ஷூவில் பட்டிருந்த இரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தாள் நிலா. அவளின் காலிற்கு கீழே இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தான் அந்த ரௌடி .
அனைத்தையும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டே கவனித்தவள், ” ஸீன எக்ஸ்ப்ளைன் பண்ணுடா அபி… ” என அபியின் காதில் ரகசியமாக ஆர்வம் தாங்க முடியாமல் கேட்டாள் இசை.
“அதுவா… எல்லாரும் மோட்டுவளைய பாருங்க…. ” என மெல்லிய குரலில் மேலிருந்த வீட்டின் ஓட்டை கண்பித்தான் அபி.
அவனை தொடர்ந்து மேலே பார்த்த சேது, “அங்க என்ன டா தெரியுது? ” என அபியின் காதை கடித்தான்.
“ப்ச்… ப்ளாஷ் பேக் டா முட்டா அண்ணா.. ” என்றவாறு சற்று நேரத்திற்கு முன் நடந்தவைகளை கூற ஆரம்பித்தான் அபி.
சிறிது நேரத்திற்கு முன்,
“எந்திரிடா… ” என ஆணையிடும் குரலில் கூறினாள் நிலா.
அதைக் கேட்ட அலமேலு, “ஏய்… குட்டச் சிறுக்கி… வீட்டுக்கு வந்தவங்கள மரியாதையா வாங்க னு அழைச்சு பழகு.. ” என நிலாவைப் பார்த்து கத்தினார்.
அவர் பேசியதை சிறிதும் காதில் வாங்காமல் மீண்டும், “எந்திரிடா…” என ஆணையிட்டாள் நிலா.
“ஏய்… நிலா…. அப்பத்தா சொல்லுறத கேளுடி.. ” என நிலாவை கண்டித்தார் வள்ளி.
“வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்பிடி பேசக் கூடாது நிலா… ” கதிர்வேல்.
“திரும்ப திரும்ப சொல்றேன்… வந்து நடுவீட்ல உக்காந்துட்டு இருக்க… எந்திரிடா.. ” என எதையும் கண்டு கொள்ளாது அந்த ரௌடியைப் பார்த்து உறுமினாள் நிலா.
“ஏய்… வார்த்தை நீளுதுடி குட்டக் கழுதை.. திரும்ப திரும்ப வந்து ஏன் சொல்றேன்னு கொஞ்சம் யோசிச்சு பேசுடி.. ஒழுங்கா உன் புருஷன இந்த கேஸ் ல இன்வால்வ் ஆக வேண்டாம் னு சொல்லு. இல்ல தாலி அறுத்து மூலையில தான் கிடப்ப நீயி… ” ரௌடி.
“ஐயோ நிலா.. இவரு என்ன பேசுறாரு? உடனே உன் புருஷனுக்கு ஃபோன் பண்ணி இவரு சொல்ற மாதிரி செய்ய சொல்லு.. ” வள்ளி.
“மகளுக்கு ஏத்த மாப்ளய தான் புடிச்சு இருக்க கதிரு.. இப்ப இந்த குட்டச்சியால எவன் எவனோ வீட்டுக்குள்ள நுழைஞ்சு நம்மள மிரட்டிட்டு இருக்கான். ஏன்டி… அவன் சொல்றத செய்யாம தாலி அறுத்துட்டா வந்து நிக்கப் போற.. அப்பிடி ஆனுச்சுனா இந்த வீட்டுக்குள்ள உனக்கு இடமில்ல டி… ” எனக் கத்தினார் அலமேலு.
அதற்கு மேல் நிலாவின் பொறுமை காற்றில் பறக்க… அருகில் அலமேலு எண்ணெய் தேய்க்க எடுத்து வைத்து இருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ரௌடியின் தலையில் இறக்கி இருந்தாள் நிலா.
அதில் மண்டை உடைந்து இரத்தம் ஒழுகும் நிலையில் கோபத்துடன் நிலாவினை தாக்க அவன் வர… வலக்கையில் கண்ணாடி பாட்டிலின் மீதியை இறுக்கப் பற்றியவாறு இடக்கையால் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தாள் நிலா.
அன்று பேட் பிடித்து மைதானத்தில் அடிக்காத அடியை வெறுங்கையால் அவனை அறைந்தாள் நிலா. அவள் சாதாரணமாக அடித்தாலே பந்து காணாமல் பறந்து விடும். இன்று அலமேலுவும் வள்ளியும் இரக்கம் இல்லாமல் பேசிய பேச்சுக்களிலும் அந்த ரௌடியின் அநாகரீக வார்த்தையிலும் நெஞ்சில் வன்மம் கொண்டு அவனை அறைந்திருந்தாள் நிலா.
தலையில் இரத்தம் ஒழுகிய நிலையில் நிலாவிடம் வாங்கிய அறையில் அதற்கு மேல் நிற்க முடியாமல் மயங்கி பொத்தென்று நடுவீட்டில் விழுந்தான் அவன். நிலாவின் ஒரு அறையிலேயே ஒரு பெரிய ஆண்மகன் கண் எதிரே மயங்கி விழுந்ததைக் கண்டு பயத்தில் அலமேலு சுவரோடு ஒட்டிக் கொள்ள… வள்ளி தூணில் தஞ்சம் அடைந்து கொண்டார்.
