அத்தியாயம் – 2

Udhaya Novel's | 19 Mar 2026 | Share

Kk -2

ஆதிரா அவனது செய்கையில் மிரண்டு  போய் அவனை பார்க்க அவன் கரம் அவள் இடையில் பிடித்திருப்பது போல் இருக்க இருவரும் முத்தமிடுவதை வெளியே ஜன்னலுக்கு பக்கத்தில் நின்று பார்த்தான் மைக்கேல்.

அவர்கள் நிழல் கர்ட்னில் பட அதை தான் கண்காணித்தவன் “பாஸ் தேவையில்லாம செல்வாவை சந்தேகப்பட்டுட்டாரு….” தனக்குள் சொல்லிக்கொண்டவன் உடனே முஸ்தபாவிடம் போய் சொல்ல,

அதை கேட்டு சிரித்தவன் “பொண்ணு ரொம்ப அழகா இருந்தால்ல அதான் பையன் விழுந்துட்டான் போல….”என்றான் முஸ்தபா.

தன்னை நெருங்கி நின்றிருந்தவனை ஆதிரா விழியிமைக்காமல் பார்க்க ஆனால் அவனோ வேறு பக்கம் பார்த்தான். எல்லாமே ஆட்டிங் தான் முத்தமிடுவது போல் சென்றவன் அவளுக்கு முத்தம் கொடுக்கவில்லை.

அவளை விட்டு விலகியவன் கர்ட்டன்ஸ் எடுத்து விட்டு ஜன்னலுக்கு வெளியில் பார்க்க அங்கு யாருமில்லை…

திரும்பி அவள் பக்கம் பார்த்தவன் ” நாளைக்கு மார்னிங் வரைக்கும் நாம ரெண்டு பேரும் இந்த ரூம்ல தான் இருக்கனும்…. என்ன ஓகேவா.. “ என கேட்க,

“ உனக்கு ஓகேவா இல்லைனாலும் நீ இங்கதான் இருக்கனும்.. நீ பெட்ல படுத்துக்கோ…. ” என அவனே கேள்வி கேட்டு அவனே பதில் சொன்னவன் அந்த அறையில் போட்டிருந்த நீண்ட சேரில் படுத்துகொண்டு போன் பார்க்க தொடங்கினான். அதன் பின் அவள் பக்கம் திரும்பி பார்க்கவில்லை.

ஆதிரா தூக்கம் வராமல் புரண்டு படுத்தவள் அவனை பார்த்தபடி படுத்தாள். ஏதோ நியாபகத்தில் அவள் அவனையே பார்க்க போன் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி அவளை பார்க்காமலே,  “எதுக்கு இப்போ என்னையே பார்த்துட்டு இருக்க?….”என கேட்க, 

“இவனுக்கு உடம்பு புல்லா கண்ணு தான்….” என முனுமுனுத்து கொண்டவள் மெல்ல எழுந்து நின்றாள்.

“எதுக்கு என்னை காப்பாத்தனும்ன்னு நினைச்ச?…” என்று கேட்க செல்வா அவள் பக்கம் திரும்பி பார்க்க அந்த பார்வை அவளுள் ஏதோ செய்தது..

ஆதிரா சொன்னதை கேட்ட செல்வா,  ” உனக்கு இங்க இருந்து தப்பிச்சு போகணுமா… இல்ல நான் உன்னை ஏன் காப்பாத்துனேன்னு காரணம் தெரியணுமா?….”என்று கேட்க அவனை பார்த்து முழித்தவள்,

“ இங்க இருந்து தப்பிச்சா போதும்….” என்றாள் மெல்லிய குரலில்.

“அப்பறம் என்ன போய் தூங்கு… விடியற வரைக்கும் எதுவும் பேசகூடாது….” என்ற செல்வா மறுபடியும் போன் பார்க்க தொடங்கினான்.

அவன் சொன்னதை கேட்ட ஆதிரா, “ சரியான திமிரு பிடிச்சவனா இருக்கானே.. “ என மனதில் நினைத்த ஆதிரா மறுபடியும் பெட்டில் போய் உட்கார தூக்கம் வரவில்லை. யாராவது திடீரென வந்து விடுவார்களோ என பயமாகவும் இருக்க ஆனால் ஏனோ அந்த பயம் அவன் மேல் இல்லை. அப்படியே முழித்தபடி படுத்து இருந்தவள் எப்பொழுது தூக்கம் வந்து தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

செல்வா அவள் பக்கம் திரும்பி பார்க்கும் பொழுது அவள் கட்டில் காலில் தலைவைத்து சாய்ந்து படுத்திருக்க எழுந்தவன் அவள் அருகில் சென்றான். அழுதழுது அவள் கண்ணுக்கு கீழே கண்ணீர் தடம் அழுத்தமாய் பதிந்து இருந்தது… தூக்கம் கலையாமல் அவளை பெட்டில் படுக்க வைத்தவன் குளிராக இருக்கவும் போர்வையை போர்த்தி விட்டு சில நொடிகள் அவளையே பார்த்தான்… பின் மீண்டும் சென்று நீண்ட சேரில் படுத்துக்கொண்டான்..

