அத்தியாயம் 2

Zaara ❤️ | 20 Nov 2025 | Share

மச்சான் ஏன் டா ஆச்சு என்று கேட்ட அதற்க்கு யாஷ் 🥺என்ன லா முடிலடா என்று சொல்லி அழுக அரமித்து விட்டான் ஆரவ்க்கு ஒன்னும் புரியவில்லை…

மச்சான் என்ன ஆச்சு ஏன் இப்படி அழுகுற ப்ளீஸ் டா என்ன னு சொல்லு டா என்று கேக்க அதற்கு யாஷ் 🥺🥺அம்மு பாப்பா நியாபகம் வந்துருச்சி டா 🥺🥺என்று சொல்லி அழுதான்….

அப்போதுதான் ஆரவ்க்கு நியாபகம் வந்தது அம்மு பாப்பா பர்த்டே என்று  மச்சான் ப்ளீஸ் டா அழாத டா அம்மு இருந்த நீ அழுகுற பார்த்து பீல் பண்ணு வாடா ப்ளீஸ் பீல் பண்ணாத டா 🥺என்று ஆரவ் சொல்லி கொண்டு இருந்தான்..

 யாஷிவந்த் அழுகை சத்தம் கேட்டு மாறன் ஆத்விக் ஹர்ஷித் என அனைவரும் ஹைல்க்கு வந்து விட்டார்கள்…

ஆரவ்விடம் ஆத்விக் என்ன ஆச்சு என்று கேக்க ஆரவ் அம்மு பர்த்டே என்று சொல்வும் தான் அனைவருக்கும் நியாபகம் வந்தது…. 

ஆத்விக் விட டா மச்சான் இப்படி பீல் பண்ணாத டா என்று சொல்ல…

யாஷ்க்கு திடிர்னு எதோ நியாபகம் வந்து சுத்தி முத்தி பாத்தான்..

அதை பார்த்தா மாறன் என்ன டா பாக்குற இன்று கேக்க… அதற்கு யாஷ் அவன் எங்கடா இன்று கேட்டான்…

 இப்போது தன் அனைவரும் அவன் நியாபகம் வந்தது..

யாஷ் உடனே அவனுக்கு கால் பண்ணு என்று ஹர்ஷித்திடன் சொன்னான்..ஹர்ஷ் உடனடியாக தன் அண்ணாவுக்கு அழைத்தான். ஆனால், போன் சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. அதைக் கேட்டதும் எல்லோரும் அவனை நினைத்து வருத்தப்பட ஆரம்பித்தனர்.

“இவன் ஏன்டா இப்படி இருக்கான்? இத்தனை வருஷமா இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கானே?” என்று அவனை நினைத்து அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது.

(இவர்கள் அனைவரும் யாரை நினைத்து இவ்வளவு வேதனைப்படுகிறார்கள்? அவன் யார்? வாருங்கள், நாமும் சென்று பார்த்து வருவோம்.)

அங்கு ஒரு பெரிய அரண்மனை 🕌 போன்ற மாளிகையில், ஓர் அறை மட்டும் இருள் சூழ்ந்து கிடந்தது.

அந்த இருட்டிற்குள் ஒருவன், சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டிருந்தது. அதைக் துடைக்கக்கூட நினைக்காமல், அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆம், நீங்கள் நினைப்பது சரிதான்! இவன்தான் நம் கதையின் நாயகன் – சித்தார்த் அபிமன்யு. ஆறடிக்குச் சற்று அதிகமான உயரம், தினமும் உடற்பயிற்சி செய்வதால் செதுக்கப்பட்ட எய்ட் பேக் உடல்வாகு. நல்ல சந்தன நிறம், அடர்த்தியான புருவம். அவன் கண்கள், அந்தக் கடலைப் போல நீல நிறத்தில் அனைவரையும் சுண்டி இழுக்கும். பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.

அவன் ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அவனைச் சினிமா ஹீரோவைப் போலக் காட்டியது. அவன் அழகைக் கண்டு பெண்கள் மட்டுமல்ல, ஆண்களே பொறாமைப்படும் பேரழகு கொண்டவன் நம் நாயகன்! ♥️

சித்தார்த் அந்தப் புகைப்படத்தைப் பார்த்து, “ஏன் அம்மு? என்னை விட்டுப் போன நீ, நான் எவ்வளவு கஷ்டப்படுறேன்னு உனக்குத் தெரியுமா? 🥺🥺🥺 நீ போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல,” என்று அந்தப் படத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தான். 