நிலாவோ எவ்வித உணர்வும் காட்டாது அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து தன் மீது தெறித்த ரௌடியின் இரத்தத் துளிகளை துடைக்க ஆரம்பித்தாள். அப்பொழுது தான் சேது, இசை மற்றும் கவின் மூவரும் வந்து சேர்ந்தனர்.
நடந்ததை கூறி முடித்த அபி, “அக்கா அடிச்ச அடியில ஓயாம உலட்டிக்கும் இருக்குற என் அப்பத்தா வாயி ஒட்டாம ஆஆ னு இருக்குறத பாரு… அந்த அளவுக்கு இருந்துச்சு அக்காவோட அடி… ” என இசையின் காதில் கூறினான்.
“அன்னக்கி ஒரு நாள் என் கிட்ட பேசிட்டு இருக்குறப்ப வந்து நிலாவ மிரட்டுனியே… அப்ப கூட உன்னைய நான் அடிச்சேனே… அன்னக்கி மட்டும் நான் அடிக்காம இருந்து இருந்தா நிலா உன்னைய அடிச்சு இருப்பா. நீயும் இவன மாதிரி விழுந்து இருப்ப. இன்னக்கி பொளந்த உன் அப்பத்தா வாயி அன்னக்கி பர்மெனன்ட்டா பொளந்து இருக்கும்… ” இசை.
“அய்யோ… அப்ப அன்னக்கி நீ என்னைய காப்பாத்தி இருக்க இசை.. ” என ஆச்சரியத்தில் விழி விரித்தான் அபி.
அவர்கள் பேசுவது எதையும் கண்டு கொள்ளாது, “இன்னும் யாராவது என் புருஷனப் பத்தி பேசனுமா?” என மிடுக்காக எழுந்து நின்றாள் நிலா.
அதைக் கேட்ட அலமேலுவின் தலையும் வள்ளியின் தலையும் தன்னாலயே இல்லை என மறுப்பாக ஆடியது.
“குட்… அபி.. தண்ணி… ” நிலா.
நிலா கூறிய அடுத்த நொடி தண்ணீருடன் அவள் முன் நின்றான் அபி. அதை வாங்கி மயங்கி கிடந்த ரௌடியின் மீது தெளித்து அவனை தெளிவாக்கினாள் நிலா.
“டேய்… யாருடா உன்னைய அனுப்புனது? ” என அவனின் சட்டையை பிடித்து உலுக்கினாள் நிலா.
“அது… அது… ” என அந்த ரௌடி கூற வருகையில் கடகடவென பூட்ஸ் காலுடன் நாலைந்து போலீஸ்காரர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் கம்பீரமாக இளஞ்சேரனும் நடந்து வர… அவனைப் பார்த்த சேது, “போலீஸ்க்காரன் ங்கிறத கரக்ட்டா காமிக்கிறான் டி உன் அண்ண.. சரியா சம்பவம் லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் வர்றான் பாரு.. ” என இசையிடம் கூறினான் சேது.
ஆனால் இசையோ போலீஸ் உடையில் மிடுக்காக நடந்து வரும் இளஞ்சேரனையே பச்சையாக சைட் அடித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்த சேது, “அடியேய்… அவன் உன் அண்ண டி.. ” என பல்லைக் கடித்தான்.
“இருந்துட்டு போகட்டும்… போலீஸ் ட்ரஸ் ல என் அண்ண எவ்ளோ அழகா இருக்கான் ல.. ” என வழிந்தாள் இசை.
“த்தூ…” என தலையில் அடித்துக் கொண்டு அங்கு நடப்பதை கவனித்தான் சேது.
“இவன் ஒரு பக்கா கிரிமினல். பல கேஸ் ல இவன் ஒரு முக்கிய குற்றவாளி… பல நாளா எங்க கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுனவன் இன்னக்கி மாட்டிக்கிட்டான்.. அரெஸ்ட் ஹிம்…” என அந்த ரௌடியை கைது செய்து அழைத்துச் சென்றான் இளஞ்சேரன்.
அந்த ரௌடியை போலீஸ் வண்டியில் ஏற்ற சொல்லிவிட்டு திரும்ப வீட்டிற்குள் கோவத்துடன் நுழைந்தான் இளஞ்சேரன். கோவமாக நிலாவை நெருங்கியவன் அவளது இடையை கடுமையாக இழுத்து தன்னுடன் நெருக்கி கொண்டவன் அவளது தாடையைப் பிடித்து வன்மையாக அழுத்திக் கொண்டே, “இன்னொரு தடவ என் கேஸ்க்குள்ள நீ வரப் பாத்த…. பொண்டாட்டினு கூட பாக்க மாட்டேன்… உயிரோட பொதச்சுருவேன்…” என கடுங்கோவத்தில் நிலாவை மிரட்டினான் இளஞ்சேரன்.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.