அத்தியாயம் -19

Chellammal Bharathi | 27 Nov 2025 | Share

       இல்லாத காரணத்தை பெரிதாக எடுத்துக் கூறி நிலாவை அவள் பிறந்த ஊருக்கு தனியாக அனுப்பி வைத்த இளஞ்சேரன் நடு இரவில் யாருக்கும் தெரியாமல் நிலாவின் அறைக்கு வந்தவன் அவளின் நெஞ்சில் தலை வைத்து உறங்க ஆரம்பித்தான்.

     திடீரென நெஞ்சில் பாரம் ஏறியதை உணர்ந்தவள் கண் விழிக்காமலேயே , “எனக்குத் தெரியும் சேரா… நீ வருவ னு… ” என உறக்கத்திலும் தன்னவனின் அருகாமையை உணர்ந்து, தாரமாக அவனை நெஞ்சில் தாங்கி தாயாக அவனின் தலை கோதினாள் சேரநிலா.

       “என் மேல உனக்கு கோவம் இல்லையாடி? ” இளா.

       “இருக்கு… அதெப்பிடி இல்லாம போகும்? ” என மென்மையாக கோதி கொண்டிருந்த இளாவின் தலைமுடியை கொத்தாக பிடித்து ஆட்டினாள் நிலா.

       “சரி டி… நல்லா கோபப்பட்டுக்கோ…”இளா.

        “என்ன? பிரச்சனைய நீங்களே ஃபேஸ் பண்ணிக்கலாம் னு முடிவு பண்ணிட்டீங்களா? அதுக்குத்தான என்னைய பேக் பண்ணி இங்க அனுப்பி இருக்கீங்க? ” நிலா.

        “ப்பா… போலீஸ்க்காரன் பொண்டாட்டி ஆனதுல இருந்து உனக்கும் மூளை செமயா வேலை செய்து டி.. ” இளா.

        ” பேச்ச மாத்தாம விஷயத்துக்கு வாங்க… இன்னும் எத்தனை நாளைக்கி இங்க நான் இருக்கனும்? ” நிலா.

       “இன்னும் கொஞ்ச நாளைக்கி தான்டி… அட்ஜஸ்ட் பண்ணிக்கோ நிலா… “இளா.

       “சரி…” நிலா.

       “லவ் யூ… ” எனக் காதலுடன் நிலாவின் தாடையில் இதழ் பதித்து பின் மீண்டும் தன்னவளின் நெஞ்சத்தில் முகம் புதைத்து கண் மூடினான் இளஞ்சேரன்.

           “அவனுக்கு என்னாச்சு? ” என கண் விழிக்காமலேயே தன்னவனின் தலை கோதியபடி கேட்டாள் நிலா.

         “என் பொண்டாட்டிய ஒருத்தன் மிரட்டனும் னு நினைச்சாலே அவன நான் கொன்ருவேன். நிஜமாலும் வந்து மிரட்டுனவன சும்மா விட்டுருவேனா? கொன்னுட்டேன்.. செத்துட்டான்… ” என இருக்கும் இடத்தில் இருந்து சற்றும் அசையாமல் சாதாரணமாக பதில் கூறினான் இளா.

         அதைக் கேட்ட நிலாவின் உடல் ஒரு நொடி நடுங்கி தூக்கிப் போட்டது. அதை தெளிவாக உணர்ந்த இளா, ” விடு டி நான் பாத்துக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளக்கி ஊர சுத்தி நல்லா என்ஜாய் பண்ணு. உனக்கு எதுவும் தப்பா நடக்காது. எனக்கும் எதுவும் நடக்க விடாம நான் பாத்துப்பேன். எவ்ரித்திங் இஸ் அன்டர் தி கன்ட்ரோல் ஆஃப் யூவர் ஹஸ்பெண்ட் …” என மென்மையாக நிலாவை தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான்.

        இளாவின் அருகே கருவறையின் பாதுகாப்பை உணர்ந்து நிம்மதியாக உறங்கினாள் நிலா. இரவு முழுதும் உறங்கும் மனைவியின் அழகை கண்டு ரசித்தவன், விடியும் முன்பு அவளது நெற்றியில் அழுத்தமாக  இதழ் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு வந்தது போல் யாருக்கும் தெரியாமல் வெளியேறினான் இளஞ்சேரன்.

