K 15
ஆதிரா சிரித்துக்கொண்டே செல்வாவை காதலிப்பதாக சொல்ல அதை கேட்ட ஆர்யன் அதிர்ந்து போய் அவளை பார்த்தான். அதிர்ச்சியில் அவன் எதுவும் பேச முடியாமல் சிலையென நிற்க அவனை பார்த்த ஆதிரா,
” என்னாச்சு சார்.. நீங்க கேட்ட காரணத்தை நான் சொல்லிட்டேன்.. எனக்கு இப்போ டிரான்ஸ்பர் கொடுக்கறதுல உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே.. ” என கேட்க தன்னிலை அடைந்த ஆர்யன் அவளை நம்ப முடியாமல் பார்க்க அவள் சிரித்தபடி நின்றிருந்தாள்.
” நீங்க இப்போ என்ன சொன்னிங்க.. மறுபடியும் சொல்லுங்க.. ” என ஆர்யன் இன்னோரு முறை கேட்க அவள் திரும்பவும் அதையே சொன்னவள்,
” ஏன் சார்.. நான் செல்வாவை லவ் பண்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை.. நீங்க ஏன் இவ்ளோ ஷாக் ஆகறீங்க.. ” என கேட்க,
” அது.. அது.. ஆங்.. விக்னேஷ் உங்களை லவ் பண்றதா சொன்னாருல.. அதான்.. வேற ஒன்னும் இல்ல.. ” என்றான் ஆர்யன்.
” அப்படியா.. வேற எதுவும் இல்லையா.. ” என்ற ஆதிரா அவனை சந்தேகமாய் பார்க்க,
” இல்லையே.. வேற எதுவும் இல்ல.. நீங்க யாரை லவ் பண்ணுனா எனக்கு என்னங்க.. ஆனா இப்போ என்னால உங்களுக்கு டிரான்ஸ்பர் கொடுக்க முடியாது.. ” என ஆர்யன் சொல்ல அதை கேட்டதும் ஆதிரா அவனை சந்தேகமாய் பார்க்க முகத்தை திருப்பி கொண்டான் ஆர்யன்.
” ஏன் சார் கொடுக்க முடியாது.. சரி ஓகே நீங்க டிரான்ஸ்பர் கொடுக்க முடியாது அப்படினா நான் இந்த ஜாப்பை ரிசைன் பண்றேன்.. ” என ஆதிரா சட்டென சொல்ல அதை கேட்ட ஆர்யன் மேலும் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.
” என்ன பார்க்கறீங்க.. நான் மும்பை போவேன்.. செல்வாவை தேடி கண்டுபிடிப்பேன்.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. உங்கனால எனக்கு டிரான்ஸ்பர் கொடுக்க முடியாதுன்னா பரவாயில்ல.. நான் ரிசைன் பண்ணிறேன்.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னோட ரிசைங்னேஷன் லெட்டர் உங்களுக்கு மெயில் வரும்.. ” என்ற ஆதிரா அங்கிருந்து செல்ல போக வேகமாய் சென்று அவளை வழிமறித்து நின்றான் ஆர்யன்.
தன்னை வழிமறித்து நின்ற ஆர்யனை பார்த்த ஆதிரா, ” வழி விடுங்க சார்.. நான் போகணும்.. ” என சொல்ல,
” உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.. வந்து உட்காருங்க.. வாங்க.. ” என்ற ஆர்யன் போய் அவனது இருக்கையில் அமர அவனுக்கு எதிரே இருந்த சேரில் போய் உட்கார்ந்தாள் ஆதிரா.
” இங்க பாருங்க ஆதிரா.. நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் உடனே டிரான்ஸ்பர் எல்லாம் கொடுக்க முடியாது.. அதே மாதிரி நீங்களும் உடனே எல்லாம் வேலையை ரிசைன் பண்ண முடியாது… நீங்க இங்க வேலைக்கு சேர்ந்து 2 வருஷம் தான் ஆகுது.. ஆனா 3 வருஷத்துக்கு இங்கயே ஒர்க் பண்றதா நீங்க காண்ட்ராட்ல சைன் பண்ணி கொடுத்துருக்கீங்க.. அப்படி இருக்கப்ப நீங்க நினைக்கற மாதிரி எல்லாம் இங்க இருந்து ரிசைன் பண்ணிட்டு போக முடியாது.. இன்னும் ஒரு வருஷம் நீங்க இங்கதான் இருக்கனும்.. ” என ஆர்யன் சொல்ல அதை கேட்ட அதிரா அதிர்ந்து போக ஆர்யன் அவளை பார்த்து சிரித்தான்.