தூக்கம் வரவில்லை வெகுநேரம் அந்த அறையில் ஓடிக்கொண்டிருந்த பேனையே பார்த்தவன் விழிகள் கொஞ்ச நேரத்தில் அப்படியே மூடிக்கொண்டது..

காலை சூரியன் மெல்ல மேகத்தின் போர்வைக்குள் இருந்து எட்டிபார்த்த அழகான காலை நேரம்…

மெதுவாக தூக்கம் கலைந்து கண் விழித்தாள் ஆதிரா … ஒரு நொடி தான் எங்கிருக்கிறோம் என்று யோசித்து குழம்பியவளுக்கு நடந்தது எல்லாம் நியாபகம் வரவும் வேகமாய் எழுந்து அமர்ந்தவள் செல்வா இருந்த பக்கம் பார்க்க அவனோ விழிமூடி படுத்திருந்தான்..

” வெளில யாரவது இருக்காங்களான்னு தெரியலயே… இங்கிருந்து தப்பிச்சு போய்டலாமா….” என தனக்குள் சொல்லிக்கொண்டவள் சத்தம் போடாமல் எழுந்து கதவு பக்கத்தில் சென்று திறக்கும் நேரம் “எங்க போற…”என்ற செல்வாவின் குரல் அவளை தடுத்தது..

திடீரென கேட்ட கம்பீரக்குரலில் ஆதிரா அதிர்ந்து நடுங்கிவிட்டாள்..

செல்வா எழுந்து அமர்ந்தவன் “எங்க போற?….இங்கிருந்து நீ தப்பிச்சு போகணும்ன்னா அது என்கூட தான் போக முடியும்…. நீயா எதாவது செஞ்சு மாட்டிக்கிட்டா அதுக்கு அப்புறம் என்னால கூட உன்னை காப்பாத்த முடியாது.. ” என சொல்ல அதை கேட்டு அதிர்ந்து போனாள் ஆதிரா.

“ இல்ல இல்ல வேண்டாம் ப்ளீஸ்.. என்னை எப்படியாவது இங்க இருந்து காப்பாத்தி வெளியே கூட்டிட்டு போயிருங்க ப்ளீஸ்.. இனி நீங்க என்ன சொல்றிங்களோ நான் அதைத்தான் செய்வேன்.. “ என ஆதிரா சொல்ல 

செல்வா அவளை நெருங்க ஆதிரா விழிவிரித்து அவனை பார்த்தாள்.

” இப்படியே போய் அவங்க முன்னாடி போய் எதுவும் நடக்கலன்னு காட்டி கொடுத்திடாத…. நான் என்னா சொல்றேன்னு உனக்கு புரியுதா.. ” என்று செல்வா சொல்ல அவன் என்ன சொல்கிறான் என புரிந்து கொண்ட ஆதிரா நெற்றியில் இருந்த பொட்டை எடுத்தவள் முடியையும் கலைத்துவிட்டாள்.

அப்பொழுது கதவு தட்டப்படவும் செல்வா தன்னுடைய ஷர்ட்டை வேகமாய் கழட்டியவன், “ சீக்கிரம் பெட்ல போய் படு….”என்று சொல்ல ஆதிரா வேகமாய் சென்று பெட்டில் படுத்துகொண்டவள் போர்வையால் தன்னை சுற்றிகொண்டாள்.

செல்வா அவளை ஒரு பார்வை பார்த்தவன் பின் சென்று கதவை திறக்க அங்கு மைக்கேல் நின்றிருந்தான்.. அவன் பார்வை கதவை திறந்ததும் உள்ளே தான் ஆராய்வது போல் பார்த்தது..

பெட்டில் போர்வைக்குள் சுருண்டிருந்தவளை பார்த்ததும் இதழ் சுழித்தவன் செல்வா சொடக்கிட்டு “இங்க என்னை பாரு…” என்றதும் அவன் பக்கம் பார்த்தான்..

“என்ன?…”

“பாஸ் உன்னை ஹைதராபாத் கிளம்ப சொன்னாரு…”

“இப்போ அவர் எங்க இருக்கார்?…”

“ஒரு சின்ன வேலையா வெளில போயிருக்காரு..