        நிலாவின் வீட்டை விட்டு சிறிது தூரம் நடந்து வந்த இளா , தனது பைக் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு வந்தவன் அங்கு தனது வாகனத்திற்கு முன்னால் அவனை முறைத்தபடி நின்றிருந்தான் சேது.

         “ஏன் குருமா பண்ணுன? ” என இளாவை முறைத்தபடி கேட்டான் சேது.

         “முறைக்காத மச்சான்.. சிரிப்பா வருது… ” என சிரித்தான் இளா.

          “ஏன் குருமா பண்ணுன? ” சேது.

          “சத்தியமா மச்சான்… சத்தமா சிரிச்சுருவேன்.. ” இளா.

          “ஏன் குருமா பண்ணுன னு கேட்டேன்… ” என மெதுவாக இளாவை நெருங்கினான் சேது.

         “டேய் சத்தியமா நான் குருமா பண்ணல டா… ” என்றபடி பீரிட்டு எழும் சிரிப்பை அடக்கியபடி கூறினான் இளா.

         “ஏன்… குருமா பண்ணுன? ” என அழுத்தமாக கேட்டபடி இளாவின் சட்டையை கொத்தாக பிடித்து அவனது அடிவயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினான் சேது.

       “அய்யோ மச்சான் வலிக்குதுடா… படாத இடத்துல பட்டுற போதுடா. அப்புறம் உன் தங்கச்சி வாழ்க்கை தான் ப்யூஸ் போயிரும்.. ” இளா.

        “அதெல்லாம் என் தங்கச்சிக்கு நான் வேற நல்ல மாப்பிள்ளையா பாத்து நாங்க விளக்கேத்தி வச்சுக்குறோம்… நீ சொல்லு…ஏன் குருமா பண்ணுன? ” என இளாவின் மீது சரமாரியாக குத்தினான் சேது.

         “அட எதுக்குத்தான் அந்த குருமாவ பண்ணுன சொல்லித் தொலையேன் அண்ணே… ” என இசையின் குரல் கேட்கவும் இருவரும் அதிர்ந்து அவளைப் பார்த்தனர்.

         “ஹேய்.. நீ தூங்கல? ” என இளாவும் சேதுவும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

         “ப்ச்… வரலடா பசங்களா.. ” என அசால்ட்டாக தோளை குலுக்கியபடி கூறினாள் இசை.

          “இந்த மாதிரி நேரத்துல ஒழுங்கா தூங்கி ரெஸ்ட் எடுக்கனும் னு உனக்கு தெரியாதா இசை? ” என கோவமாக வினவினான் இளா.

          “அதெல்லாம் என் புள்ள சமத்தா இருந்துப்பான்.. என் கதைய விட்டுட்டு குருமா மேட்டருக்கு வாங்க… நானும் மொதல்ல இருந்து ஒட்டுக் கேட்டுட்டு இருக்கேன். நீ எப்ப ண்ணே குருமா செஞ்ச? அத எப்ப என் புருஷன் தின்னான்? எனக்கு குடுக்காம ரெண்டு பேரும் தின்னு இருக்கீங்க.. “என மூக்கை உறிஞ்சியபடி குறை கூறினாள் இசை.

     கர்பிணியான  தனது தங்கை வருந்துவது பொறுக்காமல் , “அச்சோ… அப்பிடி இல்ல டா இசை… என் தங்கச்சிய விட்டுட்டு நான் ஏதாவது சாப்பிடுவேனா?” என இசையை சமாதானப்படுத்தினான் இளா.
 
      “அப்ப அந்த குருமா? “என சந்தேகத்துடன் இளாவை பார்த்தாள் இசை.

      “அய்யோ அது நாங்க காலேஜ்ல பேசிக்கிற ஒரு கோட் வோர்ட் மாதிரி. ஏன் குழப்புன ங்கிறத தான் அப்பிடி கேப்போம். இப்ப நான் நிலாவ வீட்டுக்கு அனுப்பிட்டு ம
யாருக்கும் தெரியாம வந்து பாத்துட்டு வர்றேன் ல அத தான் அப்பிடி கேட்டான் மா.. ” என இசையின் தலையை மெல்ல வருடியவாறு கூறினான் இளா.