” உங்களுக்கு இது ஷாக்கா தான் இருக்கும்.. ஆனா இதை சொல்ல வேண்டியது என்னோட கடமை.. உங்க காண்ட்ராக்ட் முடிஞ்சதுக்கு அப்புறம் நீங்க எங்க வேணுனாலும் போயிக்கோங்க.. ஒரு வருஷத்துக்கு இங்க இருந்து போகணும்னு இனி எப்பவும் நினைக்காதீங்க.. இப்போ போய் வேலை பாருங்க.. ” என ஆர்யன் சொல்ல சில வினாடி யோசித்த ஆதிரா,
” ஓகே சார்.. நான் வேலையை ரிசைன் பண்ணுல.. எனக்கு டிரான்ஸ்பரும் வேண்டாம்.. ஆனா நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. நேத்து தான் நாம பிரண்ட்ஸ் அப்படினு சொன்னிங்க.. அந்த உரிமையில நான் இதை கேக்கறேன்.. நீங்க கண்டிப்பா இந்த ஹெல்ப்பை எனக்காக செஞ்சே ஆகணும்.. ப்ளீஸ் சார்.. ” என சொல்ல,
” ஹெல்ப்பா.. என்ன ஹெல்ப்.. சொல்லுங்க.. ” என்றான் ஆர்யன்.
” எனக்கு ஒன் மன்த் மெடிக்கல் லீவ் வேணும்.. இந்த லீவ் மட்டும் எனக்கு கொடுங்க சார்.. அதுக்குள்ள நான் எப்படியும் என் செல்வாவை கண்டுபிடிச்சிருவேன்… ப்ளீஸ் சார்.. ப்ளீஸ் ஆர்யன்.. ” என ஆதிரா கெஞ்ச அவள் சொன்னதை கேட்டு முதலில் அதிர்ந்து போன ஆர்யன் பிறகு அவளை கோபமாய் பார்த்தான்.
” ஆதிரா போதும்.. உன்கிட்ட இதுக்கு மேல என்னால பொறுமையா எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது.. இந்த ஒரு வருஷம் இங்க இருந்து ஒழுங்கா வேலை செஞ்சுட்டு அதுக்கு அப்புறம் நீ எங்க வேணுனாலும் போ.. போய் வேலைய பாரு போ.. ” என ஆர்யன் கோபமாய் திட்ட சிரித்தபடி எழுந்து நின்றாள் ஆதிரா.
அவள் சிரிப்பதை பார்த்த ஆர்யன், ” எதுக்கு இப்போ சிரிக்கிற… நான் உன்னை திட்டிட்டு இருக்கேன்… நீ எதுக்கு சம்பந்தம் இல்லாம இப்படி சிரிச்சுட்டு இருக்கற.. ” என கேட்க,
” இன்னும் எவ்ளோ தூரம் தான் நடிப்பிங்க செல்வா.. ” என ஆதிரா கேட்க அதை கேட்ட ஆர்யன் அவளை அதிர்ந்து போய் பார்த்தான்.
