அத்தியாயம் -16

Chellammal Bharathi | 25 Nov 2025 | Share

        வார்த்தைகள் கூர் வாளாய் நெஞ்சை அறுக்க… இதயத்தில் இரத்தம் சிந்த…. அதற்கு சான்றாய் நிலாவின் விழிகள் குருதி நிறம் கொண்டது. நிலாவின் உள்ளத்தின் கொந்தளிப்பை உணர்ந்த இளா, “அன்னக்கி, உன் கிட்ட ஒன்னு கேப்பேன்… நான் சொல்லுறத செய்யனும் னு சொன்னேன் ல…. இப்ப நான் சொல்லுறேன்…. நீ செய்வியா? ” என சீற்றம் கொண்ட சிறுத்தை என உறுமினான் இளா.

          “ம்ம்… “என தலையை ஆட்டினாள் நிலா.

          “அப்ப சரி….. நமக்கு இப்ப கல்லியாணம் வேண்டாம்….நீ இதோ இந்த கதிர்வேலுவோட மகளா… உன்னோட கனவ நனவாக்கி…. இதோ இந்த மாதிரி உன்னைய பேசுறவங்க எல்லார் வாயையும் அடைச்சுட்டு வெற்றி மகளா சாதிச்சுட்டு வா…. அப்ப நாம கல்லியாணம் பண்ணிக்கலாம்….என் பொண்டாட்டியா நீ ஜெயிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லை… அதுல எனக்கு பெருமையும் இல்ல…. அதே ஆடி மாசத்துல பொறந்த கதிர்வேலுவோட மகளா ஜெயிச்சு வா… எந்த ஒரு பிரச்சினையிலயும் நீ என் பின்னாடி ஒளிஞ்சுக்க கூடாது… எல்லா பிரச்சனையிலயும் உனக்கு பின்னாடி நான் இருப்பேன்…. ஆனா… எப்போதும் முன்னாடி நீதான் போகனும்…. செய்வியா? “என்றான் இளா.

         தன்னவன் கூறிய மொழிகளை கேட்ட நிலா, விழிகளில் வழிந்த கண்ணீருடன் நிமிர்வுடன் தன்னவனை நோக்கி, “கண்டிப்பா செய்வேன்… “என உறுதியுடன் மொழிந்தாள்.

          அதை கேட்ட இளா, தன்னவளை பெருமை பொங்க பார்த்து விட்டு, “நீங்க என்ன மாசத்துல பொறந்தீங்க பாட்டி? “என அலமேலுவிடம் கேட்டான் .

          “ஏன் என்னைய கேக்குற? நான் வைகாசி ல பொறந்தேன்…. நல்ல மாசத்துல பொறந்தேன்… “என கழுத்தை ஒரு வெட்டு வெட்டியபடி கூறினார் அலமேலு.

          “ஆகான்….அப்பிடியா? நீங்க வைகாசி ல பொறந்ததுனால தான் உங்க பேரன இப்பிடி வாட்டி எடுக்குது னு நான் சொல்லுறேன்….நீங்க என்ன சொல்லுறீங்க? ” இளா.

          அதை கேட்ட அலமேலு திரு திரு வென முழிக்க… “சித்திரையில பொறந்தா குடும்பத்த சித்திரவதை பண்ணும்…. வைகாசில பொறந்தா வாட்டி வதைக்கும்… ஆனி,ஆடி ல பொறந்தா ஆட்டி வைக்கும்… ஆவணி ல பொறந்தா அல்லோகல படுத்தி வைக்கும்… புரட்டாசில பொறந்தா பொறட்டி எடுக்கும்… ஐப்பசி ல பொறந்தா ஐயம் புடிச்சு ஆட்டும்… கார்த்திகைல பொறந்தா கொடுமை புடிச்சு ஆட்டும்…மார்கழி ல பொறந்தா மானம் பறந்துரும்… தை ல பொறந்தா குடும்பம் தைய தக்கா னு ஆடும்… மாசி ல பொறந்தா குடும்பம் தூசியா பறந்துரும்….பங்குனி ல பொறந்தா குடும்பம் தங்காது…..என்ன பாட்டி எதுகை மோனை லாம் சரியா இருக்கா? “என நக்கலாக வினவினான் இளா.

