அத்தியாயம் – 16

Udhaya Novel's | 14 Apr 2026 | Share

K 16

ஆதிரா அவன் பக்கம் திரும்பாமல் யோசனையுடன் அமர்ந்து இருக்க விக்னேஷ் அவளை கூப்பிட திரும்பிய ஆதிரா, “ விக்னேஷ் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. நான் கேன்டீன்ல வெயிட் பண்றேன் வா.. “ என்றவள் எழுந்து செல்ல விக்னேஷ் குழப்பதுடன் எழுந்து அவளின் பின்னாடி செல்ல லேப்டாப் வழியே அதை கோபமாய் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆர்யன்.

காபி ஆர்டர் செய்துவிட்டு ஆதிரா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க விக்னேஷ் அவளின் பக்கம் கூட திரும்பாமல் சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்து இருந்தான். அவனை பார்த்த ஆதிரா,

” ஏன் விக்னேஷ் இன்னிக்கு நீ கம்பெனிக்கு வருல.. இன்னிக்கு என் பர்த்டேன்னு உனக்கு தெரியும்ல.. இப்போ வரைக்கும் நீ எனக்கு ஒரு விஷ் கூட பண்ணுல.. ” என ஆதிரா வருத்தத்துடன் சொல்ல,

” அது வந்து.. ஐம் சாரி ஆதிரா.. நான் மறந்துட்டேன்.. ஹாப்பி பர்த்டே.. நீ எப்பவும் ஹாப்பியா இருக்கனும்.. ” என்றான் விக்னேஷ்.

” அப்படியா.. நீ என் பர்த்டேவை மறந்துட்டியா.. அப்புறம் எப்படி என் பர்த்டே அன்னிக்கு எனக்கு ப்ரொபோஸ் பண்றதா சக்திகிட்டயும் ஆர்யன்கிட்டயும் சொன்ன.. ” என ஆதிரா கேட்க அதை கேட்ட விக்னேஷ் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

அவள் இதை இப்படி நேரடியாக கேட்டதில் விக்னேஷ் அதிர்ந்து போனவன் அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தான். அவனை பார்த்த ஆதிரா,

” ப்ளீஸ் விக்னேஷ்.. நீ இப்படி எல்லாம் என் முன்னாடி இருக்காத.. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நீ ஏன்டா இப்படி இருக்க.. என்மேல உனக்கு எப்படி இப்படி ஒரு தாட் வந்துச்சு.. ம்ம்.. சொல்லு.. ” என கேட்க விக்னேஷ் அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்தே இருந்தான்.

ஆர்டர் செய்த காபி வர, ” காபி எடுத்து குடி.. ஆரிற போகுது.. ” என ஆதிரா சொல்ல எதுவும் பேசாமல் அதை எடுத்து குடித்தான் விக்னேஷ். அவனையே பார்த்தவள் எதுவும் பேசாமல் காபியை குடித்தவள் விக்னேஷ் காபி குடித்து முடிக்கும் வரைக்கும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

அவன் காபியை குடித்து முடித்ததும் அவனை பார்த்த ஆதிரா, ” இப்போ சொல்லு விக்னேஷ்.. உனக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் என்மேல வந்துச்சு.. சொல்லு.. எவ்ளோ நாளா என்னை ஏமாத்திட்டு இருந்த.. ” என கேட்க அதிர்ந்து போய் அவளை பார்த்த விக்னேஷ்,

” என்ன ஆதிரா.. ஏமாத்துனேன் அப்படினு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற.. நீ இப்படி சொல்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ” என வருத்தத்துடன் சொல்ல,

” எனக்கும்தான்.. நீ இப்படி என்கிட்ட இருக்கறது எனக்கும் தான்டா கஷ்டமா இருக்கு.. உண்மைய சொல்லணும்னா இப்போ வரைக்கும் என்னால இதை நம்பவே முடியல.. அவங்க ஏதோ ப்ராங்க் பண்ண இப்படி சொல்றாங்க நீ இதெல்லாம் இல்லனு சொல்லுவினு எதிர்பார்த்தேன்.. ஆனா நீ இப்படி அமைதியா இருக்கறதுலயே அவங்க சொன்னது எல்லாம் உண்மை தான் அப்படினு எனக்கு நல்லா புரியுது.. ” என ஆதிரா சொல்ல விக்னேஷ் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தான். 