இங்கே யாஷ், “அவன் எங்க இருப்பான் என்று எனக்குத் தெரியும். அவன் PA-க்கு ஃபோன் பண்ணி, அவன் கிட்ட பேசச் சொல்லுங்கடா,” என்று ஹர்ஷித்திடம் சொன்னான்.

ஹர்ஷித், சித்தார்த்தின் PA ஆன கவினுக்கு அழைத்தான். அங்கே கவினுக்குப் போன் வரவும், திரையில் “ஹர்ஷித் பாஸ்” என்று இருக்கவே, உடனே எடுத்து, “சொல்லுங்க பாஸ்,” என்றான்.

ஹர்ஷித், “அண்ணா கிட்ட ஃபோன் கொடு,” என்று சொன்னான்.

கவின், “பாஸ், பெரிய பாஸ் (சித்தார்த்) காலையில் ரூமுக்குள்ளே போனவர். இன்னும் டோர் ஓபன் பண்ணவே இல்லை பாஸ். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. அதனால வெளியிலேயே உட்கார்ந்து இருக்கேன் பாஸ்,” என்று கவின் சொன்னான்.

ஹர்ஷித், “சரி. நாங்க வர்றோம். அதுவரை எங்கேயும் போகாதே,” என்று சொல்லிவிட்டு, போனை வைத்துவிட்டான்.

ஹர்ஷித் யாஷிடம், “அண்ணா சித்தார்த் (சித்) அண்ணா, அவர் ரூம்க்குள்ளே காலையில் போனாராம். இன்னும் வெளியே வரலையாம். இப்போ என்ன பண்ணுறது?” என்று கேட்டான்.

யாஷ் எதுவும் பேசாமல் சித்துவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

ஆத்விக், “ஹர்ஷித், அவன் எப்போதுமே இப்படித்தான். பாப்பாவோட பிறந்தநாள் வந்தாலே அந்த ரூம்க்குள்ளே போயிட்டு, அடுத்த நாள்தான் வருவான்னு நமக்குத் தெரியுமில்ல? விடு, வருத்தப்படாதே,” என்றான்.

ஹர்ஷித், “ஆத்விக் அண்ணா, சித் அண்ணாவை இப்படிப் பார்க்க முடியலை. 🥺🥺🥺 ரொம்பக் கஷ்டமா இருக்கு,” என்று கண்கள் கலங்கிச் சொன்னான்.

அனைவருக்கும் சித்தார்த்தை நினைத்துக் கஷ்டமாகத்தான் இருந்தது

யாஷ், “நான் போய் அவனை கூட்டிட்டு வர்றேன்டா. நீங்க இங்கே இருங்க,” என்று சொல்லிவிட்டு, யாஷ் வேகமாக காரை எடுத்து சித்தார்த் இருக்கும் வீட்டுக்குச் சென்றான்.

மாறன் அனைவரையும் பார்த்து, “யாஷ், சித்துவைக் கூட்டிட்டு வருவான். நீங்க தூங்கப் போங்க,” என்று சொன்னான்.

ஆத்விக், “இல்லை மாறா, சித்து வரவும், அவனைப் பார்த்துட்டே போறோம்,” என்று சொல்லிவிட்டு, அனைவரும் சோஃபாவில் உட்கார்ந்து விட்டார்கள்.

யாஷின் கார் 🚗 நேராக அரண்மனை 🏯 போன்ற வீட்டின் முன்பு வந்து நின்றது. காரை விட்டு இறங்கி வேகமாக வீட்டிற்குள் போனான். அங்கே கவின் சோஃபாவில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான்.

யாஷ் கவின் அருகில் சென்று அவன் தோளைத் தொட்டு எழுப்பினான். கவின் முழித்துப் பார்த்து, “யாஷ் அண்ணா, வாங்க,” என்று சொன்னான்.

“அவன் எங்கடா?” என்று கேட்டான் யாஷ். கவின் மேல் தளத்தில் உள்ள அறையைக் கை காட்டினான்.

உடனே யாஷ் படிக்கட்டுகளில் ஏறி, அவன் அறை வாசலில் போய் நின்றான்.

யாஷ், “சித், ஓபன் தி டோர்!” என்று சொன்னான். ஆனால், அறையிலிருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை.

யாஷ், “சித்து, நீ மட்டும் இப்போ டோர் ஓபன் பண்ணலைன்னா, நான் உடைச்சிட்டு வந்துருவேன், பார்த்துக்கோ. ஒழுங்கா கதவைத் திற!”