             அலமேலு வாயடைத்து நிற்க….”இல்ல….நான் தெரியாம தான் கேக்குறேன்… இன்னும் எத்தனை காலத்துக்கு எவனோ வேலை வெட்டி இல்லாம சொல்லிட்டு போனத கெட்டியா புடிச்சுட்டு இருக்க போறீங்க? இவ மொகத்த கொஞ்சம் பாருங்க…..இவ மொகத்த பாத்தா நீங்க சொல்லுற மாதிரி இருக்கா? நீங்க இப்படி அபிக்கு சலுகை குடுத்து தான் அவன் தப்பான பாதைக்கு போயிருக்கான்….குழந்தைகளோட குண நலன் அவங்க நல்லது கெட்டது லாம் அவங்கள நாம வளக்குற விதத்துல தான் இருக்கு…..அவங்க பொறக்குற மாசத்துலயோ நேரத்துலயோ இல்ல…. அபிய கண்டிச்சு இருந்தா அவன் ஏன் போதை மருந்த எடுத்துக்க போறான்? நீங்க பண்ணுன தப்ப ஏன் நிலா மேல போடுறீங்க? “என்றான் இளா.

           “அன்னக்கி குடிக்கிறது தப்பு னு அபிக்கிட்ட சொன்னதுக்கு என்னைய அக்கா னு கூட பாக்காம கேவலமா பேசிட்டான்… ஒரு அக்காவா… அவனோட ரெண்டாவது அம்மாவா தான் அவன அடிச்சேன்…..அதுக்கு அவன் என் கை நரம்ப கட் பண்ணி கொல்ல பாத்தான்…அவன என் குழந்தையா நினைச்சு தான் அவன் பண்ணுன தப்ப மன்னிச்சேன்…. அபி என்னோட தம்பி….என் கூட பொறந்தவன்….அவன் கெட்டு போக நான் எப்பிடி காரணமாவேன்? நீங்க என்னைய உங்க புள்ளையா நினைக்கலனாலும் நான் எப்போதும் உங்கள எதுக்காகவும் வெறுத்தது இல்ல…. “என குரல் தழுதழுக்க இறுக்கத்துடன் கூறினாள் நிலா.

           நிலா கூறியதை கேட்ட வள்ளியும் கதிர்வேலுவும் உடைந்து கண்ணீருடன் நின்றனர். வள்ளி, “அம்மாடி….என்னைய மன்னிச்சுருடி….”என கதறிக்கொண்டு தன் மகளை கட்டிக்கொண்டாள்.

           கதிர்வேலு மற்றும் வள்ளியின் மனமாற்றத்தை கண்ட இளா, அலமேலுவை நோக்க….அவர் அதிர்ச்சியில், “தன் பேரன் கொலை பண்ற அளவுக்கு மாறிட்டானா? “என கண் கலங்கி நின்றிருந்தார். அவரின் கண்களில் தெரிந்த மாற்றத்தை கண்ட இளா,”இனி எல்லாம் சுகமே… “என எண்ணிக்கொண்டு அவர்களின் அந்த மோன நிலையை கலைக்க விரும்பாமல் திருப்தியான புன்னகையுடன் வெளியேறினான்.

           இளா அமைதியாக வெளியேறுவதை கண்ட நிலா, “காரிகையின் காரியம் யாவிலும் கை கொடுக்கும் கண்ணாளனை கணவனாக அடைய என்ன தவம் புரிந்தேனோ? ” என எண்ணி நெஞ்சம் நிறைந்த நிரந்தர புன்னகையை அகத்தில் பூசிக்கொண்டாள் நிலா.

              💞💞💞💞💞💞💞💞💞

      நான்கு வருடங்களுக்கு பிறகு…

            அந்த பிரபலமான கிரிக்கெட் மைதானத்தில் விசில்களும் உற்சாக குரல்களும் மேள தாள சத்தங்களும் விண்ணை தாண்டி ஒலிக்க ,பெண்கள் கிரிக்கெட் போட்டி தமிழக அணிக்கும் கர்நாடக அணிக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருந்தது.

         278 ரன்கள் என்ற இமாலய இலக்கை கர்நாடக அணி தமிழக பெண்கள் அணிக்கு நிர்ணயித்து இருந்தது. 279 ரன்கள் எடுத்து வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இறங்கிய தமிழக பெண்கள் அணி 98 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி நின்றது.

         அப்பொழுது ஐந்தாவது வீராங்கனையாக சற்று சிறிய உருவத்தில் ஹெல்மெட் அணிந்து பேட்டை தன் தோள் மேல் வைத்துக்கொண்டு க்ளவுஸ் இரண்டையும் சரிபார்த்து கொண்டு மைதானத்திற்குள் தன் காலடியை அழுத்தத்துடன் வைத்து உள்ளே நுழைந்தாள் ஒரு வீராங்கனை.