” ப்ளீஸ் விக்னேஷ்.. நீ இப்படி இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல.. நீ இப்படி அமைதியா இருந்தா நான் என்னனு நினைக்கறது.. இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் இனி வேண்டாம்.. எதுவா இருந்தாலும் என் முகத்தை பார்த்து சொல்லு.. பேசு விக்னேஷ் ப்ளீஸ்.. ” என ஆதிரா கெஞ்ச நிமிர்ந்து அவளை பார்த்தான் விக்னேஷ்.

” ப்ளீஸ் ஆதிரா என்கிட்ட எதையும் கேக்காத.. என்னால உன் முகத்தை கூட பார்க்க முடியல.. ஒரு மாதிரி கில்ட்டியா இருக்கு.. இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காத.. நான் போறேன்.. ” என்ற விக்னேஷ் எழ,

” ஓகே விக்னேஷ் நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. ஆனா எனக்கு உன்கிட்ட சொல்ல வேண்டியது கொஞ்சம் இருக்கு.. அதை சொல்லிறேன்.. உட்காரு ப்ளீஸ்.. ” என ஆதிரா கெஞ்ச சேரில் உட்கார்ந்தான் விக்னேஷ்.

” ஐம் சாரி விக்னேஷ்.. தெரிஞ்சோ  தெரியாமயோ  நீ என்னை லவ் பண்ண நானும் ஒரு காரணமா இருந்துருக்கேன்.. நீ ரொம்ப நல்ல பையன்.. நான் இங்க வந்த இந்த ரெண்டு வருஷத்துல நீ என்னை தப்பான பார்வையில ஒரு தடவகூட பார்த்தது இல்ல.. நீ என்னை லவ் பண்றத நான் தப்பாவே சொல்லுல.. யாருக்கு யார் மேல எப்போ காதல் வரும்னு யாராலயும் கணிக்க முடியாது..என் வாழ்க்கையிலயும் ஒரு காதல் இருக்கு.. உன்னை மாதிரியே என்னோட காதலும் சொல்லாத காதல் தான்.. ” என்றவள் மும்பையில் நடந்த சம்பவம் பற்றியும் அங்கு செல்வா அவளை காப்பாற்றியதை பற்றியும் ஆதிரா சொல்ல அனைத்தையும் கேட்ட விக்னேஷ் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

” என்ன ஆதிரா என்னென்னமோ சொல்ற.. நீ சொல்றதை எல்லாம் கேக்கறதுக்கு ஏதோ சினிமா பார்க்கற மாதிரி இருக்கு.. ” என விக்னேஷ் அதிர்ச்சியுடன் சொல்ல,

” ஆமா விக்னேஷ்.. எனக்குமே அப்போ அப்படித்தான் இருந்துச்சு.. செல்வா மட்டும் என்னை அப்போ காப்பாத்தல அப்படினா இந்நேரம் நான் எங்க எப்படி இருந்துருப்பேன் அப்படினு எனக்கே தெரியல.. என்னால அதை யோசிச்சுகூட பார்க்க முடியல.. செல்வா என்னை காப்பாத்தி ரெயில்வே ஸ்டேஷன்ல விட்டது வரைக்கும் எனக்கு எதுவும் தெரியல.. 

ஆனா அதுக்கு அப்புறம் ஒவ்வொரு செகண்டும் நான் செல்வாவை பத்தி மட்டுமே தான் நினைச்சுட்டு இருக்கேன்.. எப்பாவது ஒரு நாள் செல்வாவை பார்த்துருவேன்னு நான் ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன்.. என்னோட நம்பிக்கை வீண் போகல.. நான் செல்வாவை மறுபடியும் பார்த்தேன்… அதுவும் நம்ம கம்பெனியிலயே பார்த்தேன்.. ” என ஆதிரா சொல்ல விக்னேஷ் அதை கேட்டு மேலும் அதிர்ந்து போனான்.