       “உன் மூஞ்சி… உன் மொகரக் கட்டையில முள்ள விட்டு அடிக்க… ” இசை.

       “மீ… நான் உன் அண்ணன் மா.. “என பாவமாக இசையைப் பார்த்தான் இளா.

       “அண்ணனாம் அண்ண… இந்த விஷயத்துல நான் என் புருஷன் பக்கம் தான். டேய் புருஷா தூக்கி போட்டு மிதி டா இவன..” எனக் கோவமாக இளாவை முறைத்தபடி சேதுவின் அருகில் சென்று நின்றாள் இசை.

       அதுவரை இருவரின் உரையாடலை முகத்தை சுழித்தபடி நின்று கவனித்தவன் இறுதியாக இசை கூறியதைக் கேட்டவன் ,”இப்ப பாருடி… ” என மகிழ்ச்சியுடன் இளாவை கண்ட மேனிக்கு அடித்தான் சேது.

        “டேய்.. டேய்.. நேரம் ஆகிருச்சு டா… விடிஞ்சுறப் போகுது. நான் கிளம்பனும்.. “என அடி வாங்கியபடி கூறினான் இளா.

        “என்னது? கிளம்புறியா? நிலாவ விட்டுட்டு நீ மட்டும் எங்க டா கிளம்புற? ” சேது.

         “இல்ல டா… ஒரு சிக்கலான கேஸ். நிலா என் கூட இருந்தா அவளுக்கும் பிரச்சனை. அதான் அவ இங்கயே இருக்கட்டும் கொஞ்ச நாளக்கி. ஏன் நீங்களாம் பாத்துக்க மாட்டீங்களா என்ன? “இளா.

        “அதெல்லாம் நாங்க பாத்துப்போம். அதவிட அவள பாத்துக்க நாங்க தேவை இல்லை. அவளுக்கு தேவை நீ தான் அண்ணே..” இசை.
 
         “புரியுது இசை.. இருந்தாலும் இது கொஞ்சம் சிக்கலான கேஸ். ஆபத்து அதிகம். அவ இங்க உங்க கண்ணு முன்னாடி இருந்தா நான் கொஞ்சம் நிம்மதியா என் வேலைய பாப்பேன்.. “இளா.

        “சரி இளா… ஏதோ கேஸ் ஆபத்து னு சொல்ற.. எல்லாம் ஓகே… அதெல்லாம் என்ன ஏது னு நான்  கேக்க மாட்டேன்.. ஆனா நிலாக்கிட்ட விளக்கமா எடுத்து சொல்லி அவ வீட்டுலயும் உண்மைய சொல்லி நீயே கொண்டு வந்து விட்டு இருக்கலாம் ல… இந்த சின்ன விசயத்துக்கு நீ ஏன் பெரிய குருமாவா பண்ணுன? ” சேது.

        “எல்லாம் காரணமாத் தான் டா… நேரம் ஆச்சு நான் கிளம்புறேன். எதுக்கும் நீங்க ரெண்டு பேருமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க… ” எனக் கூறியபடி பைக்கில் ஏறினான் இளா.

        “என்ன காரணமா இருந்தாலும் நிலா பாவம் டா.. அவ வீட்ல எல்லாரும் நார்மலா இருக்காங்க னு நீ நினைக்கிறியா? இன்னும் எதுவும் முழுசா மாறல டா மாப்ள… ” என வருத்தத்துடன் கூறினான் சேது.

       “ஆமா ண்ணே.. கொஞ்சம் யோசியேன்.. ” என இசையும் முகத்தில் வருத்தத்தை தேக்கி கூறினாள்.

       “எல்லாத்தையும் என் பொண்டாட்டி பாத்துப்பா… அவ இப்ப தனி ஆள் இல்ல.. அவ பின்னாடி இந்த சேரன் இருக்கான்.. படையே திரண்டு என் பொண்டாட்டிய எதித்து வந்தாலும் அவ ஒத்த ஆளா நின்னு சாமாளிப்பா… யூ டோன்ட் வொர்ரி பேபீஸ்.. அப்புறம்… கவின் பத்ரம்… ” என இறுதி வரியை அழுத்தமாக கூறியவன் சேதுவின் தோளில் தட்டிவிட்டு கிளம்பினான் இளா.