அப்போதும் அறை திறக்கப்படவில்லை. யாஷுக்கு ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்ற உணர்வு. உடனே, “கவின்!” என்று அந்த வீடே அதிரும்படி கத்தினான்.

கீழே இருந்த கவின் வேகமாக யாஷ் கிட்ட வந்து, “என்ன ஆச்சு அண்ணா?” என்று கேட்டான். யாஷ், “பிரேக் தி டோர்!” என்று சொன்னான்.

கவின், “அண்ணா, அது வந்து… சித்தார்த் சார் ஏதாவது சொல்லுவாங்களே?” என்று தயங்கினான்.

யாஷ், “சித்து எதுவும் சொல்ல மாட்டான். சொன்னா நான் பார்த்துக்கிறேன், சரியா? இப்போ வந்து எனக்கு உதவி பண்ணு.”

கவினும் யாஷும் சேர்ந்து கதவை உடைத்துவிட்டு, உள்ளே போய் சித்தார்த்தைப் பார்த்தார்கள்.

அவன் அந்த நிலையில் பார்த்த யாஷ் அதிர்ச்சி அடைந்தான். “சித்து!” என்று கத்திக்கொண்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்து, “சித்… சித்… ஆதி கண்ணா… எழுந்திருடா! ஏன்டா இப்படிப் பண்ண? சித்!” என்று சொல்லி அழுதான்.

கவின், அதைப் பார்த்து, “யாஷ் அண்ணா, சித்தார்த் சாரை உடனே ஹாஸ்பிடல் 🏨 கூட்டிட்டு போகணும். தூக்குங்க,” என்று சொன்னான்.

யாஷ் உடனே சுதாரித்து சித்தார்த்தைத் தூக்கிக்கொண்டு வேகமாக இறங்கினான். கவின் காரை ஸ்டார்ட் செய்து வைத்து, பின் கார் கதவைத் திறந்து வைத்தான்.

யாஷ் அவனை கார் சீட்டில் படுக்க வைத்துவிட்டு, அவன் தலையைத் தன் மடிமீது வைத்து உட்கார்ந்து கொண்டான்.

கவின் கார்ரே ஹாஸ்பிடலை 🏨 நோக்கிச் செலுத்தினான்.

ஹாஸ்பிடல் வருவதற்கு முன்னாடியே, கவின் ஹாஸ்பிடல் டீனிடம் போன் செய்து அனைத்தையும் தயாராக வைக்கச் சொல்லிவிட்டான். ஹாஸ்பிடல் வந்ததும், யாஷ் சித்துவைத் தூக்கிக்கொண்டு, ICU-வில் அனுமதித்தான்.

டாக்டர் யாஷிடம், “வெளியே கொஞ்ச நேரம் இருங்க சார்,” என்று வெளியே அனுப்பிவிட்டார்.

யாஷ் வெளியே வந்து அங்குள்ள சேரில் உட்கார்ந்துவிட்டான்.

கவின் அவன் போனை எடுத்து ஆரவ்வுக்கு அழைத்தான்.

அங்கே அனைவரும் சோஃபாவில் உட்கார்ந்த சிறிது நேரத்தில் தூங்கி விட்டார்கள்.

ஆரவ்வுக்குப் போன் அடிக்கவும், அந்தச் சத்தம் கேட்டு அனைவரும் எழுந்து விட்டார்கள். ஆத்விக் மணியைப் பார்த்தான். அது 1:30 என்று காட்டியது. ஆரவ்வைப் பார்த்து, “இந்த நேரத்தில யார் டா?” என்று கேட்டான்.

ஆரவ், “கவின்தான்டா போன் பண்ணியிருக்கான்,” என்றான்.

ஆத்விக், “எடுத்து என்னனு கேளுடா,” என்றான்.

ஆரவ் போனை எடுத்து, “ஹலோ” என்று சொல்ல, கவின், “ஆரவ் அண்ணா!” என்று ஆரம்பித்து, அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு, “எல்லாரும் சீக்கிரம் வாங்க அண்ணா,” என்று சொன்னான்.

இதை எல்லாம் கேட்டு, ஆரவ் போனை அப்படியே கீழே போட்டுவிட்டான்.

ஆத்விக் பதறி, “டேய்! என்ன ஆச்சு? கவின் என்ன சொன்னான்? சொல்லுடா!”