” என்ன ஆதிரா சொல்ற.. செல்வாவை நம்ம கம்பெனியில பார்த்தியா.. எப்போ பார்த்த.. நீ யாரை சொல்ற.. செல்வா அப்படின்னு யாரும் புதுசா இங்க ஜாயின் பண்ணுனதா எனக்கு நியாபகமே இல்லயே.. ” 

” மும்பையில் என்கிட்ட செல்வான்னு சொன்னவரு இங்க வேற ஒரு பேரோட வந்துருக்காரு விக்னேஷ்.. ” என ஆதிரா சொல்ல,

” நீ என்ன சொல்ற.. வேற பேருல இங்க வந்துருக்காறா..  நீ யாரை சொல்ற.. ” என எதுவும் புரியாமல் குழப்பதுடன் கேட்டான் விக்னேஷ்.

” நான் சொன்னது வேற யாரும் இல்ல.. ஆர்யனை தான் சொல்றேன்.. ஆர்யன் தான் செல்வா.. செல்வா தான் ஆர்யன்.. ” என ஆதிரா சொல்ல அதை கேட்ட விக்னேஷ் அதிர்ச்சியில் எழுந்து நின்றான். 

சுற்றுப்புறம் உணர்ந்து மறுபடியும் சேரில்  உட்கார்ந்தவன் அவளை நம்ப முடியாமல் பார்க்க அவனை பார்த்து சிரித்தாள் ஆதிரா.

” என்ன விக்னேஷ் நான் சொல்றதை கேட்டு ஷாக்கா இருக்கா.. ஆர்யனை முதல்ல பார்த்தப்ப எனக்கும் இப்படிதான் ஷாக்கா இருந்துச்சு.. ஆனா ஆர்யன்  என்னை பார்த்து எந்த அதிர்ச்சியும் ஆகல.. என்னை யாருன்னே தெரியாத மாதிரி நடந்துகிட்டாரு.. ஏன் இப்படி நடந்துக்கறீங்கன்னு கேட்டா நீங்க நினைக்கற செல்வா நான் இல்ல.. நான் ஆர்யன் அப்படினு சொல்லிட்டாரு.. நான் எவ்ளவோ கேட்டும் ஆர்யன் அப்படினு தான் சொல்றாரு.. 

நேத்து ஸ்டாப்பா வந்தவரு இன்னிக்கு எம். டியா வந்து நிக்கறாரு.. மும்பையில ரவுடியா இருந்தா செல்வா எப்படி இங்க எம். டியா வர முடியும்.. அவரு சொல்றது மாதிரி இது ஆர்யன்தான் அப்படினு மூளை சொன்னாலும் இல்ல இவரு செல்வா தான் என் மனசு ஸ்ட்ராங்கா சொல்லுது.. மூளை சொல்றதை கேக்கறதா மனசு சொல்றதை கேக்கறதான்னு எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு விக்னேஷ்.. ” என ஆதிரா கவலையுடன் சொல்ல விக்னேஷுக்கு அவளை பார்க்கவே பாவமாகவும் கவலையாகவும் இருந்தது.

“ ஐம் சாரி ஆதிரா.. நீ இவ்ளோ பெரிய பிரச்சனையில இருக்கப்ப நானும் உனக்கு கஷ்டத்தை கொடுத்துட்டேன்.. நீ ஒன்னும் கவலைப்படாத.. ஆர்யன்கிட்ட நான் பேசுறேன்.. அவர் செல்வாவா இல்லையான்னு நான் உனக்கு கண்டுபிடிச்சி சொல்றேன்.. “ என விக்னேஷ் நம்பிக்கையுடன் சொல்ல அதை கேட்டு சந்தோசத்தில் ஆதிராவின் கண்கள் கலங்கியது.

இந்த episode பிடிச்சிருந்தா எழுத்தாளரை உற்சாகப்படுத்துங்க!!
இப்போதே உற்சாகப்படுத்துங்கள்

இந்த படைப்பை மதிப்பிட விரும்புகிறீர்களா?

Click on a star to rate it!

No votes so far! Be the first to rate this post.

    No comments yet.