ஏய் நிக்கர்-உம் டி-சர்ட்-உம்
போட்டு தான் வருதே சூறாவளி-u…

ஏய் நிக்கர்-உம் டி-ஷர்ட்-உம்
போட்டு தான் வருதே சூறாவளி-u….

ஊரெல்லாம் போன் போட்டு தான்
புலி இங்க புயலா வருதுனு சொல்லு…

எட்டி போ,
வாய் கட்டி போ…
தல தட்டி போ…

இவ கேளி கிண்டல் சகிச்சிக்க
மாட்டா…
உன் எலும்ப ஒடைச்சிடுவாளே…
நொறுக்கிடுவாளே…

மின்னல் போல தாக்கி,
மோதி
ஜெயிச்சிடுவாளே
சாய்ச்சிடுவாளே
சாய்ச்சிடுவாளே…

ஆத்தி ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தி ஜாக்கிரதை

ஆத்தி ஜாக்கிரதை ஜாக்கிரதை
ஆத்தி ஜாக்கிரதை

செம்ம தில்லாய்…
செம்ம தில்லாய்..
அவ கிட்ட போ…

உன் ஆணவத்த சுத்தி எரிச்சுடுவளே
முடிஞ்சா இவள நெருங்கு டா…
ஒரு இஞ்சு டேப்புல அளப்பாளே…
உன் தெனாவட்ட நீ அடக்குடா…

ஹேய் வால நறுக்கிடுவாளே
நாடி நரம்பு சுளுக்கெடுப்பாளே…

இவ கேலி கிண்டல் சகிச்சிக்க மாட்டா…

உன் எலும்ப ஒடைச்சிடுவாளே
நொறுக்கிடுவாளே….

மின்னல் போல தாக்கி, மோதி ஜெயிச்சிடுவாளே…
சாய்ச்சிடுவாளே,
சாய்ச்சிடுவாளே… என்ற பாடல் சரியாக பெவிலியனில் ஸ்பீக்கரில் அலர….  பாடல் வந்த திசையை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தை கொடுத்து விட்டு புயலென பேட்டை சுழற்றி கொண்டு முன்னேறினாள் அந்த வீராங்கனையான நிலா.

         இங்கு பெவிலியனில் பாடலை ஒலிக்க விட்டவனின் தலையில் நறுக்கென கொட்டியது ஒரு சிறு மழலை.

        “இத்தும் சத்தமா வக்க வேண்திதுதான? “என தன் மழலை மொழியால் தன் தந்தையை அதட்டியது அம்மழலை.
   
           “அச்சோ… மன்னிச்சுக்கோ குட்டி… உன் அத்தமாக்கு அடுத்த தடவ இத விட அதிக சத்தமா வைக்கிறேன்… “என  கொஞ்சினான் அம்மழலையின் தந்தையான சேது.

           “ம்ஹூக்கும்…. இதே தான்டா பட்டு உன் அப்பா போன தடவையும் சொன்னாரு… “என எட்டுமாத மேடிட்ட தன் மணிவயிறை தடவி கொண்டு தன் கணவனை வாரினாள் இசை.

          “ப்பா கெத்த ப்பா… “என முகத்தை சுழித்தது அப்பிஞ்சு.

           “அப்பிடி சொல்லுடா என் அண்ணி பெத்த வைரமே….”என கூறி அப்பிஞ்சை தூக்கி தன் தோளில் வைத்தான் கல்லூரி பயிலும் அபி.

          “எதேய்… .அண்ணி பெத்த வைரமா?  அண்ணன்டா….நானு… “என முகத்தை சுருக்கி கொண்டு அபியை பார்த்தான் சேது.

         “யோவ் போய்யா அங்குட்டு… வயசு அதிகமா இருந்தா மட்டும் அண்ணா ஆகிற முடியாது….வயசுக்கு தகுந்த வேலையா பாக்குற நீ? நேத்து என்னோட புளிப்பு முட்டாய புடுங்கி தின்னவன் தானடா நீ? ஒழுங்கா என்னைய மேட்ச் பாக்க விடு….இல்ல….என் பாக்கெட்ல நெறய புளிப்பு முட்டாய் வச்சு இருக்கேன்….உனக்கு தர மாட்டேன் பாத்துக்க….” அபி.

         “அய்… புளிப்பு முட்டாய்….டேய் தம்பி…எனக்கு டா…..”சேது.

         “வெவ்வெவ்வ…போடா… “அபி.