       இளாவின் இறுதி வார்த்தையில் ஏதோ ஒன்று பொதிந்து இருப்பதை உணர்ந்த சேது, “அரசி… கவின் எங்க டி? ” என்றான்.

       “ஏன்? வீட்ல தான் தூங்கிட்டு இருக்கான்… ” இசை.

        “இனி அவன விட்டுட்டு தனியா எங்கயும் போகாத.. நீயும் எங்கயும் தனியா போகாத.. ” என இசையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான் சேது.

       “இவன் சொன்னா.. நான் அத கேக்கனுமா.. போடா… ” என வாய்க்குள் பேசியபடி அவனுடன் நடந்தாள் இசை.

        வழக்கம் போல் நிலாவின் டார்லிங் வந்து அவளை எழுப்ப.. புன்னகையுடன் எழுந்து தன் அருகில் தன்னவனை தேடினாள் நிலா. அருகில் அவன் இல்லாததை உணர்ந்தவள் , சோர்வுடன் எழுந்து தன் டார்லிங்கிற்கு குட் மார்னிங் சொல்லி புன்னகைத்தாள் நிலா.

      “நீ எந்திரிச்சதும் அவனத் தான தேடுன? என்னையவா நீ மொதல்ல தேடுன ?” என செல்லக் கோவத்துடன் நிலாவின் மீது தன் வெம்மையை வீசியது அவளின் டார்லிங்கான சூரியன்.

       “அச்சோ.. ஸாரி டார்லிங்… உம்மா… ” என சூரியனுக்கு ஒரு முத்தத்தை பறக்க விட்டு விட்டு குளிக்க சென்றாள் நிலா. அவள் அளித்த முத்தத்தில் குளிர்ந்த சூரியன் தனது வெம்மையை சற்று குறைத்துக் கொண்டான்.

      குளித்து முடித்து வழக்கம் போல் க்ரவுண்டிற்கு கிளம்பினாள் நிலா. நிலா மைதானத்திற்கு கிளம்பி வெளியே வந்ததைக் கண்ட வள்ளி, “எங்க கிளம்பிட்ட நிலா? “என்றாள்.

        “விளையாட…” எனக் கூறியபடி தனது பேக்கை தூக்கினாள் நிலா.

        “நாய குளிப்பாட்டி நடு வீட்டுக்குள்ள வச்சாலும் அது நக்கி தான் குடிக்குமாம்.. ” என உரலில் வெற்றிலை பாக்கை இடித்தபடி கூறினாள் அலமேலு.

        அதைக் கேட்ட நிலா, அலமேலுவை பாத்தவாறே, “அபி… “எனக் குரல் கொடுத்தாள்.

       “வந்துட்டேன் க்கா.. ” என நிலாவின் கையில் இருந்த பேக்கை வாங்கிக் கொண்டான் அபி.

       “நான் சொல்றத கேளு நிலா.. மொத மொதனு பொறந்த வீட்டுக்கு புருஷன் இல்லாம தனியா வரக் கூடாது.. என்ன தான் பிரச்சனையா இருந்தாலும் மாப்பிள்ளை கிட்ட பேசி அவருக் கிட்ட மன்னிப்பு கேளு… ரெண்டு பேரும் ஒன்னா இருக்குறது தான் நீ பொறந்த வீட்டுக்கும் பெருமை.. புகுந்த வீட்டுக்கும் அழகு… ” வள்ளி.

        “பொறந்த வீடா? அப்ப இது என் வீடு இல்லையா? ” என வள்ளியை கூர்மையாகப் பார்த்தாள் நிலா.

      நிலாவின் அப்பார்வையில் வள்ளிக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள… உதவிக்கு தனது மாமியாரைப் பார்த்தாள்.

      இடித்த வெற்றிலைப் பாக்கை நன்றாக வாயில் போட்டு மென்றபடி.. நிலாவையும் வாயில் போட்டு அரைக்க தயாரான அலமேலு மெல்ல வாய் திறந்தார்.

                              (சேரநிலா மிளிர்வாள்…)

                          -செல்லம்மாள்பாரதி
         
       

    No comments yet.