ஆரவ், கவின் சொன்ன அனைத்தையும் எல்லாரிடமும் சொன்னான். அதைக் கேட்ட அனைவருக்கும் சித்தார்த் மேல் பயங்கர கோபம் வந்தது. கோபம் வந்தாலும், அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது.

மாறன் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்குச் சென்றான்.

ஹாஸ்பிடல் சேரில் அமர்ந்திருந்த யாஷ், சித்தார்த் அறையில் இருந்த நிலையை நினைத்துப் பார்த்தான். (வாருங்கள், நாமும் என்ன நடந்தது என்று பார்த்து வருவோம்.)

யாஷும், கவினும் சித்துவின் அறை கதவை உடைத்து உள்ளே போனார்கள். அங்கே சித்தார்த் பெட்டுக்குக் கீழே அமர்ந்திருந்தான். அவன் கை முழுவதும் ரத்தம். அவன் மயக்க நிலையில் இருந்தான்.

அவன் ரத்தத்தால், “அம்மு அம்மு” என்று எழுதி வைத்திருந்தான்.

யாஷ் சித்துவின் தலையை அவன் மடியில் வைத்து, “சித்து எழுந்திடுடா,” என்று சொல்லி அழுதான். (அதற்குப் பிறகுதான் நமக்கு என்ன நடந்தது என்று தெரியுமே.)

யாஷ் உட்கார்ந்து இதை அனைத்தையும் நினைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அப்போது மாறன், ஆரவ், ஆத்விக், ஹர்ஷித் அனைவரும் யாஷ் பக்கத்தில் வந்து, “சித்து எப்படி இருக்கான்டா?” என்று கேட்டார்கள்.

யாஷ், “டாக்டர் இன்னும் வரலடா. இனிமேதான் சொல்லுவாங்க,” என்றான்.

ஹர்ஷித், “அண்ணா! வேணும்னா அண்ணாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா, நான் ஏதாவது பண்ணிப்பேன்,” என்று சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பலமாக ஓர் அடி விழுந்தது. அதில் தடுமாறிக் கீழே விழுந்தான் ஹர்ஷித். 🥺

அவனை அடித்தது வேறு யாரும் இல்லை, நம் ஆரவ்தான். 😡😡

ஆரவ், “இன்னொரு தடவை இப்படி உன் வாயில் அந்த வார்த்தை வந்துச்சுன்னா, உன்னை நானே கொன்னுருவேன்டா,” என்று கோவமாகக் கத்தினான். 😡😡

ஆத்விக், “ஆரவ்! ஏன்டா இப்போ அவனை அடிச்ச? அவனே பாவம். சித்து இப்படிப் பண்ணிட்டான்னு ஃபீல்ல எப்படி பேசிட்டான். அதுக்கு அவனை அடிப்பியாடா?”

ஆரவ், “அவன் எப்படிப் பேசுறான்னு பார்த்தியாடா?” என்று கோவமாகக் கத்தினான்.

மாறன், “ஆரவ்! கொஞ்சம் அமைதியா இருடா, ப்ளீஸ்,” என்று சொன்னான்.

ஆரவ் அமைதியாக யாஷ் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். அந்த நேரம் சரியாக ICU-வின் டோர் ஓபன் பண்ணிட்டு டாக்டர் வந்தார்.

யாஷ் டாக்டரைப் பார்த்து, “டாக்டர்! இப்போ சித்து எப்படி இருக்கான்?”

டாக்டர், “இப்போ ஓகேதான். நரம்புகளை வெட்டி இருக்கிறதனாலதான் ரத்தம் போய் மயக்கம் ஆகிட்டாரு. இப்போ ஓகேதான். இன்னும் இரண்டு மணி நேரத்தில் கண்ணு முழிச்சிருவாரு. அப்புறம் போய் பாருங்க,” என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்றுவிட்டார்.

(சரிங்க, சித்து மயக்கத்திலே இருக்கட்டும். நாம் மீதி உள்ள எல்லாரைப் பற்றியும் பார்த்துட்டு வந்துரலாம்.)

ஹர்ஷித் யார் என்று உங்களுக்குத் தெரியும்ல? அவன்தான் நம் ஹீரோவின் தம்பி.

ஆரவ், ஆத்விக், மாறன், யாஷ், இவர்கள்தான் நம் ஹீரோவின் நண்பர்கள். அண்ட் இவர்களும் ஹீரோக்கள்தான்! ♥️ இவங்கள பத்தி நம்ம நாளைக்கு தெரிஞ்சுக்கலாம்.


    No comments yet.