         “அடச்சை…. ஏழு கழுதை வயசாகுது… இப்பிடி முட்டாய்க்கு அடிச்சுக்குறீங்க… வெக்கமாயில்ல… “என இடையில் புகுந்தாள் இசை.

         அதை கேட்ட இருவரும் மௌனமாக… அபியின் தோளில் இருந்த மழலை வாய் பொத்தி சிரித்தது.

          இசை மெதுவாக, அபியின் காதில் “அப்பு…. அந்த முட்டாய எனக்கு மட்டும் குடு… “என ரகசியம் பேச… அதை காதில் வாங்கிய சேது, “வெக்கமாயில்ல? “என இசையை போலவே கேட்க… இசை, “இல்லையே… “என பல்லைக்காட்டினாள்.

           “கொஞ்சம் மேட்ச் பாக்க விடுறீங்களா? “என இவர்களின் கும்மாளத்தை கண்டு பொங்கியபடி கேட்டான் இளஞ்சேரன்.

         “ஆகா… வந்துட்டான்ய்யா சிட்டி கமிஷனர்… அஸிஸ்டண்ட் கமிஷனரா இருந்தப்பவே அந்த மிரட்டு மிரட்டுனான்… இப்ப சொல்லவா வேணும்… “என அபியிடம் முனுமுனுத்து விட்டு… “டேய் மாப்ள… மூணு நாளைக்கி முன்னாடி கல்லியாணம் ஆனவன் மாதிரியா இருக்க நீ? புது மாப்பிள்ளை க்கு உள்ள எந்த அறிகுறியும் உன் முகத்துல இல்லையே… அதான் என் தங்கச்சி ஸ்டேட் டீம் ல செலக்ட் ஆகி சாதிச்சுட்டா ல… என் தங்கச்சி வெளுத்து வாங்க போறா பாரு… நீ கூலா மேட்ச்ச பாருடா… “என்றான் சேது.

            “ஆமா மாமா…. நீங்க வேணுனா பாருங்க…. அக்கா இந்த மேட்ச் ல சதம் போட்டு நேஷனல் டீம்ல செலக்ட் ஆகிருவா…. டென்ஷன் ஆகாம அக்கா விளையாடுறத பாருங்க…. அவ என்ன இன்பநிலாவா? அவதான் இப்ப தி க்ரேட் கிரிக்கெட்டர் சேரநிலா ஆச்சே… அப்புறம் ஏன் உங்களுக்கு டென்ஷன்? “என்றான் அபி.

            ஒரு காலத்தில் எப்பிடி இருந்தவன் ஒரு வருட முழு ட்ரீட்மெண்டிற்கு பிறகு இப்பொழுது முழு மனிதனாக திருந்தி திரும்பி இருக்கும் தன் ஆரூயிர் மச்சானை புன்னகையுடன் பார்த்திருந்தான் இளஞ்சேரன்.

            இளாவின் எண்ண ஓட்டத்தை உணர்ந்த இசை, தன் சகோதரனின் தோளில் ஆதரவாக கை வைத்து புன்னகைத்தாள். அவனின் மற்றொரு தோளில் சேது கை வைக்க…. தன் மாமனின் கழுத்தை சிறு குழந்தையென அபி கட்டிக்கொண்டான்.

        இங்கு நிலாவின் வீட்டில் கதிர்வேல் டிவியின் முன் அமர்ந்து நிலாவை பெருமையுடன் பார்த்திருக்க.. வள்ளியும் அலமேலுவும் பூஜை அறையில் நிலாவின் வெற்றிக்காக கடவுளிடம் மனு அளித்துக்கொண்டிருந்தனர்.

          அனைவரின் எண்ணத்தின் நாயகியான, சேரநிலா… The cricketer… மைதானத்தில் தன்னை நோக்கி வீசிய முதல் பந்தை தூக்கி சுழற்றி அடித்தாள்…. அது நேராக… நேஷனல் டீம் செலக்ஷன் மெம்பர்கள் உள்ள அறையில் கண்ணாடியை உடைத்து கொண்டு அவர்களின் தலைக்கு மேலே பறந்து வந்து விழுந்தது….

           ” நான் உருவத்துல வேணுனா குட்டையா இருக்கலாம்… ஆனா நான் செய்யிற செயல் ஒவ்வொன்னையும் நீங்க எல்லாரும் தலைய நிமித்தி தான் பாக்கனும்…. ” என நிலா கூறுவது போல் இருந்தது அவள் பந்தை அடித்த அடி.