“நான் இந்த பொண்ணையும் கூட்டிட்டு போக போறேன்….” என செல்வா சொல்ல மைக்கேல் ஒருமாதிரி அவனை பார்த்து சிரித்தவன்,

“அவ்வளவு பிடிச்சிருச்சா….”என்றான்.

“ஏய்…”செல்வா ஒரு பார்வை பார்க்க அவ்வளவு தான் பயத்தில் மிடரு விழுங்கியவன்,

“ம்ம் நீ கூட்டிட்டு போ… உன்னோட இஷ்டம்….” என்று சொல்லிவிட்டு அவன் வேகமாய் அங்கிருந்து செல்ல கதவை லாக் செய்தான் செல்வா.

அவன் சென்றதும் ஆதிரா பெட்டில் இருந்து கீழே இறங்க அவள் பக்கம் திரும்பிய செல்வா, ” சீக்கிரம் ரெடியாகு.. நாம உடனே இங்க இருந்து கிளம்பனும்.. “என சொல்ல வேகமாய் தலை ஆட்டினாள் ஆதிரா.

இருவரும் ரெடியாகி அறையை விட்டு வெளியில் வரும் பொழுது அங்கிருந்த ரவுடிகளின் பார்வை அவளை கழுகு போல் கொத்தி தின்ன அதை உணர்ந்த ஆதிரா செல்வாவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொள்ள செல்வா அவளுடன் இருக்கும் பொழுது யாருக்கும் அவளை நெருங்கும் தைரியம் வரவில்லை.

கார் சாலையில் சீரான வேகத்தில் செல்ல ஆதிரா அடிக்கடி அவன் பக்கம் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள். அவளால் இன்னும் அங்கிருந்து தம்பித்ததை நம்ப முடியவில்லை.

அவள் பக்கம் திரும்பியவன் “உன்னை எங்க விடணும்?….”என்று கேட்க

“என்னை ரயில்வே ஸ்டேஷன்ல விட்ருங்க….”

” உன்னை எங்க அவங்க கடத்துனாங்க….”அவன் கேட்கவும் ” பஜார்ல….”என்றாள் ஆதிரா.

” உன்னை பத்தின எதாவது டீட்டையில்ஸ் தெரியுமா?…”

“இல்ல….”

அவள் சொன்னது போல் ஸ்டேஷனில் இறக்கிவிட்டவன் “இதை வச்சுக்கோ…..”என்று கொஞ்சம் பணம் கொடுக்க “இது எதுக்கு?…”என்றாள்.

“ பரவாயில்ல வச்சுக்கோ.. சரி நீ எந்த ஊரு.. “ என அவன் கேட்க அவள் தயக்கத்துடன் அவனை பார்த்தாள்.

“ சரி உன்னை பத்தின எந்த டீடெயில்ஸும் எனக்கு தெரிய கூடாது அதான… சரி ஓகே இனியாவது கேர்புலா இரு….”என செல்வா சொல்ல,

அதை கேட்டு தலையாட்டியவள் “ரொம்ப தேங்க்ஸ்ங்க.. இந்த உதவிய நான் எப்பவும் மறக்கமாட்டேன்.. ” என கண்கள் கலங்க சொன்னாள் ஆதிரா. 

சிறு தலையசைப்புடன் அவள் சொன்ன நன்றியை ஏற்றுக்கொண்டவன் யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, “ம்ம் இறங்கு…”என்று சொல்ல ஆதிரா காரில் இருந்து இறங்கிக்கொண்டாள். 

“நீ போ…” என்பது போல் அவன் கைகாட்ட திரும்பி திரும்பி அவனை பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்று கூட்டத்தோடு கலந்தவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்…

செல்வா அவள் சென்ற திசையிலேயே பார்த்தவன் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு குட்டி செயின் எடுத்தான்…பார்க்க அழகாக இருந்தது..

“ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் உன்னை பார்த்திருக்கேன்…. ஆனா உன்னை இப்படி பார்ப்பேன்னு நான் நினைக்கல ஆரா.. இப்படி ஒரு சிட்சிவேஷன்ல என்னாலயும் உன்கிட்ட நான் யாருன்னு  சொல்ல முடியல.. ஆனா உன்னை காப்பாத்த முடிஞ்சுதுல எனக்கு அந்த சந்தோசம் போதும்…. ” என தனக்குள் சொல்லி கொண்டவன் அந்த செயினை பத்திரப்படுத்தி கொண்டு அங்கிருந்து சென்றான்.

எதிர்பாராத சூழலில் சந்தித்த இவர்கள் இனி மீண்டும் சந்திப்பார்களா..  🤔….

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.