” என்ன.. என்ன சொன்ன இப்போ.. செல்வான்னு தான சொன்ன.. நான்தான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன்ல.. நான் நீ நினைக்கற செல்வா இல்ல.. நான் ஆர்யன்.. “
” இல்ல.. நீங்க செல்வா தான்… எனக்கு தெரியும் நீங்க செல்வா தான்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும்கூட எனக்கு கொஞ்சம் டவுட் இருந்துச்சு.. ஆனா இப்போ நான் உறுதியா சொல்றேன்.. நீங்கதான் செல்வா.. என்னை மும்பையில காப்பாத்துன செல்வா நீங்கதான்.. எனக்கு தெரியும்.. நான் செல்வாவை லவ் பண்றேன்னு சொன்னதும் உங்க கண்ணுல ஒரு மாற்றம் தெரிஞ்சுது.. அதை நான் பார்த்தேன்.. எதுக்கு என்கிட்ட மறைக்கறீங்க.. தயவுசெஞ்சு உண்மைய சொல்லுங்க.. நீங்கதான செல்வா.. ” என ஆதிரா அழுதுகொண்டே கேட்க,
” ஐயோ ஆதிரா.. நான் செல்வா இல்ல.. செல்வா இல்ல.. செல்வா இல்ல.. நான் ஆர்யன் போதுமா.. சும்மா இப்படி பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்காம முதல்ல இங்க இருந்து கிளம்பு.. உன்கிட்ட இதுக்கு மேல என்னால பேசி புரிய வைக்க முடியாது.. கெட் அவுட்.. ” என ஆர்யன் கோபமாய் கத்த கண்களை துடைத்துக்கொண்டு வேகமாய் அங்கிருந்து சென்றாள் ஆதிரா.
அவள் சென்றதும் தான் அவன் பேசிய வார்த்தைகளின் வீரியத்தை உணர்ந்தவனுக்கு அவன் மேலேயே கோபம் வர கோபத்தில் கையை சுவற்றில் ஓங்கி குத்தினான்.
வெளியே வந்த ஆதிரா அவளது இடத்தில் போய் அமர பிரியா அவளை பார்த்தவள், ” என்னாச்சுடி.. டிரான்ஸ்பர் கேட்டியா.. ஆர்யன் என்ன சொன்னாரு.. ” என கேட்க,
” காண்ட்ராக்ட் முடியற வரைக்கும் டிரான்ஸ்பர் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு.. இன்னும் 1 வருஷம் இங்கதான் இருக்கணும்னு சொல்லிட்டாரு.. ” என ஆதிரா சொல்ல அதை கேட்டு பிரியாவுக்கு சந்தோசம் தாங்கவில்லை.
” ஹேய் சூப்பர்டி… இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு.. எங்க என்னை விட்டுட்டு போயிருவியோன்னு நினச்சு பயந்துட்டேன்.. ஐம் வெரி ஹாப்பிடி.. ” என பிரியா சொல்ல ஆதிரா திரும்பி முறைக்கவும் உடனே அமைதியானாள்.
” சரி சரி நீ டென்ஷன் ஆகாதடி.. நீ ஊருக்கு போகலங்கற சந்தோசத்துல கொஞ்சம் அதிகமா பேசிட்டேன்.. சரி விடு.. இன்னிக்கு உன் பர்த்டே வேற.. ஈவினிங் ஒர்க் முடிச்சுட்டு நாம எங்கையாவது வெளியே போலாமா.. கொஞ்ச நேரம் வெளியே சுத்திட்டு வெளியவே டின்னர் முடிச்சுட்டு அப்புறம் ரூமுக்கு போவோம்.. நீ என்ன சொல்ற.. ” என பிரியா கேட்க ஆதிரா பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது விக்னேஷ் அங்கு வர அவனை பார்த்த பிரியா, ” ஹேய் என்ன.. இப்போதான் ஆபீஸ் வரியா.. ” என கேட்க,
” ம்ம் ஆமா லீவ் சொல்லிருந்தேன்.. கொஞ்சம் உடம்பு சரி இல்ல.. ப்ராஜெக்ட் பத்தி பேசணும் உடனே வாங்கன்னு விஷ்ணு கால் பண்ணிருந்தாரு.. அதான் வந்தேன்.. ” என்ற விக்னேஷின் கண்கள் ஆதிராவை பார்க்க பிரியாதான் பாவம் என்ன செய்வது என தெரியாமல் தவித்தவள் வராத போனை அட்டன் செய்து பேசியபடி அங்கிருந்து செல்ல விக்னேஷ் போய் அவனது இடமான ஆதிராவுக்கு பக்கத்து இருக்கையில் போய் அமர்ந்தான்.
No comments yet.