          நிலா எதிர்கொண்ட அடுத்த பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்து தள்ளி பந்தை தொலைத்தாள். அனைவரும் பந்து பறக்கும் திசையை ஆஆஆ என்றவாறு பார்க்க…..பெவிலியனில் இருந்து பலத்த விசில் சத்தம் ஒன்று பறந்து வந்தது.

            விசில் அடித்தவன் தன்னவன் என்று அறிந்த நிலா, புன்னகையுடன் அடுத்த பந்தை தன்னவனின் முகத்தை நோக்கி அடித்தாள். இளஞ்சேரனும் தன்னை நோக்கி பறந்து வந்த பந்தை புன்னகையுடன் ஒரு கையால் பிடித்தான்.

         “ஆரம்பிச்சுட்டாங்கய்யா… இவனுங்க ரொமான்ஸ…. “என தலையில் கை வைத்து அமர்ந்தான் சேது.

          “மாமா….செமயா கேட்ச் புடிக்கிறீங்களே….நீங்களும் ப்ளேயரா? “அபி.

                  “அத என் கிட்ட கேளுடா தம்பி பையா… கமிஷனர் ஸார்… செம ப்ளேயர் தெரியுமா? ஸார் ப்ளேயரா இருந்ததுனால தான் என் தங்கச்சி இவன் கிட்ட மயங்குனா… “என நமட்டு சிரிப்புடன் கூறினான் சேது.

        “அப்பிடியா மாமா? நீங்க ஸ்டேட் ப்ளேயரா ?”என ஆச்சரியமுடன் வினவினான் அபி.

         “ஆஆ.. ஸ்ட்ரீட் ப்ளேயர்… “என கலகலவென நகைத்தான் சேது.

         அபி புரியாமல் பார்க்க….”அட ஆமா டா தம்பி….கோலி விளையாடுறதுல ஸார் ஸ்பெஷலிஸ்ட்… அத தான் கமிஷனர் ஸார் பெருமையா ப்ளேயர் னு பீத்திட்டு திரியுறாரு… “என கூறி அடங்கமாட்டாமல் சிரித்தான் சேது.

        அதை கேட்ட அபி, “இது அக்காக்கு தெரியுமா? “என்றான்.

         “ஹா ஹா ஹா… ஓஓ நல்லா தெரியுமே…கல்லியாணம் ஆன அடுத்த நாள் கமிஷனர் ஸார் மண்டையில பெரிய கட்டா போட்டு இருந்தாரே….அது என் தங்கச்சியோட கைங்காரியம் தான்… “என சிரித்தான் சேது.

          அபி, இளாவை”அய்யே….”என கேவலமாக பார்க்க …இதை எதையும் கண்டுகொள்ளாமல் தன்னவளின் ஆட்டத்தில் பார்வையையும் சிந்தையையும் தொலைத்து இருந்தான் இளஞ்சேரன்.

           விறு விறு வென தன் அதிரடி ஆட்டத்தால் சதம் அடித்திருந்தாள் சேரனின் நிலா. சதம் அடித்த கையுடன் அதை கொண்டாடும் விதமாக….தனது ஹெல்மெட்டை கழட்டி வானை நோக்கி உயர்த்தி தன் செல்ல டார்லிங்க்கு ஒரு பறக்கும் முத்தத்தை வழங்கினாள் சேரநிலா.

           ஹெல்மெட்டை கழட்டிய நொடியில் நிலாவின் கழுத்து பகுதியில் இருந்து வெளி வந்து விழுந்தது பொன் மஞ்சள் தாலி …கதிரோனின் கரத்தால் பொன் மஞ்சள் தாலி மினுமினுக்க…
அம்மினுமினுப்பின் ஒளியை விட ,அம்மஞ்சள் கயிறுக்கு உரியவன் நான் என்ற கர்வமுடன் ஒளிர்ந்தது இளஞ்சேரனின் முகம்.

          தன்னவனின் உணர்வை உணர்ந்த நிலா ,மைதானத்தின் நடுவே மிளிர்ந்து நின்றாள் சேரநிலாவாக….. 💞

        மனைவியை பெருமிதமாக பார்த்துக் கொண்டிருந்த இளாவிற்கு அலைபேசியில் அவசர அழைப்பு வர… அதை எடுத்து பேசியவன் சற்றும் தாமதியாமல் அங்கிருந்து கிளம்பினான்.

       அதைப் பார்த்த சேது, இசை, அபி மூவரும் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றனர்.

                         -செல்லம்மாள்பாரதி
        

          

          

    No comments yet.